Untitled Document
November 24, 2026 [GMT]
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு- மனித உரிமைகள் கண்காணிப்பகம் எதிர்ப்பு!
[Wednesday 2026-10-07 07:00]

அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவில் கடந்த காலங்களில் மனித உரிமை மீறல்களுக்குக் காரணமாக அமைந்த பல்வேறு கூறுகள் உள்வாங்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம், இப்புதிய சட்டமூலம் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக முழுமையாகத் திருத்தியமைக்கப்படும் வரை அல்லது புதிய சட்டமூலமொன்று தயாரிக்கப்படும் வரை, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பிரயோகம் உடனடியாக இடைநிறுத்தப்படவேண்டும் வலியுறுத்தியுள்ளது.

அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவில் கடந்த காலங்களில் மனித உரிமை மீறல்களுக்குக் காரணமாக அமைந்த பல்வேறு கூறுகள் உள்வாங்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம், இப்புதிய சட்டமூலம் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக முழுமையாகத் திருத்தியமைக்கப்படும் வரை அல்லது புதிய சட்டமூலமொன்று தயாரிக்கப்படும் வரை, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பிரயோகம் உடனடியாக இடைநிறுத்தப்படவேண்டும் வலியுறுத்தியுள்ளது.

  

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் செவ்வாய்க்கிழமை (6) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

ஒடுக்குமுறைக்கு வழிகோலிய பயங்கரவாதத்தடைச் சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவில் கடந்த காலங்களில் மனித உரிமை மீறல்களுக்குக் காரணமாக அமைந்த பல்வேறு கூறுகள் உள்வாங்கப்பட்டுள்ளன.

இச்சட்ட வரைவானது பயங்கரவாதம் எனும் பதத்துக்கான பரந்துபட்ட வரைவிலக்கணம், போதிய நீதித்துறை மேற்பார்வையின்மை, தேடுதல் மற்றும் கைதுகள் தொடர்பில் படையினருக்கான மட்டுமீறிய அதிகாரங்கள், கருத்து வெளிப்பாடு, ஒன்றுகூடல் மற்றும் சங்கங்களை நிறுவுதல் உள்ளிட்ட சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நிர்வாக அதிகாரங்கள் என்பவற்றை உள்ளடக்கியுள்ளது. இவை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் நிபுணர்களால் நிர்ணயிக்கப்பட்ட மனித உரிமைகள் நியமங்களுக்கு உட்பட்டவையாக அமையவில்லை. அதுமாத்திரமன்றி ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு ஏற்புடையவாறும் அமையவில்லை.

சிறுபான்மையின மக்கள் மீது ஒடுக்குமுறைகளைப் பிரயோகிப்பதற்கும், மீறல்களால் பாதிக்கப்பட்டோர் உள்ளடங்கலாக நீதி மற்றும் பொறுப்புக்கூறலைக் கோருவோரை இலக்குவைப்பதற்கும் நாட்டில் தொடர்ந்து ஆட்சிபீடமேறிய அரசாங்கங்களினால் பயங்கரவாதத்தடைச்சட்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள சட்டம் மேற்குறிப்பிட்டவாறான மீறல்கள் தொடர்வதற்கு இடமளிப்பதுடன், சர்வதேச சட்டத்தின் பிரகாரம் இலங்கை கொண்டிருக்கும் கடப்பாடு புறந்தள்ளப்படுவதற்கும், ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக நன்மைகளை இழப்பதற்கும் வழிகோலும்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், 2024 ஆம் ஆண்டு அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டம் உள்ளிட்ட சகல ஒடுக்குமுறைச் சட்டங்களையும் நீக்குவதுடன், நாட்டின் சகல பிரஜைகளினதும் சிவில் உரிமைகளை உறுதிசெய்வதாக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் தற்போது அந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்கான பதிலீடாகவே பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம் முன்மொழியப்பட்டுள்ளது.

1979ஆம் ஆண்டு ஒரு 'தற்காலிக' ஏற்பாடாகக் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத்தடைச்சட்டம், சிறுபான்மையின தமிழ், முஸ்லிம் சமூகங்கள், ஊடகவியலாளர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை இலக்குவைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டு, கடந்த 46 ஆண்டுகளாக தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை வேரூன்றச் செய்துள்ளது. இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீள வழங்குவதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனையின் பிரகாரம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்கு அல்லது அதனை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைப்பதற்கு இலங்கை ஒப்புக்கொண்டது. அதனடிப்படையில் 2018 ஆம் ஆண்டிலிருந்து பயங்கரவாதத்தடைச்சட்டத்தை இரத்துச்செய்து, புதிய சட்டத்தைக் கொண்டுவருவதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.

இந்நிலையில் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு கடந்த ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்டு, மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் விமர்சனங்களை அடுத்து மீளப்பெறப்பட்டு, சில திருத்தங்களுடன் தற்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்ந்து பிரயோகிக்கப்பட்டு வருகிறது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பிவைக்கப்பட்ட தரவுகளின்படி பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழான தடுப்புக்காவல் தொடர்பில் 2025 இல் 46 சம்பவங்களும், இவ்வருடத்தின் முதலாம் காலாண்டில் 12 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியில் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலமானது பயங்கரவாதம் எனும் பதத்துக்கான பரந்துபட்ட வரைவிலக்கணத்தைக் கொண்டிருப்பதுடன் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமை என்பவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அபாயத்தையும் கொண்டிருக்கிறது. குறிப்பாக பயங்கரவாதம் என்பதற்கான வரைவிலக்கணத்துக்குள் 'ஒரு அரசாங்கத்தையோ அல்லது ஒரு சர்வதேச அமைப்பையோ ஏதேனுமொரு செயலைச் செய்வதற்கோ அல்லது செய்வதிலிருந்து விலகி இருப்பதற்கோ தேவையின்றி வற்புறுத்துவது' என்ற விடயம் சிக்கலுக்குரிய விதத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட முன்னைய வரைவுகளைப் போன்றே இச்சட்டமூலத்திலும் நியாயமான சந்தேகத்தின்பேரிலும், பிடியாணை இன்றியும் ஒருவரை நிறுத்துவதற்கும், சோதனை செய்வதற்கும், விசாரிப்பதற்கும், தேடுதல் மேற்கொள்வதற்கும், எந்தவொரு இடத்துக்குள் நுழைவதற்கும், சந்தேகநபர்களைத் தடுப்புக்காவலின்கீழ் கொண்டுவருவதற்குமான மட்டுமீறிய அதிகாரங்கள் ஆயுதப்படைகள் மற்றும் கரையோரக் காவல் படைக்கு வழங்கப்பட்டுள்ளமை தீவிர கரிசனைக்குரிய விடயமாகும்.

இந்நிலையில் தற்போது முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக முழுமையாகத் திருத்தியமைக்கப்படும் வரை அல்லது புதிய சட்டமூலமொன்று தயாரிக்கப்படும் வரை, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பிரயோகம் உடனடியாக இடைநிறுத்தப்படவேண்டும் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



உள்ளகப் பொறிமுறையில் இதுவரை தீர்வு இல்லை!
[Tuesday 2026-11-24 07:00]

சர்வதேச அரங்கில் தொடர்ச்சியாக கேள்விக்குள்ளாக்கப்படும் இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு விசேட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். வெளிவிவகாரத்துறை அமைச்சர் சர்வதேச அரங்குக்கு சென்று 'உள்ளக பொறிமுறை ஊடாக தீர்வு' என்று குறிப்பிடுகிறார். ஆனால் இலங்கையில் உள்ளக பொறிமுறைக்கான முன்னேற்றகரமான எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட தரப்பும் உள்ளக பொறிமுறையை ஏற்கவில்லை.இதன் தாக்கத்தை அரசாங்கம் எதிர்கொள்ள நேரிடும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.



ஜி.எஸ்.பி வரிச்சலுகை 2028 ஆம் ஆண்டுவரை கிடைக்கும்!
[Tuesday 2026-11-24 07:00]

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி வரிச்சலுகை இலங்கைக்கு 2028 ஆம் ஆண்டுவரை கிடைக்கப்பெறும். நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டத்தைக் காட்டிலும் பலவீனமான அம்சங்களை உள்ளடக்கிய வகையில் தான் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தால் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. என வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.



மாவீரர்களுக்கு சபையில் அஞ்சலி!
[Tuesday 2026-11-24 07:00]

மாவீரர் வாரத்தில் எமது இனத்துக்காக குரல் கொடுத்து உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். எமது மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கமாவது தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்தார்.



ஜிஎஸ்பி வரிச் சலுகை இழக்கப்படும் ஆபத்து!
[Tuesday 2026-11-24 07:00]

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக அதைவிட ஆபத்தான புதிய சட்டத்தைக் கொண்டு வராமல், அதனை முழுமையாக நீக்க அல்லது செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். ஜி.எஸ்.பி வரிச்சலுகை இழக்கப்பட்டால், இலங்கையின் 14 பில்லியன் டொலர் ஏற்றுமதியில் 35 சதவீத பங்கைக் கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதி வரி 10 சதவீதத்தில் இருந்து 24 சதவீத வரி உயர்வடையக் கூடும் அபாயம் ஏற்படும் என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.



வடக்கு, கிழக்கு, ஊவா மாகாணங்களில் மழை பெய்யும்!
[Tuesday 2026-11-24 07:00]

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.



அனைத்து பல்கலைக்கழகங்களிலும் 25 ஆம் திகதி அடையாள வேலைநிறுத்தம்!
[Tuesday 2026-11-24 07:00]

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் எதிர்வரும் 25 ஆம் திகதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழகத் தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு அறிவித்துள்ளது.



முட்டை விலையைக் கட்டுப்படுத்தவும் இறைச்சி விலையை குறைக்கவும் இணக்கம்!
[Tuesday 2026-11-24 07:00]

பண்டிகைக் காலத்தில் முட்டை விலையை அதிகரிக்காமல் பேணுவதற்கு உற்பத்தியாளர் சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதுடன், கோழி இறைச்சியின் விலையைக் குறைக்கவும் உற்பத்தியாளர்கள் உறுதியளித்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.



பலாலி வந்த விமானம் தரையிறங்க முடியாமல் சென்னை திரும்பியது!
[Monday 2026-11-23 18:00]

சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் வந்த விமானம், யாழ்ப்பாணத்தில் நிலவிய மோசமான வானிலை காரணமாக மீண்டும் சென்னைக்கு திரும்பியுள்ளது.



பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தினால் நாடாளுமன்றில் வாக்குவாதம்!
[Monday 2026-11-23 18:00]

முன்மொழியப்பட்டுள்ள 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்' தொடர்பில் பரவலான பொதுமக்கள் கலந்தாலோசனைகள் முன்னெடுக்கப்படும் வரை இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படக் கூடாது என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியதையடுத்து, நாடாளுமன்றத்தில் இன்று பதற்றமான சூழல் ஏற்பட்டது.



பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!
[Monday 2026-11-23 18:00]

மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு ரி-56 ரக துப்பாக்கியால் சுட்டு ஐவரைக் கொலை செய்த சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளர்கள் இருவர் உள்ளடங்கலாக மூவரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 7ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இன்று (23) உத்தரவிட்டுள்ளார்.



முதன்மை பணவீக்கம் 8.5 வீதமாக அதிகரிப்பு!
[Monday 2026-11-23 18:00]

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் கடந்த ஒக்டோபர் மாதத்தில் 8.5 ஆக அதிகரித்துள்ளது. சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் இன்று (23) வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.



அமெரிக்காவுக்கு அருணி ரணராஜா- கனடாவுக்கு ரோஹன அம்பகொல்ல!
[Monday 2026-11-23 18:00]

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.



தாயின் தாலிக்கொடியை திருடி அடகுவைத்து 14இலட்சம் ரூபாவை காதலனுக்கு கொடுத்த யுவதி கைது!
[Monday 2026-11-23 18:00]

மட்டக்களப்பில் காதலனுக்காகத் தனது தாயின் எட்டரைப் பவுன் தாலிக்கொடியைத் திருடி, அடகு வைத்து ரூ. 14 இலட்சம் பணத்தை வழங்கிய பின்னர், உறவுக்காரப் பெண் திருடியதாகக் கைது செய்ய வைத்து நாடகமாடிய தனியார் வங்கி ஊழியரான 22 வயது யுவதி, நான்கு மாதங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



யோசித, கரன்னகொட குற்றச்சாட்டுகளை மறுப்பு!
[Monday 2026-11-23 18:00]

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளுக்குத் தாம் நிரபராதிகள் என யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோர் இன்று (23) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.



96 ஏகே ரவைகள், துப்பாக்கியுடன் இருவர் கைது!
[Monday 2026-11-23 18:00]

ஏகே 47 துப்பாக்கி ரவைகள் மற்றும் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை உடைமையில் வைத்திருந்த இரண்டு பேர் கொடிகாமம் மிருசுவில் பகுதியில் நேற்று (22) கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.



கட்டுப்பாட்டை இழந்த கார் - மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகளை மோதியது!
[Monday 2026-11-23 18:00]

யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது மோதியதில் பல மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் சேதமடைந்துள்ளன.



மல்லாகத்தில் 2.71 ஏக்கர் காணியை விடுவிக்கும் ஆவணம் கையளிப்பு!
[Monday 2026-11-23 18:00]

தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மல்லாகம் கோணப்புலம் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான 2.71 ஏக்கர் காணியை உத்தியோகபூர்வமாக விடுவிப்பதற்கான ஆவணம், பலாலி பாதுகாப்புப் படைகளின் சிவில் விவகாரங்களுக்கான சிரேஷ்ட அதிகாரி கேணல் WMAM நிசங்கவினால் , யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் இன்று யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.



கிளிநொச்சியில் மாவீரர் வளைவு அமைக்கச் சென்றவர்கள் கைது!
[Monday 2026-11-23 06:00]

கிளிநொச்சி - டிப்போ சந்தியில் மாவீரர் நினைவு வளைவு அமைக்கும் பணியில் ஈடுபடுவதற்காகச் சென்ற பலர் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்களும், கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களும் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.



கோப்பாயில் மாவீரர் நினைவாலயம்!
[Monday 2026-11-23 06:00]

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.



திருகோணமலையில் ரயில் மோதி இருவர் பலி!
[Monday 2026-11-23 06:00]

திருகோணமலை, மீன்பிடித் துறைமுகத்திற்கு அருகில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இரண்டு நபர்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா