Untitled Document
January 8, 2025 [GMT]
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கினால் வெளிநாட்டு முதலீடுகள் வரும்!
[Wednesday 2025-01-08 05:00]


வவுனியா   பல்கலைக்கழக  வளாகத்தை   மன்னாரில் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ள  நிலையில்   அதற்கான நிதியை  வரவு செலவுத்  திட்டத்தில்  ஒதுக்க வேண்டும்.  பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கினால்  புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்வார்கள்  என பாராளுமன்ற  உறுப்பினர் செல்வம்  அடைக்கலநாதன்  தெரிவித்தார்.

வவுனியா பல்கலைக்கழக வளாகத்தை மன்னாரில் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான நிதியை வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்க வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கினால் புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்வார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

  

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மத்திய ஆண்டு நிதிநிலை அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் . அப்போதுதான் வெளிநாட்டிலுள்ள இலங்கை தமிழர்கள் இங்கு முதலீடு செய்வார்கள். கடந்த காலங்களில் முதலீடுகளை செய்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தும் சூழலே காணப்படுகிறது. ஆகவே பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

மன்னார் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களில் வவுனியா பல்கலைக்கழக வளாகத்தினை மன்னாரில் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. இது தொடர்பில் ஏற்கனவே இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. எனவே இந்த வளாகத்தினை அமைக்க வரவு செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

முப்படைகளினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் நிலங்களை விடுவிப்பதாக ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளார். வன்னியில்தான் கூடுதலான மக்களின் நிலங்கள் முப்படைகளின் ஆக்கிரமிப்பில் உள்ளன. அவற்றை உடனடியாக விடுவிக்க வேண்டும். இதுதொடர்பில் அபிவிருத்திக்குக்குள்க் கூட்டத்தில் பேசியுள்ளோம்.

மன்னாரை எடுத்துக்கொண்டால் முள்ளிக்குளம், தலைமன்னார் பியர், மன்னார் போன்ற இடங்களை உதாரணமாக கூற முடியும்.

கிழக்கில் வாழைச்சேனையில் மக்களின் விவசாய காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன . இதனை பாராட்டுகின்றேன் வன வளத் திணைக்களம், தொல்லியல் திணைக்களம் போன்றவையே மக்களின் காணிகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

இவர்களினால் தொடர்ந்தும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன . இந்தியாவிலுள்ள ஈழத்தமிழர்கள் இலங்கை திரும்ப விரும்பும் நிலையில் அவர்கள் கடவுச்சீட்டுக்களை பெறுவதில் சிக்கல் உள்ளது. எனவே அவர்களை கப்பலில் அழைத்து வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



தொல்லியல் திணைக்களத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்! Top News
[Wednesday 2025-01-08 16:00]

திருகோணமலை,வெருகல் பிரதேச செயலகப்பிரிவின் வட்டவான் பகுதியில்,திங்களன்று திடீரென தொல்லியல் திணைக்களத்தால் நடப்பட்ட " வட்டவான் தொல்லியல் நிலையம்" என்ற பெயர் பலகைக்கு ஆட்சேபம் தெரிவித்து,வெருகல் பிரதேச செயலகத்தின் முன்பாக பொதுமக்களால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.



உயிரிழந்த நிலையில் 11 டொல்பின்கள் மீட்பு!
[Wednesday 2025-01-08 16:00]

உயிரிழந்த நிலையில் டொல்பின்கள் பல வில்பத்து தேசிய பூங்கா கடற்பிரதேசத்தில் உயிரிழந்த பல டொல்பின்களின் சடலங்கள் கொட்டப்பட்டுள்ளதாக மொல்லிக்குளம் பிரதேச பாதுகாப்பு அலுவலகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வனவிலங்கு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



தேராவில் துயிலுமில்ல காணியை விடுவிக்க கோரி கையெழுத்து போராட்டம்! Top News
[Wednesday 2025-01-08 16:00]

விசுவமடு - தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணியை இராணுவத்தினரிடமிருந்து விடுவித்து மாவீரர் தினத்தில் தமது பிள்ளைகளுக்கான நினைவேந்தலை சுதந்திரமாக அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி கையெழுத்து போராட்டம் இன்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.



இஸ்ரேலிய மத கட்டுமானங்களுக்கு அனுமதியில்லை!
[Wednesday 2025-01-08 16:00]

இஸ்ரேலின் தேசிய மத நிலையங்களையோ அல்லது அதற்கு நிகரான கட்டிடங்களையோ நிர்மாணிப்பதற்கு எந்தவொரு அரசாங்க நிறுவனமும் அனுமதி வழங்கவில்லை என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.



அநுர அரசு உண்மையை கண்டறிந்து நீதியை வழங்கும்! - லசந்த குடும்பத்தினர் நம்பிக்கை.
[Wednesday 2025-01-08 16:00]

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் குடும்பம், அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மையைக் கண்டறிந்து நீதி வழங்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளது.



அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி புதுக்குடியிருப்பில் கையெழுத்து போராட்டம்!
[Wednesday 2025-01-08 16:00]

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கையெழுத்து போராட்டம் இன்று (08) காலை 11 மணியளவில் இடம்பெற்றது. போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் கையெழுத்து போராட்டம் பல்வேறு தரப்பினரதும் பேராதரவுடன் இடம்பெற்றது.



என்பிபி வேட்பாளருக்கு எதிராக திரண்ட முச்சக்கரவண்டி சாரதிகள்!
[Wednesday 2025-01-08 16:00]

சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற கார் சாரதியை தாக்கி தங்கச் சங்கிலியை கொள்ளையிட்ட குற்றச்சாட்டின் பேரில் 6 முச்சக்கர வண்டி சாரதிகள் கைது செய்யப்பட்டதற்கு எதிராக தம்புள்ளை, சீகிரிய மற்றும் ஹபரணை பிரதேசங்களில் உள்ள முச்சக்கர வண்டி சாரதிகள் சங்க உறுப்பினர்கள் நேற்று பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கிளீன் சிறிலங்கா தொடர்பில் 2 நாட்கள் பாராளுமன்ற விவாதம்!
[Wednesday 2025-01-08 16:00]

கிளீன் சிறிலங்கா (தூய்மையான இலங்கை) வேலைத்திட்டம் தொடர்பில் இரண்டு நாட்கள் பாராளுமன்ற விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.ஜனவரி 21 மற்றும் 22 ஆகிய திகதிகளில் மேற்படி விவாதம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டம் தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் இந்த விவாதம் நடத்தப்படவுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.



புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு தொடங்கியது!
[Wednesday 2025-01-08 16:00]

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு இன்று ஆரம்பமாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.



உண்டியல் மற்றும் ஹவாலா பணப்பரிமாற்றம் சட்டவிரோதமல்ல!
[Wednesday 2025-01-08 16:00]

உண்டியல் மற்றும் ஹவாலா பணப் பரிமாற்ற முறைகள் இலங்கையில் சட்டவிரோதமானவை அல்ல என்று பொது நிதி தொடர்பான பாராளுமன்றக் குழுவின் (COPF) தலைவர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.



தீர்வுத் திட்டம் குறித்து 25 ஆம் திகதி முக்கிய கலந்துரையாடல்!
[Wednesday 2025-01-08 05:00]

புதிய அரசியலமைப்பு உருவாக்க விடயத்தில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கைத் தமிழரசுக்கட்சி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து பொதுநிலைப்பாடொன்றை எட்டுவது குறித்துக் கலந்துரையாடும் நோக்கிலான சந்திப்பு எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறவுள்ளது.



அமைச்சர் வசந்த சமரசிங்கவே அரிசி மாபியாவின் தலைவர்!
[Wednesday 2025-01-08 05:00]

அரிசி மாபியாக்கள் இலாபமடையும் சூழலையே அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க அரிசி மாபியாக்களின் தலைவராக செயற்படுகிறார் என்பதை அச்சமில்லாமல் எம்மால் குறிப்பிட முடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.



அரிசிப் பிரச்சினைக்கு தீர்வை தேடுகிறதாம் அரசாங்கம்!
[Wednesday 2025-01-08 05:00]

அரிசி பிரச்சினைக்கான தீர்வினையே நாமும் தேடிக் கொண்டிருக்கின்றோம். எவ்வாறிருப்பினும் ஒரு இலட்சத்து 6000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிக அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் இரண்டு இலட்சம் மெட்ரிக் தொன்னும் அதிக உள்நாட்டு அரிசியும் சந்தைகளுக்கு விநியோகிக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.



ரணில் இலவசமாக வழங்கியதால் தான் அரிசிக்கு தட்டுப்பாடு!
[Wednesday 2025-01-08 05:00]

ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 20 கிலோ சிவப்பு அரிசியை இலவசமாக வழங்கியதால் தான் தற்போது சிவப்பரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்போம். அரிசி மாபியாக்களின் செயற்பாடுகளை இல்லாதொழிப்போம் என வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.



14ஆம் திகதி சீனா செல்கிறார் ஜனாதிபதி!
[Wednesday 2025-01-08 05:00]

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க 2025 ஜனவரி 14 முதல் 17 வரை சீனாவுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொள்வார் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.



வாக்குறுதியில் இருந்து விலகினால் நம்பிக்கை பறிபோகும்!
[Wednesday 2025-01-08 05:00]

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் உண்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான உள்ளகப்பொறிமுறையொன்றை நிறுவுவதாகத் தமது அரசாங்கம் வாக்குறுதியளித்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, எனவே தற்போதைய அரசாங்கம் அவ்வாக்குறுதியிலிருந்து பின்வாங்கும் பட்சத்தில் இலங்கை அரசாங்கம் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்படும் என விசனம் வெளியிட்டார்.



யாழ். - கொழும்பு இடையே மேலும் 2 ரயில் சேவைகள்!
[Wednesday 2025-01-08 05:00]

கொழும்பு - யாழ்ப்பாணத்திற்கு மேலதிகமாக இரு ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்வுள்ளது. 15ம் திகதியில் இருந்து ஒரு ரயில் சேவையும், 31ம் திகதியில் இருந்து பிறிதொரு ரயில் சேவையும் ஆரம்பிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.



கட்டி வைத்து தாக்கிய 5 பேருக்கு விளக்கமறியல்!
[Wednesday 2025-01-08 05:00]

யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் ஒருவரை கட்டி வைத்து தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைதான ஐந்து சந்தேகநபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாண மேலதிக நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.



வீதியால் சென்றவர் வெள்ளத்தில் மூழ்கி மரணம்!
[Wednesday 2025-01-08 05:00]

கிளிநொச்சி முகமாலைப் பகுதியில் வீதியில் தேங்கிக் காணப்பட்ட வெள்ள நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். செவ்வாய்க்கிழமை பகல் 9:30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. முகமாலை வடக்கு பகுதியில் ஆட்கள் நடமாட்டம் குறைந்த வீதியினால் பயணித்தபோது வீதியில் தேங்கி காணப்பட்ட வெள்ள நீரில் விழுந்து உயிரிழந்துள்ளார்.



வேட்புமனுக்களை ரத்துச் செய்வதற்கான வர்த்தமானி வெளியானது!
[Tuesday 2025-01-07 17:00]

2023 உள்ளூராட்சி தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை ரத்துச் செய்வதற்கும் புதிய வேட்பு மனுக்களை கோருவதற்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான வரைவு சட்டமூலம் வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளது.


Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா