Untitled Document
March 13, 2025 [GMT]
பெண்களின் பாதுகாப்புக்கு அரசாங்கம் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன?
[Wednesday 2025-03-12 05:00]


அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வளாகத்தில்  பெண் வைத்தியர் ஒருவர் பாரிய வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். இந்த சம்பவம் தொலைத் தொடர்பு கடமையில் இருக்கும்போதே இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து கடமை அறைக்கு செல்லும்போதே இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. வெளி நபர் ஒருவர் கத்திமுனையில் வைத்தியரை அச்சுறுத்தி, கயிற்றினால் கட்டப்பட்டு, தொலை தொடர்பு அறைக்குள்ளேயே மிகவும் மோசமான முறையில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளார்.

அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வளாகத்தில் பெண் வைத்தியர் ஒருவர் பாரிய வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். இந்த சம்பவம் தொலைத் தொடர்பு கடமையில் இருக்கும்போதே இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து கடமை அறைக்கு செல்லும்போதே இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. வெளி நபர் ஒருவர் கத்திமுனையில் வைத்தியரை அச்சுறுத்தி, கயிற்றினால் கட்டப்பட்டு, தொலை தொடர்பு அறைக்குள்ளேயே மிகவும் மோசமான முறையில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளார்.

  

பாராளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

எமது நாட்டின் வைத்தியசாலை வரலாற்றில் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றிருப்பதாக நாங்கள் அண்மைக்காலம் வரை கேள்விப்பட்டதில்லை. அநுராதபுரம் போதனாவை வைத்தியசாலை அதிகளவான மக்கள் நடமாடும் இடம். நாட்டில் இருக்கும் பெரிய வைத்தியசாலை. கடமையில் இருக்கும்போதே குறித்த வைத்தியர் இந்த சம்பவத்துக்கு ஆளாகி இருப்பது பாரிய பிரச்சினையாகும்.

இந்த சம்பவத்தின் மூலம் நாட்டில் வைத்தியசாலை வளாகத்தில் பெண் வைத்தியர்களின் பாதுகாப்பு தொடர்பில் பாரிய பிரச்சினை எழுகின்றது. அநுராதபுரம் வைத்தியசாலையில் இருக்கும் பாதுகாப்பு கூட இல்லாத நூற்றுக்கணக்கான வைத்தியசாலைகள் எமது நாட்டில் இருக்கின்றன. இவ்வாறான சம்பவத்தினால் எமது நாட்டு பெண் வைத்தியர்கள் பெரும் அச்சத்துக்கும் அதிர்ச்சிக்கும் ஆளாகியுள்ளனர். கடந்த காலங்களில் வைத்தியர்களுக்கு எதிராக தூண்டிவிடும் ஆத்திரமூட்டும் நிகழ்வுகள் திட்டமிடப்பட்ட வகையில் இடம்பெற்றன. கோபமூட்டும் சம்வங்கள் இடம்பெற்றன. இந்த சம்பவத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்க வேண்டும்.

அத்துடன் தேசிய பாதுகாப்பு தொடர்பில் நாங்கள் கதைக்கும்போது அது தொடர்பில் நகைச்சுவை செய்கிறார்கள். கேலிச்சித்திரமும் வரைந்திருந்தார்கள். ஆனால் தற்போது அரச சேவையில் மாத்திரமல்லாது, சேவையில் இருக்கும் பெண் ஊழியர்களுக்கு தங்களின் கடமையைகூட மேற்கொள்ள முடியாத கஷ்டமான நிலைக்கு ஆளாகி இருப்பதன் மூலம் உண்மையிலே மக்களின் பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது.

அதனால் பெண் வைத்தியர் ஒருவர் இவ்வாறான பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகி இருப்பதை அரசாங்கத்துக்கு தெரியுமா? அப்படியானால் எப்போது தெரிந்து கொண்டது ? அது தொடர்பில் எடுக்கப்போகும் நடவடிக்கை யாது?

தொழில்துறைகளில் பணிபுரியும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து சர்ஙதேச மகளிர் தினத்தில் இந்த சபையிலும் வெளியிலும் நாங்கள் கதைத்து நிகழ்வுகளை மேற்கொண்ட நிலையில், இவ்வாறான சம்பவத்தினால் பெண்கள் நிர்க்கதியானதொரு நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

எனக்கும் ஒரு மகள் இருக்கிறாள். இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் அனைவருக்கும் பாரிய உணர்வு இருக்கிறது. ஆனால் உணர்வுகள் மாத்திரம் இருந்து போதாது. இந்த நாட்டில் வைத்தியர்கள் உள்ளிட்ட பெண்களை பாதுகாத்து அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க நாங்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடமை நிலையத்தில் இடம்பெற்ற சம்பவம். அதனால் இந்த சம்பவம் தொடர்பில் அரசாங்கம் எடுக்க இருக்கும் நடவடிக்கை என்ன என்பதுடன் வைத்தியசாலைகள் உள்ளிட்ட தொழிற்சாலைகளில் கடமை புரியும் பெண்களின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

  
   Bookmark and Share Seithy.com



படைகளிடம் உள்ள காணிகளை ஒப்படைத்தால் பஞ்சம் போகும்!
[Thursday 2025-03-13 05:00]

வடக்கில் விவசாய நிலங்கள் பல இராணுவம் உள்ளிட்ட முப்படையினரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. படையினர் அதில் விவசாயம் செய்கின்றனர். இந்தக் காணிகளை விவசாயிகளிடம் ஒப்படைத்தால் நெல்லுக்கான பஞ்சம் இல்லாமல் போகும் .விவசாயிகள் வசதியானவர்கள் அல்ல. இவர்கள் பொருளாதார பிரச்சினையில் சொல்லொன்னா துன்பங்களை அனுபவிக்கின்றனர். அவற்றை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.



மக்களின் காணிகளை அத்துமீறி திருடியுள்ள அரச திணைக்களங்கள்!
[Thursday 2025-03-13 05:00]

முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் உள்ளிட்ட வன்னிப்பகுதிகளில், வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட அரச திணைக்களங்கள் மக்களின் விவசாய மற்றும், குடியிருப்புக் காணிகளை அத்துமீறி திருடியுள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பாராளுமன்றில் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார்.



மாதவனை மேய்ச்சல் தரையில் சட்டவிரோதமாக குடியேறியுள்ளவர்களை வெளியேற்ற வேண்டும்!
[Thursday 2025-03-13 05:00]

இன நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மாதவனை மேய்ச்சல் தரையில் சட்டவிரோதமான முறையில் குடியேறியுள்ளவர்களை அரசாங்கம் வெளியேற்ற வேண்டும். நீதிமன்றத்தின் தீர்ப்பினை செயற்படுத்த வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் வலியுறுத்தினார்.



நாமல் மீதான குற்றச்சாட்டு - அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!
[Thursday 2025-03-13 05:00]

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷ கிரிஷ் ரியல் எஸ்டேட் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பான விசாரணைகள் குறித்து மார்ச் 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு கோட்டை நீதவான் உத்தரவிட்டார்.



மன்னாரில் கட்டுப்பணம் செலுத்தியது தமிழரசுக் கட்சி!
[Thursday 2025-03-13 05:00]

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட இலங்கை தமிழரசுக்கட்சி நேற்று மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர். இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையிலான குழுவினரே இவ்வாறு கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.



மித்தெனிய முக்கொலை சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
[Thursday 2025-03-13 05:00]

மித்தெனிய முக்கொலைகளுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.



அமெரிக்க தூதரக அரசியல் அதிகாரி யாழ். பல்கலைக்கழக துணைவேந்தருடன் சந்திப்பு!
[Thursday 2025-03-13 05:00]

வடக்கு மாகாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் அலுவலர் கெவின் பிரைஸ் தலைமையிலான குழுவினர் புதன்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்து துணைவேந்தர் மற்றும் பீடாதிபதிகளுடன் கலந்துரையாடினர்.



பொதுச் சின்னத்தில் களமிறக்க சஜித்துக்கு ஐதேக அழைப்பு!
[Thursday 2025-03-13 05:00]

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கிடையிலான இணக்கப்பாட்டுடன் சுயாதீன சின்னமொன்றில் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் களமிறங்க முடியும். அந்த தீர்மானத்தை எட்டுவதற்கு 15ஆம் திகதி வரை எவ்வித தடையும் இல்லை. அவ்வாறில்லை எனில் யானை சின்னத்தில் தனித்து களமிறங்குவோம் என ஐ.தே.க. தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.



பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து பரிந்துரைகளை முன்வைக்க நிபுணர் குழு!
[Thursday 2025-03-13 05:00]

பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்கு நீதியமைச்சின் செயலாளர் தலைமையில் துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய குழு நியமிக்கப்படும். குழுவின் அறிக்கைக்கு அமைவாக பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான சட்டமூலம் வெகுவிரைவில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.



மானுடன் இணைந்தது தமிழரசின் ஒரு குழு!
[Thursday 2025-03-13 05:00]

இலங்கை தமிழரசுக்கட்சியில் இதுவரை இணைந்து அரசியலில் பயணித்த காரை நகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரன் தலைமையிலான அணி இம்முறை தமிழ்மக்கள் கூட்டணியின் சின்னமான மான் சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.



பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமை செய்த சந்தேக நபர் கைது!
[Wednesday 2025-03-12 17:00]

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் 32 வயதான பெண் வைத்தியர் ஒருவர் கத்தி முனையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் அடையாளம் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.



வைத்தியர்களின் போராட்டம் - நாடெங்கும் வைத்தியசாலைகள் பாதிப்பு!
[Wednesday 2025-03-12 17:00]

அனுராதபுரம் போதனா ​வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை 08:00 மணி முதல் 24 மணி நேர நாடு தழுவிய அடையாள பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் மருத்துவ நிபுணர்கள் சங்கம் என்பன முன்னெடுத்து வருகிறது.



அச்சத்தில் உறைந்துள்ள அனுராதபுர வைத்தியசாலை ஊழியர்கள்!
[Wednesday 2025-03-12 17:00]

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள வைத்திய தொழிற்சங்க நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவருமாறு சுகாதார அமைச்சர் மருத்துவர் நலிந்த ஜயதிஸ்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.



விமானப் பணிப்பெண்களுக்கு பாலியல் தொந்தரவு- நயினாதீவு வாசிக்கு பயணத்தடை!
[Wednesday 2025-03-12 17:00]

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானப் பணிப்பெண்கள் இருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பயணி கொழும்பு பிரதான நீதிமன்றத்தால் பிணையில் விடுக்கப்பட்டார். தலா ரூ.100,000 பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுவித்த கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி,சந்தேக நபருக்கு பயணத் தடையையும் விதித்தார்.



மருத்துவரை வன்கொடுமை செய்த சந்தேக நபரை மன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவு!
[Wednesday 2025-03-12 17:00]

அனுராதபுரம் மருத்துவமனையில் பெண் மருத்துவரை துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபரை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அனுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய,அனுராதபுரம் தலைமை பொலிஸ் ஆய்வாளர் ஆர்.என்.கே. ஜெயவீரவுக்கு, புதன்கிழமை (12) மாலை உத்தரவிட்டார்.



மஹிந்த யாப்பா, அஜித் ராஜபக்ச,அங்கஜன் மீது நடவடிக்கை!
[Wednesday 2025-03-12 17:00]

முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் துணை சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் குழுக்களின் துணைத் தலைவர் அங்கஜன் ராமநாதன் ஆகியோர் தங்கள் பதவிக் காலத்தில் அதிகப்படியான எரிபொருளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க இன்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கோரிக்கை விடுத்தார்.



வவுனியாவில் கட்டுப்பணம் செலுத்தியது சங்கு கூட்டணி!
[Wednesday 2025-03-12 17:00]

வவுனியா மாநகர சபை உட்பட நான்கு சபைகளிலும் போட்டியிட ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி வவுனியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் இன்று (12) கட்டுப்பணம் செலுத்தியது.



வெள்ளியுடன் மூடப்படும் பாடசாலைகள்!
[Wednesday 2025-03-12 17:00]

2025ஆம் ஆண்டில் அரசுப் பாடசாலைகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான விடுமுறை காலம் தொடர்பில் கல்வி அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, முதலாம் தவணையின் முதல் கட்டம் எதிர்வரும் 14ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் முடிவடையும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. முதல் பாடசாலை பருவத்தின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் செவ்வாய்க்கிழமை 01ஆம் திகதி ஆரம்பமாகும்.



யாழ்ப்பாணத்தில் கட்டுப்பணம் செலுத்தியது தமிழ் காங்கிரஸ்!
[Wednesday 2025-03-12 17:00]

உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி யாழ்ப்பாணத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. இன்று (12) காலை யாழ்ப்பாணத்தில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் யாழில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்குமான கட்டுப்பணத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் செலுத்தியிருந்தனர்.



ஸ்ரீ கொத்தாவில் ராஜிதவுக்கு எதிர்ப்பு!
[Wednesday 2025-03-12 17:00]

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு, கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில், கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில், புதன்கிழமை நடைபெற்றது.


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Latika-Gold-House-2025
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா