Untitled Document
January 1, 2025 [GMT]
அரச அதிகாரிகளுடன் முரண்பட வேண்டியிருக்கிறது!
[Sunday 2024-12-29 17:00]


மாற்றங்களை செய்ய முற்படும்போது, அரச ஊழியர்கள் சிலர் அதற்கு எதிராக தர்க்கம் புரிகின்றனர் என்று அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.  கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மாற்றங்களை செய்ய முற்படும்போது, அரச ஊழியர்கள் சிலர் அதற்கு எதிராக தர்க்கம் புரிகின்றனர் என்று அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

  

நாங்கள் அரசாங்கத்தைப் பொறுப்பேற்பதற்கு முன்னதாக வீதிகளில் போராட வேண்டியிருந்தது. மக்களுக்காக ஊழல், இலஞ்சம் மற்றும் திருட்டுக்களுக்கு எதிராக நாங்கள் போராடினோம்.

கடந்த காலத்தில், பழைய முறைப்படி எடுக்கப்பட்ட தன்னிச்சையான தீர்மானங்களின் காரணமாக மக்களின் உரிமைகளை பாதுகாக்க தவறிய அரச ஊழியர்களுடன் போராட வேண்டியேற்பட்டது. மக்கள் வழங்கிய ஆணைக்கமைய, சில விதிமுறைகளுக்கு உட்பட்டு கடந்த அரசாங்க காலத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானங்களில் மாற்றம் ஏற்படுத்த வேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இது தொடர்பான தீர்மானங்களை நாங்கள் எடுக்கும்போது அதற்கெதிராக சில அரச ஊழியர்கள் எம்மோடு தர்க்கம் புரிகின்றனர். மாற்றத்தை விரும்பாத மக்களும் மாற வேண்டிய நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பல மாற்றங்களை செய்து நாங்கள் எங்களது பயணத்தை முன்னெடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



கிளீன் சிறிலங்கா போல இனப்பிரச்சினையையும் கிளீன் செய்ய வேண்டும்!
[Wednesday 2025-01-01 16:00]

கிளீன் சிறிலங்கா போன்று இனப்பிரச்சனையையும் இந்த அரசாங்கம் கிளீன் செய்ய வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



ஆட்சியாளர்கள் தவறாகப் புரிந்து கொண்டனர்!
[Wednesday 2025-01-01 16:00]

2022 ஆம் ஆண்டு 'அரகலய' காலப்பகுதியில் தனது உத்தியை ஆட்சியாளர்கள் தவறாகப் புரிந்து கொண்டதாக நேற்று ஓய்வு பெற்ற பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.



மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களே தலைவர் பதவியை பிடுங்குவதற்கு சதி செய்தனர்!
[Wednesday 2025-01-01 16:00]

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு சிலர் இலங்கைத் தமிழரசுக் கட்சியை முடக்குவதற்குத் திரைமறைவில் சதி முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள் எனவும் அவர்களே எனது தலைவர் பதவியைப் பிடுங்குவதில் குறியாக இருந்தார்கள் எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும்,கட்சியின் தற்போதைய அரசியல் குழுத் தலைவருமான மாவை.சேனாதிராஜா தெரிவித்தார்.



அனுரவின் அலை வடக்கு கிழக்கிலும் ஏற்படும்!
[Wednesday 2025-01-01 16:00]

நாட்டில் ஏற்பட்டுள்ள இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு, பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக ஒழிக்கப்பட்டால் அனுர அரசாங்கம் பொருளாதார ரீதியில் அச்சப்பட வேண்டிய அவசியம் ஏற்படாது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.



அதி உச்ச வருமானத்தைப் பெற்றது சுங்கம்!
[Wednesday 2025-01-01 16:00]

இலங்கை சுங்கத்துறை கடந்த வருடத்தில் 1.5 ட்ரில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, கடந்த வருடம் 1.515 இலட்சம் கோடி ரூபா வருமானம் பதிவாகியுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளரும், மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகமுமான சீவலி அருக்கொட தெரிவித்தார்.



அரச தரவு பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல்!
[Wednesday 2025-01-01 16:00]

அரச இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூன்றாம் தரப்பினரால் ஊடுருவப்படுகின்றமை அரச தரவு பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாகும். அந்த வகையில் தரவு கட்டமைப்பில் ஏதேனும் பாதிப்புக்களை ஏற்படுத்துவதற்காக இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றனவா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.



வடக்கு மாகாண சபை இல்லாமல் இருப்பது சிறப்பு! - சர்ச்சையைக் கிளப்பினார் துணைவேந்தர்.
[Wednesday 2025-01-01 16:00]

வடக்கு மாகாண சபை இல்லாமல் இருப்பது சிறப்புபோல் இருக்கின்றது. மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் சும்மா கத்திக்கொண்டிருப்பதைப்போல மாகாணசபை இருந்தாலும் அங்கும் கத்திக்கொண்டுதான் இருப்பார்கள். இப்போது அதிகாரிகளால் மாகாண சபை சிறப்பாக நடத்தப்படுகின்றது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா தெரிவித்தார்.



நாமல் குமார கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது!
[Wednesday 2025-01-01 16:00]

சமூக செயற்பாட்டாளரான நாமல் குமார என்பவர் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பரவி வரும் பதிவுகள் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.



குழந்தைகள் பிறப்பு வீதம் கணிசமான வீழ்ச்சி!
[Wednesday 2025-01-01 16:00]

இலங்கையில் வருடாந்த பிறப்பு வீதம் கணிசமான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக குழந்தை நல மருத்துவ ஆலோசகர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இலங்கையின் வருடாந்த குழந்தைகள் பிறப்பு 350,000 இலிருந்து 250,000 ஆக குறைந்துள்ளதாக தீபால் பெரேரா தெரிவித்தார்.



நாகை- காங்கேசன் கப்பல் சேவை மீண்டும் நாளை ஆரம்பம்!
[Wednesday 2025-01-01 16:00]

சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தமிழகத்தின் நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை, நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.



ஆளும்கட்சி எம்.பிக்களுக்கு தனியார் தொழிற்சாலைக்குள் என்ன வேலை?
[Wednesday 2025-01-01 05:00]

தனியார் தொழிற்சாலையொன்றுக்குள் அத்துமீறி பிரவேசித்த தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கெதிராக அரசாங்கம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி.தொலவத்த வலியுறுத்தினார்.



நாங்கள் பிரிவினைவாதிகள் அல்ல! -என்கிறார் சிவிகே.
[Wednesday 2025-01-01 05:00]

சமஸ்டி பிரிவினையல்ல. அது பிரிவினைக்கிட்டுச் செல்லும் தீர்வும் அல்ல. நாங்கள் பிரிவினைவாதிகளும் அல்ல. இடதுசாரி கொள்கையில் இருந்து ஜனாதிபதியாக தெரிவான அநுர குமார திசாநாயக்க இதனை புரிந்து புத்தாண்டில் செயற்பட வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.



தெரிவுகளை ஆராய கால அவகாசம் தேவை!
[Wednesday 2025-01-01 05:00]

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு அமைய மிகவும் பொருத்தமான தெரிவை ஆராய சிறிது கால அவகாசம் தேவை என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.



மஹிந்தவுக்கு பாதுகாப்பு அவசியமில்லை!
[Wednesday 2025-01-01 05:00]

மஹிந்த ராஜபக்ஷ விடுதலை புலிகளுடன் தனிப்பட்ட முறையிலா போரிட்டார் இன்றும் அவருக்கு உயிரச்சுறுத்தல் இருப்பதற்கு, விடுதலை புலிகளுடன் நெருக்கமாக செயற்பட்டார் ஆகவே அவர் மீது புலிகள் அமைப்பினர் தாக்குதல் நடத்த போவதில்லை. நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய மஹிந்தவுக்கு பிரபுக்கள் பாதுகாப்பு வழங்குவது அவசியமற்றது என முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.



மண்ணெண்ணெய் விலை மட்டும் மாற்றம்!
[Wednesday 2025-01-01 05:00]

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.



பாறையில் வான் மோதி இருவர் பலி- 16 பேர் காயம்!
[Wednesday 2025-01-01 05:00]

கொழும்பு - பதுளை பிரதான வீதியில் ஹப்புத்தளை - வியாரகல பகுதியில் பயணித்த வேன், நேற்று மாலை வீதியை விட்டு விலகி பாறையில் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 16 பேர் காயமடைந்துள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



இளம் குடும்பஸ்தர் மயங்கி விழுந்து மரணம்!
[Wednesday 2025-01-01 05:00]

யாழ்ப்பாணம், ஊரெழு கிழக்கு பகுதியில் திடீரென மயங்கிய இளம் குடும்பஸ்தர் ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அதே இடத்தை சேர்ந்த கிருபரஞ்சன் (வயது- 38) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.



பொலிஸ் கட்டுப்பாட்டுக்குள் வராத யூடியூப்!
[Wednesday 2025-01-01 05:00]

இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ Facebook, TikTok, Instagram, YouTube மற்றும் x கணக்குகள் நேற்று மாலை சைபர் தாக்குதலுக்கு உள்ளானது.இதையடுத்து, உத்தியோகபூர்வ Facebook, TikTok, Instagram மற்றும் x கணக்குகள் தற்போது மீண்டும் இலங்கை பொலிஸின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.



பெப்ரவரி 18 முதல் வரவுசெலவுத்திட்ட விவாதம்!
[Wednesday 2025-01-01 05:00]

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தை 2025 பெப்ரவரி 18ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.



அதிகளவானோர் நாட்டை விட்டு வெளியேறிய ஆண்டு!
[Wednesday 2025-01-01 05:00]

2024ஆம் ஆண்டு இலங்கை வரலாற்றில் அதிகளவானோர் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்ற ஆண்டாக பதிவாகியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இவ்வருடத்தில் 312,836 பேர் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.


Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா