Untitled Document
January 22, 2025 [GMT]
யாழ்ப்பாண கலாசார நிலைய பெயர் மாற்றம் மக்களின் நாடித்துடிப்பை அறியாத செயல்!
[Wednesday 2025-01-22 05:00]


இந்திய அரசாங்கத்தின் நன்கொடையின் கீழ் கலாசார பாரம்பரியங்களின் மேம்பாட்டுக்காக நிர்மாணிக்கப்பட்டதும் தனித்துவமிக்கதுமான யாழ்ப்பாண கலாசார நிலையம் 2023 பெப்ரவரி 01ஆம் திகதி மக்களுக்கு உரித்தாக்கப்பட்டது.

இந்திய அரசாங்கத்தின் நன்கொடையின் கீழ் கலாசார பாரம்பரியங்களின் மேம்பாட்டுக்காக நிர்மாணிக்கப்பட்டதும் தனித்துவமிக்கதுமான யாழ்ப்பாண கலாசார நிலையம் 2023 பெப்ரவரி 01ஆம் திகதி மக்களுக்கு உரித்தாக்கப்பட்டது.

  

திறப்புவிழாக் கல்வெட்டில் அழியாத எழுத்துகளால் அழகாகப் பொறிக்கப்பட்டிருக்கும் வாசகம் இது. ஆனால், மக்களுக்கு உரித்தாக்கப்பட்டு இரண்டு வருடங்கள்கூடக் கடக்காத நிலையில் அம்மக்களின் அபிப்பிராயங்கள் எதுவும் பெறப்படாது யாழ்ப்பாண கலாசார நிலையம் திருவள்ளுவர் கலாசார நிலையம் எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இது மக்களின் நாடித்துடிப்பு அறியாத செயல் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

யாழ். கலாசார நிலையத்தின் பெயர் மாற்றம் குறித்து பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

யாழ்ப்பாண கலாசார நிலையம் யாழ். மாநகரசபைக்கு உரித்தான காணியில் இந்திய அரசின் நன்கொடையில் உருவானது. இதற்கான உடன்படிக்கையில் யாழ். கலாசார நிலையத்தை முகாமைத்துவம் செய்கின்ற குழுவில் யாழ் மாநகரசபையினதும் வடமாகாண சபையினதும் சார்பில் ஒவ்வொருவர் இடம்பெறுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இரண்டு சபைகளினதும் கலந்தாலோசிப்புகளின்றி இப்பெயர் மாற்றம் இடம்பெற்றுள்ளது. கோத்தபாய அரசாங்கம் யாழ். கலாசார நிலையத்தின் பெயரை மாற்றுமாறு முன்னர் அழுத்தங்களைப் பிரயோகித்தபோது மாநகரசபையின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.

இப்போது, இரு சபைகளுக்குமான தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் திடுதிப்பென்று நிகழ்ந்த இப்பெயர் மாற்றம் இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையை இந்தியா நாசுக்காக நிறைவேற்றிக்கொடுத்துள்ளது என்றே எண்ணவைத்துள்ளது.

சமயச்சாயத்தை தன் மீது ஒருபோதும் பூசிக்கொள்ளாத திருவள்ளுவரின் பெருமையை ஈழத்தமிழ் மக்கள் எப்போதும் போற்றுபவர்களாகவே உள்ளார்கள். அவர் தமிழுக்குத்தந்த பெரும் கொடையாம் திருக்குறளின் மகிமையை ஈழத்தமிழ் மக்கள் ஒரு போதும் மறவார்கள்.

இதனாலேயே, தமிழகத்தில் வள்ளுவர் கோட்டத்தில் உள்ளதைப்போன்று அத்தனை குறள்களையும் காலத்தால் அழியாதவாறு கருங்கல்லில் பொறித்து திருக்குறள் வளாகம் ஒன்றைச் சிவபூமி தாபகர் கலாநிதி ஆறு திருமுருகன் யாழ்ப்பாணத்தில் உருவாக்கியுள்ளார்.

ஆனால், இத்தகைய பெரும் பற்றைத் திருவள்ளுவர் மீதும் திருக்குறள் மீதும் கொண்டிருக்கும் ஈழத்தமிழ் மக்களிடையே யாழ் கலாச்சார மையத்துக்கு அவர் பெயரைச் சூட்டியுள்ளமை பெரும் அதிருப்தியையே தோற்றுவித்துள்ளது.

யாழ். கலாசார மையம் தனித்துவமானதெனத் திறப்புவிழாக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்று அது இந்தியா எமக்கு உவந்தளித்த தனித்துவமான பெரும் கொடையே ஆகும். ஆனால், அதன் தனித்துவம் நெடிதுயர்ந்த அழகான அதன் கட்டுமானங்களால் மாத்திரம் உருவானதன்று.

பண்பாட்டுச் செழுமையும் பாரம்பரியமும் மிக்க யாழ்ப்பாணம் என்ற பெயரைச் சூடியிருப்பதும் அதன் தனித்துவத்தை வெளிப்படுத்தும் அளப்பரிய ஓர் சிறப்பாகும். இப்போது, பெயர் மாற்றப்பட்டிருப்பதன் மூலம் அதன் தனித்துவம் ஒரு படி கீழிறங்கியுள்ளது என்பதே நிதர்சனம்.

அது மட்டுமல்ல, இப்பெயர் மாற்றத்தின் மூலம் ஈழத்தமிழ் மக்கள் இந்தியா மீது கொண்டிருக்கும் பெரும் நம்பிக்கையிலும் ஒரு படி கீழிறங்கியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



துப்பாக்கிச் சூடுகள் குறித்து மேஜர் உள்ளிட்ட 7 இராணுவத்தினர் கைது!
[Wednesday 2025-01-22 05:00]

சமீபத்திய காலங்களில் இடம்பெற்ற குற்றங்கள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் ஒரு மேஜர், ஏனைய தரங்களில் உள்ள 6 இராணுவ அதிகாரிகள், ஒரு பொலிஸ் அதிகாரி மற்றும் ஒரு சிவில் பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.



359 ரூபா மருந்தை 76,000 ரூபாவுக்கு விற்ற நிறுவனத்துடன் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு!
[Wednesday 2025-01-22 05:00]

2019 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை பப்பாவெரின் ஊசி மருந்தை அதிக விலைக்கு வழங்கிய நிறுவனத்துடன் பல அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறியுள்ள சுகாதார அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ, சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என இன்று தெரிவித்துள்ளார்.



தூய்மையான நாட்டை உருவாக்க வேண்டும்!
[Wednesday 2025-01-22 05:00]

இனவாதம், மதவாதம், மொழிவாதம் மற்றும் பிரதேசவாதம் ஆகியவற்றால் நாடு அசுத்தமாக்கப்பட்டுள்ளது. இவை கடந்த காலங்களில் தேர்தல் பிரச்சாரமாக காணப்பட்டது. ஆனால் தற்போது அவை தோல்வியடைந்துள்ளது.



மன்னார் மாவட்டத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை!
[Wednesday 2025-01-22 05:00]

மன்னார் மாவட்டத்தில் அருவியாற்றினை அண்டிய பல கிராமங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த கிராமங்களில் உள்ள குடும்பங்கள் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கு தயாராக இருக்குமாறும் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.



பொலிஸ் நிலையங்களில் விசேட அதிரடிப் படை!
[Wednesday 2025-01-22 05:00]

துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களை தடுக்கும் நோக்கில் கொழும்பு நகரில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு பொலிஸ் விசேட அதிரடிப் படையினரை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



அரச காணியை விற்ற அரச உத்தியோகத்தர் கைது!
[Wednesday 2025-01-22 05:00]

அரச காணி ஒன்றினை போலி ஆவணம் தயாரித்து 22 மில்லியன் ரூபாவுக்கு விற்னை செய்த குற்றச்சாட்டில் வவுனியா மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



மீண்டும் நிதி மோசடி விசாரணைப் பிரிவு!
[Wednesday 2025-01-22 05:00]

நிதிக் குற்றச் செயல்கள் தொடர்பான வழக்குகளைக் கையாள்வதற்காக நிதி மோசடி விசாரணைப் பிரிவு (FCID) அடுத்த வாரம் ஸ்தாபிக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.



வடக்கில் 40 ஆயிரம் தென்னை மரங்களை நட முடிவு!
[Wednesday 2025-01-22 05:00]

வடக்கு தென்னை முக்கோண வலயத்தில் பயிர்செய்​கைக்காக 2025 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரசாங்கம் 1,437 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.



வெள்ளத்தில் மூழ்கிய வெள்ளம்!
[Wednesday 2025-01-22 05:00]

அநுராதபுரத்தில் பெய்த கனமழை காரணமாக, அநுராதபுர நகரத்தின் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நீர்மட்டம் உயர்ந்து, நீர் நிரம்பி வழிந்ததால், ஜெய ஸ்ரீ மஹா போதி மாவத்தையில் அமைந்துள்ள சுற்றுலா பொலிஸ் நிலையம், தொல்பொருள் அலுவலகம், ஹோட்டல், பாடசாலை மற்றும் மல்வத்து ஓயா ஆகியவை நீரில் மூழ்கியுள்ளன.



சென்னைப் பயணத்தை தடுக்க சுமந்திரன் சூழ்ச்சி?- நாடாளுமன்றில் சிறீதரன் குற்றச்சாட்டு.
[Tuesday 2025-01-21 16:00]

தனக்கு எதிராக போலியான பிரசாரங்களை பரப்பும் வகையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் செயற்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்வடாறு குறிப்பிட்டார்.



புதிய சட்டம் வரும் வரை பயங்கரவாத தடைச்சட்டம் சட்டம் அமுலில் இருக்கும்!
[Tuesday 2025-01-21 16:00]

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் புதிய சட்டம் நிறைவேற்றப்படும் வரை அமுலில் இருக்கும் என அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.



தேராவில் துயிலுமில்ல காணியை விடுவிக்க கோரி ஆளுநரிடம் மனு!
[Tuesday 2025-01-21 16:00]

விசுவமடு தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியை விடுவிக்க கோரி தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவினர் மாவீரர்களின் பெற்றோர் உரித்துடையோர் நேற்று மாலை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை சந்தித்து கலந்துரையாடினர்.



நான் மஹிந்த ராஜபக்ஷ என்பதை அனுரகுமார மறந்து விட்டார்!
[Tuesday 2025-01-21 16:00]

எனது அரசு இல்லம் என்னிடமிருந்து பறிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி நினைத்தால், நான் வெளியேறத் தயாராக இருக்கிறேன். அவர் எனக்கு எழுத்துப்பூர்வ கோரிக்கையை அளிக்கட்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.



அர்ச்சுனாவுக்கு எதிராக பொலிஸ் விசாரணை ஆரம்பம்!
[Tuesday 2025-01-21 16:00]

பொலிஸ் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும், போக்குவரத்துச் சட்டத்தை மீறியதாகவும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் குறித்து இலங்கை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



தண்ணிமுறிப்பு, ஆண்டான்குளம் மக்களை மீள்குடியேற்ற வேண்டும்!
[Tuesday 2025-01-21 16:00]

ஆக்கிரமிப்பு முற்றுகைக்கள் இருக்கும் முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட தண்ணிமுறிப்பு மற்றும், ஆண்டான்குளம் கிராமக்களை மீள்குடியேற்றுவதற்கு புதிய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.



இலங்கை உலகளாவிய அரசியல் பொறிக்குள் சிக்கிக்கொண்டுள்ளது!
[Tuesday 2025-01-21 16:00]

அரசாங்கம், இந்தியா மற்றும் சீன அரசாங்கங்களுடன் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு பிரகடனம் மூலம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இந்தியாவின் ஆதிக்கத்துக்கு கீழ் கொண்டு வருவதற்கும் தென் மாகாணத்தின் கீழ் பிரதேசங்களை சீன அரசாங்கத்துக்கு வழங்கவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த இணக்கப்பாடுகள் மூலம் இலங்கை உலகளாவிய அரசியல் பொறிக்குள் சிக்கிக்கொண்டுள்ளது என முன்னிலை சோசலி கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்தார்.



நினைவேந்தல்கள் மீது கவனம் செலுத்தப்படும்!
[Tuesday 2025-01-21 16:00]

நினைவேந்தல் என்ற பெயரில் வடக்கு, கிழக்கில் இடம்பெறும் நிகழ்வுகள் தொடர்பில் இனிமேல் அதிக கவனம் செலுத்தப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கே.எம்.ஆனந்த விஜேபால தெரிவித்தார்.



அர்ச்சுனாவைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!
[Tuesday 2025-01-21 16:00]

யாழ்ப்பாணம் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை கைது செய்யுமாறு அநுராதபுரம் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் அநுராதபுரம் ரம்பேவ பகுதியில் இன்றைய தினம் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் விளக்குகளை ஒளிரச் செய்து தனது வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார்.



கிணற்றில் வீசப்பட்ட குழந்தை!
[Tuesday 2025-01-21 16:00]

இன்றையதினம் பிறந்த குழந்தை ஒன்று கிணற்றினுள் வீசப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைதடி பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.து குறித்து சந்தேகநபர்கள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. இச்சம்பவம் குறித்து சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



ஊழல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை நிறுவ வேண்டும்!
[Tuesday 2025-01-21 05:00]

நாட்டில் ஊழல் தொடர்பான வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றங்களை நிறுவுவதை ஜனாதிபதி பரிசீலிக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா