Untitled Document
March 13, 2025 [GMT]
தமிழரசை உடைத்து விட முயற்சி!- சிவிகே சீற்றம்.
[Thursday 2025-03-13 15:00]



தமிழரசை உடைப்பவர்களுக்கு 'தமிழரசு' என்ற சொல் தேவைப்படுகிறது என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பிரதித்தலைவர் சி.வீ.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழரசை உடைப்பவர்களுக்கு 'தமிழரசு' என்ற சொல் தேவைப்படுகிறது என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பிரதித்தலைவர் சி.வீ.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

  

இது குறித்து அவர் தெரிவிக்கையில் , இரண்டு தினங்களுக்கு முன்பதாக சில ஊடகங்களில் புதிய தமிழரசு கட்சி உருவாக்கம் என்றும் அதற்கு கல்விமான்கள், இந்தியாவில் இருக்கின்ற தமிழ் தேசியவாதிகள், புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் இணைந்து புதியதோர்தமிழரசுக் கட்சியை உருவாக்குவதாகவும் அதில் முக்கியமாக தமிழரசு கட்சியின் எட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்களில் இருவரைத் தவிர ஆறு பேரும் அதற்க்கு ஆதரவு என்ற வகையிலும் கட்சியை பிளவு படுத்துகின்ற வகையிலும் செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.

எங்களுடைய கட்சி உறுப்பினர்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்த 6 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நான் நேரடியாக தொலைபேசியில் பேசி இருந்தேன். அவர்களுக்கு இது தொடர்பாக எது விதமான எண்ணங்களும் கிடையாது. இலங்கை தமிழ் மக்களுக்காக இருக்கின்ற ஒரே ஒரு பாரம்பரிய கட்சி இலங்கை தமிழரசுக் கட்சி அதனை எப்படியாவது உடைத்து விட வேண்டும் என்ற ஒரு எண்ணத்தோடு செய்யப்பட்ட புனையப்பட்ட ஒரு விஷமத்தனமான செய்தி இது.

தமிழரசு கட்சியை பொறுத்த வரையில் அதன் 75 வருட கால வரலாற்றில் சோரம் போகாத பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சி தமிழரசுக் கட்சி. ஊழலில் ஈடுபடாதவர்கள் இருக்கின்ற கட்சி தமிழரசு கட்சி.

தமிழரசு என்றும் புதிய தமிழரசு என்றும் புதிய கட்சிகளை உருவாக்குவோர்களுக்கு தமிழரசு என்ற சொற்பதம் தேவைப்படுகிறது.

தமிழரசுக்கட்சியை உடைப்பவர்களுக்கு தமிழரசு என்ற சொல் தேவைப்படுகிறது. இந்த முயற்சியில் ஈடுபடுபவர்கள் தங்கள் தெற்கின் நிகழ்ச்சி நிரலில் செயற்படுகிறோம் என்பதை தெரிந்து வைத்துள்ளார்களோ தெரியாது எனத் தெரிவித்தார்.

  
   Bookmark and Share Seithy.com



தனித்துப் போட்டியிடத் தீர்மானித்தது ஏன்?
[Thursday 2025-03-13 15:00]

தங்களுடைய தனித்துவத்தை இல்லாமலாக்கும் முயற்சியில் பிற கட்சிகள் செயற்பட்டமையினாலேயே இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தங்களது கட்சி தனித்துப் போட்டியிடுவதற்குத் தமிழ் மக்கள் கூட்டணி தீர்மானித்துள்ளதாக அதன் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.



குத்துக்கரணம் அடித்தார் பிரதமர்!
[Thursday 2025-03-13 15:00]

பாடசாலை நிகழ்வுகளில் அரசியல்வாதிகளை பங்கேற்க அழைக்க வேண்டாம் என்று கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய தனது முந்தைய அறிக்கையிலிருந்து பிரதமர் ஹரிணி அமரசூரிய பின்வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



தேசபந்து குற்றவியல் வலையமைப்பை இயக்கியதாக சட்டமா அதிபர் குற்றச்சாட்டு!
[Thursday 2025-03-13 15:00]

தேசபந்து தென்னகோன் தனது அதிகாரத்தின் கீழ் உள்ள பொலிஸ் அதிகாரிகளைப் பயன்படுத்தி ஒரு குற்றவியல் வலையமைப்பை இயக்கியதாக சட்டமா அதிபர் நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.



தப்பியோடிய 20 இராணுவத்தினர் கைது!
[Thursday 2025-03-13 15:00]

இராணுவ முகாம்களில் இருந்து தப்பிச் சென்ற 20 இராணுவ வீரர்கள் கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, சந்தேக நபர்களான இராணுவ வீரர்கள் கண்டி, கட்டுகஸ்தோட்டை மற்றும் அலவத்துகொடை ஆகிய பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.



வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது!
[Thursday 2025-03-13 15:00]

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் முன்னெடுத்து வந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது.



மேர்வின் சில்வா சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி!
[Thursday 2025-03-13 15:00]

பண மோசடியில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மஹர சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.



மீண்டும் மொட்டுடன் இணைந்தார் லொஹான் ரத்வத்த!
[Thursday 2025-03-13 15:00]

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்த, 2025 உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கை பொதுஜன பெரமுனவில் மீண்டும் இணைந்துள்ளார். முன்னதாக, 2024 ஜனாதிபதித் தேர்தலில் தேசிய ஜனநாயக முன்னணி (NDF) வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ரத்வத்த SLPP-யிலிருந்து வெளியேறினார், அதே நேரத்தில் அவர் பொதுத் தேர்தலிலும் போட்டியிடவில்லை.



பாலியல் வன்கொடுமை சந்தேக நபரின் சகோரதரி கைது!
[Thursday 2025-03-13 15:00]

அனுராதபுரம் மருத்துவமனையில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கடுமையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபருக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .



யாழ்ப்பாணத்தில் 17 உள்ளூராட்சி சபைகளிலும் ஆட்சியமைப்போம்!
[Thursday 2025-03-13 15:00]

யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.



படைகளிடம் உள்ள காணிகளை ஒப்படைத்தால் பஞ்சம் போகும்!
[Thursday 2025-03-13 05:00]

வடக்கில் விவசாய நிலங்கள் பல இராணுவம் உள்ளிட்ட முப்படையினரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. படையினர் அதில் விவசாயம் செய்கின்றனர். இந்தக் காணிகளை விவசாயிகளிடம் ஒப்படைத்தால் நெல்லுக்கான பஞ்சம் இல்லாமல் போகும் .விவசாயிகள் வசதியானவர்கள் அல்ல. இவர்கள் பொருளாதார பிரச்சினையில் சொல்லொன்னா துன்பங்களை அனுபவிக்கின்றனர். அவற்றை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.



மக்களின் காணிகளை அத்துமீறி திருடியுள்ள அரச திணைக்களங்கள்!
[Thursday 2025-03-13 05:00]

முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் உள்ளிட்ட வன்னிப்பகுதிகளில், வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட அரச திணைக்களங்கள் மக்களின் விவசாய மற்றும், குடியிருப்புக் காணிகளை அத்துமீறி திருடியுள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பாராளுமன்றில் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார்.



மாதவனை மேய்ச்சல் தரையில் சட்டவிரோதமாக குடியேறியுள்ளவர்களை வெளியேற்ற வேண்டும்!
[Thursday 2025-03-13 05:00]

இன நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மாதவனை மேய்ச்சல் தரையில் சட்டவிரோதமான முறையில் குடியேறியுள்ளவர்களை அரசாங்கம் வெளியேற்ற வேண்டும். நீதிமன்றத்தின் தீர்ப்பினை செயற்படுத்த வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் வலியுறுத்தினார்.



நாமல் மீதான குற்றச்சாட்டு - அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!
[Thursday 2025-03-13 05:00]

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷ கிரிஷ் ரியல் எஸ்டேட் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பான விசாரணைகள் குறித்து மார்ச் 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு கோட்டை நீதவான் உத்தரவிட்டார்.



மன்னாரில் கட்டுப்பணம் செலுத்தியது தமிழரசுக் கட்சி!
[Thursday 2025-03-13 05:00]

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட இலங்கை தமிழரசுக்கட்சி நேற்று மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர். இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையிலான குழுவினரே இவ்வாறு கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.



மித்தெனிய முக்கொலை சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
[Thursday 2025-03-13 05:00]

மித்தெனிய முக்கொலைகளுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.



அமெரிக்க தூதரக அரசியல் அதிகாரி யாழ். பல்கலைக்கழக துணைவேந்தருடன் சந்திப்பு!
[Thursday 2025-03-13 05:00]

வடக்கு மாகாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் அலுவலர் கெவின் பிரைஸ் தலைமையிலான குழுவினர் புதன்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்து துணைவேந்தர் மற்றும் பீடாதிபதிகளுடன் கலந்துரையாடினர்.



பொதுச் சின்னத்தில் களமிறக்க சஜித்துக்கு ஐதேக அழைப்பு!
[Thursday 2025-03-13 05:00]

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கிடையிலான இணக்கப்பாட்டுடன் சுயாதீன சின்னமொன்றில் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் களமிறங்க முடியும். அந்த தீர்மானத்தை எட்டுவதற்கு 15ஆம் திகதி வரை எவ்வித தடையும் இல்லை. அவ்வாறில்லை எனில் யானை சின்னத்தில் தனித்து களமிறங்குவோம் என ஐ.தே.க. தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.



பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து பரிந்துரைகளை முன்வைக்க நிபுணர் குழு!
[Thursday 2025-03-13 05:00]

பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்கு நீதியமைச்சின் செயலாளர் தலைமையில் துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய குழு நியமிக்கப்படும். குழுவின் அறிக்கைக்கு அமைவாக பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான சட்டமூலம் வெகுவிரைவில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.



மானுடன் இணைந்தது தமிழரசின் ஒரு குழு!
[Thursday 2025-03-13 05:00]

இலங்கை தமிழரசுக்கட்சியில் இதுவரை இணைந்து அரசியலில் பயணித்த காரை நகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரன் தலைமையிலான அணி இம்முறை தமிழ்மக்கள் கூட்டணியின் சின்னமான மான் சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.



பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமை செய்த சந்தேக நபர் கைது!
[Wednesday 2025-03-12 17:00]

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் 32 வயதான பெண் வைத்தியர் ஒருவர் கத்தி முனையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் அடையாளம் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


Latika-Gold-House-2025
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா