Untitled Document
November 7, 2026 [GMT]
அடக்குமுறை கொள்கைகள் காரணமாக ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை இழக்கப்படலாம்!
[Friday 2026-11-06 06:00]


அரசாங்கம் மக்கள் ஆணையைப் பெற்றது அபிவிருத்தியை நடைமுறைப்படுத்தவே அன்றி அடக்குமுறையை நடைமுறைப்படுத்த அல்ல. ஜனநாயக உரிமையை விரிவுபடுத்த அதிகாரம் கிடைத்தபோதிலும் மக்கள் வழங்கிய ஆணையை மீறி அரசாங்கம் ஜனநாயக உரிமையை சீர்குலைக்கும் வகையில் சட்டங்களை இயற்றி வருகிறது. அரசாங்கத்தின் இவ்வாறான அடக்குமுறை கொள்கைகள் காரணமாக ஜீ.எஸ்.பி  + வரிச் சலுகை கூட இழக்க நேரிடலாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அரசாங்கம் மக்கள் ஆணையைப் பெற்றது அபிவிருத்தியை நடைமுறைப்படுத்தவே அன்றி அடக்குமுறையை நடைமுறைப்படுத்த அல்ல. ஜனநாயக உரிமையை விரிவுபடுத்த அதிகாரம் கிடைத்தபோதிலும் மக்கள் வழங்கிய ஆணையை மீறி அரசாங்கம் ஜனநாயக உரிமையை சீர்குலைக்கும் வகையில் சட்டங்களை இயற்றி வருகிறது. அரசாங்கத்தின் இவ்வாறான அடக்குமுறை கொள்கைகள் காரணமாக ஜீ.எஸ்.பி + வரிச் சலுகை கூட இழக்க நேரிடலாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

  

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (5) இடம்பெற்ற நம்பிக்கை பொறுப்புக்கள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் இலங்கை விமானப்படை செயற்பாட்டு நிகழ்ச்சித்திட்டதுக்கான குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் படி வறுமைக் கோடு 17,702 ஆன போதிலும், இத்தரவுகள் தவறானவையாக காணப்படுகின்றன. நாளொன்றுக்கு 2030 கிலோ கலோரிகள் தேவை என்ற அடிப்படையில் வறுமைக் கோடு கணக்கிடப்பட்டாலும், மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தரவுகளின்படி ஆண்களினதும் பெண்களினதும் கிலோ கலோரி அளவு அவர்களின் சுறுசுறுப்பான இயங்குநிலைக்கு ஏற்ப மாறுபடுகின்றன. இதன்படி, சுறுசுறுப்பாக இயங்கும் ஒரு ஆணுக்கு 3340 கிலோ கலோரிகளும், சுறுசுறுப்பான பெண்ணுக்கு 2680 கிலோ கலோரிகளும், குறைந்த இயங்குநிலை கொண்ட பெண்ணுக்கு 1890 கிலோ கலோரிகளும் தேவைப்படுகின்றன.

பொய் தரவுகளின் அடிப்படையில் வறுமைக் கோடு தயாரிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்தே இந்த அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது என்பது புலப்படுகின்றது. அரசாங்கம் பொய் தரவுகளின் அடிப்படையிலேயே செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. வறுமையை ஒழிக்கும் வேலைத்திட்டம் கூட இவ்வாறான பொய்யான தரவுகளின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அரசாங்கம் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் குறித்துப் பேசினாலும், அரசாங்கத்தைப் போல் பொய் சொல்லும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் வேறு யாரும் இல்லை. அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் பொய் சொல்லும் ஒரே ஒழுங்கமைக்கப்பட்ட கும்பலாக இந்த அரசாங்கமே திகழ்ந்து வருகின்றது

பயங்கரவாதத் தடைச்சட்டம் அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை அடக்குவதற்காகவே கொண்டுவரப்படுவதாக எதிர்க்கட்சியில் இருந்த சமயம் அன்றைய பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கூறினார். இன்று விஜித ஹேரத்தின் அரசாங்கமே பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தையும் தாண்டிய அடக்குமுறைச் சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாமல் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் எதிர்ப்புக்கள் எழும்போது இவ்வாறான அடக்குமுறைச் சட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன என்று அன்று விஜித ஹேரத் கூறினார். இருள் அரசாங்கங்கள் குறித்துப் பேசும் அரசாங்கம் இன்று இருள் அரசாங்கத்தையே நடத்தி வருகின்றது என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



கொழும்பில் கொட்டித் தீர்த்த மழை!
[Saturday 2026-11-07 07:00]

இடைக்கால பருவக்காற்று (Inter-monsoon) தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து நேற்று பிற்பகல் வேளையில் நாட்டில் பலத்த மழை பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் நிலைய தரவுகள் தெரிவிக்கின்றன.



நெரிசலால் திணறிய கொழும்பு!
[Saturday 2026-11-07 07:00]

கொழும்பில் நேற்றுமாலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.​கொழும்பில் உள்ள பல வீதிகள் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டதால், குறிப்பிடத்தக்க அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ​



பெருமளவு போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது!
[Saturday 2026-11-07 07:00]

ஹெரோயின், ஐஸ் மற்றும் குஷ் ஆகிய போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று (6) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.



வேலணையில் உருக்குலைந்த நிலையில் இரண்டு சடலங்கள் மீட்பு!
[Friday 2026-11-06 16:00]

யாழ்ப்பாணம்- வேலணை- செட்டிபுலம் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து இரண்டு சடலங்கள் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



அங்கீகாரத்தை இழந்த ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி!
[Friday 2026-11-06 16:00]

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை தற்போது உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியாகக் கருதப்பட முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு அக்கட்சியின் தரப்பினருக்கு அறிவித்துள்ளது.



நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை!
[Friday 2026-11-06 16:00]

நாட்டில் தற்போது எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. சில நிறுவனங்களால் எரிபொருள் விநியோகத்தில் குறைபாடு காணப்படுவதாக அந்த கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ராஜகருணா தெரிவித்தார்.



சாமர சம்பத்தின் விளக்கமறியல் நீடிப்பு!
[Friday 2026-11-06 16:00]

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் ஆகியோரை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (6) உத்தரவிட்டுள்ளது.



பொலிஸ் மா அதிபருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்த நீதிவானுக்கு இடமாற்றம்!
[Friday 2026-11-06 16:00]

நீதிமன்ற உத்தரவை மீறியதாகக் கூறி பொலிஸ் மா அதிபருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரிக்கை விடுத்த கம்பஹா நீதிவான் பண்டுல குணரத்ன, நீதிபதிகள் பயிற்சி நிறுவனத்திற்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.



பிணை நிபந்தனையை பூர்த்தி செய்ய முடியாமல் மீண்டும் சிறைக்கு சென்ற றோகித போகொல்லாகம!
[Friday 2026-11-06 16:00]

ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



வீட்டில் இருந்த பெண் மீது உறவினர் பெற்றோல் ஊற்றி தீவைப்பு- சிகிச்சை பலனின்றி மரணம்.
[Friday 2026-11-06 16:00]

மட்டக்களப்பு, ஆரையம்பதி பகுதியில் வீட்டுக்கு வெளியே கதிரையில் உட்கார்ந்திருந்த பெண் மீது, உறவினர் ஒருவர் பெற்றோல் ஊற்றித் தீ வைத்ததில் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார்.ஆரையம்பதி, பழைய கல்முனை வீதியைச் சேர்ந்த 55 வயதுடைய சின்னத்தம்பி கமலேஸ்வரி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



பெருந்தொகை நிதி மோசடி- இரு வங்கி முகாமையாளர்கள் கைது!
[Friday 2026-11-06 16:00]

இலங்கையின் முன்னணி வங்கிகள் இரண்டில் பெருந்தொகையான நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், இரு வங்கி முகாமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.



பொலிஸாருக்கு வரையறையற்ற அதிகாரம் வழங்கினால் மோசமான விளைவுகளே ஏற்படும்!
[Friday 2026-11-06 06:00]

பொலிஸ் காவலில் மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மோசமான பின்னணியில் பொலிஸாருக்கு அதிக அதிகாரங்களை வழங்குவது பாரதூரமானது. பொலிஸாரின் ஆதரவுடன் சர்வாதிகார அரச நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் தான் அரசாங்கம் செயற்படுகிறது. பொலிஸாருக்கு வரையறையற்ற வகையில் அதிகாரம் வழங்கினால் மோசமான விளைவுகளே ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.



வங்கக் கடலில் உருவாகும் மற்றொரு காற்றழுத்தம்!
[Friday 2026-11-06 06:00]

வங்கக்கடலில் எதிர்வரும் 13- ஆம் திகதி குறைந்த காற்றழுத்த பிரதேசம் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



இன்று பலத்த மழை பெய்யும்!
[Friday 2026-11-06 06:00]

தென் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.



இலங்கையில் இரண்டாவது காலாண்டில் 430,357 டிக்டொக் காணொளிகள் நீக்கம்!
[Friday 2026-11-06 06:00]

சமூக வழிகாட்டுதல்களை மீறிய குற்றச்சாட்டில், 2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இலங்கையில் 430,357 டிக்டொக் காணொளிகள் நீக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஜோர்தானில் இலங்கை தூதரகம் முன் தாக்குதல்- பாதுகாவலர் பலி!
[Friday 2026-11-06 06:00]

ஜோர்தானில் வாழும் இலங்கையர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக ஜோர்தானுக்கான இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது. அம்மான் நகரில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் முன்னால் கூரிய ஆயுத தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.



திங்கட்கிழமை விசேட விடுமுறை!
[Friday 2026-11-06 06:00]

மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் நவம்பர் 09ஆம் திகதி திங்கட்கிழமை தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



ரயில்களில் யானைகள் மோதுவதை தடுக்க திட்டம்!
[Friday 2026-11-06 06:00]

காட்டு யானைகள் ரயில்களில் அடிபட்டு உயிரிழப்பதைத் தடுக்கும் நோக்கில், அமைச்சர்களின் தலைமையில் நடைபெற்ற விசேட மதிப்பாட்டுக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.



ஐஎம்எவ்வை எதிர்த்தவர்கள் அதன் வாலைப் பிடித்து தொங்குகிறார்கள்!
[Friday 2026-11-06 06:00]

சர்வதேச நாணய நிதியம் கூறுவதை செய்யப் போவதில்லை என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இப்போது அதன் வாலை பிடித்து தொங்கிக்கொண்டு அவர்கள் கூறுவதுபடி பாராளுமன்றத்தில் சட்டமூலங்களை கொண்டு வருகின்றனர். நம்பிக்கை பொறுப்புகள் திருத்தச் சட்டமூலமும் நாணய நிதியத்தின் அழுத்தத்தின் மூலமே கொண்டுவரப்பட்டிருக்கிறது என புதிய ஜனநாயக முன்னணி உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.



உயர்நீதிமன்றம் வழங்கும் தீர்மானத்தை செயற்படுத்துவோம்!
[Friday 2026-11-06 06:00]

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் சட்டமூலம் குறித்து உயர்நீதிமன்றம் முன்வைக்கும் யோசனைகளை முறையாக நிறைவேற்றுவோம். நிறைவடைந்துள்ள இரண்டு ஆண்டுகாலப்பகுதியில் 51 சட்டங்களை இயற்றியுள்ளோம். சட்டமியற்றலின்போது உயர்நீதிமன்றத்துக்கு அப்பாற்பட்டு செயற்படவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.


Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா