Untitled Document
March 31, 2025 [GMT]
தமிழ்ப் பிரிவினைவாதிகளே அரசாங்கத்தை தீர்மானிக்கிறார்கள்!
[Friday 2025-03-28 06:00]


தமிழ் இனவாதிகளின்  வாக்குகளை இலக்காகக் கொண்டு இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு பிரதானிகள் மூவருக்கு எதிராக பிரித்தானியா தடைவிதித்துள்ளது. இராணுவ பிரதானிகள் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை பாரதூரமானதுடன், நாட்டுக்கும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கத்தின் நிலைப்பாடு அதிருப்திக்குரியததென பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

தமிழ் இனவாதிகளின் வாக்குகளை இலக்காகக் கொண்டு இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு பிரதானிகள் மூவருக்கு எதிராக பிரித்தானியா தடைவிதித்துள்ளது. இராணுவ பிரதானிகள் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை பாரதூரமானதுடன், நாட்டுக்கும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கத்தின் நிலைப்பாடு அதிருப்திக்குரியததென பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

  

சர்வஜன கட்சிக் காரியாலயத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பிரித்தானிய அரசாங்கம் தமிழ் இனவாதிகளின் வாக்குகளை இலக்காகக் கொண்டு இலங்கையின் பாதுகாப்பு பிரதானிகள் (முன்னாள்) மூவருக்கு எதிராக தடைவிதித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியாகி காலதாமதமான நிலையில் தான் வெளிவிவகாரத்துறை அமைச்சு மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

பிரித்தானிய அரசாங்கம் ஒருதலைப்பட்சமான தீர்மானத்தை எடுத்துள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது.இதனை புதிதாகக் குறிப்பிட வேண்டிய தேவையில்லை. ஏனெனில் இலங்கை அரசாங்கத்தின் இணக்கப்பாட்டுடன் கூட்டு அறிவிப்பை விடுப்பதாக பிரித்தானிய அரசாங்கம் குறிப்பிடவில்லை.

பிரித்தானியாவின் இந்த ஒருதலைப்பட்சமான தீர்மானத்தால் இலங்கையின் நல்லிணக்கத்துக்கும், அதன் வகிபாகத்துக்கும் பாதிப்பு ஏற்படும் என்று வெளிவிவகாரத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளமை உண்மையானது.இலங்கை இராணுவத்துக்கு எதிராக சர்வதேச மட்டத்தில் தடைகள் விதிக்கப்படும் போது அரசாங்கம் கடுமையான முறையில் எதிர்ப்பினை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்த்தோம்.

முப்படைகளின் தளபதியான நிறைவேற்றுத்துறை அதிகாரமிக்க ஜனாதிபதியின் கட்டளையின் பிரகாரம் நாட்டுக்காகவே இராணுவத்தினர் யுத்தக் களத்துக்கு சென்றார்கள். எவரும் தமது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்காக செல்லவில்லை. ஆகவே இராணுவத்தினரை என்றும் பாதுகாக்கும் கடப்பாடு இலங்கை அரசுக்கு உண்டு.

இவ்விடயத்தில் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு என்னவென்பது எமக்கும்,உலகத்துக்கும் அவசியமற்றது. இலங்கை அரசு எவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என்பதையே முழு உலகும் எதிர்பார்த்துள்ளது.

பிரித்தானியா விதித்துள்ள தடையில் முன்னாள் இராணுவ தளபதி இருவர் மற்றும் கடற்படைத் தளபதி ஒருவர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.இது மிகவும் பாரதூரமானதுடன்,நாட்டின் கௌரவத்துக்கும் களங்கம் ஏற்படுத்தும்.

தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காகவே இந்த தடையினை விதித்துள்ளதாக பிரித்தானியா அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாகவே தமிழ் பிரிவினைவாதிகளின் அழுத்தம் என்று குறிப்பிடுகிறோம். பிரித்தானியாவில் பலம் உள்ள தமிழ் பிரிவினைவாதிகள் தான் அரசாங்கத்தை தீர்மானிக்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளிலும் இந்நிலைமையே காணப்படுகிறது.

மனித உரிமைகள் வெளிப்படையான முறையில் மீறும் இஸ்ரேலுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கிறது. யூதர்களின் ஆதரவு அமெரிக்காவுக்கு அவசியமானது. இதுபோலதான் தமிழ் பிரிவினைவாதிகளின் கட்டளைகளுக்கு பிரித்தானியா இன்று அடிபணிந்துள்ளது. தொழில் கட்சி ஆட்சிக்கு வரும் போது இந்த போக்கு அதிகரிப்பதை அவதானிக்க முடிகிறது.

தமிழ் பிரிவினைவாத கொள்கையுடைய கனேடிய தமிழ் கார்டியன் அமைப்புக்கு இந்த வழங்கிய வாக்குறுதிகள் என்னவென்பதை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்துமாறு அரசாங்கத்திடம் பலமுறை வலியுறுத்தினோம். இதுவரையில் உண்மை பகிரங்கப்படுத்தப்படவில்லை என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



மாகாண சபை குறித்து இந்தியா எமக்கு கூற வேண்டியதில்லை!
[Monday 2025-03-31 15:00]

உள்நாட்டில் போர் நடந்தபோது, படைத் தரப்பாலும், விடுதலை புலிகளாலும், புலிகளுக்கு எதிராக வடக்கை மையப்படுத்தி செயல்பட்ட அமைப்புகளாலும் பல்வேறு முரணான செயல்பாடுகள் இடம்பெற்றன. இவை பொய்யல்ல. போர் ஒன்றின்போது அவ்வாறு (மனித உரிமைகள், விதிகள் மீறல்) இடம்பெறும். இது குறித்து உள்நாட்டில் உள்நாட்டு மக்களின் பங்களிப்புடன் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார்



3 ஆம் உலகப் போரில் பலியாகப் போகும் 220 இலட்சம் இலங்கையர்கள்!
[Monday 2025-03-31 15:00]

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின்போது, கைச்சாத்திடப்படவுள்ள இந்திய - இலங்கை இராணுவ ஒப்பந்தம் இலங்கையை உலகப் போரில் தள்ளும் என மக்கள் போராட்ட முன்னணியின் நிர்வாக உறுப்பினர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.



பலாலியை 4 மாதங்களுக்குள் சர்வதேச விமான நிலையமாக மாற்றுவோம்!
[Monday 2025-03-31 15:00]

பலாலி விமான நிலையத்தை நான்கு மாதங்களுக்குள் சர்வதேச விமான நிலையமாக மாற்றுவோம் என சிவில் விமான போக்குவரத்து சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நேற்று யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.



கரன்னாகொட, ஜகத் ஜெயசூரியவுக்கு எதிரான தடைகள் நியாயமானவையே!
[Monday 2025-03-31 15:00]

சவேந்திர சில்வாவுக்கு எதிரான, ஐக்கிய இராச்சியத்தின் சமீபத்திய தடைகள் நியாயமற்றவை என, முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.



சட்டவிரோதமாக ஈட்டிய சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை!
[Monday 2025-03-31 15:00]

சட்டவிரோதமாக ஈட்டிய சொத்துக்களை அரசுடமையாக்கும் சட்டமூலம் ஏப்ரல் 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.



அரசடியில் சிக்கியது 96 கிலோ கஞ்சா!
[Monday 2025-03-31 15:00]

யாழ்ப்பாண இராணுவ புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாண விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து நேற்றிரவு நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில், அரசடி பகுதியில் 96 கிலோகிராம் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட கேரள கஞ்சா அடங்கிய 45 பார்சல்கள் கைப்பற்றப்பட்டன. இதன் மதிப்பு சுமார் 32மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



ஏழாலையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!- தாயும் ஏற்கனவே சிறையில்.
[Monday 2025-03-31 15:00]

யாழ்ப்பாணம் - ஏழாலை, தெற்கு மயிலங்காடு பகுதியில் 10 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



சிஐடியில் முன்னிலையானார் டிரான் அலஸ்!
[Monday 2025-03-31 15:00]

முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு மாத்தறை - வெலிகம பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டலொன்றுக்கருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காகவே அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு சென்றுள்ளார்.



இலங்கையில் எச்.ஐ.வி. பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு!
[Monday 2025-03-31 15:00]

இலங்கையில் எச்.ஐ.வி. பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக தேசிய பாலியல் பரவும் நோய் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது. சமீப காலங்களில் நாட்டில் எச்.ஐ.வியுடன் வாழும் புதியவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக குறித்த திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.



தடுப்பூசி போடப்பட்ட 2 மாதக் குழந்தை மரணம்!
[Monday 2025-03-31 15:00]

யாழ்ப்பாணத்தில் தடுப்பூசி ஏற்றிய ஆண் குழந்தை காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது. திருநெல்வேலியை சேர்ந்த 3 மாதங்கள் நிரம்பிய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.



பிரித்தானியாவின் நிலைப்பாடு சர்வதேச நீதிமன்றம் வரை செல்ல வேண்டும்!
[Monday 2025-03-31 06:00]

நான்கு பேர் தடை தொடர்பான பிரித்தானியாவின் நிலைப்பாடு சர்வதேச நீதிமன்றம் வரை செல்ல வேண்டும். அதன் ஊடாக நீதி கிடைக்க வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.



புலம்பெயர் தமிழர்களின் அழுத்தங்களால் நாட்டுக்கு பாரிய அச்சுறுத்தல்!
[Monday 2025-03-31 06:00]

தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களான புலம்பெயர் தமிழர்களின் அழுத்தங்களால் நாட்டுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை (30) குருணாகலில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்தார்.



மோட்டார் சைக்கிள் மோதிய பெண் சிகிச்சை பலனின்றி மரணம்!
[Monday 2025-03-31 06:00]

யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர வண்டியில் சென்ற வயோதிபப் பெண்ணொருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - அரசடி வீதி பகுதியை சேர்ந்த 70 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் - நாளை சாதகமாக பரிசீலிக்கப்படும்!
[Monday 2025-03-31 06:00]

கடந்த 28ஆம் திகதி,வெள்ளிக்கிழமை, உயர் நீதிமன்ற அமர்வு, நீதியரசர் ச. துரைராஜா(PC), , நீதியரசர் மஹிந்த சமயவர்தன, மற்றும் நீதியரசர் சம்பத் பி. அபயகோன் ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இடம்பெற்றபோது, ஜனநாயக தேசிய கூட்டணியால் தாக்கல் செய்யப்பட்ட S.C. Writ No. 06/25 உட்பட, அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட உள்ளூராட்சி தேர்தலில் வேட்புமனுக்கள் சில நிராகரிக்கப்பட்டதை ஆட்சேபித்துத் தாக்கல் செய்யப்பட்ட 21 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.



தையிட்டியில் விகாரைக் காணிகளை அபகரிக்கவே போராடுகின்றனராம்!
[Monday 2025-03-31 06:00]

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் சின்னங்களை பௌத்தம் மற்றும் இந்து மத அடிப்படையில் அடையாளப்படுத்த வேண்டாமென தொல்பொருள் திணைக்களத்துக்கு அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்து தொல்பொருள் சின்னங்களுக்கு எவரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. பௌத்த சின்னங்களே திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுகின்றன என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.



2029 ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றுவோம்!
[Monday 2025-03-31 06:00]

2029 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சியை கைப்பற்றுவோம். அதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளோம் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.



வவுனியாவில் பூங்காவில் விளையாடிய சிறுமியின் சங்கிலி அறுப்பு!
[Monday 2025-03-31 06:00]

வவுனியா, நகரசபைப் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஒருவரின் சங்கிலியை இரு பெண்கள் அறுத்துச் சென்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, பூங்கா வீதியில் அமைந்துள்ள நகரசபை பூங்காவில் சிறுமி ஒருவர் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.



சிறையில் உள்ள கணவனுக்கு உணவு கொண்டு சென்ற மனைவி விபத்தில் பலி!
[Monday 2025-03-31 06:00]

யாழ். சிறைச்சாலையில் இருந்த கணவனுக்கு உணவு கொண்டு சென்ற மனைவி விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். கைதடி - தச்சன்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஜெயரத்தினம் சுசீலா (வயது 57) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



தந்தை செல்வா விருது விழாவில் தேர்தல் விதிமீறல் என முறைப்பாடு!
[Monday 2025-03-31 06:00]

வலிகாமம் மேற்கில் நடைபெற்ற தந்தை செல்வா விருது வழங்கல் நிகழ்வில் உதவி திட்டங்கள் வழங்கிய பொழுது தேர்தல் விதிமுறைகளை மீறி நிகழ்வில் வேட்பாளர்கள் கலந்து கொண்டதாக தெரிவித்து வட்டுக்கோட்டை தொகுதியின் ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளரால் தேர்தல் திணைக்களத்திற்கு முறைப்பாடு வழங்கப்பட்டது.



சிறைக்குள் மெத்தை கேட்ட சாமர சம்பத்!
[Monday 2025-03-31 06:00]

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, படுப்பதற்கு மெத்தை வழங்குமாறு விடுத்த கோரிக்கை வைத்தியர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக வெலிக்கடை சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலை ஆணையாளருமான காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


Kugeenthiran-200-2022-seithy
Latika-Gold-House-2025
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா