Untitled Document
January 6, 2025 [GMT]
தெற்கில் தொடரும் துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி!
[Saturday 2025-01-04 17:00]


மாத்தறை, வெலிகமவில் இன்றுகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த மோட்டார் சைக்கிள் வெலிகம, மூனமல்பே பகுதியில் உள்ள ஏரியில் வீசப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை, வெலிகமவில் இன்றுகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த மோட்டார் சைக்கிள் வெலிகம, மூனமல்பே பகுதியில் உள்ள ஏரியில் வீசப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  

மாத்தறை சிறைச்சாலை வளாகத்தில் உள்ள அரச மரம் முறிந்து விழுந்ததில் உயிரிழந்த கைதியின் சடலம் அடக்கம் செய்யப்பட்ட துர்க்கி கிராமத்தில் உள்ள வீட்டிற்கு நேற்று இரவு ஐவர் குழு சென்றுள்ளது. இன்று அதிகாலை ஒரு மணியளவில் குறித்த குழுவினர் கால்நடையாக வீடு திரும்பிக் கொண்டிருந்த போது வெலிகம, கப்பரதொட்ட, வள்ளிவெல வீதியில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நபர்கள் ரிவோல்வர் மற்றும் T-56 ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்நிலையில், ஐவரில் இருவர் காயமடைந்ததோடு, இருவரும் மாத்தறை வலான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இருவரில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதுடன், மற்றைய நபர் மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கப்பரதொட்ட பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஆகாஷ் தருக என்பவரே உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் காயமடைந்த இளைஞன் 29 வயதான செஹான் துலாஞ்சல எனவும், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

  
   Bookmark and Share Seithy.com



பதவி விலகுவதாக அறிவித்தார் கனேடியப் பிரதமர் ட்ரூடோ!
[Monday 2025-01-06 21:00]

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆளும் லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.சற்று முன்னர் ஒட்டாவாவில் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை அறிவித்தார்.



அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்து போராட்டம்! Top News
[Monday 2025-01-06 17:00]

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி போராளிகள் நலன்புரிச் சங்கத்தால் முன்னெடுக்கப்படும் கையெழுத்துப் போராட்டம் இன்று யாழ்ப்பாணம் மடத்தடி பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.



சிறிலங்கா முதலில் தமிழினப் படுகொலை கறையை சுத்தம் செய்ய வேண்டும்! Top News
[Monday 2025-01-06 17:00]

கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் சிறிலங்கா அரசு முதலில் தன் மீது பதிந்துள்ள தமிழினப் படுகொலைக் கறையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் சி.சிவகஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்



புதிய அரசமைப்பினை உருவாக்கும் முயற்சிகளில் அரசாங்கம் தாமதமின்றி ஈடுபடவேண்டும்!
[Monday 2025-01-06 17:00]

புதிய அரசமைப்பினை உருவாக்கும் முயற்சிகளில் அரசாங்கம் தாமதமின்றி ஈடுபடவேண்டும் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



இந்திய நிறுவனத்திடம் டிஜிட்டல் அடையாள அட்டை திட்டம்- இலங்கைக்கு பேராபத்து!
[Monday 2025-01-06 17:00]

இலங்கை பிரஜைகளுக்கான டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்குவதை இந்திய நிறுவனத்திடம் ஒப்படைக்கும் அரசாங்கத்தின் முடிவு குறித்து மக்கள் போராட்ட முன்னணி கவலை வெளியிட்டுள்ளது.



தோல்வியடைந்த அரசியல்வாதிகள் மாகாண சபைகளுக்குள் நுழையத் திட்டம்!
[Monday 2025-01-06 17:00]

பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த சிரேஷ்ட அரசியல்வாதிகளில் 60 இற்கும் அதிகமானோர் உத்தேச மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட கட்சி மட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.



நீதித்துறை மீது நம்பிக்கையை ஏற்படுத்துவது சட்டமா அதிபர் திணைக்களத்தின் பொறுப்பு!
[Monday 2025-01-06 17:00]

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சட்டமா அதிபர் உள்ளிட்ட சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.



கீழே கிடந்த தங்க நகையை ஒப்படைத்தவருக்கு நேர்ந்த கதி!
[Monday 2025-01-06 17:00]

யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் உணவு வாங்க வந்தவ கூலித் தொழிலாளி ஒருவர் நிலத்தில் விழுந்துகிடந்த தங்க ஆபரணத்தை எடுத்து வெதுப்பகத்தில் வழங்கிய நிலையில் இளைஞர் குழு அவரை கட்டிவைத்து தாக்கி வீடியோ காணொளி பதிவிட்டுள்ளது.



ஊடகங்களை அச்சுறுத்துவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும்!
[Monday 2025-01-06 17:00]

ஊடகவியலாளர்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, அவற்றை அச்சுறுத்தும் வகையில் செயற்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.



சுயாட்சியை வலியுறுத்தும் யோசனையை முன்வைக்கிறார் சிறீகாந்தா!
[Monday 2025-01-06 17:00]

தேசிய மக்கள் சக்தியால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசமைப்பில் 'முழுமையான சுயாட்சியை' வலியுறுத்தும் வகையில் தமிழ்த் தேசியக் கட்சி பிரேரணையொன்றை முன்வைத்துள்ளது.



செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக வழக்கு!
[Monday 2025-01-06 16:00]

கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கான செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய 12 ஜனாதிபதி வேட்பாளர்களில் எஞ்சிய ஐவர் மீது அடுத்த வாரம் வழக்கு தொடரப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



உள்ளூராட்சித் தேர்தலில் இணைந்து போட்டியிட சங்கு கூட்டணி முடிவு!
[Monday 2025-01-06 05:00]

வடக்கு - கிழக்கு இணைந்த ஒரு மாநிலமாக தமிழ் மக்கள் சுயாட்சியுடன் வாழக்கூடிய அரசியலமைப்பை புதிய அரசாங்கம் உருவாக்க வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.



தமிழினப் படுகொலைக் குற்றவாளிகள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்!
[Monday 2025-01-06 05:00]

கனடாவில் இம்மாதம் தமிழர் மரபுரிமை மாதமாகக் கொண்டாடப்படுகின்ற போதிலும், அதற்குரிய முழுமையான கௌரவம் இன்னமும் அடையப்படவில்லை. ஏனெனில் மிகமோசமான தமிழினப்படுகொலையினால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னமும் நீதிக்காகக் காத்திருக்கிறார்கள். எனவே அக்குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும் என்ற எமது நிலைப்பாட்டை நாம் தொடர்ந்து உறுதியாக வலியுறுத்துவோம் என கனேடிய கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியெர் பொய்லிவ்ர் தெரிவித்துள்ளார்.



வவுனியாவில் கடந்த ஆண்டு 41 பேருக்கு எலிக்காய்ச்சல்!
[Monday 2025-01-06 05:00]

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 2024 ஆம் ஆண்டு 41 பேர் எலிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.



2025 இல் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க திட்டம்!
[Monday 2025-01-06 05:00]

அதிக சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு ஈர்க்கும் வகையில் சுற்றுலாத் துறையின் தரத்தை அதிகரிக்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.



யானையைக் கண்டு ஆற்றில் குதித்தவர் நீாில் அடித்துச் செல்லப்பட்டார்!
[Monday 2025-01-06 05:00]

காட்டுப் பகுதியில் விறகு வெட்ட சென்ற தந்தையும் 14 வயது மகனும் யானையை கண்டு உயிரை காப்பாற்ற தப்பி ஓடி ஆற்றில் வீழ்ந்த நிலையில், நீரில் இழுத்துச் செல்லப்பட்ட தந்தை காணாமல் போயுள்ளார். நேற்றுக் காலை மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள முந்தனையாற்று பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.



பொங்கலுக்கு அரிசித் தட்டுப்பாடு!
[Monday 2025-01-06 05:00]

இன்னும் ஒரு வாரத்துக்குப் பிறகு வரும் தைப்பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் தயார் செய்ய முடியாமல் சந்தையில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புறக்கோட்டை அரிசி மொத்த வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.



பிணை பெற்றுத் தருவதாக இலஞ்சம் வாங்கிய பொலிஸ் அதிகாரி கைது!
[Monday 2025-01-06 05:00]

மனித படுகொலை குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மூவருக்கு பிணை வழங்குவதற்காக, நீதவானுக்கு பணம் கொடுக்க வேண்டும் எனக் கூறி, ​பெண்கள் மூவரிடம் இருந்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக்​கொண்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் களுவாஞ்சிகுடி நீதவானின் பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றும் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார் என மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.



5 வருடங்களில் 12,140 பேர் விபத்துக்களில் பலி!
[Monday 2025-01-06 05:00]

கடந்த 5 வருடங்களில் வீதி விபத்துக்கள் காரணமாக நாட்டில் 12,140 மனித உயிர்கள் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2020 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை இடம்பெற்ற விபத்துக்கள் தொடர்பில் போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புப் பணிப்பாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் எச்.ஏ.கே.ஏ. இந்திக ஹபுகொடவின் மேற்பார்வையில் இடம்பெற்ற கணக்கெடுப்பில் இந்த தகவல் வௌியாகியுள்ளது.



வல்வெட்டித்துறை பகுதியில் கஞ்சாவுடன் மூவர் கைது!
[Monday 2025-01-06 05:00]

வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சாவுடன் மூன்று இளைஞர்கள் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையின்போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா