Untitled Document
November 4, 2026 [GMT]
மேய்ச்சல் தரை விவகாரம் குறித்து சந்திரசேகரின் கருத்துக்கு சிவில் சமூகம் கண்டனம்!
[Wednesday 2026-11-04 06:00]


மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் நிலப் பிரச்சினைக்குத் தீர்வு கோரியும், நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியும் 2026 நவம்பர் 2ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்பாக, அமைச்சர் சந்திரசேகரன் நேற்று நாடாளுமன்றத்தில் வெளியிட்ட கருத்துக்களை கிழக்கு மாகாண சிவில் சமூக செயல்பாட்டாளர்கள் ஒன்றியம் வன்மையாகக் கண்டித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் நிலப் பிரச்சினைக்குத் தீர்வு கோரியும், நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியும் 2026 நவம்பர் 2ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்பாக, அமைச்சர் சந்திரசேகரன் நேற்று நாடாளுமன்றத்தில் வெளியிட்ட கருத்துக்களை கிழக்கு மாகாண சிவில் சமூக செயல்பாட்டாளர்கள் ஒன்றியம் வன்மையாகக் கண்டித்துள்ளது.

  

குறித்த போராட்டத்தை வடக்கு–கிழக்கைச் சேர்ந்த தோற்றுப்போன, கேடுகெட்ட, சுத்துமாத்து அரசியல்வாதிகள் முன்னெடுத்ததாகவும், அதனை அரசியல் நோக்கங்களுடன் தொடர்புபடுத்தியும் அமைச்சர் கருத்து வெளியிட்டிருப்பது, போராட்டத்தை ஏற்பாடு செய்த சிவில் சமூக அமைப்புகளின் பங்களிப்பையும், அதில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான மக்களின் உணர்வுகளையும் கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளதாக சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பில் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்தப் போராட்டம் எந்தவொரு அரசியல் கட்சியினாலோ அல்லது அரசியல்வாதிகளினாலோ ஏற்பாடு செய்யப்பட்டதல்ல. கிழக்கு மாகாண சிவில் சமூக செயல்பாட்டாளர்கள் ஒன்றியத்தின் அழைப்பின் பேரில் 14 சிவில் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து திட்டமிட்டு, ஏற்பாடு செய்து முன்னெடுத்த மக்கள் போராட்டமாகும்.

இப்போராட்டத்திற்கு அரசியல் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும், விவசாய அமைப்புகளுக்கும், கால்நடை வளர்ப்பாளர் அமைப்புகளுக்கும், மீனவர் சங்க அமைப்புக்களும், மதத் தலைவர்களுக்கும், சமூக அமைப்புகளுக்கும், ஊடகவியலாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் திறந்த அழைப்பு விடுக்கப்பட்டது. அதன் அடிப்படையிலேயே பல்வேறு இன, மத, மொழி மற்றும் சமூகப் பின்னணிகளைக் கொண்ட மக்கள் இதில் பங்கேற்றனர்.

இது இன, மத வேறுபாடுகளைக் கடந்த மக்கள் போராட்டம்!

நவம்பர் 2ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெற்ற இப்போராட்டத்தில் தமிழ், முஸ்லிம், சிங்களம் என அனைத்து இன மக்களும், பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்களும், சமூக அமைப்புகளும், மதத் தலைவர்களும், விவசாயிகளும், பொதுமக்களும் ஒன்றிணைந்து பங்கேற்றமை மிக முக்கியமான சிறப்பம்சம்மாகும்.

இன, மத, மொழி மற்றும் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, ஒரு பொதுவான நீதிக் கோரிக்கையின் அடிப்படையில் மக்கள் ஒன்றிணைந்தனர். இது ஒரு குறிப்பிட்ட இனத்திற்கோ, மதத்திற்கோ அல்லது அரசியல் தரப்பிற்கோ உரிய போராட்டம் அல்ல. அனைத்து மக்களினதும் உரிமைகள், வாழ்வாதாரம், சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதியை வலியுறுத்திய ஒரு மக்கள் போராட்டமாகும்.

இத்தகைய பரந்துபட்ட மக்கள் பங்கேற்பைச் சாத்தியமாக்கியது சிவில் சமூகத்தின் சுயாதீனமான ஒருங்கிணைப்பும், அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையுமேயாகும். அரசியல் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் மக்களை ஒன்றிணைத்து, பல்வேறு சமூகங்களுக்கிடையே பொதுவான பிரச்சினைகள் தொடர்பாக ஒற்றுமையையும் கூட்டுச் செயற்பாட்டையும் உருவாக்குவதில் சிவில் சமூகத்தின் முக்கியத்துவத்தை இந்தப் போராட்டம் வெளிப்படுத்தியுள்ளது.

சிவில் சமூகத்தின் பலம் என்பது ஒரு குறிப்பிட்ட அரசியல் தரப்பையோ அல்லது இனத்தையோ பிரதிநிதித்துவப்படுத்துவதில் இல்லை. மாறாக, அனைத்து மக்களையும் நீதிக்காகவும் பொதுநலனுக்காகவும் ஒன்றிணைப்பதிலேயே உள்ளது. நவம்பர் 2ஆம் திகதி நடைபெற்ற போராட்டம் இதற்கான ஒரு தெளிவான எடுத்துக்காட்டாகும்.

எனவே, இவ்வாறான ஒரு பன்மைத்துவ மக்கள் போராட்டத்தை அரசியல் கட்சிகளின் போராட்டமாகவோ அல்லது இனவாதப் போராட்டமாகவோ சித்தரிப்பது, அதில் பங்கேற்ற பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்களின் உண்மையான பங்களிப்பையும் ஒற்றுமையையும் மறுதலிப்பதாகும்.

போராட்டத்தின் அடிப்படை மற்றும் உண்மையான நோக்கங்கள்

1. மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் நிலங்களைப் பாதுகாத்தல்.

2. நீதிமன்றத் தீர்ப்பை உடனடியாக நடைமுறைப்படுத்தக் கோருதல்.

3. கால்நடை வளர்ப்பாளர்களின் வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாத்தல்.

4. கால்நடைகள் மீதான தாக்குதல்களையும் பண்ணையாளர்கள் மீதான அச்சுறுத்தல்களையும் நிறுத்துதல்.

5. கிழக்கு மாகாணத்தின் மேய்ச்சல் நிலங்களைப் பாதுகாப்பதற்கான சட்டரீதியான நடவடிக்கைகளை உறுதிப்படுத்துதல்.

இவை எந்தவொரு இனத்திற்கோ, மதத்திற்கோ அல்லது சமூகத்திற்கோ எதிரான கோரிக்கைகள் அல்ல. இவை சட்டத்தின் ஆட்சி, நீதிக்கான உரிமை, வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட பொதுமக்களின் நியாயமான கோரிக்கைகளாகும்.

ஒரு பொறுப்புவாய்ந்த அமைச்சராக, மக்கள் மத்தியில் எழுந்துள்ள பிரச்சினைகளையும் அவற்றுக்காக சிவில் சமூக அமைப்புகள் முன்னெடுக்கும் ஜனநாயக ரீதியான போராட்டங்களையும் மதித்து அணுக வேண்டியது அவசியமாகும். மாறாக, இத்தகைய மக்கள் போராட்டங்களுக்கு அரசியல் சாயம் பூசி, அவற்றின் உண்மையான நோக்கத்தைத் திசைதிருப்புவது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

குறிப்பாக, மயிலத்தமடு–மாதவனைப் பிரச்சினை நீண்டகாலமாகத் தீர்வின்றித் தொடர்கின்ற நிலையில், அதற்கான நீதியான தீர்வை வலியுறுத்தி பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து குரலெழுப்பியிருப்பதை அரசியல் நோக்கத்துடன் சித்தரிப்பது, சமூகங்களுக்கு இடையிலான நம்பிக்கையையும் நல்லிணக்கத்தையும் பாதிக்கக்கூடியதாகும்.

மேலும், இந்தப் போராட்டத்தை இனவாதப் போராட்டமாகச் சித்தரிப்பதற்கான எந்தவொரு முயற்சியையும் நாம் நிராகரிக்கின்றோம். மேய்ச்சல் நிலப் பாதுகாப்பு, கால்நடை வளர்ப்பாளர்களின் உரிமைகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துதல் ஆகியவை இனவாதக் கோரிக்கைகள் அல்ல. அவை சட்டத்தையும் நீதியையும் மதிக்கும் எந்தவொரு குடிமகனும் ஆதரிக்கக்கூடிய பொதுவான உரிமைக் கோரிக்கைகளாகும்.

எனவே, அமைச்சர் சந்திரசேகரன் அவர்களே!

• நவம்பர் 2ஆம் திகதி நடைபெற்ற மக்கள் போராட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் வெளியிட்ட கருத்துக்களை மீளாய்வு செய்து, அவற்றை உடனடியாக மீளப்பெற வேண்டும்.

• 14 சிவில் சமூக அமைப்புகள் இணைந்து முன்னெடுத்த மக்கள் போராட்டத்தின் உண்மையான ஏற்பாட்டாளர்களையும் அதன் நோக்கங்களையும் பகிரங்கமாக அங்கீகரிக்க வேண்டும்.

• சிவில் சமூக அமைப்புகளின் சுயாதீனமான செயற்பாடுகளையும் மக்களின் ஜனநாயகப் போராட்ட உரிமையையும் மதித்து நடக்க வேண்டும்.

• மயிலத்தமடு–மாதவனைப் பிரச்சினைக்கு அரசியல் சாயமின்றி, சட்டத்தின் அடிப்படையில் உடனடித் தீர்வை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எமது நிலைப்பாடு தெளிவானது!

சிவில் சமூகத்தின் குரலை அரசியல் குரலாக மாற்றிவிட முடியாது. மக்களின் நியாயமான கோரிக்கைகளை இனவாதக் கோரிக்கைகளாகச் சித்தரித்துவிட முடியாது. 14 சிவில் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து முன்னெடுத்த மக்கள் போராட்டத்தை எந்தவொரு அரசியல் அடையாளத்திற்குள்ளும் முடக்கிவிட முடியாது.

தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஒன்றிணைந்து பங்கேற்ற இந்தப் போராட்டம், இனங்களுக்கிடையிலான ஒற்றுமைக்கும் சிவில் சமூகத்தின் சுயாதீனமான மக்கள் ஒருங்கிணைப்புக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

அமைச்சரின் நாடாளுமன்றக் கருத்து, சிவில் சமூகத்தின் இத்தகைய ஜனநாயகப் பங்களிப்பைக் கொச்சைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளமையால் அதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

மக்களின் உரிமைகளுக்காகவும், நீதிக்காகவும், வாழ்வாதாரப் பாதுகாப்பிற்காகவும் எமது சிவில் சமூகப் பணிகள் தொடரும்.

அருட்தந்தை ம.லூக்ஜோன்

ஒருங்கிணைப்பாளர்

கிழக்கு மாகாண சிவில் சமூக செயல்பாட்டாளர்கள் ஒன்றியம்

நவம்பர் 2 மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரைக்கான மக்கள் பேரெழுச்சி

  
   Bookmark and Share Seithy.com



மயிலத்தமடு- மாதவனை மேய்ச்சல் தரை விவகாரத்துக்கு இனவாத சாயம் பூச முயற்சி!
[Wednesday 2026-11-04 06:00]

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம் இனவாத பிரச்சினையல்ல. வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் மற்றும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பண்ணையாளர்களுடன் தொடர்புடைய பிரச்சினையாகும்.இதற்கு இனவாத சாயம் பூச முயற்சிப்பது தவறான செயற்பாடாகும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.



சிவாஜிலிங்கம் தீவிர சிகிச்சைப் பிரிவில்!
[Wednesday 2026-11-04 06:00]

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகரசபை தலைவருமான எம்.கே. சிவாஜிலிங்கம், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



விவசாயம் செய்யப்படாத காணிகள் மீளப் பெறப்படும்!
[Wednesday 2026-11-04 06:00]

விவசாய நடவடிக்கைகளுக்காக குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டு ஆனால் உரிய நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படாத காணிகளை மீள அரசாங்கத்திற்கு பொறுப்பேற்று அவற்றை பயனுள்ள விவசாய திட்டங்களுக்கு பயன்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு விவசாய கால்நடை காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே. டி. லால்காந்த அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.



கார் வாங்கிய பணம் கிடைத்த வழியை வெளிப்படுத்த முடியாத பெண் பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்!
[Wednesday 2026-11-04 06:00]

வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்காகப் பணம் முதலீடு செய்யப்பட்டமை தொடர்பில் எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில், பணம் தூயதாக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கொட்டாவில பொலிஸ் நிலையத்தின் நிர்வாகப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதான பொலிஸ் பரிசோதகர் வருணி கேஷலா போகவத்த உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை பிரதான நீதவான் சதுர திஸாநாயக்க நேற்று மாலை உத்தரவிட்டுள்ளார்.



TIN இலக்கம் இல்லாதவர்களுக்கு விசேட சலுகை!
[Wednesday 2026-11-04 06:00]

TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள நெரிசலைக் குறைக்கும் நோக்கில், TIN இலக்கம் இல்லாதவர்களுக்கு விசேட சலுகை இலக்கம் இல்லாதவர்களும் வங்கிக் கணக்குகளைத் திறக்கவும் வாகன வருமான உரிமங்களைப் புதுப்பிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



இரண்டு வகை இறக்குமதி அரிசிகளுக்கான 65 ரூபா விசேட பண்டங்கள் வரி நீக்கம்!
[Wednesday 2026-11-04 06:00]

இரண்டு வகை இறக்குமதி அரிசிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கிலோகிராமுக்கு 65 ரூபாய் விசேட பண்டங்கள் வரியை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.



தனியார் தொலைக்காட்சிக்கு 10 கோடி ரூா அரசாங்கப் பணம்!
[Wednesday 2026-11-04 06:00]

சுற்றுலா மேம்பாட்டிற்காக எனக் கூறி 10 கோடி ரூபாய் அரசாங்கப் பணத்தை நாட்டின் தனியார் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்று நடத்தும் மாநாடு ஒன்றுக்கு வழங்கியமை குறித்து உரிய விசாரணை நடத்துமாறு கோரி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.



இம்மாதம் 3 எரிவாயு கப்பல்கள் வரும்!
[Wednesday 2026-11-04 06:00]

2026 நவம்பர் மாதத்திற்குள் நாட்டுக்கு 3 சமையல் எரிவாயு கப்பல்களைக் கொண்டு வருவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.



2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்குள் புதிதாக 487 எச்.ஐ.வி தொற்றாளர்கள்!
[Wednesday 2026-11-04 06:00]

2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்குள் இலங்கையில் புதிதாக 487 எச்.ஐ.வி தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன் இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் கணிசமான அதிகரிப்பாகும் என தெரியவந்துள்ளது.



கறுப்பு ஜூலை குறித்து விசாரிக்கும் தெரிவுக்குழு அமைக்குமாறு பிரேரணை!
[Tuesday 2026-11-03 15:00]

இலங்கையின் மூன்று தசாப்த கால உள்நாட்டு யுத்தத்திற்கு உடனடிக் காரணமாக அமைந்ததாகப் பரவலாகக் கருதப்படும் 1983 ஆம் ஆண்டின் இனக் கலவரம் தொடர்பில் பாராளுமன்ற விசாரணையைக் கோரி, அரச பாராளுமன்ற உறுப்பினர்கள் 50 பேர் பிரேரணையொன்றைச் சமர்ப்பித்துள்ளனர்.



நாடாளுமன்றத்தில் குழப்ப நிலை!
[Tuesday 2026-11-03 15:00]

சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாதமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (03) நாடாளுமன்றத்தில் சிறப்புரிமைப் பிரச்சினைகளை எழுப்பினர்.



திருகோணமலை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் கடற்படைச் சிப்பாய்!
[Tuesday 2026-11-03 15:00]

திருகோணமலை, கப்பல்துறை பகுதியில் முச்சக்கரவண்டியொன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் கடற்படைச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.



கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற ஆசனங்கள் 19 ஆக அதிகரிப்பு!
[Tuesday 2026-11-03 15:00]

கொழும்பு மாவட்டத்திற்கான பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 18 இலிருந்து 19 ஆக உயர்த்தப்பட்டுள்ளதுடன், பதுளை மாவட்டத்திற்கான ஆசன ஒதுக்கீடு ஒன்பதிலிருந்து எட்டாகக் குறைக்கப்பட்டுள்ளது எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.



'க்ரிஷ்' பணப்பரிமாற்ற வழக்கில் நாமலுக்குப் பிணை!
[Tuesday 2026-11-03 15:00]

சர்ச்சைக்குரிய 'க்ரிஷ்' பணப்பரிமாற்றம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.



பூநகரியில் வீதியில் கிடந்த 14 கிலோ ஹெரோயின், ஐஸ்!
[Tuesday 2026-11-03 15:00]

யாழ்ப்பாணம் – மன்னார் பிரதான வீதியில் பூநகரி பாடசாலைக்கு அருகில் கைவிடப்பட்டிருந்த பொதியொன்றிலிருந்து 13 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஒரு கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு சட்டமூலத்திற்கு எதிராக 20 மனுக்கள்!
[Tuesday 2026-11-03 15:00]

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு சட்டமூலத்திற்கு சவால் விடுத்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 20 மனுக்களின் பிரதிகள் தனக்கு கிடைத்துள்ளதாக பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.



யோஷித மீது திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை தாக்கல்- பாட்டி விடுவிப்பு!
[Tuesday 2026-11-03 15:00]

மூல ஆதாரம் கண்டறியப்படாத 59 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வைப்பீடுகள் தொடர்பில் தொடரப்பட்ட பணமோசடி வழக்கிலிருந்து டெய்சி ஃபொரெஸ்ட்டை விடுவித்து மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி உத்தரவிட்டுள்ளார்.



மாங்குளம் - ஒட்டுசுட்டான் வீதியில் கார் விபத்து- மூவர் காயம்!
[Tuesday 2026-11-03 15:00]

மாங்குளம் - ஒட்டுசுட்டான் வீதியின் 15ஆம் கட்டைப்பகுதியில் கார் ஒன்று பாலத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



திருகோணமலையில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி!
[Tuesday 2026-11-03 07:00]

திருகோணமலை, சீன துறைமுகப் பகுதிக்குட்பட்ட கப்பல்துறை வீதியில் பயணித்த முச்சக்கர வண்டியொன்றின் மீது நேற்று இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுபவர்களை அடக்குவதற்கே புதிய சட்டம்!
[Tuesday 2026-11-03 07:00]

அரசாங்கம் பயங்கவாத தடைச்சட்டத்தை இல்லாமலாக்குவதாக தெரிவித்து, அந்த சட்டத்தில் இருக்கும் அனைத்து விடயங்களையும் பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்பான சட்டமூலத்தில் சேர்த்திருக்கின்றன. அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுபவர்களை அடக்குவதற்கே அரசாங்கம் இவ்வாறு நடவடிக்கை எடுத்திருக்கிறது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.


Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா