Untitled Document
December 29, 2024 [GMT]
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு மேலும் குறைக்கப்படலாம்!
[Sunday 2024-12-29 06:00]

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எவ்வித அச்சுறுத்தலுக்கும் கிடையாதென புலனாய்வு பிரிவு வழங்கிய அறிக்கையின் பிரகாரமே இராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. அடுத்த மீளாய்வு அறிக்கையில் வழங்கப்பட்டுள்ள 60 பொலிஸ் பாதுகாப்பு அதிகம் என்று குறிப்பிடப்பட்டால் அதை 30 ஆக குறைக்கலாமென அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிருஷாந்த அபேசேன தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எவ்வித அச்சுறுத்தலுக்கும் கிடையாதென புலனாய்வு பிரிவு வழங்கிய அறிக்கையின் பிரகாரமே இராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. அடுத்த மீளாய்வு அறிக்கையில் வழங்கப்பட்டுள்ள 60 பொலிஸ் பாதுகாப்பு அதிகம் என்று குறிப்பிடப்பட்டால் அதை 30 ஆக குறைக்கலாமென அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிருஷாந்த அபேசேன தெரிவித்தார்.

  

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொருளதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு சந்தையில் நிலவும் தட்டுப்பாடுகளுக்கு தீர்வு காணப்படும். அரசியலில் இருந்து மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் போலியான பல குற்றச்சாட்டுக்களை தற்போது முன்வைக்கின்றனர்.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்கு எவ்விதமான அச்சுறுத்தலும் கிடையாது என்று அறிக்கை கிடைத்ததன் பின்னரே வழங்கப்பட்ட இராணுவ பாதுகாப்பு மீளப் பெறப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 60 பொலிஸார் என்ற அடிப்படையில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மீளாய்வு அறிக்கையில் பாதுகாப்பு குறைக்கப்படலாம் என்று குறிப்பிடப்பட்டால் வழங்கப்பட்டுள்ள 60 பொலிஸ் பாதுகாப்பை 30 ஆக குறைக்கலாம். மக்களின் வரிப்பணத்தை வீண்விரயம் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது.

முன்னாள் ஜனாதிபதிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் என்று ஊடகங்களில் குறிப்பிடும் தரப்பினர்கள் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பான தகவல்களை பாதுகாப்பு தரப்புக்கு அளிக்க வேண்டும். அப்போது அது குறித்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



ஜெனரல் சவேந்திர சில்வா ஓய்வு!
[Sunday 2024-12-29 17:00]

ஜெனரல் சவேந்திர சில்வா, 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் பாதுகாப்புப் படைகளின் பிரதானி மற்றும் இலங்கை இராணுவ சேவையில் இருந்து ஓய்வு பெற உள்ளார்.



ஈழத்தின் மூத்த எழுத்தாளர் நா.யோகேந்திரநாதன் காலமானார்!
[Sunday 2024-12-29 17:00]

ஈழத்தின் மூத்த எழுத்தாளர், படைப்பாளி நா. யோகேந்திரநாதன் இன்று காலை காலமானார். இவர், யாழ்ப்பாணம் கரம்பொன் தெற்குப் பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்டவர் ஆவார். யோகேந்திரநாதன் எழுதிய “34 நாட்களில் நீந்திக் கடந்த நெருப்பாறு” நாவல் அண்மையில் வெளியாகி மிகவும் பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



அர்ச்சுனா யூடியூப் ஹீரோ!
[Sunday 2024-12-29 17:00]

ரெலோ மற்றும் புளொட் அமைப்புகள் தனித்து செயற்பட முற்படுமானால் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியிலிருந்து தமிழ் தேசியக் கட்சி தனித்து களமிறங்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.



ஈழத்தின் இலக்கியப் பேராளுமைக்கு சிறிதரன் இரங்கல்!
[Sunday 2024-12-29 17:00]

ஈழ மண்ணின் மூத்த படைப்பிலக்கியவாதியும், கிளிநொச்சி மண்ணுக்கு அடையாளம் தந்த வேருமாகிய மதிப்பார்ந்த நா.யோகேந்திரநாதன் ஐயா மறைந்தார் என்ற செய்தி மனதை நொருங்கச் செய்திருக்கிறது.



யாழ்ப்பாணம், கட்டுநாயக்க விமான நிலையங்களை விஸ்தரிக்க நடவடிக்கை!
[Sunday 2024-12-29 17:00]

இலங்கையின் யாழ்ப்பாணம் மற்றும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையங்கள் விஸ்தரிக்கப்பட உள்ளதாகவும் இதற்கான முன்மொழிவுகளை அரசாங்கம், சர்வதேச நிறுவனங்களிடமிருந்து கோரியுள்ளது.



அரச அதிகாரிகளுடன் முரண்பட வேண்டியிருக்கிறது!
[Sunday 2024-12-29 17:00]

மாற்றங்களை செய்ய முற்படும்போது, அரச ஊழியர்கள் சிலர் அதற்கு எதிராக தர்க்கம் புரிகின்றனர் என்று அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.



பணமோசடியில் ஈடுபட்ட இலங்கை வங்கியின் முன்னாள் முகாமையாளர் கைது!
[Sunday 2024-12-29 17:00]

பணமோசடியில் ஈடுபட்ட இலங்கை வங்கியின் முன்னாள் முகாமையாளர் ஒருவர், யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவால் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.



அர்ச்சுனா சந்தித்தவர்கள் உண்மையான மீனவர்கள் அல்ல!
[Sunday 2024-12-29 17:00]

இலங்கையிலிருந்து இந்திய தமிழகம் சென்றுள்ள இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹகஹகீம் அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இந்தியா இலங்கை மீனவர்களில் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.



75,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி!
[Sunday 2024-12-29 17:00]

அனுமதிப்பத்திரம் இன்றி அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்ததைத் தொடர்ந்து, டிசம்பர் 29 ஆம் திகதி வரை 75,000 மெற்றிக் தொன் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை இலங்கை சுங்கம் அனுமதித்துள்ளது.



தென்கொரிய விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசாங்கம் ஆழ்ந்த கவலை!
[Sunday 2024-12-29 17:00]

தென் கொரியாவின் முவான் விமான நிலையத்தில் ஜெஜு ஏர் விமானம் 7C 2216 விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்கள் குறித்து ஆழ்ந்த கவலையடைவதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.



புலிகளுடன் போர்நிறுத்தம் செய்து கொள்வதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை!
[Sunday 2024-12-29 06:00]

இலங்கை, இந்திய அரசாங்கங்கள் தமக்குள் நிலுவையில் உள்ள மூலோபாய சிக்கல்களை குறுகிய காலத்துக்குள் இறுதி செய்ய வேண்டும். அத்துடன் பொருளாதாரத்தில் முன்னோக்கிய பயணத்துக்கான முன்மொழிவுகளை செயற்படுத்துவதற்கான வழிமுறைகளை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.



கனடாவின் குடியுரிமை விதிகளில் மாற்றம்!
[Sunday 2024-12-29 06:00]

கனடா குடியுரிமை விதிமுறையில் மாற்றம் செய்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நியமன கடிதத்துக்கான மதிப்பெண்கள் இனி கருத்தில் எடுத்துக் கொள்ளப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே விண்ணப்பித்துள்ளோர் மற்றும் காத்திருப்போருக்கு பொருந்தாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.



முட்டை விலை 20 ரூபாவாக குறையும்!
[Sunday 2024-12-29 06:00]

நாட்டில் கடந்த சில நாட்களாக 60 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்ட முட்டை விலை கணிசமாக குறைந்துள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நாட்களில் சந்தையில் முட்டை 25 முதல் 30 ரூபாய் வரை விற்கப்படுகிறது எனவும் எதிர்காலத்தில் முட்டையின் விலை 20 ரூபாவாக குறையலாம் ஆனால் பின்னர் மீண்டும் முட்டை விலை உயரலாம் என முட்டை உற்பத்தியாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.



சீதுவவில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி- தந்தை,மகன் படுகாயம்.
[Sunday 2024-12-29 06:00]

சீதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லியனாகமுவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதோடு மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.காரில் வந்த துப்பாக்கி தாரி மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக செீதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



எம்.பிக்கள் சொத்துக்கள், கடன்கள் பற்றிய அறிக்கைகளை சமர்ப்பிக்க காலக்கெடு!
[Sunday 2024-12-29 06:00]

சொத்துக்கள் மற்றும் கடன்கள் தொடர்பான அறிக்கைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு பாராளுமன்றத்தின் பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.



உப்புக்கு தட்டுப்பாடு இல்லை- வாங்கி சேமிக்க வேண்டாம்!
[Sunday 2024-12-29 06:00]

தேவைக்கு அதிகமாக உப்பினை சேகரிப்பதை தவிர்க்குமாறு ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனத்தின் புதிய தலைவர் டி. நந்தன திலக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.



பெரஹெரவில் குழப்பம் விளைவித்த யானை-ஒருவர் காயம்!
[Sunday 2024-12-29 06:00]

காலி, தொடந்துவ மொரகொல பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் நேற்று இடம்பெற்ற பெரஹெரா ஊர்வலத்தின் போது யானை ஒன்று குழப்பம் விளைவித்து ஒருவரை தாக்கியுள்ளது.



அரசியல் குழு தலைவர், பெருந்தலைவராக இருப்பார் மாவை!
[Saturday 2024-12-28 17:00]

மாவை சேனாதிராஜா அரசியல் குழு தலைவராகவும் பெரும் தலைவராகவும் இருப்பார். இடைக்கால பதில் தலைவராக சி.வி.கே.சிவஞானம் செயற்படுவார் என இலங்கை தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.



ஊடகவியலாளரைத் தாக்கியவர்களுக்கு விளக்கமறியல்!
[Saturday 2024-12-28 17:00]

கிளிநொச்சி ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வனை தாக்கி கடத்துவதற்கு முற்பட்டதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



விசாரணை நடத்திய பொலிஸ் அதிகாரியைத் தாக்கிய 7 பேர் கைது!
[Saturday 2024-12-28 17:00]

அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதியில் இடம்பெற்ற இரு சாரார் முறுகல் தொடர்பில் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டிருந்த பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா