Untitled Document
April 8, 2025 [GMT]
தமிழ்த் தலைவர்களிடம் பிரதமர் மோடி வாக்குறுதி! Top News
[Saturday 2025-04-05 16:00]
ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கௌரவம் மற்றும் நீதி ஆகியவற்றுடனான வாழ்க்கைக்கான எமது அசைக்கமுடியாத அர்ப்பணிப்பை தமிழ் கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி   மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கௌரவம் மற்றும் நீதி ஆகியவற்றுடனான வாழ்க்கைக்கான எமது அசைக்கமுடியாத அர்ப்பணிப்பை தமிழ் கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

  

கொழும்பில் சற்று முன்னர் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதில் சி.வி.கே.சிவஞானம், சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சித்தார்த்தன், சாணக்கியன், சுமந்திரன்,ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தச் சந்திப்பு குறித்து இந்தியப் பிரதமர் தனது எக்ஸ் தளத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.

இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்தினரது தலைவர்களை சந்திக்கின்றமை எப்பொழுதும் மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமாகும்.

பெருமதிப்புக்குரிய தமிழ் தலைவர்களான திரு இரா. சம்பந்தன் மற்றும் திரு மாவை சேனாதிராஜா ஆகியோரது மறைவுக்கு இச்சந்தர்ப்பத்தில் அனுதாபம் தெரிவித்தேன். அவர்கள் இருவருமே தனிப்பட்ட ரீதியில் எனக்கு தெரிந்தவர்கள்.

அத்துடன், ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கௌரவம் மற்றும் நீதி ஆகியவற்றுடனான வாழ்க்கைக்கான எமது அசைக்கமுடியாத அர்ப்பணிப்பு இச்சந்திப்பின்போது மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

எனது விஜயத்தின்போது ஆரம்பித்துவைக்கப்பட்ட பல திட்டங்களும் முன்னெடுப்புகளும் அவர்களது சமூக, பொருளாதார மற்றும் கலாசார முன்னேற்றத்துக்கான பங்களிப்பை வழங்கும்.

  
   Bookmark and Share Seithy.com



தேசபந்துவை நீக்கும் விசாரணைக் குழுவை நியமிக்க 151 எம்.பிக்கள் ஆதரவு!
[Tuesday 2025-04-08 17:00]

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்வது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு சிறப்பு குழுவை நியமிக்கும் தீர்மானம் 151 பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது என்று பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி சபைக்கு அறிவித்தார்.



பாதுகாப்பு ஒப்பந்தத்தில் என்ன உள்ளது?
[Tuesday 2025-04-08 17:00]

ஏற்கனவே நடந்து வரும் நடவடிக்கைகளை நெறிப்படுத்தி முறைப்படுத்தும் நோக்கத்துடன், இந்தியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று காலியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி திசாநாயக்க, இந்தியாவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்து எழுப்பப்பட்ட கவலைகளை எடுத்துரைத்தார்.



பயங்கரவாத தடைச்சட்டத்தை விட வேறு சட்டம் இல்லை!
[Tuesday 2025-04-08 17:00]

விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பயங்கரவாதத் தடை சட்டத்தை பயன்படுத்த வேண்டிய நிலைமையே தற்போது காணப்படுகிறது. திட்டமிட்ட குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைகளின் போது சந்தேகநபர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் என்பதே தற்போது நடைமுறையிலுள்ள சட்டமாகும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.



எந்த நாடு முதலீடு செய்கிறது என்பதை விட எது பயனுள்ளது என்பதே முக்கியம்!
[Tuesday 2025-04-08 17:00]

இலங்கையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்திய மற்றும் சீன முதலீடுகளைப் பொறுத்தமட்டில், இதனை 'எந்த நாடு முதலீடு செய்கிறது' என்ற கோணத்தில் அணுகுவதை விடுத்து, 'எந்த முதலீட்டினால் இலங்கை மக்கள் பெரிதும் பயனடைவர்' என்ற கோணத்திலேயே அணுகவேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.



ட்ரம்புக்கு கடிதம் அனுப்பினார் அனுரகுமார!
[Tuesday 2025-04-08 17:00]

இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சமீபத்தில் விதிக்கப்பட்ட பரஸ்பர வரிகள் குறித்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு கடிதம் எழுதியுள்ளதாக தொழிலாளர் அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ இன்று தெரிவித்தார்.



சீதுவவில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி!
[Tuesday 2025-04-08 17:00]

சீதுவை பொலிஸ் பிரிவில், கொழும்பு-நீர்கொழும்பு பிரதான வீதியில் லியகேமுல்ல பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையத்தில் இருந்தவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 51 வயதான நபர் உயிரிழந்தார்.



பிணை கிடைத்தும் வெளிவர முடியாத சாமர சம்பத்!
[Tuesday 2025-04-08 17:00]

1.73 மில்லியன் ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி, இன்று உத்தரவிட்டார்.



வங்கியின் தரவுக்கட்டமைப்பில் திருட்டு- ஊடகங்களை முடக்க உத்தரவு!
[Tuesday 2025-04-08 17:00]

தனியார் வங்கியொன்றின் சட்டவிரோதமாக பெறப்பட்ட தரவுகளை வெளியிடும் இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களை முடக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இலங்கைதொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது.



புத்தாண்டுக்குப் பின்னர் உயர்தரப் பரீட்சை பெறுபேறு!
[Tuesday 2025-04-08 16:00]

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் தமிழ்- சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் வெளியிடப்படும் என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி.அமித் ஜயசுந்தர தெரிவித்தார். நாடு முழுவதும் சுமார் 2,312 மையங்களில் பரீட்சை நடத்தப்பட்டது. மொத்தம் 333,183 பேர் பரீட்சை எழுதினர், அவர்களில் 253,390 பேர் பாடசாலை மாணவர்கள் மற்றும் 79,793 பேர் தனியார் மாணவர்கள் ஆவர்.



வியாழேந்திரன் பிணை கிடைத்தும் சிறைக்குச் சென்றார்!
[Tuesday 2025-04-08 16:00]

மார்ச் 25ஆம் திகதி இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (௦8) உத்தரவிட்டுள்ளது.



குருநாகல் எரிபொருள் நிலையத்தில் பாரிய தீவிபத்து- 4 பேர் பலி!
[Tuesday 2025-04-08 06:00]

குருநாகல், வெஹர பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் முகாமையாளர் உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு 11 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இதில் மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவதற்கு கூட்டு முயற்சிகள் அவசியம்!
[Tuesday 2025-04-08 06:00]

இந்து சமுத்திரம் உலகளாவிய வர்த்தகத்திற்கான ஒரு மூலோபாய உயிர்நாடியாக காணப்படுவதால் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவதற்கு கூட்டு முயற்சிகள் அவசியம் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்தார்.



தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு!
[Tuesday 2025-04-08 06:00]

உள்ளூராட்சித் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கையை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில், 20ஆம் திகதியிருந்து 06ஆம் திகதி வரை 801 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



சர்வதேச ஒத்துழைப்பு கிடைக்காது என்றவர்கள் நாட்டை காட்டிக் கொடுப்பதாக குற்றம்சாட்டுகின்றனர்!
[Tuesday 2025-04-08 06:00]

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு கிடைக்காது என்றவர்கள் இன்று சர்வதேசத்துக்கு நாட்டை அரசாங்கம் காட்டிக்கொடுப்பதாக குற்றஞ்சாட்டுக்கிறார்கள். ஆனால் சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என்பதை நிரூபித்துள்ளோம் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.



வெளியுறவு அமைச்சரைச் சந்தித்தார் அமெரிக்க தூதுவர்!
[Tuesday 2025-04-08 06:00]

இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மறுசீரமைப்பது குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங், வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்துடன் ஒரு கலந்துரையாடலை நடத்தினார்.



10 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டு அச்சிடும் பணி நிறைவு!
[Tuesday 2025-04-08 06:00]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் நிறைவடைந்து, தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக பணிப்பாளர் பிரதீப் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.



தேர்தல்கள் ஆணைக்குழு மீது சீறிப் பாய்ந்த அனுர!
[Tuesday 2025-04-08 06:00]

தேர்தல்கள் ஆணைக்குழு உரிய முறையில் செயற்பட்டிருந்தால் முன்னதாகவே உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தி நிறைவு செய்திருக்க முடியும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.



கையிருப்பு சொத்துக்கள் மார்ச் மாதத்தில் 7.1% உயர்ந்தது!
[Tuesday 2025-04-08 06:00]

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2025 மார்ச் மாதத்தில் 7.1% உயர்ந்து 6.51 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது. இது பெப்ரவரி 2025 இல் 6.095 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததிலிருந்து குறிப்பிடத்தக்க உயர்வைக் காட்டுகிறது என்று இலங்கை மத்திய வங்கி (CBSL) அறிவித்துள்ளது.



சர்வதேச நாணய நிதியத்தின் நான்காவது மீளாய்வு நிறைவு!
[Tuesday 2025-04-08 06:00]

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில், திங்கட்கிழமை நடைபெற்றது.



ஜயவீரவின் வெற்றிடத்துக்கு சமந்த ரணசிங்க நியமனம்!
[Tuesday 2025-04-08 06:00]

தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மறைந்த கோசல நுவன் ஜயவீரவின் வெற்றிடத்துக்கு, அந்த மாவட்டத்தில், விருப்பு வாக்கு பட்டியலில் ஆகக் கூடுதலான வாக்குகளைப் பெற்ற சமந்த ரணசிங்க நியமிக்கப்படவுள்ளார். அவர், கடந்த பொதுத் தேர்தலில், 41306 வாக்குகளைப் பெற்றிருந்தார். அவர், பாடசாலை அதிபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Latika-Gold-House-2025
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா