Untitled Document
January 7, 2025 [GMT]
தாக்குதல் நடத்தினாலும் போராட்டம் நடத்துவோம்!
[Sunday 2025-01-05 06:00]


புதிதாக பதவியேற்றுள்ள அரசு எங்களை தண்ணீர் கொண்டு அடித்தாலும் கட்டை கொண்டு அடித்தாலும் நாங்கள் பயப்படாமல், எமது வளங்கள் அழிக்கப்படுவதற்கு எதிராக, யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரகத்திற்கு முன்னால் போராட்டம் செய்வோம் என யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் உப தலைவர் அந்தோனிப்பிள்ளை பிரான்ஸிஸ் ரட்ணகுமார் தெரிவித்தார்.

புதிதாக பதவியேற்றுள்ள அரசு எங்களை தண்ணீர் கொண்டு அடித்தாலும் கட்டை கொண்டு அடித்தாலும் நாங்கள் பயப்படாமல், எமது வளங்கள் அழிக்கப்படுவதற்கு எதிராக, யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரகத்திற்கு முன்னால் போராட்டம் செய்வோம் என யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் உப தலைவர் அந்தோனிப்பிள்ளை பிரான்ஸிஸ் ரட்ணகுமார் தெரிவித்தார்.

  

யாழ்ப்பாணம் சம்மேளனத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த அரசாங்கத்தின் இறுதி காலகட்டத்தில் இந்திய இழுவைப் படகுகளை கட்டாயப்படுத்தி நாங்கள் ஓரளவு தொழில் செய்துகொண்டு இருந்தோம். ஆனால் புதிய அரசாங்கம் வந்த பின்னர் நிறைய இழுவைமடி படகுகள் எங்களது வளங்களை அழிக்கின்றது. ஆகையால் எமது தொழிலாளிகளின் வலைகளும் இல்லாமல் போகின்றன.

புதிதாக பதவியேற்றுள்ள கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் அவர்களுக்கு நாங்கள் இதனை புதிதாக சொல்லவேண்டிய அவசியமில்லை. கடந்த காலத்தில் நாங்கள் போராட்டத்தை நடாத்தியபோது, இந்திய இழுவைப் படகுகள் குறித்து தமது தலைவருக்கு உடனடியாக தெரியப்படுத்துவோம், நடவடிக்கை எடுப்போம் என தற்போதைய கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகரன் தெரிவித்தார்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் கடற்றொழில் அமைச்சர் புதிதாக பதவியேற்ற பின்னர் இந்த இழுவை படகுகளை நிறுத்துமாறு எமது சம்மேளனம் சார்பாக நாங்கள் பல கோரிக்கை கடிதங்களை கடற்றொழில் அமைச்சரிடம் கையளித்துள்ளோம். இருப்பினும் நெடுந்தீவு தொடக்கம் சுண்டிகுளம் வரையிலான கடற் பகுதியில் இந்தியன் இழுவை படகுகள் எமது வளங்களை அளிக்கின்றன.

இவற்றினை எம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஜனாதிபதியும் கடற்தொழில் அமைச்சரும் இதற்கு ஒரு சரியான முடிவினை எடுக்காவிட்டால், யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்தொழில் செய்யும் மக்களை இணத்து நாங்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்திற்கு முன்னால் போராட்டம் ஒன்றினை செய்வோம்.

இப்பொழுது புதிய அரசாங்கம் ஒன்று வந்திருக்கின்றது. நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றபோது தண்ணியால் அடிப்பார்கள், கட்டையால் அடிப்பார்கள் அவற்றையெல்லாம் பற்றி எங்களுக்கு பயமில்லை. எங்களது பிரச்சினை தீர வேண்டும் என்றால் நாங்கள் போராட்டம் செய்வோம். எனவே ஜனாதிபதியும் கடற்தொழில் அமைச்சரும் இதற்கு ஒரு சரியான முடிவு கூற வேண்டும் என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



ஜனாதிபதி செயலகம் முன் போராட்டம்!
[Tuesday 2025-01-07 05:00]

ரஷ்யப்படையில் வலிந்து இணைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை மீட்டுத் தருமாறு ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகவும், வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாகவும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.



ரஷ்யாவுடன் பேசுவோம்!
[Tuesday 2025-01-07 05:00]

ரஷ்யப்படையில் வடபகுதி இளைஞர்கள் வலிந்து இணைக்கப்பட்டுள்ளமை உட்பட இலங்கையர்கள் போரில் ஈடுபடுத்தப்படுகின்றமை தொடர்பில் ரஷ்ய வெளிவிவார அமைச்சருடன் அமைச்சர் விஜித ஹேரத் விரைவில் உத்தியோகபூர்வமான பேச்சுக்களை முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா போராட்டக்காரர்களுடனான கலந்துரையாடலின்போது தெரிவித்துள்ளார்.



தவணைப் பரீட்சைகள் ரத்து!
[Tuesday 2025-01-07 05:00]

வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளிலும் 11ஆம் தரமாணவர்களுக்கான தவணைப் பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, வடமத்திய மாகாண கல்விச் செயலாளர் சிறிமெவன் தர்மசேன தெரிவித்துள்ளார்.



அதிகார அரசியலில் பங்களியேன்!
[Tuesday 2025-01-07 05:00]

நாட்டு மக்களின் நலனை இலக்காகக்கொண்டு சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தினால் தற்போது மிகுந்த அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு அப்பால், தாம் எந்தவொரு அதிகார அரசியல் செயற்பாடுகளுக்கும் தலைமைத்துவத்தை வழங்கப்போவதில்லை என அவ்வியக்கத்தின் தலைவரும், முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.



விமல் வீரவன்ச நேர்மையானவர் அல்ல!
[Tuesday 2025-01-07 05:00]

முன்னாள் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு அமெரிக்காவின் முழுமையான ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் இயலுமை அரசாங்கத்துக்கு உண்டு. ராஜபக்ஷர்கள் குறித்த விசாரணைகளுக்கு முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச ஊடாக சாட்சியம் திரட்ட முயற்சிப்பது முறையற்றது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.



3 வினாத்தாள்கள் கசிந்தன!
[Tuesday 2025-01-07 05:00]

வடமத்திய மாகாணத்தில் உள்ள அரச பாடசாலைகளின் 11ம் தர தவணைப் பரீட்சை தொடர்பான மேலும் இரண்டு வினாத்தாள்கள் வெளியே கசிந்துள்ளன. விஞ்ஞானம் மற்றும் ஆங்கில பாடங்கள் தொடர்பான வினாத்தாள்கள் இவ்வாறு வௌியாகியுள்ளதாக வடமத்திய மாகாண கல்விச் செயலாளர் சிறிமெவன் தர்மசேன தெரிவித்தார்.



எலிக்காய்ச்சலினால் 2 பேர் பலி!
[Tuesday 2025-01-07 05:00]

கிளிநொச்சியில் எலிக்காய்ச்சல் நோய்க்காரணி Leptospirosis பக்றிரீயாவினால் பாதிக்கப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் தெரிவித்துள்ளார்.



சோதனைகளால் விபத்துக்கள் குறைவு!
[Tuesday 2025-01-07 05:00]

அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட விசேட வாகனச் சோதனை நடவடிக்கையைத் தொடர்ந்து விபத்துக்கள் குறைவடைந்துள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



மீண்டும் சோதனைச் சாவடிகள்!
[Tuesday 2025-01-07 05:00]

யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக இருந்து அகற்றப்பட்ட சோதனைச் சாவடிகள் மீண்டும் திடீரென அமைக்கப்பட்டு வருகின்றமை பொதுமக்கள் மத்தியில் சந்தேகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன.



தவறுகளை மறைக்க மாபியா பட்டம்!
[Tuesday 2025-01-07 05:00]

திறமையற்ற அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளின் தவறான செயற்பாடுகளை மூடி மறைக்க தன்னைப் போன்று சுய முயற்சியில் முன்வந்தவர்கள் அன்றிலிருந்து பல கதைகளை கேட்டுள்ளதாக அரலிய அரிசி ஆலையின் உரிமையாளர் டட்லி சிறிசேன தெரிவித்தார்.



பதவி விலகுவதாக அறிவித்தார் கனேடியப் பிரதமர் ட்ரூடோ!
[Monday 2025-01-06 21:00]

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆளும் லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.சற்று முன்னர் ஒட்டாவாவில் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை அறிவித்தார்.



அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்து போராட்டம்! Top News
[Monday 2025-01-06 17:00]

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி போராளிகள் நலன்புரிச் சங்கத்தால் முன்னெடுக்கப்படும் கையெழுத்துப் போராட்டம் இன்று யாழ்ப்பாணம் மடத்தடி பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.



சிறிலங்கா முதலில் தமிழினப் படுகொலை கறையை சுத்தம் செய்ய வேண்டும்! Top News
[Monday 2025-01-06 17:00]

கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் சிறிலங்கா அரசு முதலில் தன் மீது பதிந்துள்ள தமிழினப் படுகொலைக் கறையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் சி.சிவகஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்



புதிய அரசமைப்பினை உருவாக்கும் முயற்சிகளில் அரசாங்கம் தாமதமின்றி ஈடுபடவேண்டும்!
[Monday 2025-01-06 17:00]

புதிய அரசமைப்பினை உருவாக்கும் முயற்சிகளில் அரசாங்கம் தாமதமின்றி ஈடுபடவேண்டும் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



இந்திய நிறுவனத்திடம் டிஜிட்டல் அடையாள அட்டை திட்டம்- இலங்கைக்கு பேராபத்து!
[Monday 2025-01-06 17:00]

இலங்கை பிரஜைகளுக்கான டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்குவதை இந்திய நிறுவனத்திடம் ஒப்படைக்கும் அரசாங்கத்தின் முடிவு குறித்து மக்கள் போராட்ட முன்னணி கவலை வெளியிட்டுள்ளது.



தோல்வியடைந்த அரசியல்வாதிகள் மாகாண சபைகளுக்குள் நுழையத் திட்டம்!
[Monday 2025-01-06 17:00]

பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த சிரேஷ்ட அரசியல்வாதிகளில் 60 இற்கும் அதிகமானோர் உத்தேச மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட கட்சி மட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.



நீதித்துறை மீது நம்பிக்கையை ஏற்படுத்துவது சட்டமா அதிபர் திணைக்களத்தின் பொறுப்பு!
[Monday 2025-01-06 17:00]

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சட்டமா அதிபர் உள்ளிட்ட சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.



கீழே கிடந்த தங்க நகையை ஒப்படைத்தவருக்கு நேர்ந்த கதி!
[Monday 2025-01-06 17:00]

யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் உணவு வாங்க வந்தவ கூலித் தொழிலாளி ஒருவர் நிலத்தில் விழுந்துகிடந்த தங்க ஆபரணத்தை எடுத்து வெதுப்பகத்தில் வழங்கிய நிலையில் இளைஞர் குழு அவரை கட்டிவைத்து தாக்கி வீடியோ காணொளி பதிவிட்டுள்ளது.



ஊடகங்களை அச்சுறுத்துவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும்!
[Monday 2025-01-06 17:00]

ஊடகவியலாளர்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, அவற்றை அச்சுறுத்தும் வகையில் செயற்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.



சுயாட்சியை வலியுறுத்தும் யோசனையை முன்வைக்கிறார் சிறீகாந்தா!
[Monday 2025-01-06 17:00]

தேசிய மக்கள் சக்தியால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசமைப்பில் 'முழுமையான சுயாட்சியை' வலியுறுத்தும் வகையில் தமிழ்த் தேசியக் கட்சி பிரேரணையொன்றை முன்வைத்துள்ளது.


Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா