Untitled Document
January 14, 2025 [GMT]
பாடசாலை சிறுமியை கடத்திய மைத்துனன்!- வான் மீட்பு, சாரதி கைது.
[Monday 2025-01-13 06:00]


வேனில் வந்து சிறுமி ஒருவர் கடத்தப்பட்டுள்ள சம்பவம் தவுலகல பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. அது தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய தவுலகல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு ஞாயிற்றுக்கிழமை (12) மாலை அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேனில் வந்து சிறுமி ஒருவர் கடத்தப்பட்டுள்ள சம்பவம் தவுலகல பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. அது தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய தவுலகல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு ஞாயிற்றுக்கிழமை (12) மாலை அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  

இந்த சம்பவம், சனிக்கிழமை (11) காலை வேளையில் இடம்பெற்றுள்ளது. அந்த சிறுமி, ஹந்தெஸ்ஸ பிரதேசத்தில் தங்கியிருப்பவர் என்றும் அவர், தன்னுடைய தோழியுடன் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த போது, வேனில் வந்த இனந்தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். இந்த கடத்தல் தனிப்பட்ட காரணங்களுக்காக இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், அந்த வான், பொலன்னறுவையில் கைவிடப்பட்டிருந்த நிலையில், அன்றைய தினமே மீட்கப்பட்டுள்ளது. வேன் சாரதி, கம்பளையில் வைத்து தவுலகல பொலிஸாரினால் ஞாயிற்றுக்கிழமை (12) கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான 30 வயதான சாரதி, கம்பளை கஹட்டபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார். கடத்தப்பட்ட சிறுமியை மீட்டெடுப்பதற்கும், கடத்திய சந்தேக நபரை கைது செய்வதற்கும் தற்போதைக்கு மூன்று பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொலிஸ் ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள மற்றுமொரு ஊடக அறிக்கையில்,

சிறுமியின் தந்தையின் சகோதரியின் மகனே இந்த சிறுமியை கடத்தியுள்ளார் என்றும், அவ்விருவரும் திருமணம் செய்து கொள்வதற்கான இணக்கத்தை இருவீட்டாரும் முதலில் தெரிவித்துள்ளனர். எனினும், சிறுமியின் தந்தை பின்னர் விருப்பமின்மையை தெரிவித்துள்ளார். இதனால், முரண்பாடு ஏற்பட்டுள்ளது என்பது ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது என்று ​அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



அனைவரது வாழ்வும் சூரிய ஒளியைப் போல் பிரகாசமாக அமைய வேண்டும்!
[Monday 2025-01-13 17:00]

தை பிறந்தால் வழிபிறக்கும் என்ற முதுமொழிக்கு அமைய எமது உறவுகள் அனைவரதுவாழ்வும் சூரிய ஒளியைப் போல் பிரகாசமாக அமைய வேண்டுமென பிரார்த்தித்து வாழ்த்துகின்றேன். என வட மாகாண சபையின் அவைத்தலைவர் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.



கிளிநொச்சி விபத்தில் இருவர் காயம்!
[Monday 2025-01-13 17:00]

கிளிநொச்சியில் இன்று (இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பரந்தனிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த ஓட்டுனர் பயிற்சி பாடசாலையின் முச்சக்கர வண்டியினை, அதே பகுதியில் இருந்து பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.



இன்று சீனா பயணமாகிறார் ஜனாதிபதி!
[Monday 2025-01-13 17:00]

சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று பிற்பகல் நாட்டிலிருந்து பயணமாகிறார்.



எமது பிரச்சினையை பேசாமல் ஸ்டாலினுடன் செல்பி எடுக்கவா சென்றனர்?
[Monday 2025-01-13 17:00]

இந்தியா - தமிழ்நாட்டில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றுக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், இரா. சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராகிய எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்.



கடத்தப்பட்ட மாணவி மீட்பு- கடத்தியவரும் கைது!
[Monday 2025-01-13 17:00]

கண்டி கெலிஓயா பிரதேசத்தில் 18 வயது பாடசாலை மாணவியான பாத்திமா ஹமீரா என்ப​வரை கடத்தி 50 இலட்சம் ரூபாய் கப்பம் கோரிய 31 வயதுடைய மொஹமட் நாசர், பாடசாலை மாணவியுடன் ‌அம்பாறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.



வெல்லாவெளி விபத்தில் ஒருவர் பலி!
[Monday 2025-01-13 17:00]

வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பலாந்துறை சவலக்கடை வீதியில் பிலாலி வெம்பு சந்திக்கு அருகில், வெல்லாவெளியிலிருந்து காந்திபுரம் நோக்கிச் பயணித்த உழவு இயந்திரம் ஒன்று, எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி நேற்றுமாலை விபத்து ஏற்பட்டது. விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர் களுவாஞ்சிகுடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தார்.



மன்னாரில் கைதான மீனவர்களுக்கு விளக்கமறியல்!
[Monday 2025-01-13 17:00]

மன்னார் கடற்பரப்பில் நேற்று கைது செய்யப்பட்ட 8 இந்திய மீனவர்களும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த 8 இந்திய மீனவர்களும் கடற்படையினரால் கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்நிலையில், கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் அந்த மீனவர்களை ஆஜர்படுத்தியபோதே விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.



புதுக்குடியிருப்பில் சிறுமியை வைத்து பாலியல் தொழில்! - கணவன் மனைவி கைது.
[Monday 2025-01-13 17:00]

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் பாடசாலை மாணவி ஒருவரை வைத்து பாலியல் தொழில் நடாத்தி வந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவரும், அவரது கணவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.



பிரதான நீர்த்தேக்கங்கள் நிரம்பின!
[Monday 2025-01-13 17:00]

73 பிரதான நீர்த்தேக்கங்களில் 27 நீர்த்தேக்கங்கள் தற்போது கொள்ளளவை எட்டியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.



போதை மாத்திரைகளுடன் இரண்டு இளைஞர்கள் சாவகச்சேரியில் கைது!
[Monday 2025-01-13 17:00]

போதை மாத்திரைகளுடன் இரண்டு இளைஞர்கள் யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் கைது செய்யப்பட்டனர். யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் இயங்கும் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவின் தகவலிற்கு அமைய சாவகச்சேரி பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு இணைந்து நடத்திய சுற்றிவளைப்பில் 23 மற்றும் 20 வயதுடைய இரு இளைஞர்கள் 200 போதை மாத்திரைகளுடன் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.



போட்டியில் இருந்து விலகினார் அனிதா ஆனந்த்!
[Monday 2025-01-13 06:00]

கனடா பிரதமர் பதவியில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் விலகினார். இந்த நிலையில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அனிதா ஆனந்த், தான் பிரதமர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.



பிரிந்தவர்களை இணைக்க உள்ளக கலந்துரையாடல்!
[Monday 2025-01-13 06:00]

பல்வேறு காரணிகளால் எம்மை விட்டு விலகிச் சென்றவர்கள் மீண்டும் எம்முடன் ஒன்றிணையலாம். உள்ளக மட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.



இலங்கையில் 400 றோ உளவாளிகள்!
[Monday 2025-01-13 06:00]

இந்தியாவின் றோ உளவுப் பிரிவைச் சேர்ந்த 400 பேருக்கும் அதிகமானவர்கள் இலங்கையின் பல பிரதேசங்களிலும் இருக்கிறார்கள். அவர்கள் எங்கு இருக்கிறார்கள். என்ன செய்கிறார்கள் என்பதை தேடிப்பார்க்க வேண்டும் என மக்கள் போராட்ட குழுவின் அமைப்பாளர் துமிந்த நாகமுவ தெரிவித்தார்.



ஜாட்சன் பிகிராடோவுக்கு சிஐடி அழைப்பாணை!
[Monday 2025-01-13 06:00]

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோவை எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அவரது அலுவலகத்தில் வைத்து கடிதம் ஞாயிற்றுக்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது.



நீதிமன்றம் அருகே பட்டாசு கொளுத்தியவர்கள் கைது!
[Monday 2025-01-13 06:00]

யாழ்ப்பாணம், பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் முகமாக பட்டாசு கொளுத்திய இருவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.



எக்காரணம் கொண்டும் தேர்தலை பிற்போட முடியாது!
[Monday 2025-01-13 06:00]

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் நடுப்பகுதியிலோ அல்லது ஏப்ரல் மாதம் முதல் வாரத்திலோ நடத்துவதற்கான சாத்தியம் காணப்படுகிறது. தேர்தலை விரைவாக நடத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எக்காரணிகளுக்காகவும் தேர்தலை பிற்போட முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.



இறக்குமதியாகும் வாகனங்கள் மீது 600 வீதம் வரை வரி!
[Monday 2025-01-13 06:00]

தற்போது 300% ஆக உள்ள வாகனங்கள் மீதான இறக்குமதி வரி, மேலும் அதிகரிக்கும் எனவும் சில சொகுசு வாகனங்கள் மீதான வரி 600% வரை அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.



சிறைதண்டனையை விதிக்கப்பட்டவர்கள் சுகபோகமாக இருக்க முடியாது!
[Monday 2025-01-13 06:00]

சட்டத்தின் முன் அனைவரும் சமமாக மதிக்கப்படுவார்கள். எவருக்கும் சிறப்பு சலுகை வழங்கப்படமாட்டாது. நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய சிறைச்சாலையில் இருக்க வேண்டியவர்கள் சிறைச்சாலையில் இருக்க வேண்டும். அதனை விடுத்து சிறைதண்டனையை அனுபவித்துக் கொண்டு சுகபோகமாக இருக்க முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்தார்.



சுங்க அதிகாரிகளுக்கு 7 நாளும் வேலை!
[Monday 2025-01-13 06:00]

சுங்கத்துறை விடுவிப்பு செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக இலங்கை சுங்க அதிகாரிகள் வாரத்தில் ஏழு நாட்களும் பணியாற்றுவர் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கும் சுங்கத்துறையினருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.



ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பச்சைக்கொடி!
[Sunday 2025-01-12 16:00]

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது உள்வாங்கப்படவேண்டிய தமிழ்மக்களுக்கான தீர்வுத்திட்டம் குறித்து பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 3 தமிழ்த்தேசியக்கட்சிகளும் எதிர்வரும் 25 ஆம் திகதி சந்தித்துக் கலந்துரையாடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருக்கும் நிலையில், அச்சந்திப்பில் தமது கட்சி பங்கேற்று முழுமையான ஆதரவை வழங்கும் என ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி தெரிவித்துள்ளது.


Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா