Untitled Document
January 9, 2025 [GMT]
வடக்கிற்கான ரயில் சேவைகளை விரிவுபடுத்த வேண்டும்!
[Thursday 2025-01-09 05:00]


வடக்கு மாகாணத்துக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ள ரயில் சேவையை  விரிவுபடுத்த  போக்குவரத்து அமைச்சு விசேட கவனம் செலுத்த வேண்டும். தமிழர்கள் அதிகமாக வசிக்கும் வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி ரயில் நிலையங்களில்  வடக்கு மாகாணத்துக்கான ரயில்களை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்  பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  வலியுறுத்தினார்.

வடக்கு மாகாணத்துக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ள ரயில் சேவையை விரிவுபடுத்த போக்குவரத்து அமைச்சு விசேட கவனம் செலுத்த வேண்டும். தமிழர்கள் அதிகமாக வசிக்கும் வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி ரயில் நிலையங்களில் வடக்கு மாகாணத்துக்கான ரயில்களை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தினார்.

  

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) நடைபெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழான கட்டளைகள், கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் உட்பட பல ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மருந்து விநியோக சேவைகளுக்கான நேர்முகத் தேர்வுக்கு விண்ணப்பதாரிகள் அழைக்கப்பட்டு, தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் பட்டியல் இருக்கின்ற போதும் இதுவரையில் நியமனங்கள் வழங்கப்படவில்லை.

வடக்கு மாகாணத்தில் இந்த பதவிக்கு 40 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. ஆனால் பிற மாவட்டங்களைச் சேர்ந்தோர் அழைக்கப்படுகின்றனர். நியமனம் வழங்கப்படாத காரணத்தால் சுகாதார சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு - யாழ் ரயில் சேவை தொடர்பிலும் சுட்டிக்காட்ட எதிர்பார்க்கின்றேன். இந்திய நிதி திட்டத்தின் கீழ் வடக்கு ரயில் பாதை புனரமைக்கப்படுகிறது.

தினசரி கொழும்பு - யாழ். இடையே நான்கு ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அநுராதபுரம் முதல் வவுனியா வரையிலான ரயில் பாதை புனரமைப்பு பணி காரணமாக அந்த புகையிரத சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன.

அந்த நான்கு சேவைகளில் இரண்டு சேவைகள் கிழக்கு மாகாணத்திற்கு முன்னெடுக்கப்பட்ட போதும் யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் கொண்டு வரப்படவில்லை.

தற்போது யாழ்ப்பாணத்திற்கு ஒரு ரயில் சேவையே உள்ளது. அத்துடன் அதிவேக ரயில் சேவை சனி மற்றும் ஞாயிறு தினங்களில் முன்னெடுக்கப்படுகிறது.

இது எமக்கு போதுமானது அல்ல. நான்கு சேவைகளை மேற்கொள்ள வேண்டிய நிலையில் இரண்டு சேவைகளே தற்போது முன்னெடுக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பில் ரயில் திணைக்களமும், போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேவேளை யாழ்ப்பாண ரயில் சேவை கொழும்பு வரையிலேயே முன்னெடுக்கப்படுகிறது. கல்கிசை வரையில் நடத்தப்பட வேண்டும் என்பதுடன் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி ரயில் நிலையங்களில் நிறுத்தக் கூடியவாறும் சேவைகள் நடத்தப்பட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்கின்றேன் என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



சவேந்திர சில்வாவின் அலுவலகம் மூடப்பட்டது!
[Thursday 2025-01-09 16:00]

முன்னாள் பாதுகாப்புப் படைகளின் முன்னாள் பிரதானி சவேந்திர சில்வாவின் அலுவலகம் உத்தியோகபூர்வமாக மூடப்பட்டுள்ளது.



கொடிகாமத்தில் கையெழுத்து போராட்டம்!
[Thursday 2025-01-09 16:00]

பல வருடங்களாக விசாரணை என்னும் பெயரில் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி முன்னெடுக்கப்பட்டுவரும் கையெழுத்துப் போராட்டம் இன்றையதினம் கொடிகாமம் பேருந்துத் தரிப்பிடத்திற்கு முன்பாக இடம்பெற்றது.



ஞானசார தேரருக்கு 9 மாத சிறைத்தண்டனை!
[Thursday 2025-01-09 16:00]

இஸ்லாமிய மதத்தை அவமதித்ததற்காக பொதுபல சேனா (பிபிஎஸ்) அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் 9 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது.



மின்சக்தி திறன் திட்டங்களில் 10.9 பில்லியன் டொலரை முதலீடு செய்கிறது ஒன்ராறியோ அரசு!
[Thursday 2025-01-09 16:00]

2050 ஆம் ஆண்டளவில் 75% மின் தேவை அதிகரிப்பை எதிர்கொள்ள ஒன்ராறியோ அரசு மின்சக்தி திறன் திட்டங்களில் $10.9 பில்லியன் முதலீடு செய்கிறது. ஜனவரி 28, 2025 இல் தொடங்கப்படும், வீடு புதுப்பித்தல் சேமிப்புத் திட்டம் மின்சக்தி-திறனுள்ள புதுப்பிப்புகளுக்கு 30% வரை தள்ளுபடியை வழங்கும்.



வல்லையில் மாட்டுடன் மோட்டார் சைக்கிள் மோதி இளைஞன் பலி!
[Thursday 2025-01-09 16:00]

வல்லைப் பகுதியில் புதன்கிழமை இரவு 7.30 மணியளவில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தவில் வித்துவான் விஜயகுமாரின் மகனான, 21 வயதான விஜயகுமார் மணிகண்டன் என்ற இளைஞன், உயிரிழந்துள்ளார் . இவர், யா / நெல்லியடி மத்திய கல்லூரி பழைய மாணவனும் பிரபல தவில் வித்துவான் விஜயகுமாரின் புதல்வனும் ஆவார்.



இலங்கைக்கு படையெடுக்கவுள்ள 1 இலட்சம் அகதிகள்!
[Thursday 2025-01-09 16:00]

புலனாய்வு தகவல்களுக்கு அமைய எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு 1 இலட்சம் அளவிலான அகதிகள் சட்டவிரோதமான முறையில் வருகைத் தருவதற்கான சாத்தியம் காணப்படுகிறது. நாட்டுக்கு வருகைத் தந்துள்ள 116 மியன்மார் பிரஜைகள் உண்மையில் அகதிகளாக வருகைத் தந்துள்ளார்களா என்பதை உறுதிப்படுத்தியதன் பின்னரே சர்வதேச சட்டத்துக்கு அமைய செயற்பட முடியும் என பொதுமக்கள் மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.



முல்லைத்தீவில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் படுகாயம்!
[Thursday 2025-01-09 16:00]

முல்லைத்தீவு- கூழாமுறிப்பு பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமுற்று மாஞ்சோலை வைத்தியசாலையில் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.



வெளிநாட்டு தூதுவர்களை சந்திக்க தடையா?
[Thursday 2025-01-09 16:00]

வெளிவிவகார அமைச்சரின் அனுமதியின்றி அமைச்சர்கள் வெளிநாட்டு தூதரகங்களின் தலைவர்களை சந்திப்பதற்கு தடைவிதித்து ஜனாதிபதியின் செயலாளர் சுற்றறிக்கை வெளியிட்டதாக எதிர்க்கட்சி எம்.பி தயாசிறி ஜயசேகர குற்றம் சுமத்திய அதேவேளை, சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க அதனை நிராகரித்ததுடன் நேற்று தாம் ஒரு வெளிநாட்டு தலைவரை சந்தித்ததாக தெரிவித்தார்.



எச்எம்பிவி தொற்று இலங்கையில் இல்லை!
[Thursday 2025-01-09 16:00]

சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது போல், இலங்கையில் எச்எம்பிவி தொற்றுகள் எவையும் அண்மையில் கண்டறியப்படவில்லை எனக் கூறிய சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, சுகாதார அமைச்சு இவ்விடயம் குறித்து விழிப்புடன் இருப்பதாகவும், நாட்டில் வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் கண்டறியப்பட்டால் மக்களுக்கு அறிவிப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.



வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீட்டு சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!
[Thursday 2025-01-09 16:00]

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டு சட்டமூலத்தை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். குறித்த சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ளது.



அமெரிக்க தூதுவருடன் தமிழரசு எம்.பிக்கள் சந்திப்பு!
[Thursday 2025-01-09 05:00]

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர் யூலி சங் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது.



கிளீன் ஸ்ரீ லங்கா திட்டத்திற்குள் மோசடிகளும், குற்றங்களும் மறைக்கப்படுகிறது!
[Thursday 2025-01-09 05:00]

அரிசி மாபியாக்களை இல்லாதொழிப்பதை மறந்து விட்டு வாகனங்களின் உதிரிபாகங்களை அகற்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கிளீன் ஸ்ரீ லங்கா திட்டம் என்று குறிப்பிட்டுக் கொண்டு பெரும் மோசடிகளும், குற்றங்களும் மறைக்கப்படுகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.



சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுயாதீனத்தன்மை பாதிப்பு!
[Thursday 2025-01-09 05:00]

வழக்குகளை துரிதப்படுத்துவது குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்குவதாயின் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுயாதீனம் கேள்விக்குள்ளாக்கப்படும். இவ்வாறான செயற்பாடுகளினால் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதிமன்ற கட்டமைப்பின் எதிர்காலம் என்னவாகும் என்பது சந்தேகத்துக்குரியது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.



பயங்கரவாத தடைச்சட்டம்- அரசின் நிலைப்பாடு என்ன?
[Thursday 2025-01-09 05:00]

எதிர்கட்சியில் இருக்கும்போது பயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்த்துவந்த அரசாங்கம் அதனை நீக்குவதற்கு ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கமல் இருக்கிறது என கேட்கிறேம். இந்த சட்டத்தை இரத்துச் செய்வதா அல்லது அதற்கான திருத்தத்தைக் கொண்டு வருவதா என்பது குறித்தான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.



“மொசாட்“ இலங்கைக்கு வருவதால் ஆபத்து!
[Thursday 2025-01-09 05:00]

இலங்கையில் உள்ள இஸ்ரேல் நாட்டவரின் மதஸ்தலங்கள் மற்றும் கலாச்சார ஸ்தலங்களுக்கு பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்படுவது தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாகும். மொசாட் இலங்கைக்கு வருவது அவ்வளவு நல்லதல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹமான் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்தார்.



இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!
[Thursday 2025-01-09 05:00]

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வெளியிட்டுள்ள நாணய மாற்றுவீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 286 ரூபா 46 சதமாக பதிவாகியுள்ளது.அத்துடன் விற்பனை விலை 300 ரூபா 52 சதமாக பதிவாகியுள்ளது.



பனிசுக்குள் லைட்டரின் பாகங்கள்!
[Thursday 2025-01-09 05:00]

பாணந்துறையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட பனிஸ் ஒன்றிற்குள் லைட்டரின் பாகங்கள் காணப்பட்டுள்ளன. பாணந்துறை அருக்கொட பிரதேசத்தை சேர்ந்த மஞ்சுள பெரேரா என்பவர் நேற்றுக்காலை இரண்டு கறி பனிஸ்களை ஹோட்டலில் இருந்து கொள்வனவு செய்துள்ளார். அதில் ஒரு பனிஸில் லைட்டரின் உலோகப் பகுதி காணப்பட்டது.



இந்த வருட நடுப்பகுதியில் பணவீக்கம் நிலையான நிலையை எட்டும்!
[Thursday 2025-01-09 05:00]

இந்த வருடத்தின் நடுப்பகுதியில் இலங்கையில் பணவீக்கம் நிலையான நிலையை எட்டுமென மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியின் 2025 புத்தாண்டுக்கான கொள்கை தொடர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.



1,042 வேட்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை!
[Thursday 2025-01-09 05:00]

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.



தொல்லியல் திணைக்களத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்! Top News
[Wednesday 2025-01-08 16:00]

திருகோணமலை,வெருகல் பிரதேச செயலகப்பிரிவின் வட்டவான் பகுதியில்,திங்களன்று திடீரென தொல்லியல் திணைக்களத்தால் நடப்பட்ட " வட்டவான் தொல்லியல் நிலையம்" என்ற பெயர் பலகைக்கு ஆட்சேபம் தெரிவித்து,வெருகல் பிரதேச செயலகத்தின் முன்பாக பொதுமக்களால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.


NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா