Untitled Document
January 4, 2025 [GMT]
நாகை- காங்கேசன் கப்பல் சேவை மீண்டும் நாளை ஆரம்பம்!
[Wednesday 2025-01-01 16:00]


சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தமிழகத்தின் நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை, நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தமிழகத்தின் நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை, நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

  

இந்த நிலையில் நிலவும் காலநிலையைக் கருத்திற் கொண்டு கப்பல் போக்குவரத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் குறித்த கப்பல் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



மஹிந்தவைக் கொல்லும் தேவை யாருக்கு உள்ளது?
[Saturday 2025-01-04 06:00]

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைக் கொல்லவேண்டிய தேவை யாருக்கு இருக்கிறது? தமிழீழ விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டதாக மஹிந்த தரப்பு ஏற்கனவே அறிவித்துவிட்டது. அவ்வாறிருக்கையில் மஹிந்தவுக்கு யாரிடமிருந்து பாதுகாப்பு தேவைப்படுகிறது? அவரது மெதமுலான உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்தா? எனக் கேள்வி எழுப்பியிருக்கும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கு நன்கு பயிற்றப்பட்ட 6 பொலிஸ் அதிகாரிகளே போதுமானவர்கள் எனத் தெரிவித்துள்ளார்.



மன்னாரில் காற்றாலை, கனிய மணல்அகழ்வுக்கு திட்டங்களுக்கு தடை!
[Saturday 2025-01-04 06:00]

மன்னார் பகுதியில் மக்களின் எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு போன்றவை உடனடியாக தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும் மன்னார் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதோடு, குறித்த அறிவிப்பை ஒருங்கிணைப்பு குழு தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க விடுத்துள்ளார்.



வரலாற்றில் இல்லாதளவுக்கு வரி வருமானம்!
[Saturday 2025-01-04 06:00]

இலங்கை வரலாற்றில் 2024 ஆம் ஆண்டிலேயே அதிக வரிவருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2024 ஆம் ஆண்டில் வரி வருமானம் 25.1 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



உயிரிழந்த தாய்க்கும், சேய்க்கும் நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்!
[Saturday 2025-01-04 06:00]

விபத்துக்களை கட்டுப்படுத்தவும், உயிரிழந்த தாய்க்கும், சேய்க்கும் நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது.



தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றுபடாமல் தமிழர்களுக்கு வரலாறு இல்லை!
[Saturday 2025-01-04 06:00]

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்னவென்பது குறித்து தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் கொள்கை ரீதியில் பொதுநிலைப்பாடொன்றுக்கு வரவேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், தற்போதைய சூழ்நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றுபடாமல் தமிழர்களுக்கு வரலாறு இல்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.



பொலிஸ் நிலையத்துக்குள் “கிளீன் சிறிலங்கா” மாகாண அலுவலகம்!
[Saturday 2025-01-04 06:00]

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் மாகாண ஒருங்கிணைப்பு அலுவலகம் நேற்று காலை யாழ் பொலிஸ் நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால மற்றும் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய, மீன்பிடி அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். இதன்போது பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்தியிடம் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.



ஏப்ரலில் உள்ளூராட்சி தேர்தல்?
[Saturday 2025-01-04 06:00]

உள்ளூராட்சி மன்ற தேர்தல் பெரும்பாலும் ஏப்ரலில் நடைபெறும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும், எதிர்வரும் மார்ச் மாதம் சாதாரண தர பரீட்சை நடைபெறவுள்ளதால் அந்த மாதத்தில் தேர்தலை நடத்த முடியாது என தெரியவந்துள்ளது.



இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட விவசாயப் பொருட்களுடன் 3 பேர் கைது!
[Saturday 2025-01-04 06:00]

இந்தியாவில் இருந்து கடல் வழியாகக் கடத்தி வரப்பட்டு வேலணையில் இறக்கிய விவசாயப் பொருள்கள் இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின்போது கைப்பற்றப்பட்டுள்ளன.



கெஹெலியவின் சொத்துக்கள் முடக்கம் நீடிப்பு!
[Saturday 2025-01-04 06:00]

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகள், ஆயுள் காப்புறுதி திட்டங்கள் ஆகியவற்றை செயற்படுத்துவதை தடுக்கும் உத்தரவை மேலும் 3 மாதங்களுக்கு நீடித்துக் கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.



வியாழேந்திரனின் சாரதி கொலைக் குற்றச்சாட்டில் கைது!
[Saturday 2025-01-04 06:00]

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் மட்டக்களப்பு வீட்டின் முன்னாள் கடந்த 2021 இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிஜடியினரால் கொலை குற்றத்தின் பேரில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரின் வாகன சாரதி ஒருவரை எதிர்வரும் 17 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று உத்தரவிட்டார்.



கையெழுத்துப் போராட்டத்தை தடுத்து நிறுத்திய பொலிஸ்!
[Friday 2025-01-03 17:00]

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சி நகரில் பொதுச் சந்தைக்கு அருகில் நடைபெற்ற கையெழுத்துப் போராட்டத்தை கிளிநொச்சி பொலிசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.



சீனாவில் பரவும் வைரஸ் குறித்து சுகாதார அமைச்சு ஆராய்கிறது!
[Friday 2025-01-03 17:00]

சீனாவில் பரவி வருவதாக கூறப்படும் வைரஸ் தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பான தகவல்களை இன்று அறிந்து கொண்டதாகவும், அதற்கான ஆய்வின் பின்னர் ஊடகங்களுக்கு தகவல்களை வழங்கவுள்ளதாகவும் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.



பொதுமக்களின் 5226 ஏக்கர் நிலங்களை ஒரே இரவில் அபகரித்த துறைமுக அதிகார சபை!
[Friday 2025-01-03 17:00]

துறைமுக அதிகார சபையின் காணியை மக்கள் பிடிக்கவில்லை, மக்களின் காணிகளையே இலங்கை துறைமுக அதிகாரசபை கையகப்படுத்தியுள்ளது என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.



யோஷிதவிடம் 2 மணிநேரம் விசாரணை!
[Friday 2025-01-03 17:00]

யோஷித ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வௌியேறியுள்ளார். சுமார் 2 மணிநேரம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியதைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து வௌியேறியுள்ளார்.



நாடாளுமன்ற உணவு விலைகளை அதிகரிக்க திட்டம்!
[Friday 2025-01-03 17:00]

பாராளுமன்றத்தில் உணவு உண்ணும் எம்.பி.க்களிடம் வசூலிக்கும் தொகையை அதிகரிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதுவரை காலமும் எம்.பி.க்களிடம் இருந்து காலை உணவுக்கு 100 ரூபாயும், மதியம் 300 ரூபாயும் மட்டுமே வசூலிக்கப்பட்டது.எனினும் அந்தத் தொகை போதாது என, தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்தார்.



ஐதேக பொதுச் செயலாளராக தலதா அத்துகோரள!
[Friday 2025-01-03 16:00]

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான நியமனம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்டுள்ளதாக வஜிர அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.



ரோஹிங்கியா அகதிகளை நாடு கடத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலனை!
[Friday 2025-01-03 16:00]

சட்ட நடைமுறைகளை பின்பற்றி சமீபத்தில் முல்லைத்தீவுக்கு வந்த ரோஹிங்கியா அகதிகளை நாடு கடத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையான வீரவன்ச!
[Friday 2025-01-03 16:00]

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று காலை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வருகை தந்தார். 2022 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் திகதி தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் போது தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இவர் அழைக்கப்பட்டுள்ளார்.



சாவகச்சேரியில் கிணற்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு!
[Friday 2025-01-03 16:00]

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி, கிராம்புவில் பகுதியில் நேற்று மாலை கிணற்றுக்குள் இருந்து வயோதிப பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.



நிலந்தி கொட்டாச்சியை சீண்டிய மொட்டு உறுப்பினர் கைது!
[Friday 2025-01-03 16:00]

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ரவீந்திர நவமுனி சிஐடியினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை படகொடவிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா