Untitled Document
December 29, 2024 [GMT]
காடுகளில் இராணுவம் முகாம் அமைக்கலாம் - மேய்ச்சல் தரைக்கு மட்டும் அனுமதியில்லையா?
[Saturday 2024-12-28 05:00]


வவுனியாவில் பெரும்காடுகளில் ஏக்கர் கணக்கான காணிகளில் இராணுவம் முகாம் அமைத்துள்ளது. ஆனால் கால்நடைகளிற்கான மேச்சல்தரை அமைப்பதில் மாத்திரம் திணைக்களங்கள் அக்கறையில்லாமல் செயற்படுவதாக வவுனியா ஒருங்கிணைப்பு குழுவில் சுட்டிக்காட்டப்பட்டது.

வவுனியாவில் பெரும்காடுகளில் ஏக்கர் கணக்கான காணிகளில் இராணுவம் முகாம் அமைத்துள்ளது. ஆனால் கால்நடைகளிற்கான மேச்சல்தரை அமைப்பதில் மாத்திரம் திணைக்களங்கள் அக்கறையில்லாமல் செயற்படுவதாக வவுனியா ஒருங்கிணைப்பு குழுவில் சுட்டிக்காட்டப்பட்டது.

  

வவுனியா பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் உபாலி சமரசிங்க தலைமையில் வெள்ளிக்கிழமை (27) இடம்பெற்றது.

இதன்போது வவுனியாவில் மேச்சல் தரை இல்லாமல் கால்நடை வளர்ப்பில் ஈடுபடுவோர் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொள்வதாக கவலை தெரிவித்தனர். மழைகாலங்களில் அதன் நிலமை மேலும் மோசமடைவதுடன் பால் உற்பத்தியும் வீழ்ச்சியடையும் நிலை காணப்படுகின்றது

இராணுவம் பெரும் காடுகளில் பல ஏக்கர்கணக்கான காணிகளை பிடித்து முகாம் அமைத்துள்ளது. ஆனால் நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் கால்நடைகளுக்கு மேச்சல் வரைவழங்குவதில் அதிகாரிகள் பின்னடிப்பதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தினர்.

குளத்தின் அலைகரைப்பகுதிகளில் மேச்சல் தரை அமைப்பது தொடர்பாக ஆராயுமாறும் அரச காணிகளை அடாத்தாக பிடித்து வைத்திருக்கும் நபர்களிடம் இருந்து அந்த காணிகளை பறித்து மேச்சல் தரை அமைப்பது தொடர்பாக பரிசீலிக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன் இதன்போது தெரிவித்திருந்தார்.

  
   Bookmark and Share Seithy.com



புலிகளுடன் போர்நிறுத்தம் செய்து கொள்வதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை!
[Sunday 2024-12-29 06:00]

இலங்கை, இந்திய அரசாங்கங்கள் தமக்குள் நிலுவையில் உள்ள மூலோபாய சிக்கல்களை குறுகிய காலத்துக்குள் இறுதி செய்ய வேண்டும். அத்துடன் பொருளாதாரத்தில் முன்னோக்கிய பயணத்துக்கான முன்மொழிவுகளை செயற்படுத்துவதற்கான வழிமுறைகளை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.



கனடாவின் குடியுரிமை விதிகளில் மாற்றம்!
[Sunday 2024-12-29 06:00]

கனடா குடியுரிமை விதிமுறையில் மாற்றம் செய்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நியமன கடிதத்துக்கான மதிப்பெண்கள் இனி கருத்தில் எடுத்துக் கொள்ளப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே விண்ணப்பித்துள்ளோர் மற்றும் காத்திருப்போருக்கு பொருந்தாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.



முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு மேலும் குறைக்கப்படலாம்!
[Sunday 2024-12-29 06:00]

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எவ்வித அச்சுறுத்தலுக்கும் கிடையாதென புலனாய்வு பிரிவு வழங்கிய அறிக்கையின் பிரகாரமே இராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. அடுத்த மீளாய்வு அறிக்கையில் வழங்கப்பட்டுள்ள 60 பொலிஸ் பாதுகாப்பு அதிகம் என்று குறிப்பிடப்பட்டால் அதை 30 ஆக குறைக்கலாமென அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிருஷாந்த அபேசேன தெரிவித்தார்.



முட்டை விலை 20 ரூபாவாக குறையும்!
[Sunday 2024-12-29 06:00]

நாட்டில் கடந்த சில நாட்களாக 60 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்ட முட்டை விலை கணிசமாக குறைந்துள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நாட்களில் சந்தையில் முட்டை 25 முதல் 30 ரூபாய் வரை விற்கப்படுகிறது எனவும் எதிர்காலத்தில் முட்டையின் விலை 20 ரூபாவாக குறையலாம் ஆனால் பின்னர் மீண்டும் முட்டை விலை உயரலாம் என முட்டை உற்பத்தியாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.



சீதுவவில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி- தந்தை,மகன் படுகாயம்.
[Sunday 2024-12-29 06:00]

சீதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லியனாகமுவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதோடு மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.காரில் வந்த துப்பாக்கி தாரி மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக செீதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



எம்.பிக்கள் சொத்துக்கள், கடன்கள் பற்றிய அறிக்கைகளை சமர்ப்பிக்க காலக்கெடு!
[Sunday 2024-12-29 06:00]

சொத்துக்கள் மற்றும் கடன்கள் தொடர்பான அறிக்கைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு பாராளுமன்றத்தின் பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.



உப்புக்கு தட்டுப்பாடு இல்லை- வாங்கி சேமிக்க வேண்டாம்!
[Sunday 2024-12-29 06:00]

தேவைக்கு அதிகமாக உப்பினை சேகரிப்பதை தவிர்க்குமாறு ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனத்தின் புதிய தலைவர் டி. நந்தன திலக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.



பெரஹெரவில் குழப்பம் விளைவித்த யானை-ஒருவர் காயம்!
[Sunday 2024-12-29 06:00]

காலி, தொடந்துவ மொரகொல பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் நேற்று இடம்பெற்ற பெரஹெரா ஊர்வலத்தின் போது யானை ஒன்று குழப்பம் விளைவித்து ஒருவரை தாக்கியுள்ளது.



அரசியல் குழு தலைவர், பெருந்தலைவராக இருப்பார் மாவை!
[Saturday 2024-12-28 17:00]

மாவை சேனாதிராஜா அரசியல் குழு தலைவராகவும் பெரும் தலைவராகவும் இருப்பார். இடைக்கால பதில் தலைவராக சி.வி.கே.சிவஞானம் செயற்படுவார் என இலங்கை தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.



ஊடகவியலாளரைத் தாக்கியவர்களுக்கு விளக்கமறியல்!
[Saturday 2024-12-28 17:00]

கிளிநொச்சி ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வனை தாக்கி கடத்துவதற்கு முற்பட்டதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



விசாரணை நடத்திய பொலிஸ் அதிகாரியைத் தாக்கிய 7 பேர் கைது!
[Saturday 2024-12-28 17:00]

அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதியில் இடம்பெற்ற இரு சாரார் முறுகல் தொடர்பில் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டிருந்த பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.



தலைவர் தலைவராகவே இருப்பார்!- சிவமோகன் ஆவேசம்.
[Saturday 2024-12-28 17:00]

தலைவரை நீக்கும் அதிகாரம் மத்தியகுழுவில் இல்லை. தலைவர் தலைவராக இருப்பார் என தமிழரசு கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் சி. சிவமோகன் தெரிவித்தார். தமிழரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் இருந்து இடைநடுவில் வெளிநடப்பு செய்த அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.



அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி கையெழுத்து போராட்டம்!
[Saturday 2024-12-28 17:00]

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் கையெழுத்துப் போராட்டம் இன்று இடம்பெற்றது. போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா தபால் நிலையத்துக்கு முன்பாக இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.



யோஷித ராஜபக்‌சவுக்கு சிஐடி அழைப்பாணை!
[Saturday 2024-12-28 17:00]

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவின் மகன் யோஷித ராஜபக்‌சவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு ஆஜராக அழைப்பு விடுத்துள்ளது. சட்டவிரோத சொத்துக்களை பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் யோஷித ராஜபக்சவை எதிர்வரும் 3ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.



வவுனியாவில் தொங்க விடப்பட்டிருந்த பதாதை!
[Saturday 2024-12-28 17:00]

வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக்கூட்டம் இடம்பெறும் தனியார் விருந்தினர் விடுதிக்கு முன்பாக கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களால் பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.



கல்லடி பிரிட்ஜ் மார்க்கட் தீக்கிரை!
[Saturday 2024-12-28 17:00]

மட்டக்களப்பு கல்லடி பழைய பாலத்தில் பெண்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் சந்தை நேற்று வெள்ளிக்கிழமை (27) இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது.



அர்ச்சுனாவிடம் 1000 மில்லியன் ரூபா கேட்டு வழக்கு!
[Saturday 2024-12-28 17:00]

ஊடகங்களில் தன்னை பிரபலப்படுத்தும் நோக்கில் பொய்குற்றசாட்டுக்களை சுமத்தும் அர்ச்சுனாவிற்கு எதிராக 1,000 மில்லியன் நட்டஈடு கோரி வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக பனை அபிவிருத்திசபை தலைவர் வி.சகாதேவன் தெரிவித்தார்.



தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளராக எம்.ஏ.சுமந்திரன் செயற்படுவார்!
[Saturday 2024-12-28 17:00]

தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளராக தொடர்ந்து எம்.ஏ.சுமந்திரன் செயற்படுவார் என தமிழரசு கட்சியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்ட சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் முடிவடைந்ததன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



யுஎன்எச்சிஆர் அலுவலகத்தை மூடக் கூடாது!- 50 சிவில் சமூக அமைப்புகள் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்.
[Saturday 2024-12-28 05:00]

பிராந்தியத்தில் நடந்து வரும் மனிதாபிமான நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் புகலிடம் கோருவோர் மற்றும் அகதிகள் வருகை தொடர்பான பிரச்சினை, மீண்டும் மீண்டும் நிகழ்வதாக இருக்கும். ஆகவே இலங்கையில் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவரக அலுவலகத்தை (யுஎன்எச்சிஆர்) முழு அதிகாரத்துடன் தொடரவேண்டுமெனக் கோரிக்கை விடுத்து 50 சிவில் சமூக அமைப்புகள் கூட்டாக வலியுறுத்தி கடிதமொன்றை அனுப்பியுள்ளன.



13ஆவது திருத்தம் தொடர்பாக இந்தியா பேசாவிட்டால் பெரும் மகிழ்ச்சி!
[Saturday 2024-12-28 05:00]

அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தம் தொடர்பாக இந்தியா இனிமேல் பேசாது விட்டால் அதனால் பெருமளவுக்கு மகிழ்ச்சியடையக்கூடிய ஒருவராக நானே இருப்பேன் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.


Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா