Untitled Document
February 5, 2025 [GMT]
அர்ச்சுனாவுக்கு உளவியல் பிரச்சினை- மனநல மருத்துவரிடம் அனுப்புங்கள்!
[Wednesday 2025-02-05 16:00]


பாராளுமன்ற  உறுப்பினர் இராமநாதன்  அர்ச்சுனாவுக்கு உளவியல் பிரச்சினை  உள்ளது. ஆகவே அவரை  மனநல மருத்துவரிடம் அனுப்புங்கள்  என  ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு உளவியல் பிரச்சினை உள்ளது. ஆகவே அவரை மனநல மருத்துவரிடம் அனுப்புங்கள் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

  

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (05) சிறப்புரிமை மீறல் பிரச்சினை முன்வைத்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குறிப்பிட்ட ஒருசில விடயங்களை சுட்டிக்காட்டி ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து, உரையாற்றிய போது மேற்கண்டவாறு சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, பாராளுமன்ற உறுப்பினரான இவரின் (அர்ச்சுனாவை நோக்கி) செயற்பாடுகள் தொடர்பில் எங்களுக்கு பிரச்சினைகள் உள்ளன. இவர் உங்களை நோக்கி (சபாநாயகரை) வெட்கம் என்று தகாத வார்த்தைகளை பிரயோகிக்கிறார்.

அத்துடன் சிறுபான்மையினத்தவர்களுக்கு எதிரான விடயம் என்றும் கூறுகின்றார். இங்கே சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற வேறுபாடுகள் கிடையாது. இங்கே சிறுபான்மை என்று நாங்கள் எவரையும் கதைப்பதில்லை. பெரும்பான்மை என்று எவரும் செயற்படுவதில்லை.

இவ்வாறான கருத்துக்களுக்கும், செயற்பாடுகளுக்கும் சபையில் இடமளிக்க வேண்டாம். இவருக்கு தலையில் பிரச்சினை உள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டவர். இவரை மனநல மருத்துவரிடம் அனுப்புங்கள் என்று வலியுறுத்துகிறேன் என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



லசந்த படுகொலை சந்தேக நபர்களை விடுவிக்க பரிந்துரை!
[Wednesday 2025-02-05 16:00]

த சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பாக கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டிருந்த இராணுவப் புலனாய்வு அதிகாரி மற்றும் முன்னாள் டிஐஜி உட்பட மூன்று நபர்களை விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சிஐடி) தனது சட்ட ஆலோசனையை வழங்கியுள்ளார்.



ஊடகத்துறை அடக்குமுறைச் செயற்பாடுகளுக்கு முறையான நீதி பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்!
[Wednesday 2025-02-05 16:00]

கடந்த காலங்களில் ஊடகத்துறையின் மீது மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைச் செயற்பாடுகளுக்கு முறையான நீதி பெற்றுக்கொடுக்கப்பட வேண்டுமெனவும், அதேவேளை ஊடகத்துறையின் சுதந்திரமும், சுயாதீனத் தன்மையும் உறுதிப்படுத்தப்பட வேண்டுமெனவும் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பாராளுமன்றில் வலியுறுத்தியுள்ளார்.



நாடாளுமன்றத்தில் குழப்பம் விளைவித்த அர்ச்சுனா!- சூடாகிய சபாநாயகர்.
[Wednesday 2025-02-05 16:00]

நாடாளுமன்ற அடையாள அட்டை தனக்கு 2 மாதங்களாக வழங்கப்படவில்லை என அர்ச்சுனா இராமநாதன் சபாநாயகரைப் பார்த்து கடுமையாக சாடினார். நாடாளுமன்ற நிர்வாகத்தினரின் பொறுப்பற்ற செயல் குறித்து தான் வெட்கப்படுவதாகவும் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



104 கிலோ கேரள கஞ்சாவுடன் 3 பேர் கைது!
[Wednesday 2025-02-05 16:00]

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கேரள கஞ்சாவை இரண்டு படகுகளில் கடத்தி வந்த மூன்று இளைஞர்கள் யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் யாழ்ப்பாணம், உதயபுரம் கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.



200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி!
[Wednesday 2025-02-05 16:00]

தேங்காய் எண்ணெய் உற்பத்திக்காக 200 மில்லியன் தேங்காய்களுக்குச் சமமான கொள்ளவைக் கொண்டுள்ள தேங்காய் சொட்டுக்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.



அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு!
[Wednesday 2025-02-05 16:00]

யாழ். மாவட்ட எம்.பியான இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றப்பத்திரத்தை, எதிர்வரும் மே மாதம 28ஆம் திகதி தாக்கல் செய்யுமாறு அநுராதபுரம் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.



சுஜீவ சேனசிங்கவுக்கு 250 மில்லியன் ரூபா இழப்பீடாக வழங்க உத்தரவு!
[Wednesday 2025-02-05 16:00]

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவுக்கு 250 மில்லியன் ரூபாய் இழப்பீட்டை வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.பி. ரத்நாயக்கவிற்கு கல்கிஸ்ஸை மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.



மஹிந்தவைச் சந்தித்தார் இந்தியத் தூதுவர்!
[Wednesday 2025-02-05 16:00]

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இன்று காலை கொழும்பில் உள்ள விஜேராம இல்லத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசமும் கலந்து கொண்டார்.



உயர்நீதிமன்றத் தீர்ப்பு கிடைக்கவில்லை!
[Wednesday 2025-02-05 16:00]

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விசேட ஒழுங்கு விதிகள் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் தமக்குக் கிடைக்கவில்லை என சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பு ஏன் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படவில்லை என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சபாநாயகர் இதனைத் தெரிவித்துள்ளார்.



அரிசி இறக்குமதியில் பாரிய மோசடி- ஆலை உரிமையாளர்களுடன் அரசாங்கம் இரகசிய டீல்!
[Wednesday 2025-02-05 05:00]

அரசாங்கத்துக்கும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் இடையில் இருந்துவரும் ஒப்பந்தம் காரணமாகவே அரசாங்கம் நெல்லுக்கான உத்தரவாத விலையை இதுவரை தெரிவிக்காமல் இருக்கிறது. அதேநேரம் அரிசி இறக்குமதியின்போது பாரிய மோசடி இடம்பெற்றுள்ளது என முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.



யார் ஜனாதிபதியாக வந்தாலும் இனஅழிப்பு விடயத்திலே அனைவரும் ஒரே நிலைப்பாட்டில்!
[Wednesday 2025-02-05 05:00]

எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் யார் ஜனாதிபதியாக வந்தாலும் இன அழிப்பு விடயத்திலே அனைவரும் ஒரே நிலைப்பாட்டில் தான் உள்ளனர் என வேலன் சுவாமிகள் கடுமையாக சாடியுள்ளார்.யாழ். - நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்னால் நேற்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.



ஜனாதிபதி மீதான மக்கள் நம்பிக்கை வெகுவாக சிதைந்துள்ளது!
[Wednesday 2025-02-05 05:00]

ஜனாதிபதி அநுரகுமார மீதான மக்கள் நம்பிக்கை வெகுவாக சிதைவடைந்துள்ளது. மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை. மாறாக மக்களை திசை திருப்பி விடும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகிறது. மக்கள் அரசியலில் ஏமாற்றமடைந்துள்ளார்கள் என்றே குறிப்பிட வேண்டும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.



யுஎஸ் எய்ட் திட்டங்கள் குறித்து விசாரணை கோருகிறார் நாமல்!
[Wednesday 2025-02-05 05:00]

இலங்கையில் USAID இன் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்து விசாரணை நடத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். இந்த நிதியிலிருந்து பயனடைந்த அரசு சாரா நிறுவனங்களின் கணக்கு உட்பட, விரிவான அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.



ஜனவரியில் 5 ஆயிரம் பேருக்கு டெங்கு!
[Wednesday 2025-02-05 05:00]

இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தில் 4,943 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 764 ஆகும்.



28 கிலோ கஞ்சா பொதிகள் மீட்பு!
[Wednesday 2025-02-05 05:00]

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட விடத்தல் தீவு குளப் பகுதியில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளை செவ்வாய்க்கிழமை(4) காலை அடம்பன் பொலிஸார் மீட்டுள்ளனர்.



மக்களால் புறக்கணிக்கப்பட்ட தரப்பினர் அரசாங்கத்துக்கு எதிராக கூட்டணியமைக்க முயற்சி!
[Wednesday 2025-02-05 05:00]

அரச நிதியை மோசடி செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் போது அதனை அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிட முடியாது. மக்களால் புறக்கணிக்கப்பட்ட தரப்பினர் அரசாங்கத்துக்கு எதிராக கூட்டணியமைக்க முயற்சிக்கிறார்கள். மக்களாணையை மலினப்படுத்த போவதில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.



மூவர் கொலை- முன்னாள் அமைச்சரின் இணைப்பதிகாரி கைது!
[Wednesday 2025-02-05 05:00]

காலி - ஹினிதும, மகாபோதிவத்த பகுதியில் மூவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சரின் ஒருங்கிணைப்பு அதிகாரியை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபரிடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



6 நாட்கள் இளைஞன் சித்திரவதை - 4 பொலிஸ் அதிகாரிகள் இடைநிறுத்தம்!
[Wednesday 2025-02-05 05:00]

தில்ஷான் மதுசங்க என்ற இளைஞன் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு, சுமார் 6 நாட்கள் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வீரகெட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட நான்கு பொலிஸ் அதிகாரிகளின் பணிகளை இடைநிறுத்த பதில் பொலிஸ்மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.



கறுப்புக்கொடி ஏற்றி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்! Top News
[Tuesday 2025-02-04 16:00]

சுதந்திர தின கொண்டாட்டங்களை எதிர்த்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று பல்கலைக்கழகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கரிநாள் போராட்டம்! Top News
[Tuesday 2025-02-04 16:00]

இலங்கையின் சுதந்திரம் தினம் தமிழர்களின் கரிநாள் என்ற கோஷத்தின் அடிப்படையில் மக்கள் போராட்டம் இன்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது.


Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா