Untitled Document
January 12, 2025 [GMT]
பசிலுக்கு சர்வதேச பிடியாணை- விசாரணை தீவிரம்!
[Sunday 2025-01-12 15:00]


முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ச தொடர்பான விசாரணைகள் தற்போது இரகசியமான முறையில் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ச தொடர்பான விசாரணைகள் தற்போது இரகசியமான முறையில் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

  

அதன்படி பசில் ராஜபக்‌சவுடன் கடந்த காலங்களில் நெருக்கமாக செயற்பட்ட வர்த்தகத் துறையினர், முக்கிய அதிகாரிகள் போன்றோரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.

பசில் ராஜபக்‌சவின் சொத்துக்கள், சேமிப்புகள், வீடு உள்ளிட்ட சொத்துக்கள் குறித்து புலனாய்வுப் பிரிவினர் தீவிரமாக தகவல்களை சேகரிக்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் சர்வதேச பிடியாணை பெறக்கூடிய வகையில் மிக விரைவில் பசில் ராஜபக்‌சவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடுப்பதற்கான ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் சட்ட மா அதிபருடனான சந்திப்பின்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்த விடயம் குறித்து முக்கியமாக கேட்டறிந்து கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  
   Bookmark and Share Seithy.com



ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பச்சைக்கொடி!
[Sunday 2025-01-12 16:00]

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது உள்வாங்கப்படவேண்டிய தமிழ்மக்களுக்கான தீர்வுத்திட்டம் குறித்து பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 3 தமிழ்த்தேசியக்கட்சிகளும் எதிர்வரும் 25 ஆம் திகதி சந்தித்துக் கலந்துரையாடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருக்கும் நிலையில், அச்சந்திப்பில் தமது கட்சி பங்கேற்று முழுமையான ஆதரவை வழங்கும் என ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி தெரிவித்துள்ளது.



அனுர அரசில் அதிகாரப்பகிர்வுக்கான சாத்தியம் குறைகிறது!
[Sunday 2025-01-12 16:00]

ஜனாதிபதி அநுரகுமாரவின் அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான அபிலாஷைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கான அதிகாரப்பகிர்வுக்குரிய சாத்திய நிலைமைகள் மறைந்து வருகின்றன என்று குறிப்பிட்டுள்ள கலாநிதி.தயான் ஜயத்திலக்க கடந்த காலத்தில் தமிழ் அரசியல்வாதிகள் செய்துள்ள பத்து பாவங்களையும் பட்டியலிட்டுச் சுட்டிக்காட்டியுள்ளார்.



மனைவியின் காதை வெட்டியவருக்கு விளக்கமறியல்!
[Sunday 2025-01-12 16:00]

யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் பகுதியில் மனைவியின் காதை வெட்டிய கணவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.



உயர்நீதிமன்ற நீதியரசர்கள் 4 பேர் பதவியேற்பு!
[Sunday 2025-01-12 15:00]

புதிதாக நியமிக்கப்பட்ட நான்கு உயர் நீதிமன்ற நீதியரசர்களும் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.



வாகனத்தில் கடத்தப்பட்ட மாணவி!
[Sunday 2025-01-12 15:00]

கெலிஓயா அம்பரப்பொல பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்த இரண்டு மாணவிகளில் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பிலான வீடியோ, சனிக்கிழமை அன்று பகிரப்பட்டுள்ளது. அதிலொரு மாணவி தப்பிச் சென்றுள்ளார்.



யோகாசனம் செய்தவர் மயங்கி விழுந்து மரணம்!
[Sunday 2025-01-12 15:00]

யாழ்ப்பாணத்தில் யோகாசன பயிற்சி செய்து கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவரே உயிரிழந்துள்ளார். இவர் யோகாசன பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். அதன் பின்னர், அவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்தார்.



அத்துமீறி மீன்பிடித்த 8 இந்திய மீனவர்கள் கைது!
[Sunday 2025-01-12 15:00]

நெடுந்தீவு அருகே எல்லைதாண்டி மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. கைது செய்யப்பட்ட 8 மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



சுவாசக் குழாயில் கச்சான் சிக்கி குழந்தை பலி!
[Sunday 2025-01-12 15:00]

யாழ்ப்பாணத்தில் ஒன்றரை வயதுக் குழந்தை கச்சான் பருப்பு சுவாசக் குழாயில் சிக்கியதால் உயிரிழந்துள்ளது. சுன்னாகம், ஐயனார் வீதி பகுதியை சேர்ந்த சசிதரன் டனியா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.



திருநெல்வேலியில் கஞ்சாவுடன் சிக்கினார் ஒருவர்!
[Sunday 2025-01-12 15:00]

யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் கேரள கஞ்சாவுடன் விசுவமடு பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், இந்த நபர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது, பொலிஸார் வீதியில் அவரை வழிமறித்து சோதனையிட்டுள்ளனர்.



நல்லிணக்க செயன்முறை வேலைத்திட்டத்தைத் தயாரிக்க விசேட குழு!
[Sunday 2025-01-12 06:00]

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதற்கு முன்பதாக நல்லிணக்க செயன்முறை தொடர்பான வேலைத்திட்டத்தைத் தயாரிப்பதற்கென விசேட குழுவொன்றை நியமித்து, அதுபற்றி ஜெனீவாவுக்கு அறிக்கையொன்றை அனுப்பிவைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுவருவதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.



சிறிதரன் மீது பழிவாங்கும் செயலா?
[Sunday 2025-01-12 06:00]

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.



ஐதேகவுடன் இணைந்து பயணிக்க சஜித் விருப்பம்!
[Sunday 2025-01-12 06:00]

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி இணைந்து பயணிப்பதை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் விரும்புகின்றார். ஆனால் ஒரு கட்சியை கைவிட்டு இன்னொரு கட்சியின் இணைந்து கொள்வதற்கு பதிலாக ஒரு கூட்டணியாக எவ்வாறு ஒன்றிணைத்து பயணிப்பது என்பது தொடர்பில் ஆராய வேண்டும் என்பதே அவரது நிலைப்பாடாகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.



போலி விசாவில் ஜேர்மனி செல்ல முயன்றவர் கைது!
[Sunday 2025-01-12 06:00]

போலி விசாவைப் பயன்படுத்தி ஜேர்மனிக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை இளைஞர் ஒருவர், நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் எல்லை கண்காணிப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.



ஒற்றுமைப்படுவதே தமிழினத்துக்குப் பெரும் பலம்!
[Sunday 2025-01-12 06:00]

தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள அனைவரும் ஒற்றுமைப்பட வேண்டியது மிகவும் அவசியம். அவ்வாறு ஒற்றுமைப்படுவதே தமிழினத்துக்குப் பெரும் பலமாக இருக்கும் என்று புளொட் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.



கறுப்புப்பட்டியலில் உள்ள நிறுவனத்திடம் மருந்து கொள்வனவு!
[Sunday 2025-01-12 06:00]

நோயாளிகளின் வாயை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் கிருமிநாசினி போத்தல்களை இறக்குமதி செய்வதற்காக, கருப்புப் பட்டியலில் உள்ள பங்களாதேஷ் நிறுவனத்திற்கு விலைமனு கோரலை வழங்க அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் அனுமதி அளித்துள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.



ஜனாதிபதி ஏன் பின்வாங்குகிறார்?
[Sunday 2025-01-12 06:00]

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் குறித்து சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை அறிக்கை, பாராளுமன்ற தெரிவுக்குழு அறிக்கை ஆகியவற்றின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் ஜனாதிபதி ஏன் பின்வாங்குகிறார். கடந்த அரசாங்கங்களை போன்று இந்த அரசாங்கமும் குண்டுத்தாக்குதல் விவகாரத்தை தமது அரசியல் வெற்றிக்காக பயன்படுத்திக் கொள்ள கூடாது என்பதை வலியுறுத்துகிறோம். நீதியை பெற்றுக்கொள்ள தொடர்ந்து போராடுவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.



அரசாங்கத்தின் தீர்மானத்தால் பதவி விலகும் நீதியரசர்!
[Sunday 2025-01-12 06:00]

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன தனது பதவியில் இருந்து விலக உள்ளதாக கொழும்பின் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அவருக்கு எதிராக ஒரு பதவி நீக்க தீர்மானத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ள நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.



கொள்கலன்களை விடுவிப்பதில் தாமதம்!
[Sunday 2025-01-12 06:00]

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன்களை விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து சுங்க ஊடகப் பேச்சாளரும், மேலதிக சுங்கப் பணிப்பாளர் சீவலி அருக்கோட விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.



படுகொலையாளிகளுக்கு பொதுமன்னிப்பு, போராளிகளுக்கு விடுதலை இல்லையா?
[Saturday 2025-01-11 18:00]

கடந்த ஆட்சிக்காலத்தில் படுகொலையாளிகள் கூட பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில், தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடியவர்களை ஏன் விடுதலை செய்யக்கூடாது என மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கேள்வியெழுப்பினார்.



அனுரவின் இந்தியப் பயணம் - இந்திய ஊடகங்கள் பதற்றமடைவதாக கூறுகிறது சீன ஊடகம்!
[Saturday 2025-01-11 18:00]

இலங்கை ஜனாதிபதியின் சீன விஜயத்தினை இந்திய ஊடகங்கள் உன்னிப்பாக உற்றுநோக்குவது, அவர்களின் பதற்றத்தை வெளிப்படுத்துகின்றது,அவர்கள் நீண்டகாலமாக தென்னாசிய நாடுகள் இந்தியாவின் செல்வாக்கிற்கு உட்பட்டவை என கருதிவந்துள்ளனர்,என சீனாவின் குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.


Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா