Untitled Document
January 23, 2025 [GMT]
அர்ச்சுனா, கௌசல்யா உள்ளிட்ட 9 வேட்பாளர்கள் குறித்து விசாரணை!
[Thursday 2025-01-23 16:00]


தேர்தல் கணக்கறிக்கை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உட்பட 09 பேர் மீதான விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

தேர்தல் கணக்கறிக்கை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உட்பட 09 பேர் மீதான விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

  

கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது போட்டியிட்ட வேட்பாளர்கள் தமது செலவீன அறிக்கைகளை தேர்தல் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்துள்ளனர்.

இந்நிலையில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அதன் அடிப்படையில், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உட்பட யாழ். தேர்தல் மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்ட சசிகலா ரவிராஜ், அ.உமாகரன், சி.மயூரன், த.கிருஸ்ணானந், ந. கௌசல்யா, குருசாமி சுரேன் உட்பட 09 பேர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதில் சசிகலா ரவிராஜிடம் பொலிஸார் வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டுள்ளனர். ஏனையவர்களிடமும் வாக்குமூலங்களை பெற்ற பின்னர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு விசாரணை அறிக்கைகளை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை யாழ். தேர்தல் மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டவர்களில் இதுவரை தமது தேர்தல் செலவீன அறிக்கைகளை தேர்தல் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்காத 35 பேருக்கு எதிராகவும் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com



அரிசி ஆலைகள் இராணுவ கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும்!- ஜனாதிபதி அனுர எச்சரிக்கை.
[Thursday 2025-01-23 16:00]

அரசாங்கத்தின் பொறிமுறைகளை அரிசி ஆலை உரிமையாளர்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் அரிசி ஆலைகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.



யாழ்ப்பாணம் என்ற பெயரை அகற்றியது எம்மை அவமதித்தமைக்குச் சமம்!
[Thursday 2025-01-23 16:00]

இலங்கைத் தமிழினத்தின் பெருமைக்கும் இறுமாப்புக்கும் உடையதான 'யாழ்ப்பாணம்' என்ற பெயரை யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலைய விடயத்தில் அகற்றியமை எம்மை அவமதித்தமைக்குச் சமமாகும். இது இந்தியாவுக்கும் எமக்கும் இடையேயான நல்லுறவில் ஆழமான குழியாக அமைந்துவிடக்கூடாது என நாம் திடமாக நம்புகின்றோம். 'யாழ்ப்பாணம' என்பது விட்டுக் கொடுக்கப்பட முடியாத எம் இனத்தின் அடையாளம் ஆகும். எனவே, இந்த விடயத்தை உடனடியாக மீளாய்வுக்கு உட்படுத்தி சீர்செய்யுமாறு வேண்டிக்கொள்கின்றோம் என்று, யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் சாய்முரளியிடம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் புதன்கிழமை பிற்பகல் நேரில் சென்று கையளித்த கடிதத்தில் தெரிவித்திருக்கின்றார்.



அனுர யாப்பாவுக்கும் மனைவிக்கும் பிணை!
[Thursday 2025-01-23 16:00]

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா, அவரது மனைவி மற்றும் பலர் உட்பட நான்கு பேரை தலா 2.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு பிணைப் பத்திரங்களில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.



ஒன்ராறியோ அரசாங்கம் 200 டொலர் வரித்தள்ளுபடி வழங்குகிறது Top News
[Thursday 2025-01-23 16:00]

கார்பன் வரி மற்றும் அதிக வட்டி விகிதங்களின் தாக்கம் உட்பட, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளுடன் போராடும் குடும்பங்களுக்கு ஆதரவாக ஒன்ராறியோ அரசாங்கம் $200 தள்ளுபடி காசோலைகளை வழங்கத் தொடங்கியுள்ளது. கனடா குழந்தை நலன் (CCB)க்கு தகுதியான குடும்பங்களில் 18 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் கூடுதலாக $200 வழங்கப்படும்.



மருதானை பொலிஸ் நிலையத்தில் உயிர் மாய்த்த கிளிநொச்சி பெண்! உண்மைகள் வெளிவர வேண்டும்.
[Thursday 2025-01-23 16:00]

மருதானை பொலிஸ் நிலையத்தில் உயிர்மாய்த்துக் கொண்டதாக சொல்லப்படும் தமிழ்ப் பெண்ணின் மரணம் தொடர்பான உண்மைகள் உடனடியாக வெளிக் கொண்டு வரப்பட வேண்டும் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.



ஜேவிபி அலுவலகத்தில் அமெரிக்க தூதுவர்!- டில்வின் சில்வாவுடன் சந்திப்பு.
[Thursday 2025-01-23 16:00]

மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான அலுவலகத்தில் ஐக்கிய அமெரிக்க தூதுவர் ஜூலி சங் க்கும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவுக்கும் இடையில் நேற்று முற்பகல் சந்திப்பொன்று இடம்பெற்றது.



பாடசாலை மாணவிகள் மத்தியில் அதிகரிக்கும் உளவியல் பாதிப்பு!
[Thursday 2025-01-23 16:00]

பாடசாலை மாணவிகள் மத்தியில் மனநோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக கண்டி தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்தியர் பாலித பண்டார சுபசிங்க தெரிவித்துள்ளார்.



100 மில்லியன் தேங்காய்களை உடனடியாக இறக்குமதி செய்ய வேண்டும்!
[Thursday 2025-01-23 16:00]

தேங்காய் சார்ந்த பொருட்கள் உட்பத்திக்கு குறைந்தபட்சம் 100 மில்லியன் தேங்காய்களை உடனடியாக இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், சந்தையில் ஒரு தேங்காயின் விலை 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் ஜயந்த சமரகோன் தெரிவித்தார்.



மாணவி துஷ்பிரயோகம்- ஆசிரியர் கைது!
[Thursday 2025-01-23 16:00]

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் 14 வயதான மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார்.



முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா கைது!
[Thursday 2025-01-23 05:00]

முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார். 2014 ஆம் ஆண்டில் 6.1 மில்லியன் ரூபாயை முறைகேடு செய்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



சந்திப்பில் பங்கேற்காது தமிழரசு- கஜேந்திரகுமாருக்கு அறிவித்தார் சிறிதரன்!
[Thursday 2025-01-23 05:00]

தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டம் குறித்து கலந்துரையாடுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த சந்திப்பில் தாம் கலந்துகொள்ளப்போவதில்லை என இலங்கைத் தமிழரசுக்கட்சி அறிவித்ததை அடுத்து, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகள் எதிர்வரும் 27 ஆம் திகதி சந்தித்து தீர்வுத்திட்டம் தொடர்பில் ஆராயவுள்ளன.



நாமலுக்கு எதிராக தனி விசாரணை!
[Thursday 2025-01-23 05:00]

கொழும்பு கோட்டையில் உள்ள கிரிஷ் டிரான்ஸ்வெர்க் சதுக்கத்தில் 4.3 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்ததில் 70 மில்லியன் ரூபாய் நிதி முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் வழக்கு இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.



ஆவரங்கால் விபத்தில் இருவர் படுகாயம்!
[Thursday 2025-01-23 05:00]

யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பலத்த காயங்களுக்கு உள்ளாகி உயிருக்கு போராடி வருகின்றனர்.



மருதானை பொலிஸ் நிலையத்தில் வவுனியா பெண் மரணம்!
[Thursday 2025-01-23 05:00]

மருதானை பொலிஸ் நிலையத்தில் உள்ள பெண்கள் சிறைக்கூடத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண் குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், குறித்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனை நடைபெறும் வரை பொலிஸ் நிலைய பிணவறையில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம வீரசிங்க நேற்று உத்தரவிட்டுள்ளார்.



லோச்சனாவினால் தப்பிய அர்ச்சுனா!
[Thursday 2025-01-23 05:00]

அனுராதபுரம் போக்குவரத்து பிரிவு அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து, அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக அர்ச்சுனா ராமநாதனுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்கில் தான் சந்தேக நபர் என்று கூறி யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இராமநாதன் அர்ச்சுனா நீதிமன்றத்தில், புதன்கிழமை ஆஜரானார்.



மேய்ச்சல் தரை விவகாரம் - ஊடகவியலாளருக்கு பிடியாணை!
[Thursday 2025-01-23 05:00]

மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினை தொடர்பான நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ஏறாவூர் பொலிஸாரினால் தொடரப்பட்ட வழக்கில் ஊடகவியலாளர் ஒருவருக்கு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.



பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு மாற்றாக விரைவில் புதிய சட்டம்!
[Thursday 2025-01-23 05:00]

பயங்கரவாத தடைச் சட்டம் (PTA) நீக்கப்பட்டு அதற்கு பதிலாக புதிய சட்டம் கொண்டு வரப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இது தொடர்பான சட்டங்களை மாற்றுவதற்கான அமைச்சரவைப் பத்திரம் எதிர்வரும் நாட்களில் சமர்ப்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.



இளைஞனை கட்டி வைத்து தாக்கிய கும்பலை சேர்ந்த ஒருவர் கைது!
[Thursday 2025-01-23 05:00]

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை நிர்வாணமாக்கி, கட்டி வைத்து தாக்கிய கும்பலை சேர்ந்தவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஏனையவர்களை கோப்பாய் பொலிஸார் கைது செய்வதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.



இரணைமடுவின் அனைத்து வான்கதவுகளும் திறப்பு- வெள்ளத்தில் கிராமங்கள்!
[Thursday 2025-01-23 05:00]

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற வானிலையால் மக்கள் இருப்பிடங்களிற்குள் வெள்ளநீர் உட்புகுந்ததுடன் உள்ளக போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டது.அதிகாலை பெய்த பலத்த மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.



உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றில் மனு!
[Wednesday 2025-01-22 16:00]

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இந்த மாதம் 24ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா