Untitled Document
November 5, 2026 [GMT]
189 கிலோ ஹெரோய்ன், ஐசுடன் சிக்கியது படகு!
[Thursday 2026-11-05 18:00]

தென் கடலுக்கு அப்பால் சர்வதேச கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, சுமார் 4.2 பில்லியன் ரூபாவிற்கும் அதிக மதிப்புடைய போதைப்பொருட்களைக் கடத்திச் சென்ற பன்னாட்டு மீன்பிடிப் படகொன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

தென் கடலுக்கு அப்பால் சர்வதேச கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, சுமார் 4.2 பில்லியன் ரூபாவிற்கும் அதிக மதிப்புடைய போதைப்பொருட்களைக் கடத்திச் சென்ற பன்னாட்டு மீன்பிடிப் படகொன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

  

ஆழ்கடலில் வைத்து கடற்படையினரால் இடைமறிக்கப்பட்ட குறித்த படகிலிருந்து சுமார் 189.246 கிலோகிராம் எடையுள்ள போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் 132.026 கிலோகிராம் ஐஸ் (Crystal Methamphetamine) போதைப்பொருளும், 57.220 கிலோகிராம் ஹெரோயினும் அடங்குகின்றன.

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இப் படகு இன்று (05) காலை திக்கோவிற்ற மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், படகிலிருந்த 10 உரமூடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்கள் அதிகாரிகளால் விரிவாகச் சோதனையிடப்பட்டன.

மீட்கப்பட்ட போதைப்பொருட்களின் சந்தைப் பெறுமதி 4.2 பில்லியன் ரூபாய்க்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

  
   Bookmark and Share Seithy.com



வடக்கு, கிழக்கு, மலையக மக்களின் பிரதிநிதிகளுடன் சஜித் கலந்துரையாடல்!
[Thursday 2026-11-05 18:00]

வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று இன்று வியாழக்கிழமை (5) பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.



மாவீரர்களுக்கு நாடாளுமன்றில் அஞ்சலி செலுத்திய ரவிகரன்!
[Thursday 2026-11-05 18:00]

மாவீரர்களுக்கு சபையில் அஞ்சலி செலுத்திய ரவிகரன் எம்.பி துயிலும் இல்லங்களை விடுவிப்பதற்கும், மீளநிர்மாணிக்கவும் அரசு ஒத்துழைக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.



தடுத்து வைக்கும் காலத்தை 48 மணித்தியாலமாகக் குறைப்பதற்குத் தயார்!
[Thursday 2026-11-05 18:00]

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சந்தேகநபர்களைத் தடுத்து வைக்கும் காலத்தை 72 மணித்தியாலத்திலிருந்து 48 மணித்தியாலமாகக் குறைப்பதற்குத் தாம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.



முள்ளியவளை துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் ஆரம்பம்!
[Thursday 2026-11-05 18:00]

தாயகத்தின் விடுதலைக்காகத் தங்களது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் தேசிய மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள், வழக்கம்போல இவ்வாண்டும் நவம்பர் 27ஆம் திகதி தமிழர் தாயகப் பகுதிகள் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்களால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளன.



மின் கட்டண உயர்வு கோரிக்கை வாபஸ்!
[Thursday 2026-11-05 18:00]

ஒக்டோபர் - டிசம்பர் காலாண்டிற்கான மின்சாரக் கட்டண உயர்வை தேசிய அமைப்பு அமைப்பாளர் (NSO) திரும்பப் பெற்றுள்ளது. நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ளமை மற்றும் சாதகமான மழைவீழ்ச்சி முன்னறிவிப்புகளை சுட்டிக்காட்டி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



தேசிய வறுமைக்கோட்டு எல்லை ரூ. 17,742 ஆக உயர்வு!
[Thursday 2026-11-05 18:00]

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட புதிய தரவுகளின்படி, 2026 செப்டம்பர் மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ தேசிய வறுமைக்கோடு நபர் ஒருவருக்கு மாதத்திற்கு ரூ. 17,742 ஆக உயர்ந்துள்ளது.



காணாமல் போன் முல்லைத்தீவு மீனவர்கள் ஆழ்கடலில் இருப்பதாக தகவல்!
[Thursday 2026-11-05 18:00]

முல்லைத்தீவு அம்பலவன் பொக்கணை பிரதேசத்திலிருந்து கடலுக்குச் சென்று காணாமல்போன 3 மீனவர்கள் தொடர்பாகக் கிடைத்துள்ள தற்போதைய தகவல்களின் அடிப்படையில், குறித்த மீனவர்கள் கடல் நீரோட்டம் மற்றும் பலத்த காற்றினால் அடித்துச் செல்லப்பட்டு ஆழ்கடல் பகுதிக்குச் சென்றுள்ளதாகவும், அங்கு ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீன்பிடிப் படகுகளுடன் இணைந்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.



ரின் இலக்கத்தை அவசியமாக்கும் நடைமுறை- ஏப்ரல் 1 வரை இடைநிறுத்தம்!
[Thursday 2026-11-05 17:00]

குறிப்பிட்ட எட்டு வகையான பரிவர்த்தனைகளுக்கு வரி செலுத்துவோர் அடையாள இலக்க (TIN) சான்றிதழை கட்டாயமாகச் சமர்ப்பிக்க வேண்டிய நடைமுறையை 2027 ஏப்ரல் 01ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளதாக இலங்கையின் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.



9 இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு எதிரான முறைப்பாட்டுத் தரப்பு சாட்சி விசாரணைகள் நிறைவு!
[Thursday 2026-11-05 17:00]

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இராணுவ புலனாய்வுப் பிரிவின் ஒன்பது உறுப்பினர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் முறைப்பாட்டுத் தரப்பு சாட்சி விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.



ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலம் மனித உரிமை மீறல்கள், சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும்!
[Thursday 2026-11-05 06:00]

அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள புதிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலம் மனித உரிமைகளை மீறும் வகையிலும், தன்னிச்சையான தடுப்புக்காவல் மற்றும் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் வகையிலும் அமைந்துள்ளதாக எச்சரித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் நிபுணர்கள், இச்சட்டமூலத்தை தற்போதைய வடிவத்தில் முன்னெடுத்துச் செல்லவேண்டாம் என அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.



கிவில் ஓயா திட்டத்தினால் 13,000 ஏக்கர் காடுகள் அழியும்!
[Thursday 2026-11-05 06:00]

வவுனியா வடக்கில் மனித – யானை மோதல் ஏற்கனவே தீவிரமாகக் காணப்படும் நிலையில், கிவில் ஓயா நீர்ப்பாசனத் திட்டத்தின் ஊடாக சுமார் 13,000 ஏக்கர் வனப்பகுதி அழிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



பெரியமடுவில் யானை தாக்கி ஒருவர் பலி!
[Thursday 2026-11-05 06:00]

வவுனியா, நெடுங்கேணி - பெரியமடுப் பகுதியில் இடம்பெற்ற யானை தாக்குதலில் படுகாயமடைந்த நபர் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் நெடுங்கேணிப் பகுதியைச் சேர்ந்த சி.கரன் (வயது 45) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.



நாகை- காங்கேசன்துறை கப்பல் சேவையில் கட்டணம் குறைப்பு, சிறப்பு சலுகைகள் அறிவிப்பு!
[Thursday 2026-11-05 06:00]

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையே இயக்கப்படும் 'சுபம் பெரி' கப்பல் சேவைக்கான புதிய கட்டணக் குறைப்பு மற்றும் சிறப்புச் சலுகைகள் நவம்பர் மாதத்திற்கென பிரத்தியேகமாக அறிவிக்கப்பட்டுள்ளன.



95 ஒக்டேன் பெற்றோலின் விலையை உயர்த்திய லங்கா ஐ.ஓ.சி, சினோபெக் நிறுவனங்கள்!
[Thursday 2026-11-05 06:00]

லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் நிறுவனங்கள் 95 ஒக்டேன் பெற்றோலின் விலையை நேற்று நள்ளிரவு முதல் லீற்றருக்கு 20 ரூபாவால் அதிகரித்துள்ளன. இதன்படி, 95 ஒக்டேன் பெற்றோலின் புதிய விலை லீற்றருக்கு 515 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.



போதைப்பொருளுடன் சிக்கியது படகு!
[Thursday 2026-11-05 06:00]

இலங்கைக்கு தெற்கே அமைந்துள்ள ஆழ்கடல் பகுதியில், இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போது, போதைப்பொருட்கள் எனச் சந்தேகிக்கப்படும் பொதிகளை ஏற்றிச் சென்ற உள்நாட்டுப் பலநாள் மீன்பிடிப் படகொன்று கைப்பற்றப்பட்டது.



3 புதிய வரிகள், 7 வரி அதிகரிப்புகள்!- ஜனாதிபதிக்கு அஜித் பெரேரா பதிலடி.
[Thursday 2026-11-05 06:00]

2024ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததிலிருந்து தமது அரசாங்கம் எந்தவொரு புதிய வரியையும் அறிமுகப்படுத்தவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ள கருத்து பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் வகையில் அமைந்துள்ளதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா குற்றஞ்சாட்டியுள்ளார்.



தனிநாடு கேட்டு போராடிய இனம் இன்று மாடுமேய்க்க மண் கேட்டு போராடும் நிலையில்!
[Thursday 2026-11-05 06:00]

ஒரு காலத்தில் தனி நாடு கேட்டு போராடிய இனம் இன்று மாட்டை மேய்க்க மண்ணை கேட்டு போராடும் நிலையில் உள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் மண்ணைக் காட்டிக் கொடுக்கும் செயற்பாடுகளை பார்த்து வெட்கப்படுகின்றேன் என யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார்.



மயிலத்தமடுவில் அரசியல் நோக்கத்துக்காக போராட்டம்!
[Thursday 2026-11-05 06:00]

2020 பொதுத்தேர்தலின் போது போனஸ் ஆசனத்தைக் கூட கிழக்கு மாகாணத்திற்கு வழங்காதவர்கள் தற்போது கிழக்கு மாகாணத்திற்கு வந்து போராடுகின்றனர். மயிலத்தமடு, மாதவனை பிரச்சினையில் கடந்த காலங்களில் எந்தவித நிபந்தனைகளையும் இன்றி நல்லாட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கியவர்கள் எங்கே போயிருந்தனர்? எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் இருந்த போது, மாகாண சபையில் அமைச்சர்களாக இருந்த போது ஏன் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவில்லை. அரசியல்நோக்கத்துக்காக இன்று போராடுகிறார்கள். மயிலத்தமடு மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு முரண்பாடற்ற வகையில் தீர்வு பெற்றுக்கொடுப்போம் என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு குறிப்பிட்டார்.



ஊடகவியலாளர்கள் கொலை, தாக்குதல்களுடன் ராஜபக்ஷ குடும்பத்திற்கு தொடர்பு!
[Thursday 2026-11-05 06:00]

வசீம் தாஜுதீன்,பிரகீத் எக்னலிகொட படுகொலை சம்பவங்கள் மற்றும் போத்தல ஜயந்த, கீத்நொயார் மற்றும் உபாலி தென்னக்கோன் ஆகியோர் மீதான கொலை செய்ய முயற்சித்த சம்பவங்களுடன் நாமல் ராஜபக்‌ஷவும், ராஜபக்‌ஷ குடும்பத்தினரும் தொடர்புப்பட்டுள்ளார்கள் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார குற்றஞ்சாட்டினார்.



பயங்கரவாதிகளாக இருந்தவர்கள் ஆட்சிசெய்யும் நாட்டில் பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் எதற்கு?
[Wednesday 2026-11-04 16:00]

பயங்கரவாதிகளாக இருந்தவர்கள் ஆட்சிசெய்யும் நாட்டில் பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் எதற்கு? இந்தச் சட்டம் நிறைவேற்றப் பட்டால், 6 மாதங்களில் கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு ஏற்பட்டதைவிட மோசமான நிலைமையே இந்த அரசாங்கத்துக்கும் ஏற்படுமென புதிய ஜனநாயக முன்னணி எம்.பி. சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.


 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா