Untitled Document
January 10, 2025 [GMT]
அரிசித் தட்டுப்பாட்டுக்கு தொல்லியல் திணைக்களமும் காரணம்!
[Friday 2025-01-10 17:00]


தொல்லியல் திணைக்களம் உட்பட அரச திணைக்களங்களினால் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளமையும் நாட்டின் நெல் உற்பத்தி குறைவுக்கு காரணம் என  நாடாளுமன்ற உறுப்பினர் குகதாசன் தெரிவித்தார். நேற்றையதினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொல்லியல் திணைக்களம் உட்பட அரச திணைக்களங்களினால் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளமையும் நாட்டின் நெல் உற்பத்தி குறைவுக்கு காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் குகதாசன் தெரிவித்தார். நேற்றையதினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

  

நாட்டிலே தற்போது ஏற்பட்டுள்ள அரிசி விலை உயர்வுக்கு வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை பேரிடர்கள் மட்டுமன்றி. அரசினது அங்கங்களானபல்வேறு திணைக்களங்களும் காரணமாக உள்ளன. இதில் முதன்மை வகிப்பது தொல்பொருள் துறையாகும்.

தொல்பொருள் துறையானது தமிழ் மக்கள் சில நூற்றாண்டு காலமாக விவசாயம் செய்து வருகின்ற விவசாய நிலங்களை தமது தொல்பொருள் இடங்களாக அறிவித்துக் கையகப்படுத்தி வருகிறது.

எடுத்துக்காட்டாக. இந்த ஆண்டு தொடங்கி பத்து நாட்கள்கூட முடிவடையாத நிலையில், தொல்லியல் துறையானது ஜனவரி 6 மாலை திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஈச்சிலம்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும் வட்டவான் கிராமசேவகர் பிரிவில் அடங்கும் 224 விவசாயிகளுக்கு சொந்தமான 380 ஏக்கருக்கு மேற்பட்ட நெற்பயிரோடு கூடிய விவசாய நிலத்தை தமது தொல்லியல் பகுதி என அறிவித்துள்ளது.

அதேபோன்று குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும்குச்சவெளி கிராம சேவையாளர் பிரிவில், 1985ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே விவசாயிகள் பயன்படுத்தி வந்த நெற்களஞ்சியம் மற்றும் சந்தைப் பகுதியை தொல்லியல்துறை தொல்பொருள் பகுதி என அறிவித்துள்ளது.

இதற்கு முன்னரும் தொல்லியல் துறையானது. குச்சவெளிப்பிரதேசசெயலாளர் பிரிவில் உள்ள திரியாய கிராம சேவையாளர் பிரிவில் உள்ளடங்கும். பிரித்தானியர்களால் வழங்கப்பட்ட உறுதிகளைக் கொண்ட 150 ஆண்டுக் காலமாக தமிழ் மக்கள் விவசாயம் செய்து வருகின்ற. அண்ணளவாக ஆயிரம் ஏக்கர் நிலத்தினை விவசாயம் செய்யவிடாமல் எல்லைக் கற்களைப் போட்டு பிடித்து வைத்துள்ளது.

இது மட்டுமல்லாமல் இதனை விடவும். குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும் தென்னைமரவாடி, புல்மோட்டை திரியாய, குச்சவெளி. ஜாயாநகர். கும்புறுப்பிட்டி, நிலாவெளி.பெரியகுளம்முதலிய கிராம சேவை பிரிவுகளை உள்ளடக்கிய 1994 ஏக்கர் நிலத்தை எல்லைக்கற்களை இட்டுப் பிடித்து வைத்துள்ளது.

இந்த செயலானது நெல் உற்பத்தியில் பாரிய குறைப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதனையும். இது நாட்டுக்கு பேரிழப்பு என்பதனையும். இந்த அவையின் மேலான கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.

அதுமட்டுமன்றி தொல்லியல் துறையானது. மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும்.இராஜவந்தான்மலைமுருகன் கோயில், கூனித்தீவுமத்தளைமலை முருகன் கோயில், கிளிவெட்டி முத்துமாரியம்மன் கோயில் அதேபோன்று சேருவில பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும் திருமங்கலாய் சிவன் கோயில், ஈச்சிலம்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும் இலங்கைத்துறை முகத்துவாரம் பெரியசாமி கோயில் மற்றும் கல்லடி மலைநீலியம்மன் கோயில் அதேபோன்று. திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேசசெயலக பிரிவில் உள்ளடங்கும் கன்னியா வெந்நீர் ஊற்று மற்றும் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும்.

தென்னமரவாடி கந்தசாமிமலை முருகன் கோயில், குச்சவெளி செம்பிமலை சிவன் கோயில் மற்றும் வளத்தான்மலை நாகதம்பிரான் கோயில் முதலிய சைவ கோயில்களையும், அவற்றை சூழவுள்ள விவசாய நிலங்களையும்கையகப்படுத்துகின்ற முன்முயற்சிகளில் தொல்பொருள் துறை ஈடுபட்டுவருவதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

இதற்கு மேல், இலங்கையில் புகழ்பெற்ற கோணேஸ்வரர் கோயில் வளாகத்தில் உள்ள 453 ஏக்கர் நிலத்தையும் தொல்பொருள் துறை கையகப்படுத்தி வைத்துள்ளது. இந்தப் பகுதியில் ஒரு வாழை மரத்தை நடக்கூட தொல்லியல்துறை தடை விதிக்கின்ற அதேவேளை. இங்கு 58 சட்டவிரோத கடைகள் அமைக்கப்பட்டிருப்பது பற்றி தொல்லியல் திணைக்களம் எந்த கவலையும் கொள்ளவில்லை என்பதோடு. பல வேளைகளில் அவர்களுக்கு சாதகமாக நடந்துகொள்வதனையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இதுஒரு இனவாதப் போக்கினை எடுத்துக்காட்டுவதாக அமைகிறது.

தொல்பொருள்துறை மட்டுமில்லாமல். திருகோணமலை மாவட்டத்தில் 1983ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், போரின்போது மக்கள் உயிர்பாதுகாப்பு கருதி இடம்பெயர்ந்த வேளையில், அரசின்மற்றுமொரு அங்கமான வனத்துறை மக்கள்விவசாயம் செய்த 41361 ஏக்கர் நிலத்தினை தமது மனம் போன போக்கில் எல்லைக்கற்களை போட்டுப்பிடித்து வைத்துக்கொண்டு காணியினுள்செல்லவோ அல்லது விவசாயம் செய்யவோ விடாமல் தடுத்து வருகிறது. அது மட்டுமல்லாமல் வனத்துறை எல்லைக் கற்களை இடாத பகுதிகளில் கூட மக்கள் தமது காணிகளில் விவசாயத்தில் ஈடுபட வனத்துறையிடம் ஒப்புதலை பெறமுடியாத நிலைகாணப்படுகிறது.

இதேபோன்று வனவிலங்கு துறையானது கால்நடை வளர்ப்பாளர்கள் பலதலைமுறைகளாக மேய்ச்சல் தரையாக பயன்படுத்தி வந்த நிலங்களை. அவர்கள் போரின்போது இடம்பெயர்ந்த வேளையில். எல்லைக் கற்களை போட்டுப் பிடித்து வைத்துக்கொண்டு. இந்நிலங்களில் காட்டு விலங்குகள் மட்டுமே மேயலாம். வீட்டு விலங்குகள் மேய முடியாது என்று தடுத்து வருகிறது.

இதனால் ஆயிரக்கணக்கானகால்நடைவளர்ப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு பல்லாயிரக்கணக்கான கால்நடைகள் போதிய உணவின்றி இன்னலுருகின்றன. எடுத்துக்காட்டாக. ஈச்சிலம்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 600 கால்நடை வளர்ப்பாளர்கள் தமது 28.000 கால்நடைகளுக்கு மேய்ச்சல் தரையின்றி இன்னல் படுகின்றனர். இவர்கள் கால்நடை வளர்ப்பையே தமது வாழ்வாதாரமாக கொண்டவர்களாக காணப்படுகின்றனர். இத்தகைய சிக்கல் தம்பலகாமம். குச்சவெளி கிண்ணியா மூதூர் மொறவெவ முதலிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் காணப்படுகிறது.

அதேபோன்று. அரசின் இன்னும் ஓர் அங்கமான துறைமுக அதிகார சபையானது. திருகோணமலையின் பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும் 11 கிராம சேவை பிரிவுகளை உள்ளடக்கிய 5.572 ஏக்கர் நிலத்தினை கையப்படுத்தி வைத்திருக்கிறது. இப்பகுதிக்குள்வாழும் 763 குடும்பங்கள் தமது குடியிருப்பு காணிகளில் எதுவித செயற்பாடுகளையும் மேற்கொள்ள முடியாது இருப்பது மட்டுமின்றி. விவசாய நிலங்களில் பயிர்ச்செய்கை மேற்கொள்ள முடியாத சூழலும் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசு உணவு உற்பத்தியை பெருக்குமாறு கூறுகின்ற அதேவேளை அரசின் அங்கங்களான தொல்பொருள்துறை. வனத்துறை, வனவிலங்குத்துறை. துறைமுக அதிகார சபை முதலியன விவசாய நடவடிக்கைகளை தடுப்பதன் மூலம் உணவு உற்பத்தியை குறைத்தும் வருகின்றமை நகைப்புக்குரிய விடயமாக உள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் அரச திணைக்களங்கள் மட்டுமன்றி. முற்றும் துறந்த பிக்குகளும் மண்ணாசை கொண்டு குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும் 2172 ஏக்கர் நிலத்தினை பிடித்து வைத்துக்கொண்டு, மக்களை விவசாயம் செய்யவிடாமல் தடுத்தும் வருகிறார்கள்.

இந்த விடயத்தில் ஆளும்தரப்பு உரிய கவனம் செலுத்தி தொல்பொருள்துறை. வனத்துறை வனவிலங்குத்துறை. துறைமுக அதிகார சபை. புத்தபிக்குகள் ஆகியோர் பிடித்து வைத்துள்ள மக்களுடைய காணிகளை விடுவித்து. மக்கள்விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடவும்.அதன்வழிநெல்உள்ளிட்டஉணவு உற்பத்தியினை பெருக்கவும் ஆவண செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் எனவும் தெரிவித்தார்.

  
   Bookmark and Share Seithy.com



தமிழராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 51ஆவது ஆண்டு நினைவேந்தல்! Top News
[Friday 2025-01-10 17:00]

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 51 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை 9:30 மணிக்கு யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழராட்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில் இடம்பெற்றது



உதயங்க வீரதுங்க கைது - விளக்கமறியலில் வைக்க உத்தரவு!
[Friday 2025-01-10 17:00]

முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்க, மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மிரிஹான பிரதேசத்தில், அயலவர் வீட்டாரை தாக்கிய சம்பவம் தொடர்பிலேயே, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான நபர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



அரிசித் தட்டுப்பாட்டை நீக்க கோரி வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம்!
[Friday 2025-01-10 17:00]

அரிசித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அக்கரப்பத்தனை மன்றாசி நகரில் வர்த்தகர்கள் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கிளிநொச்சியில் பேருந்து மோதி முதியவர் பலி!
[Friday 2025-01-10 17:00]

கிளிநொச்சி நகரில் இன்று அதிகாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார்.யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த அரச பேருந்தில் கந்தசாமி கோவிலுக்கு முன்பாக குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.



இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளராக மேல்நீதிமன்ற நீதிபதி!
[Friday 2025-01-10 17:00]

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்கவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நியமித்துள்ளார். இதற்கமைவான நியமனக் கடிதம் ஜனதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால், மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்கவுக்கு இன்று வழங்கப்பட்டது.



இளைஞனைக் கடத்தி தாக்கியவர் கைது!
[Friday 2025-01-10 17:00]

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை கடத்தி சென்று தாக்கிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் சுமார் ஒருவருடத்துக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.



மண்ணெண்ணெய் அருந்திய குழந்தை பலி!
[Friday 2025-01-10 17:00]

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் நேற்று ஒரு வயது ஆண் குழந்தை மண்ணெண்ணெய் அருந்திய நிலையில் உயிரிழந்துள்ளது. கோப்பாய் மத்தி, கோப்பாய் பகுதியைச் சேர்ந்த தர்சிகன் சஸ்வின் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.



பெப்ரவரி 12 ஆம் திகதிக்குள் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு!
[Friday 2025-01-10 17:00]

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் பெப்ரவரி 10 முதல் 12 ஆம் திகதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்தார்.



பாசிக்குடாவில் ரஷ்ய சுற்றுலாப் பயணி நீரில் மூழ்கி மரணம்!
[Friday 2025-01-10 16:00]

மட்டக்களப்பு - பாசிக்குடா கடலில் நீராடச் சென்ற ரஷ்ய நாட்டு சுற்றுலாப் பயணி இன்று கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துதுள்ளார். ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 65 வயதுடைய கரிசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்



அரசியல் தீர்வில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும்!
[Friday 2025-01-10 05:00]

அனைத்து இன மக்களும் இந்த அரசாங்கத்தில் பங்குதாரர்களாக உள்ளனர். ஆகவே, அரசியல் தீர்வு விவகாரம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும். தீர்வுத் திட்டத்தில் அரசாங்கம் சிறந்த தீர்மானத்தை எடுத்தால் சிங்கள மக்களும் ஆதரவளிப்பார்கள். ஏனெனில், சிங்கள மக்களும் தற்போது நேர்மனப்பான்மையில் உள்ளார்கள் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சபையில் வலியுறுத்தினார்.



மன்னார் புதைகுழி வழக்கு - இன்று முக்கிய அறிக்கை சமர்ப்பிக்கப்படும்!
[Friday 2025-01-10 05:00]

மன்னார் சதோச மனித புதைகுழி மற்றும் மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி வழக்கு விசாரணைகள் நேற்று மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது பாதிக்கப்பட்டோர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.



புன்னாலைக் கட்டுவன் விபத்தில் ஒருவர் பலி!
[Friday 2025-01-10 05:00]

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். புத்தூரிலிருந்து சுன்னாகம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஹயஸ் வாகனம் பலாலிலிருந்து ஏழாலை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.



குழந்தைகள் பிறப்பு குறைந்தது!
[Friday 2025-01-10 05:00]

கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பிறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளதாக குழந்தை மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இந்த நிலைமை இந்த நாட்டின் எதிர்காலத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.



ஐதேக- ஐமசவை இணைக்கும் பொறுப்பு ராஜிதவிடம்!
[Friday 2025-01-10 05:00]

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை ஒன்றிணைக்கும் பொறுப்பை முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தானாக முன்வந்து ஏற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.



அடுத்த ஆண்டு முதல் வழக்கம் போல பரீட்சை!
[Friday 2025-01-10 05:00]

அடுத்த ஆண்டு முதல் பரீட்சைகளை வழக்கம் போல் நடத்தும் வகையில், பாடசாலைக் காலத்தை வழக்கம் போல் கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.



வாக்குறுதிகளை மூடி மறைக்கவே கிளீன் சிறிலங்கா!
[Friday 2025-01-10 05:00]

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும், அதற்கு பதிலாக ‘கிளீன் ஸ்ரீலங்கா’ போன்ற பல்வேறு தேசிய வேலைத்திட்டங்கள் மூலம் அதை மூடிமறைப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர அரசாங்கத்தை கடுமையாக சாடினார்.



7 இலட்சம் ரூபா வலைகளை அறுத்த இந்திய படகுகள்!
[Friday 2025-01-10 05:00]

இலங்கை கடற்பரப்பில் புதன்கிழமை (08) இரவு இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறி உள்நுழைந்து, மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டமையால் யாழ்ப்பாணம் - சுழிபுரம், காட்டுப்புலம் பகுதி மீனவர் ஒருவரின் சுமார் ஏழு இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகள் அறுக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளன.



டயானாவுக்கு எதிரான குற்றப்பத்திரிகை தாக்கல்!
[Friday 2025-01-10 05:00]

போலி ஆவணங்களை சமர்ப்பித்து கடவுச்சீட்டைப் பெற்றதாகக் கூறி, முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டது. கொழும்பு மேல்ர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் வழக்கு அழைக்கப்பட்ட போதே இந்தக் குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டது.



10 இந்திய மீனவர்கள் கைது!
[Friday 2025-01-10 05:00]

இலங்கை கடற்பரப்பினுள் நேற்றுமுன்தினம் இரவு அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மீன்பிடி படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



சவேந்திர சில்வாவின் அலுவலகம் மூடப்பட்டது!
[Thursday 2025-01-09 16:00]

முன்னாள் பாதுகாப்புப் படைகளின் முன்னாள் பிரதானி சவேந்திர சில்வாவின் அலுவலகம் உத்தியோகபூர்வமாக மூடப்பட்டுள்ளது.


NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா