Untitled Document
January 6, 2025 [GMT]
நிலந்தி கொட்டாச்சியை சீண்டிய மொட்டு உறுப்பினர் கைது!
[Friday 2025-01-03 16:00]


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ரவீந்திர நவமுனி சிஐடியினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை படகொடவிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ரவீந்திர நவமுனி சிஐடியினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை படகொடவிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

  

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சியை அவமதிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்படடுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



உள்ளூராட்சித் தேர்தலில் இணைந்து போட்டியிட சங்கு கூட்டணி முடிவு!
[Monday 2025-01-06 05:00]

வடக்கு - கிழக்கு இணைந்த ஒரு மாநிலமாக தமிழ் மக்கள் சுயாட்சியுடன் வாழக்கூடிய அரசியலமைப்பை புதிய அரசாங்கம் உருவாக்க வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.



தமிழினப் படுகொலைக் குற்றவாளிகள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்!
[Monday 2025-01-06 05:00]

கனடாவில் இம்மாதம் தமிழர் மரபுரிமை மாதமாகக் கொண்டாடப்படுகின்ற போதிலும், அதற்குரிய முழுமையான கௌரவம் இன்னமும் அடையப்படவில்லை. ஏனெனில் மிகமோசமான தமிழினப்படுகொலையினால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னமும் நீதிக்காகக் காத்திருக்கிறார்கள். எனவே அக்குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும் என்ற எமது நிலைப்பாட்டை நாம் தொடர்ந்து உறுதியாக வலியுறுத்துவோம் என கனேடிய கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியெர் பொய்லிவ்ர் தெரிவித்துள்ளார்.



வவுனியாவில் கடந்த ஆண்டு 41 பேருக்கு எலிக்காய்ச்சல்!
[Monday 2025-01-06 05:00]

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 2024 ஆம் ஆண்டு 41 பேர் எலிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.



2025 இல் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க திட்டம்!
[Monday 2025-01-06 05:00]

அதிக சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு ஈர்க்கும் வகையில் சுற்றுலாத் துறையின் தரத்தை அதிகரிக்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.



யானையைக் கண்டு ஆற்றில் குதித்தவர் நீாில் அடித்துச் செல்லப்பட்டார்!
[Monday 2025-01-06 05:00]

காட்டுப் பகுதியில் விறகு வெட்ட சென்ற தந்தையும் 14 வயது மகனும் யானையை கண்டு உயிரை காப்பாற்ற தப்பி ஓடி ஆற்றில் வீழ்ந்த நிலையில், நீரில் இழுத்துச் செல்லப்பட்ட தந்தை காணாமல் போயுள்ளார். நேற்றுக் காலை மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள முந்தனையாற்று பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.



பொங்கலுக்கு அரிசித் தட்டுப்பாடு!
[Monday 2025-01-06 05:00]

இன்னும் ஒரு வாரத்துக்குப் பிறகு வரும் தைப்பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் தயார் செய்ய முடியாமல் சந்தையில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புறக்கோட்டை அரிசி மொத்த வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.



பிணை பெற்றுத் தருவதாக இலஞ்சம் வாங்கிய பொலிஸ் அதிகாரி கைது!
[Monday 2025-01-06 05:00]

மனித படுகொலை குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மூவருக்கு பிணை வழங்குவதற்காக, நீதவானுக்கு பணம் கொடுக்க வேண்டும் எனக் கூறி, ​பெண்கள் மூவரிடம் இருந்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக்​கொண்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் களுவாஞ்சிகுடி நீதவானின் பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றும் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார் என மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.



5 வருடங்களில் 12,140 பேர் விபத்துக்களில் பலி!
[Monday 2025-01-06 05:00]

கடந்த 5 வருடங்களில் வீதி விபத்துக்கள் காரணமாக நாட்டில் 12,140 மனித உயிர்கள் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2020 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை இடம்பெற்ற விபத்துக்கள் தொடர்பில் போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புப் பணிப்பாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் எச்.ஏ.கே.ஏ. இந்திக ஹபுகொடவின் மேற்பார்வையில் இடம்பெற்ற கணக்கெடுப்பில் இந்த தகவல் வௌியாகியுள்ளது.



வல்வெட்டித்துறை பகுதியில் கஞ்சாவுடன் மூவர் கைது!
[Monday 2025-01-06 05:00]

வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சாவுடன் மூன்று இளைஞர்கள் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையின்போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.



கிணற்றில் தவறி விழுந்தவர் மரணம்!
[Monday 2025-01-06 05:00]

மட்டக்களப்பு - வெல்லாவெளி தும்பங்கேணி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை குளிக்கும் போது தவறுதலாக கிணற்றில் விழுந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தும்பங்கேணி கிராமத்தை சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான 50 வயதுடைய தங்கராசா பரமானந்தம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



ஜெனிவா குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க விசேட குழு!
[Sunday 2025-01-05 16:00]

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் பொறுப்புக்கூறல் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில், விசேட இராஜதந்திர குழு ஊடாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன், 58ஆவது அமர்வுக்கு முன்னர் சிறப்பறிக்கையை வெளியிடவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.



ஜனாதிபதியைச் சந்திக்கிறார் சட்டமா அதிபர்!
[Sunday 2025-01-05 16:00]

குற்றவியல் வழக்குகளில், விசாரணைகளை முழுமையாக முடிக்காமல், வழக்குப் பதிவுகள் மற்றும் அறிக்கைகளை பொலிஸார் அனுப்பும் போது, கோப்புகளைத் திறக்கவோ அல்லது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதிருக்கவோ சட்டமா அதிபர் திணைக்களம் முடிவு செய்துள்ளது.



ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் உயர்மட்டக் கூட்டம்!
[Sunday 2025-01-05 16:00]

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் உயர்மட்டக் கூட்டம் வவுனியா கோவில்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று நடைபெற்றது.



கஜேந்திரகுமாரின் முயற்சியை வரவேற்கிறார் தமிழரசின் பொதுச் செயலாளர்!
[Sunday 2025-01-05 16:00]

புதிய அரசியலமைப்பு தொடர்பாக, தமிழ்த்தேசியக்கட்சிகள் ஒன்றிணைந்து அவையனைத்தையும் ஆராய்ந்து, அவற்றில் உள்ள சிறந்த விடயங்களை உள்ளடக்கி, எமது அடிப்படைக் கோட்பாட்டில் இருந்து விலகாமல், தற்கால சூழலுக்கு ஏற்றவாறான புதிய முன்மொழிவொன்றை ஒருமித்துத் தயாரிக்கவேண்டும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.



வெளிநாட்டு ஆய்வுக்கப்பல்களுக்கு அனுமதி வழங்கும் நடைமுறையை தீர்மானிக்க குழு அமைப்பு!
[Sunday 2025-01-05 16:00]

இலங்கை வருவதற்கு அனுமதி கோரும் உலக நாடுகளின் ஆய்வுக் கப்பல்களுக்கு நிலையான மூலோபாய ஒத்துழைப்பு விதிமுறையின் கீழ் அனுமதியளிப்பது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.



ஆளும்தரப்பு உறுப்பினர்களையும் இணைத்து செயற்பட உத்தேசம்!
[Sunday 2025-01-05 16:00]

அரசியல் தீர்வு மற்றும் வட, கிழக்கில் நிலவும் ஏனைய பிரச்சினைகள் உள்ளிட்ட தமிழர் நலன் சார்ந்த பொது விவகாரங்களில் வட, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளுந்தரப்பு உறுப்பினர்களையும் இணைத்து ஓரணியாக செயற்படுவதற்கு உத்தேசித்திருப்பதாக ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், தெரிவித்தார்.



அறுவடை இயந்திரத்தை சுத்திகரித்த குடும்பஸ்தர் மின்சாரம் தாக்கி மரணம்!
[Sunday 2025-01-05 16:00]

அறுவடை இயந்திரத்தை சுத்திகரித்த குடும்பஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி முரசுமோட்டை, கோரக்கன்கட்டு பகுதியில் நேற்று மாலை அறுவடை இயந்திரத்தை நீரிட்டு சுத்திகரிப்பில் ஈடுபட்ட தருணத்திலேயே இவ்வாறு மின்சாரம் தாக்கியுள்ளதாக தெரியவருகிறது.



அதானியின் திட்டங்களை ஆராயும் குழுவை நியமிக்கும் யோசனை நாளை அமைச்சரவையில்!
[Sunday 2025-01-05 16:00]

இலங்கையில் அதானியின் எரிசக்தி திட்டங்களை பரிசீலிக்க குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனை நாளை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்படும் என எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.



மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களை நியமிக்க அங்கீகாரம்!
[Sunday 2025-01-05 16:00]

மேல் நீதிமன்ற நீதிபதிகளான கே.எம்.சரத் திசாநாயக்க மற்றும் பிரதீப் ஹெட்டியாராச்சி ஆகியோரை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.



போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!
[Sunday 2025-01-05 16:00]

இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்,200 போதை மாத்திரைகள் அடங்கிய பொதியுடன் இளைஞன் ஒருவன் முருங்கன் பஜார் பகுதியில் வைத்து சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் சிலாபத்துறை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.


Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா