Untitled Document
January 4, 2025 [GMT]
மாத்தறை சிறைக்குள் அனர்த்தம்- ஒருவர் பலி, 10 பேர் காயம்!
[Thursday 2025-01-02 05:00]


மாத்தறை சிறைச்சாலை வளாகத்தினுள் இருந்த போ மரம் முறிந்து வீழ்ந்ததில் 10 கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாத்தறை சிறைச்சாலை வளாகத்தினுள் இருந்த போ மரம் முறிந்து வீழ்ந்ததில் 10 கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

  
  
   Bookmark and Share Seithy.com



யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சலுக்கு மேலும் இருவர் பலி!
[Saturday 2025-01-04 17:00]

யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சல் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2 ஆம் திகதி யாழ் போதனா வைத்தியசாலையில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இந்த இரு இறப்புக்களும் பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.



ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைமைக் குழு கூடுகிறது!
[Saturday 2025-01-04 17:00]

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமைக்குழுக் கூட்டம் வவுனியாவில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் முதல் தடவையாக கூடும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமைக்குழுவானது தேர்தல் முடிவுகள் தொடர்பில் ஆராயவுள்ளது.



கனடாவில் காருக்குள் மூச்சுத் திணறி வவுனியா இளைஞன் மரணம்!
[Saturday 2025-01-04 17:00]

கனடாவில் கார் கதவு திறக்கப்படாமையினால் மூச்சு திணறல் ஏற்பட்டு தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியா, வீரபுரத்தைச் சேர்ந்த குறித்த இளைஞர் கனடாவில் வாழ்ந்து வருகின்றார். நேற்று வெளியில் சென்ற நிலையில் இத்துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் வவுனியா, வீரபுரத்தைச் சேர்ந்த ஜேக்கப் நெவில் டிலக்சன் (வயது 20) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



சீனாவில் பரவிவரும் வைரஸ் ஆபத்தானதா?
[Saturday 2025-01-04 17:00]

சீனாவில் பரவிவரும் எச்.எம்.பி.வி. எனப்படும் மனித மெட்டாப்நியூமோ வைரஸ் ஒரு தொற்று அல்ல. அதேவேளை புதிய வைரஸும் அல்ல. 2001ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்ட இந்த வைரஸ் குளிர்காலத்தில் சுவாச நோய்களை ஏற்படுத்துவதாகுமென ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.



இளங்குமரன் எம்.பி சட்டத்தை கையில் எடுக்க கூடாது!
[Saturday 2025-01-04 17:00]

தமது வர்த்தக நிறுவனம் சட்ட ரீதியாகவே சுண்ணக்கல் வியாபாரத்தில் ஈடுபடுவதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் உண்மையான விடயங்கள் தெரியாமல் தமது வர்த்தக நிறுவனத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியதாகவும் சிற்றி வன்பொருள் வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.



வன்முறைக் கும்பலின் ஆண்டு விழா - கேக் வெட்டி கொண்டாடிய காணொளியை பகிர்ந்தவர் கைது!
[Saturday 2025-01-04 17:00]

யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் வன்முறைக் கும்பல் ஒன்றின் 10ஆவது ஆண்டு நிறைவையொட்டி கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட காணொளியை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நவாலி பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞனே மானிப்பாய் பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.



தெற்கில் தொடரும் துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி!
[Saturday 2025-01-04 17:00]

மாத்தறை, வெலிகமவில் இன்றுகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த மோட்டார் சைக்கிள் வெலிகம, மூனமல்பே பகுதியில் உள்ள ஏரியில் வீசப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



சீனாவில் உள்ள இலங்கை மாணவர்களின் விபரங்களை திரட்டுகிறது அரசாங்கம்!
[Saturday 2025-01-04 17:00]

சீனாவில் உயர் கல்வி மற்றும் மேற்படிப்புக்காக தங்கியுள்ள இலங்கை மாணவர்கள் தங்கள் விபரங்களைப் பகிர்ந்துகொள்ளுமாறு சீனாவில் உள்ள இலங்கைத் தூதரகம் கோரியுள்ளது.



ஆலய கேணியில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி
[Saturday 2025-01-04 17:00]

வவுனியா குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தில் நேற்று மாலை மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.



கற்பிட்டியில் 11.3 கிலோ தங்கத்துடன் 3 பேர் கைது!
[Saturday 2025-01-04 17:00]

கற்பிட்டி - பத்தலண்குண்டு கடற் பகுதியில் 11 கிலோ 300 கிராம் தங்கத்துடன் சந்தேக நபர்கள் மூவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் 28 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடையது எனத் தெரிவிக்கப்படுகிறது



மஹிந்தவைக் கொல்லும் தேவை யாருக்கு உள்ளது?
[Saturday 2025-01-04 06:00]

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைக் கொல்லவேண்டிய தேவை யாருக்கு இருக்கிறது? தமிழீழ விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டதாக மஹிந்த தரப்பு ஏற்கனவே அறிவித்துவிட்டது. அவ்வாறிருக்கையில் மஹிந்தவுக்கு யாரிடமிருந்து பாதுகாப்பு தேவைப்படுகிறது? அவரது மெதமுலான உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்தா? எனக் கேள்வி எழுப்பியிருக்கும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கு நன்கு பயிற்றப்பட்ட 6 பொலிஸ் அதிகாரிகளே போதுமானவர்கள் எனத் தெரிவித்துள்ளார்.



மன்னாரில் காற்றாலை, கனிய மணல்அகழ்வுக்கு திட்டங்களுக்கு தடை!
[Saturday 2025-01-04 06:00]

மன்னார் பகுதியில் மக்களின் எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு போன்றவை உடனடியாக தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும் மன்னார் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதோடு, குறித்த அறிவிப்பை ஒருங்கிணைப்பு குழு தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க விடுத்துள்ளார்.



வரலாற்றில் இல்லாதளவுக்கு வரி வருமானம்!
[Saturday 2025-01-04 06:00]

இலங்கை வரலாற்றில் 2024 ஆம் ஆண்டிலேயே அதிக வரிவருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2024 ஆம் ஆண்டில் வரி வருமானம் 25.1 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



உயிரிழந்த தாய்க்கும், சேய்க்கும் நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்!
[Saturday 2025-01-04 06:00]

விபத்துக்களை கட்டுப்படுத்தவும், உயிரிழந்த தாய்க்கும், சேய்க்கும் நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது.



தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றுபடாமல் தமிழர்களுக்கு வரலாறு இல்லை!
[Saturday 2025-01-04 06:00]

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்னவென்பது குறித்து தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் கொள்கை ரீதியில் பொதுநிலைப்பாடொன்றுக்கு வரவேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், தற்போதைய சூழ்நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றுபடாமல் தமிழர்களுக்கு வரலாறு இல்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.



பொலிஸ் நிலையத்துக்குள் “கிளீன் சிறிலங்கா” மாகாண அலுவலகம்!
[Saturday 2025-01-04 06:00]

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் மாகாண ஒருங்கிணைப்பு அலுவலகம் நேற்று காலை யாழ் பொலிஸ் நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால மற்றும் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய, மீன்பிடி அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். இதன்போது பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்தியிடம் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.



ஏப்ரலில் உள்ளூராட்சி தேர்தல்?
[Saturday 2025-01-04 06:00]

உள்ளூராட்சி மன்ற தேர்தல் பெரும்பாலும் ஏப்ரலில் நடைபெறும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும், எதிர்வரும் மார்ச் மாதம் சாதாரண தர பரீட்சை நடைபெறவுள்ளதால் அந்த மாதத்தில் தேர்தலை நடத்த முடியாது என தெரியவந்துள்ளது.



இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட விவசாயப் பொருட்களுடன் 3 பேர் கைது!
[Saturday 2025-01-04 06:00]

இந்தியாவில் இருந்து கடல் வழியாகக் கடத்தி வரப்பட்டு வேலணையில் இறக்கிய விவசாயப் பொருள்கள் இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின்போது கைப்பற்றப்பட்டுள்ளன.



கெஹெலியவின் சொத்துக்கள் முடக்கம் நீடிப்பு!
[Saturday 2025-01-04 06:00]

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகள், ஆயுள் காப்புறுதி திட்டங்கள் ஆகியவற்றை செயற்படுத்துவதை தடுக்கும் உத்தரவை மேலும் 3 மாதங்களுக்கு நீடித்துக் கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.



வியாழேந்திரனின் சாரதி கொலைக் குற்றச்சாட்டில் கைது!
[Saturday 2025-01-04 06:00]

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் மட்டக்களப்பு வீட்டின் முன்னாள் கடந்த 2021 இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிஜடியினரால் கொலை குற்றத்தின் பேரில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரின் வாகன சாரதி ஒருவரை எதிர்வரும் 17 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று உத்தரவிட்டார்.


Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா