Untitled Document
January 11, 2025 [GMT]
சிறீதரனுக்குப் பயணத் தடையா?- கட்டுநாயக்கவில் கெடுபிடி. Top News
[Saturday 2025-01-11 05:00]
 சென்னை செல்வதற்காக வெள்ளிக்கிழமை (10) கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்குச்சென்ற இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு எதிராகப் பயணத்தடை அமுலில் இருப்பதாகக் குறிப்பிட்டு, குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் அவரை நீண்டநேரம் கெடுபிடிகளுக்கு உட்படுத்தியுள்ளனர்.

சென்னை செல்வதற்காக வெள்ளிக்கிழமை (10) கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்குச்சென்ற இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு எதிராகப் பயணத்தடை அமுலில் இருப்பதாகக் குறிப்பிட்டு, குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் அவரை நீண்டநேரம் கெடுபிடிகளுக்கு உட்படுத்தியுள்ளனர்.

  

தமிழக அரசின் ஏற்பாட்டில் இன்றும் (11), நாளையும் (12) நந்தம்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ள அயலகத் தமிழர் தினம் - 2025 நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக தமிழக அரசின் அழைப்பின்கீழ் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன் நேற்று வெள்ளிக்கிழமை (10) சென்னைக்குப் பயணமானார்.

அதன்படி வெள்ளிக்கிழமை (10) மாலை சென்னைக்குப் புறப்படுவதற்காக கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்குச் சென்ற சிறிதரன், அங்கு குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் மிகையான கெடுபிடிகளுக்கு உட்படுத்தப்பட்டார்.

சிறிதரனுக்கு எதிராகப் பயணத்தடை அமுலில் இருப்பதாகவும், எனவே அவரை சென்னை செல்வதற்கு அனுமதிக்கமுடியாது எனவும் குறிப்பிட்ட அவ்வதிகாரிகள், இதுகுறித்து குற்றப்புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளால் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

இவ்வேளையில் சென்னையில் நடைபெறவிருக்கும் அயலகத் தமிழர் தின நிகழ்வுக்குச் செல்வதற்காக விமானநிலையத்துக்கு வருகைதந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அதிகாரிகளிடம் இதுபற்றி விளக்கம் கோரினார்.

இருப்பினும் சிறிதரனுக்கு எதிராகப் பயணத்தடை அமுலில் இருப்பதாகக் கூறிய அதிகாரிகள், அதுபற்றிய விபரம் எதனையும் கூறவில்லை. பின்னர் நாடு திரும்பியதும் குற்றப்புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளால் விசாரணைகள் நடத்தப்படும் எனக்கூறி, சிறிதரனை சென்னை செல்வதற்கு அனுமதித்தனர்.

<

  
   Bookmark and Share Seithy.com



கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரியுடன் தமிழரசு எம்.பி.க்கள் சந்திப்பு!
[Saturday 2025-01-11 05:00]

கனடாவின் முடிக்குரிய பூர்வீகக் குடிகள், வடக்கு விவகாரங்கள் மற்றும் வடக்கு பொருளாதார அபிவிருத்தி நிறுவனங்களுக்கான அலுவல்கள் அமைச்சர் ஹரி ஆனந்த சங்கரிக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் வெள்ளிக்கிழமை மாலை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.



கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் பொதுச்சபைக்கு மாத்திரமே உள்ளது!
[Saturday 2025-01-11 05:00]

கட்சியில் இருந்து என்னை நீக்கும் அதிகாரம் பொதுச்சபைக்கு மாத்திரமே உள்ளது. அதனை மீறினால் செயலாளருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்வேன் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார்.



தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை- சபையில் நினைவு கூர்ந்த சிறீதரன்!
[Saturday 2025-01-11 05:00]

யாழ்ப்பாணத்தில் 51 வருடங்களுக்கு முன்னர் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடைபெற்ற போது 9 பேர் மரணமடைந்த உறவுகளை நினைவுகூர்ந்ததுடன் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆறுதல் தெரிவித்தார். நேற்றைய பாராளுமன்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.



விசேட ரயில் சேவைகள்!
[Saturday 2025-01-11 05:00]

தைப்பொங்கலுடன் இணைந்த வார இறுதி விடுமுறையை கருத்திற் கொண்டு போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.



மதுபோதையில் சைக்கிள் ஓட்டியவருக்கு 25 ஆயிரம் ரூபா அபராதம்!
[Saturday 2025-01-11 05:00]

யாழ்ப்பாணத்தில் மது போதையில் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபருக்கு 25 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. அச்சுவேலி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் மது போதையில் துவிச்சக்கர வண்டியை செலுத்தி சென்ற போது அச்சுவேலி பொலிஸார் குறித்த நபரை கைது செய்து, மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணையின் போது, தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்து, நீதிமன்று அந்நபருக்கு 25 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து உத்தரவிட்டுள்ளது.



க்ளீன் ஸ்ரீ லங்கா ஆரம்ப நிகழ்வுக்கு 70 இலட்சம் ரூபா செலவா?
[Saturday 2025-01-11 05:00]

க்ளீன் ஸ்ரீ லங்கா செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வுக்கு 70 இலட்சம் செலவிடப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானது. இந்த நிகழ்வுக்காக 9 இலட்சம் ரூபா மாத்திரமே செலவிடப்பட்டது என சுகாதாரத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.



சிகரட், மதுபான விலைகள் அதிகரிப்பு!
[Saturday 2025-01-11 05:00]

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் சிகரெட் விலையை அதிகரிக்க இலங்கை புகையிலை நிறுவனம் தீர்மானித்துள்ளது. கலால் வரி அதிகரிப்புடன் சிகரெட் விலைகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.



ரோஹிங்கியா அகதிகளை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்!
[Saturday 2025-01-11 05:00]

மியன்மார் ரோஹிங்கியா அகதிகளை நாட்டை விட்டு உடனடியாக வெளியேற்ற வேண்டும். இவர்களை இங்கு தங்க வைத்தால் தேவையில்லாத பிரசச்சினைகள் ஏற்படும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.



தமிழராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 51ஆவது ஆண்டு நினைவேந்தல்! Top News
[Friday 2025-01-10 17:00]

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 51 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை 9:30 மணிக்கு யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழராட்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில் இடம்பெற்றது



அரிசித் தட்டுப்பாட்டுக்கு தொல்லியல் திணைக்களமும் காரணம்!
[Friday 2025-01-10 17:00]

தொல்லியல் திணைக்களம் உட்பட அரச திணைக்களங்களினால் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளமையும் நாட்டின் நெல் உற்பத்தி குறைவுக்கு காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் குகதாசன் தெரிவித்தார். நேற்றையதினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



உதயங்க வீரதுங்க கைது - விளக்கமறியலில் வைக்க உத்தரவு!
[Friday 2025-01-10 17:00]

முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்க, மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மிரிஹான பிரதேசத்தில், அயலவர் வீட்டாரை தாக்கிய சம்பவம் தொடர்பிலேயே, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான நபர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



அரிசித் தட்டுப்பாட்டை நீக்க கோரி வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம்!
[Friday 2025-01-10 17:00]

அரிசித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அக்கரப்பத்தனை மன்றாசி நகரில் வர்த்தகர்கள் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கிளிநொச்சியில் பேருந்து மோதி முதியவர் பலி!
[Friday 2025-01-10 17:00]

கிளிநொச்சி நகரில் இன்று அதிகாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார்.யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த அரச பேருந்தில் கந்தசாமி கோவிலுக்கு முன்பாக குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.



இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளராக மேல்நீதிமன்ற நீதிபதி!
[Friday 2025-01-10 17:00]

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்கவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நியமித்துள்ளார். இதற்கமைவான நியமனக் கடிதம் ஜனதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால், மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்கவுக்கு இன்று வழங்கப்பட்டது.



இளைஞனைக் கடத்தி தாக்கியவர் கைது!
[Friday 2025-01-10 17:00]

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை கடத்தி சென்று தாக்கிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் சுமார் ஒருவருடத்துக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.



மண்ணெண்ணெய் அருந்திய குழந்தை பலி!
[Friday 2025-01-10 17:00]

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் நேற்று ஒரு வயது ஆண் குழந்தை மண்ணெண்ணெய் அருந்திய நிலையில் உயிரிழந்துள்ளது. கோப்பாய் மத்தி, கோப்பாய் பகுதியைச் சேர்ந்த தர்சிகன் சஸ்வின் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.



பெப்ரவரி 12 ஆம் திகதிக்குள் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு!
[Friday 2025-01-10 17:00]

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் பெப்ரவரி 10 முதல் 12 ஆம் திகதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்தார்.



பாசிக்குடாவில் ரஷ்ய சுற்றுலாப் பயணி நீரில் மூழ்கி மரணம்!
[Friday 2025-01-10 16:00]

மட்டக்களப்பு - பாசிக்குடா கடலில் நீராடச் சென்ற ரஷ்ய நாட்டு சுற்றுலாப் பயணி இன்று கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துதுள்ளார். ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 65 வயதுடைய கரிசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்



அரசியல் தீர்வில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும்!
[Friday 2025-01-10 05:00]

அனைத்து இன மக்களும் இந்த அரசாங்கத்தில் பங்குதாரர்களாக உள்ளனர். ஆகவே, அரசியல் தீர்வு விவகாரம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும். தீர்வுத் திட்டத்தில் அரசாங்கம் சிறந்த தீர்மானத்தை எடுத்தால் சிங்கள மக்களும் ஆதரவளிப்பார்கள். ஏனெனில், சிங்கள மக்களும் தற்போது நேர்மனப்பான்மையில் உள்ளார்கள் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சபையில் வலியுறுத்தினார்.



மன்னார் புதைகுழி வழக்கு - இன்று முக்கிய அறிக்கை சமர்ப்பிக்கப்படும்!
[Friday 2025-01-10 05:00]

மன்னார் சதோச மனித புதைகுழி மற்றும் மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி வழக்கு விசாரணைகள் நேற்று மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது பாதிக்கப்பட்டோர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.


Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா