Untitled Document
January 24, 2025 [GMT]
கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் அவசியமான உறவு!
[Friday 2025-01-24 05:00]


கனடாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையிலான சக்தி மற்றும் சுரங்கத் தொழிற்துறை உறவு
வட அமெரிக்காவின் சக்திப் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் புவிசார் அரசியல் மீள்திறம்
ஆகியவற்றுக்கு இன்றியமையாதது.

கனடாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையிலான சக்தி மற்றும் சுரங்கத் தொழிற்துறை உறவு வட அமெரிக்காவின் சக்திப் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் புவிசார் அரசியல் மீள்திறம் ஆகியவற்றுக்கு இன்றியமையாதது.

  

இந்த இரண்டு நாடுகளும் ஒன்றிணைந்து வீடுகளுக்கும் தொழிற்துறைக்கும் சக்தி வழங்கி படை வல்லமையைப் பலப்படுத்தத் தேவையான இன்றியமையாத வளங்களின் உறுதியான விநியோகத்தை வழங்குகின்றன. மின்சாரம், பொட்டாஷ், யுரேனியம் உட்பட்ட கனேடிய சக்தித்துறை ஏற்றுமதிகள் அமெரிக்காவின் சக்தி மற்றும் உணவுப் பாதுகாப்புக்கு இன்றியமையாத அதேவேளை, கிரஃபைட், ஜேர்மானியம் போன்ற இன்றியமையாத கனிமங்கள் சீன விநியோகச் சங்கிலிகளில் தங்கியிருப்பதைக் குறைக்க உதவுகின்றன.

கனேடிய சக்தி மற்றும் வளங்கள் மீது விதிக்கப்படும் எந்த வரியும் ஐக்கிய அமெரிக்காவில் குறிப்பிடத்தக்க பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தி குடும்பங்கள், விவசாயிகள், தொழிற்துறைகள் ஆகியவற்றுக்கான செலவுகளை அதிகரிப்பதுடன் சீனா, ரஷ்யா போன்ற நாடுகளில் தங்கியிருக்கும் ஆபத்தையும் ஏற்படுத்தும். கனடாவும் ஐக்கிய அமெரிக்காவும் தொடர்ந்து ஒத்துழைப்பதன் மூலம் விநியோகச் சங்கிலிகளைப் பாதுகாத்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கி உலக சக்தி வல்லரசொன்றாக அவற்றின் தலைமைத்துவத்தைப் பலப்படுத்தலாம். இந்த ஒத்துழைப்பு சக்தித்துறைச் சுதந்திரம், பொருளாதார உறுதித்தன்மை மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அவசியமானது.

பொருளாதார கூட்டாண்மையைத் தொடர்வதற்கான நியாயப்படுத்தல்:

• கனடாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையிலான சக்தி மற்றும் சுரங்கத் தொழிற்துறை உறவு வட அமெரிக்காவின் சக்திப் பாதுகாப்புக்கும் பொருளாதாரத்திற்கும் அடிப்படையானது. நாம் ஒன்றாக பாதுகாப்பை மேம்படுத்தி, சீன செல்வாக்கைக் குறைத்து நல்ல வேலைவாய்ப்புகளை உருவாக்கலாம்.

• கனடாவின் மின்சார ஏற்றுமதி ஏறத்தாழ ஆறு மில்லியன் அமெரிக்க வீடுகளுக்கு சக்தியை வழங்குகிறது. கனேடிய பொட்டாஷ் விவசாயத்துறைக்குக் கிடைத்து அமெரிக்க உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, கனேடிய யுரேனியம் 18 மில்லியன் அமெரிக்க வீடுகளுக்குப் போதுமான மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.

• கனடாவும் ஐக்கிய அமெரிக்காவும் அனைத்து வகைச் சக்திகளிலும் ஒன்றுக்கொன்று முதன்மை வழங்குனர்களாக விளங்குகின்றன. சந்தைகளில் மாற்றத்தை ஏற்படுத்தவும், விநியோகச் சங்கிலிகளில் ஆதிக்கம் செலுத்தவும் ஏனைய நாடுகள் எடுக்கும் முயற்சிகளில் இருந்து எம்மை இது பாதுகாக்கிறது. வெனிசுவேலா, ரஷ்யா போன்ற நட்பற்ற நாடுகளின் எண்ணையில் ஐக்கிய அமெரிக்கா தங்கியிருந்த நிலைமையை மாற்றக் கனடா உதவியது.

உதாரணமாக, கனமான எண்ணைக்கெனச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட அமெரிக்க எண்ணைச் சுத்திகரிப்பு நிலையங்களுக்குக் கனேடிய மசகு எண்ணை குழாய் வழியாக அனுப்பப்படுவதுடன், பல அமெரிக்க தொழிற்துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

இவ்வாறே, அமெரிக்கர்களுக்குப் படைத்துறைக்குத் தேவையான கனிமங்களும், குறைந்த விலையிலான உணவும் கனடாவில் காணப்படுகின்றன. இவற்றுக்கு மாற்றாக சீனா, ரஷ்யா போன்ற நாடுகளே உள்ளன.

• சக்தி மற்றும் பாதுகாப்புத்துறைத் தேவைகளுக்கு அத்தியாவசியமான இன்றியமையாத கனிமங்களின் உலக விநியோகச் சங்கிலிகளில் தற்போது சீனா ஆதிக்கம் செலுத்துகிறது. ஆனால் இந்தக் கனிமங்கள் கனடாவில் குறிப்பிடத்தக்க அளவில் இருப்பதுடன், கனடா நம்பகத்தமையுள்ளதும், உறுதியானதுமான மாற்றுத் தெரிவாகவும் அமைகின்றது.

• சக்தி அல்லது வளங்களின் இறக்குமதி மீது ஐக்கிய அமெரிக்கா விதிக்கும் எந்த வரியும், அமெரிக்கர்களின் வாழ்க்கைச் செலவை மேலும் அதிகரிக்கும். உண்மையில், கனடாவிலிருந்தான இறக்குமதிகள் மீது விதிக்கும் 25 சதவீதமான வரி ஐக்கிய அமெரிக்காவுக்கு 100 பில்லியன் டொலருக்கும் அதிகமான செலவை ஏற்படுத்துவதுடன், அமெரிக்க குடும்பங்களின் செலவை வருடாந்தம் 1,800 கனேடிய டொலருக்கும் (1,300 அமெரிக்க டொலர்) அதிகமான தொகையால் அதிகரிக்கும்.

- அமெரிக்க விவசாயிகளுக்கு 830 மில்லியன் டொலருக்கும் அதிகமான செலவை ஏற்பாடுத்தி உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.

- பெற்றோல் விலை அதிகரித்து, ஐம்பெரும் வாவிகள், மிட்வெஸ்ட், றொக்கீஸ் பிராந்தியங்களிலும் வளைகுடாக் கரையோரத்திலும் ஒரு கலன் பெற்றோலின் விலை 75 சதம் வரை அதிகரிக்க வழிவகுக்கும்.

- எண்ணை மற்றும் இயற்கை வாயு ஆகியவற்றின் மீது விதிக்கப்படும் 25 சதவீத வரி மட்டுமே அமெரிக்க நிறுவனங்களுக்குச் சுமார் 30 பில்லியன் டொலர் செலவை ஏற்படுத்தும்.

• வட அமெரிக்கா உலகின் மிகப் பெரும் சக்தித்துறை வல்லரசாக இருக்கமுடியுமென்பதிலும், அதுவே அவ்வாறு இருக்கவேண்டுமமென்பதிலும் சந்தேகத்திற்கு இடமில்லை. அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கும், உலகின் மிகப் பலமான பொருளாதாரமாக இருப்பதற்கும் தேவையான வளங்கள் எம் இரண்டு நாடுகளிடமும் உள்ளன.

எண்ணையும் இயற்கை வாயுவும்:

• கனடாவும், ஐக்கிய அமெரிக்காவும் இன்றியமையாத பொருளாதார உறவொன்றைப் பகிர்ந்துகொண்டிருப்பதுடன், ஐக்கிய அமெரிக்காவுக்கு மசகு எண்ணையையும், இயற்கை வாயுவையும் வழங்கும் முக்கிய வழங்குனர்களாக அல்பேட்டா, சஸ்கெச்சுவான், நியூஃபண்லாண்ட் அன்ட் லப்றடோர் ஆகியன விளங்குகின்றன.

• சக்தி இறக்குமதி மீது வரிவிதிப்பது சக்தித்துறைப் பாதுகாப்பு, செலவைக் குறைத்தல் ஆகிய ஐக்கிய அமெரிக்க முன்னுரிமைகளுக்கு முரணாக இருப்பதுடன் அமெரிக்கர்களின் செலவுகளையும் அதிகரிக்கும்.

• ஐக்கிய அமெரிக்காவின் முதன்மை வணிகப் பங்காளியாக பலமான வணிகத் தொடர்புகளைப் பேணும் அதேவேளை கனேடிய பணியாளர்கள், தொழிற்துறைகள் மற்றும் அவற்றின் உலக நலன்களுக்கும் உறுதியாகப் போராடுவதற்கு நாம் உறுதிபூண்டுள்ளோம்.

இன்றியமையாத கனிமங்கள்:

• கனடாவின் பாரிய அளவான இன்றியமையாத கனிமங்களின் வளம், பாதுகாப்பு, தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கு இன்றியமையாததுடன், விநியோகச் சங்கிலிகளை சீன ஆதிக்கத்தில் இருந்து பாதுகாப்பதற்கும் முக்கியமானது. • ஐக்கிய அமெரிக்க அரசால் அடையாளம் காணப்பட்ட 50 இன்றியமையாத கனிமங்களில் 19 ஐயும், சீனாவால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள ஜேர்மானியம் போன்றன உட்பட 60 க்கும் அதிகமான கனிமங்களையும், கனடா உற்பத்தி செய்கிறது. இந்த வணிகம் சீர்குலைந்தால் ஐக்கிய அமெரிக்கா சீனாவில் தங்கியிருப்பது அத்கரிப்பதுடன், 5 பில்லியன் டொலருக்கும் அதிகமான வரிச் செலவும் ஏற்படும்.

• மின்சார வாகனங்களுக்கும் தூய்மையான தொழில்நுட்பங்களுக்கும் தேவையான கிரஃபைட்டின் உலக உற்பத்தியில் 70 சதவீதத்தையும், அதன் பதப்படுத்தலின் 100 சதவீதத்தையும் சீனா கட்டுப்படுத்துகிறது.

• இன்றியமையாத விநியோக சங்கிலிகளைப் பலப்படுத்தி, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் சுரங்கத் திட்டங்களுக்கு இணைந்து நிதியளிப்பதற்குக் கனடா ஐக்கிய அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுகிறது. ஐக்கிய அமெரிக்க பாதுகாப்புத்துறை கனடாவில் பெருமளவு தங்கியுள்ளது. பாதுகாப்புக்கு இன்றியமையாத மூலப்பொருட்களென நேட்டோ அடையாளம் கண்ட 12 மூலப்பொருட்களில் 10 ஐக் கனடா உற்பத்தி செய்கிறது, அல்லது சுத்திகரிக்கிறது.

  
   Bookmark and Share Seithy.com



யாழ்ப்பாணத்தில் மீண்டும் பெயர் மாற்றம்!
[Friday 2025-01-24 19:00]

இந்திய நிதி உதவியில் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்துக்கு "யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம்" என தற்போது பெயர்ப்பலகை பொருத்தப்பட்டுள்ளது.



ஹொரணை மாணவி முதலிடம்!
[Friday 2025-01-24 19:00]

2024 புலமைப்பரிசில் பரீட்சையில் ஹொரணை ரோயல் கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஒருவர் அகில இலங்கை ரீதியில் அதிக மதிப்பெண்களை பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.குறித்த மாணவி 188 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.



பாதுகாப்பு நீக்கப்பட்டதற்கு எதிராக வழக்குத் தொடுத்தார் மஹிந்த!
[Friday 2025-01-24 19:00]

தனது பாதுகாப்புப் பிரிவை மீண்டும் வழங்க உத்தரவிடக் கோரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.



மாமியாரைச் சுட்டுக் கொன்றவர் வெட்டிக் கொலை!
[Friday 2025-01-24 19:00]

வவுனியா -சுந்தரபுரத்தில் நேற்று இரவு ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். சுந்தரபுரம் பகுதியில் வசித்து வந்த 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே கொலை செய்யப்பட்டுள்ளார்.



உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான மனு மீது விசாரணை!
[Friday 2025-01-24 19:00]

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை இன்று (24) உயர் நீதிமன்றத்தில் ஆரம்பமானது.



யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் 186 புள்ளிகளைப் பெற்று சாதனை!
[Friday 2025-01-24 19:00]

2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் 186 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். பரமேஸ்வரன் பிரசோதன் என்ற மாணவன் 186 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் சாதனை படைத்துள்ளார்.யாழ். தொன் பொஸ்கோ மாணவன் 185 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.



அனுமதியின்றி தென்னை மரம் வெட்டத் தடை!
[Friday 2025-01-24 19:00]

நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான தேங்காய் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு தென்னை மரங்களை வெட்டுவதற்கு முன்னர் பிரதேச செயலாளரிடமும் மற்றும் தங்களிடமும் அனுமதி பெற வேண்டும் என தெங்கு அபிவிருத்தி சபை புதிய கொள்கையை அறிவித்துள்ளது.



ஐதேகவுடனான பேச்சுக்கள் வெற்றிகரமாக முன்னெடுப்பு!
[Friday 2025-01-24 19:00]

எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன இணைந்து செயற்படுவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.



மோட்டார் சைக்கிள் மோதி காயமடைந்த குடும்பஸ்தர் மரணம்!
[Friday 2025-01-24 19:00]

யாழ்ப்பாணத்தில் கடந்த 22 ஆம் திகதி வீதியை கடக்க முற்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் உயிரிழந்தார்.



மன்னார் காற்றாலை மின்திட்டம் ரத்துச் செய்யப்படவில்லை!
[Friday 2025-01-24 19:00]

மன்னார் மற்றும் பூநகரியில் அமையவுள்ள அதானியின் 484 MW காற்றாலை மின் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் தவறானவை என அதானி குழுமம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.



ஜெனிவாவில் இருந்து அமெரிக்கா விலகினால் பின்னடைவு ஏற்படும்!
[Friday 2025-01-24 05:00]

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகும் பட்சத்தில், இலங்கை தொடர்பான செயன்முறையை முன்னெடுத்துச் செல்வதில் பின்னடைவொன்று ஏற்படக்கூடும் என சிவில் சமூகப்பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டியுள்ள கனேடிய உயர்மட்டப்பிரதிநிதி மேரி-லூயிஸ் ஹனன், இருப்பினும் இலங்கை விவகாரம் தொடர்பில் கனடா கொண்டிருக்கும் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.



மன்னார் துப்பாக்கிச் சூட்டுக்கு பாதுகாப்புத் தரப்பின் அசமந்தமே காரணம்!
[Friday 2025-01-24 05:00]

மன்னாரில் நீதிமன்றத்திற்கு முன்னால் துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு தரப்பினரின் அசமந்த போக்கே இந்த நிலைமைக்கு காரணம். நானும் இலக்காக்கப்படலாம். பழிவாங்கு படலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதன் மூலம் தூய்மையான இலக்கை நோக்கிய இலட்சியத்தை அடைய முடியும் என ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.



மருதானை பொலிஸ் நிலையத்தில் பெண் கொலை செய்யப்பட்டுள்ளார்!
[Friday 2025-01-24 05:00]

மருதானை பொலிஸ் நிலையத்தில் வவுனியா பெண் தற்கொலை செய்யவில்லை, கொலை செய்யப்பட்டுள்ளார் என தமிழரசுக்கட்சியின் யாழ். மாவட்ட எம்.பி. யான சிறீதரன் தெரிவித்தார்.எனினும் இது தற்கொலை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பதிலளித்தார்.



முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும்!
[Friday 2025-01-24 05:00]

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வெட்கம் என்பதொன்று இருக்குமானால் அரச இல்லங்களிலிருந்து வெளியேற வேண்டும். ஆனால் இவர்களுக்கும் வெட்கமில்லை, இவர்களின் பிள்ளைகளுக்கும் வெட்கமில்லை எனத்தெரிவித்த சுகாதாரத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசிக்கும் பௌத்தாலோக்க மாவத்தை வீடு 3128 மில்லியன் ரூபாயட பெறுமதியானது. 46 இலட்சம் ரூபா மாத வாடகை கொண்டதெனவும் கூறினார்.



இனி அனுர அரசுக்கு ஆதரவு இல்லை!
[Friday 2025-01-24 05:00]

அரசாங்கத்திற்கு தான் வழங்கும் ஆதரவை முற்றாக விலக்கிக்கொள்வதாக தெரிவித்த யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன், இனி தான் உண்மையான எதிர்க்கட்சியினராக இருப்பேன் என்றும் தெரிவித்தார்.



ஒரே ஒரு எம்.பிக்கு வாகனம் வழங்கப்பட்டது!
[Friday 2025-01-24 05:00]

10 ஆவது பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்கள் வழங்கப்படவில்லை என்றும், ஆனால் பார்வையற்ற எம்.பியான சுகத் வசந்த டி சில்வாவுக்கு மாத்திரம் ஜனாதிபதி செயலகம் ஊடாக வாகனமொன்று வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.



கிளிநொச்சியில் வெள்ளம்!
[Friday 2025-01-24 05:00]

கிளிநொச்சி மக்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் மூன்றாவது முறையாகவும் திறக்கப்பட்டதன் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் ஜயன் கோயிலடி, ஊரியான், பெரியகுளம் கண்டாவளை உள்ளிட்ட பகுதிகளில் வயல் நிலங்களுக்கும் அழிவினை ஏற்படுத்தியுள்ளது.



சொகுசு வாகனங்களை பயன்படுத்தும் என்பிபி உறுப்பினர்கள்!
[Friday 2025-01-24 05:00]

சொகுசு வாகனங்கள் அனுமதிக்கப்படாதென்ற அரசாங்கத்தின் உறுதிமொழிகளுக்கு மத்தியில் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் சொகுசு வாகனங்களை பயன்படுத்துவதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.



பயமுறுத்துவதற்காக மக்கள் ஆணை வழங்கவில்லை!
[Friday 2025-01-24 05:00]

10 வருடங்களுக்கு பிறகு என்னை சி.ஐ.டிக்கு அழைத்து செல்லும் அளவுக்கு தேவை இருக்கவில்லை. இது அரசியல் பழிவாங்களில் ஒரு பகுதியாகும். அச்சுறுத்தி ஆட்சி செய்வதற்காக மக்கள் இந்த அரசாங்கத்துக்கு ஆணை வழங்கவில்லை.அரசாங்கம் நியாயமான முறையில் நடந்துகொள்ள வேண்டும்.அதிகாரத்தை கவனமாக கையாள வேண்டும் முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.



அரிசி ஆலைகள் இராணுவ கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும்!- ஜனாதிபதி அனுர எச்சரிக்கை.
[Thursday 2025-01-23 16:00]

அரசாங்கத்தின் பொறிமுறைகளை அரிசி ஆலை உரிமையாளர்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் அரிசி ஆலைகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.


Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா