Untitled Document
January 10, 2025 [GMT]
அரசியல் தீர்வில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும்!
[Friday 2025-01-10 05:00]


அனைத்து இன மக்களும் இந்த அரசாங்கத்தில் பங்குதாரர்களாக உள்ளனர். ஆகவே, அரசியல் தீர்வு விவகாரம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும். தீர்வுத் திட்டத்தில் அரசாங்கம் சிறந்த தீர்மானத்தை எடுத்தால் சிங்கள மக்களும் ஆதரவளிப்பார்கள். ஏனெனில், சிங்கள மக்களும் தற்போது நேர்மனப்பான்மையில் உள்ளார்கள் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சபையில்  வலியுறுத்தினார்.

அனைத்து இன மக்களும் இந்த அரசாங்கத்தில் பங்குதாரர்களாக உள்ளனர். ஆகவே, அரசியல் தீர்வு விவகாரம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும். தீர்வுத் திட்டத்தில் அரசாங்கம் சிறந்த தீர்மானத்தை எடுத்தால் சிங்கள மக்களும் ஆதரவளிப்பார்கள். ஏனெனில், சிங்கள மக்களும் தற்போது நேர்மனப்பான்மையில் உள்ளார்கள் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சபையில் வலியுறுத்தினார்.

  

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (9) நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கான நலன்புரி திட்டங்கள் மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும். தகுதிவாய்ந்த தரப்பினருக்கு நலன்புரி கொடுப்பனவுகள் கிடைக்கப்பதில்லை. கிளிநொச்சி மாவட்டம் உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் இவ்வாறான நிலையே காணப்படுகிறது. இதனால் நலன்புரி கொடுப்பனவை பெற்றுக்கொள்ள தகுதியுள்ளவர்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள்.

நலன்புரி கொடுப்பனவை பெற்றுக் கொள்வதற்கு தகுதியற்றவர்களாக உள்ள செல்வந்தர்களுக்கு கொடுப்பனவுகள் கிடைக்கப் பெறுகின்றன. ஆகவே நலன்புரி திட்டம் மறுபரிசீலனை செய்யப்பட்டு தகுதியுள்ளவர்களுக்கு நிவாரண கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.

மீன் குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் கடந்த காலங்களில் முறையாக கிடைக்கப் பெறவில்லை.குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 8 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு 1 முதல் 3 இலட்சம் ரூபா வரையில் மீள்குடியேற்ற தொகை ஆரம்பத்தில் வழங்கப்பட்டது.இருப்பினும் ஒருசிலருக்கு இந்த நிதி இன்று வரை கிடைக்கப் பெறவில்லை.

கிளிநொச்சி மாவட்டத்தில் 38 ஆயிரம் தமிழர்கள் மீன் குடியமர்த்தப்பட்ட நிலையில் அவர்களில் 11790 பேருக்கு மீள்குடியேற்ற தொகை வழங்கப்பட்டது. மிகுதி 26209 பேருக்கு இன்றும் அந்த தொகை வழங்கப்படவில்லை. மட்டக்களப்பு - வாகரை, வவுனியா - வடக்கு, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மடு, யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் மீள்குடியமர்த்தப்பட்டவர்களுக்கு இன்றுவரை இந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை.

மீன் குடியமர்த்தப்பட்ட மக்கள் இந்த தொகையை பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்ப படிவங்களை நிரப்பியே அதிகளவில் நிதியை செலவு செய்துள்ளார்கள். ஆகவே இந்த அரசாங்கம் இவ்விடயத்தில் உரிய கவனம் செலுத்த வேண்டும். கிராம சேவகர் பிரிவுகள் ஊடாக இந்த நிதியை பெற்றுக்கொள்வதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளமை கவனத்திற்குரியது. இந்த அரசாங்கத்துக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. அனைத்து இன மக்களும் இந்த அரசாங்கத்தில் பங்குதாரர்களாக உள்ளனர். ஆகவே அரசியல் தீர்வு விவகாரம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும். தீர்வு திட்டத்தில் அரசாங்கம் சிறந்த தீர்மானத்தை எடுத்தால் சிங்கள மக்களும் ஆதரவளிப்பார்கள் ஏனெனில் சிங்கள மக்களும் தற்போது நேர்மனப்பான்மையில் உள்ளார்கள்.

அரசாங்கம் சிறந்த முறையில் செயற்பட்டாலும் ஒருசில துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் இடம்பெறுகின்றன. பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடளிக்க சென்ற பெண் மிக கொடூரமான முறையில் பொலிஸாரினால் தாக்கப்பட்டுள்ளார். இந்த நாட்டில் என்ன நடக்கிறது. இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் தமக்கு காணிகள் வேண்டும் என்று பாணந்துறை, கொழும்பு பகுதிகளில் வாழும் சிங்களவர்கள் குறிப்பிட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளன. லன்டனில் உள்ள ஒருவர் தன்னை தேசிய மக்கள் சக்தியின் ஊடக இணைப்பாளர் என்று குறிப்பிட்டுக் கொண்டு புத்தளம், நீர்கொழும்பு, சிலாபம், கொழும்பு, வத்தளை, வெள்ளவத்தை மற்றும் கொள்ளுப்பிட்டி ஆகிய பகுதிகளில் வாழும் தமிழர்கள் அப்பகுதிகளுக்கு குடியமர்த்தப்பட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி முதலில் இந்த நபருக்கு வரலாற்றை கற்றுக்கொடுக்க வேண்டும். புத்தளம், சிலாபம் மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் தமிழர்கள் பூர்வீக குடிகளாகவே வாழ்ந்தனர்.அதேபோல் கொழும்பு கறுவாத்தோட்டம், கொள்ளுப்பிட்டி ஆகிய பகுதிகளில் தமிழர்கள் பூர்வீக குடிகளாகவே வாழ்ந்தனர். பிற்பட்ட காலத்தில் நீர்கொழும்பு பகுதியில் வாழ்ந்த தமிழர்கள் சிங்களவர்களாக மாற்றம் பெற்றார்கள்.இதுதான் உண்மை.

1970, 1983 மற்றும் 1985 ஆகிய காலப்பகுதிகளில் அநுராதபுரம் பகுதியில் வாழ்ந்த 22 ஆயிரம் தமிழர்கள் ஒரே இரவில் சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். அதேபோல் 1983ஆம் ஆண்டு மலையகத்தில் இருந்து 2000 எம் சகோதரர்கள் வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் இன்று சொந்த இடங்கள் ஏதும் இல்லாமல் பல்வேறு இடங்களில் வாழ்கிறார்கள்.அவர்களையும் மீள்குடியேற்றம் செய்யுங்கள் என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



தமிழராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 51ஆவது ஆண்டு நினைவேந்தல்! Top News
[Friday 2025-01-10 17:00]

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 51 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை 9:30 மணிக்கு யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழராட்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில் இடம்பெற்றது



அரிசித் தட்டுப்பாட்டுக்கு தொல்லியல் திணைக்களமும் காரணம்!
[Friday 2025-01-10 17:00]

தொல்லியல் திணைக்களம் உட்பட அரச திணைக்களங்களினால் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளமையும் நாட்டின் நெல் உற்பத்தி குறைவுக்கு காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் குகதாசன் தெரிவித்தார். நேற்றையதினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



உதயங்க வீரதுங்க கைது - விளக்கமறியலில் வைக்க உத்தரவு!
[Friday 2025-01-10 17:00]

முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்க, மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மிரிஹான பிரதேசத்தில், அயலவர் வீட்டாரை தாக்கிய சம்பவம் தொடர்பிலேயே, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான நபர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



அரிசித் தட்டுப்பாட்டை நீக்க கோரி வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம்!
[Friday 2025-01-10 17:00]

அரிசித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அக்கரப்பத்தனை மன்றாசி நகரில் வர்த்தகர்கள் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கிளிநொச்சியில் பேருந்து மோதி முதியவர் பலி!
[Friday 2025-01-10 17:00]

கிளிநொச்சி நகரில் இன்று அதிகாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார்.யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த அரச பேருந்தில் கந்தசாமி கோவிலுக்கு முன்பாக குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.



இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளராக மேல்நீதிமன்ற நீதிபதி!
[Friday 2025-01-10 17:00]

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்கவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நியமித்துள்ளார். இதற்கமைவான நியமனக் கடிதம் ஜனதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால், மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்கவுக்கு இன்று வழங்கப்பட்டது.



இளைஞனைக் கடத்தி தாக்கியவர் கைது!
[Friday 2025-01-10 17:00]

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை கடத்தி சென்று தாக்கிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் சுமார் ஒருவருடத்துக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.



மண்ணெண்ணெய் அருந்திய குழந்தை பலி!
[Friday 2025-01-10 17:00]

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் நேற்று ஒரு வயது ஆண் குழந்தை மண்ணெண்ணெய் அருந்திய நிலையில் உயிரிழந்துள்ளது. கோப்பாய் மத்தி, கோப்பாய் பகுதியைச் சேர்ந்த தர்சிகன் சஸ்வின் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.



பெப்ரவரி 12 ஆம் திகதிக்குள் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு!
[Friday 2025-01-10 17:00]

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் பெப்ரவரி 10 முதல் 12 ஆம் திகதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்தார்.



பாசிக்குடாவில் ரஷ்ய சுற்றுலாப் பயணி நீரில் மூழ்கி மரணம்!
[Friday 2025-01-10 16:00]

மட்டக்களப்பு - பாசிக்குடா கடலில் நீராடச் சென்ற ரஷ்ய நாட்டு சுற்றுலாப் பயணி இன்று கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துதுள்ளார். ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 65 வயதுடைய கரிசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்



மன்னார் புதைகுழி வழக்கு - இன்று முக்கிய அறிக்கை சமர்ப்பிக்கப்படும்!
[Friday 2025-01-10 05:00]

மன்னார் சதோச மனித புதைகுழி மற்றும் மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி வழக்கு விசாரணைகள் நேற்று மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது பாதிக்கப்பட்டோர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.



புன்னாலைக் கட்டுவன் விபத்தில் ஒருவர் பலி!
[Friday 2025-01-10 05:00]

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். புத்தூரிலிருந்து சுன்னாகம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஹயஸ் வாகனம் பலாலிலிருந்து ஏழாலை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.



குழந்தைகள் பிறப்பு குறைந்தது!
[Friday 2025-01-10 05:00]

கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பிறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளதாக குழந்தை மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இந்த நிலைமை இந்த நாட்டின் எதிர்காலத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.



ஐதேக- ஐமசவை இணைக்கும் பொறுப்பு ராஜிதவிடம்!
[Friday 2025-01-10 05:00]

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை ஒன்றிணைக்கும் பொறுப்பை முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தானாக முன்வந்து ஏற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.



அடுத்த ஆண்டு முதல் வழக்கம் போல பரீட்சை!
[Friday 2025-01-10 05:00]

அடுத்த ஆண்டு முதல் பரீட்சைகளை வழக்கம் போல் நடத்தும் வகையில், பாடசாலைக் காலத்தை வழக்கம் போல் கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.



வாக்குறுதிகளை மூடி மறைக்கவே கிளீன் சிறிலங்கா!
[Friday 2025-01-10 05:00]

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும், அதற்கு பதிலாக ‘கிளீன் ஸ்ரீலங்கா’ போன்ற பல்வேறு தேசிய வேலைத்திட்டங்கள் மூலம் அதை மூடிமறைப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர அரசாங்கத்தை கடுமையாக சாடினார்.



7 இலட்சம் ரூபா வலைகளை அறுத்த இந்திய படகுகள்!
[Friday 2025-01-10 05:00]

இலங்கை கடற்பரப்பில் புதன்கிழமை (08) இரவு இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறி உள்நுழைந்து, மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டமையால் யாழ்ப்பாணம் - சுழிபுரம், காட்டுப்புலம் பகுதி மீனவர் ஒருவரின் சுமார் ஏழு இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகள் அறுக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளன.



டயானாவுக்கு எதிரான குற்றப்பத்திரிகை தாக்கல்!
[Friday 2025-01-10 05:00]

போலி ஆவணங்களை சமர்ப்பித்து கடவுச்சீட்டைப் பெற்றதாகக் கூறி, முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டது. கொழும்பு மேல்ர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் வழக்கு அழைக்கப்பட்ட போதே இந்தக் குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டது.



10 இந்திய மீனவர்கள் கைது!
[Friday 2025-01-10 05:00]

இலங்கை கடற்பரப்பினுள் நேற்றுமுன்தினம் இரவு அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மீன்பிடி படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



சவேந்திர சில்வாவின் அலுவலகம் மூடப்பட்டது!
[Thursday 2025-01-09 16:00]

முன்னாள் பாதுகாப்புப் படைகளின் முன்னாள் பிரதானி சவேந்திர சில்வாவின் அலுவலகம் உத்தியோகபூர்வமாக மூடப்பட்டுள்ளது.


Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா