Untitled Document
November 8, 2026 [GMT]
அமெரிக்க கடற்படை விமானம் கட்டுநாயக்க வந்து சென்றது!
[Sunday 2026-11-08 06:00]


போயிங் (Boeing) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட MV-22B ரக அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான விமானம் நேற்று நண்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

போயிங் (Boeing) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட MV-22B ரக அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான விமானம் நேற்று நண்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

  

இந்த விமானம், இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்கு தெற்கே சுமார் 50 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்டுள்ள அமெரிக்க கடற்படைக் கப்பலில் இருந்து புறப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

அதேவேளை, குறித்த விமானம் நேற்று பிற்பகல் மீண்டும் அமெரிக்க கடற்படைக் கப்பலுக்குத் திரும்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெலிகொப்டராகவும் விமானமாகவும் இருவிதங்களில் செயல்படக்கூடியமை இந்த விமானத்தின் சிறப்பம்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் இறக்கைகளில் பொருத்தப்பட்டுள்ள சுழலும் இறக்கிகள் (Rotors), ஹெலிகொப்டரைப் போன்று மேல்நோக்கி அமைந்திருக்கும். தேவைக்கேற்ப அவற்றை முன்னோக்கித் திருப்பி, சாதாரண விமானத்தைப் போன்று பறக்கவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விமானம் தரையிலிருந்து மேலெழும்புவதற்கு ஓடுபாதை அவசியமில்லை. ஹெலிகொப்டரைப் போன்று ஒரே இடத்திலிருந்து நேரடியாக மேலெழும்பும் திறனைக் கொண்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



செம்மணியில் 17ஆம் திகதி போராட்டத்திற்கு அழைப்பு!
[Sunday 2026-11-08 06:00]

செம்மணி புதைகுழிகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சோமரத்ன ராஜபக்ச தெரிவித்த அதிர்ச்சியளிக்கும் கருத்துக்கள் தொடர்பில், தமிழர்களின் அடுத்தகட்ட தந்திரோபாய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் கலந்துரையாடல் நேற்று நல்லூர் சிவகுரு ஆதீனத்தில் இடம்பெற்றது.



பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை!
[Sunday 2026-11-08 06:00]

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (8) பிற்பகல் ஒரு மணிக்குக்குப் பின்னர் மழை அல்லது இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.



இருளை அகற்றி ஒளியை ஏற்றும் திருநாள்! -ஜனாதிபதி அனுரவின் தீபாவளி வாழ்த்து.
[Sunday 2026-11-08 06:00]

இருளை அகற்றி ஒளியை ஏற்றி வைக்கும் இந்து மக்களின் உன்னதமான சமய விழாவான தீபாவளித் திருநாளை முன்னிட்டு எனது நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.



கொழும்பு வெள்ளத்தைக் கையாள விசேட செயற்பாட்டுக் குழு அமைப்பு!
[Sunday 2026-11-08 06:00]

கொழும்பு நகரில் ஏற்படும் திடீர் வெள்ள அபாயத்தை வினைத்திறனாகவும் துரிதமாகவும் எதிர்கொள்வதற்காக, கொழும்பு மாநகர சபையின் வழிகாட்டலில் முப்படையினர், பொலிஸார் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களை உள்ளடக்கிய விசேட செயற்பாட்டுக் குழுவை உடனடியாக அமைக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.



8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கைகள்!
[Sunday 2026-11-08 06:00]

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற மற்றும் பலத்த மழை காரணமாக, 8 மாவட்டங்களுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.



வருமான வரி வரம்பு தளர்த்தப்படும்!
[Sunday 2026-11-08 06:00]

உழைக்கும்போது செலுத்தும் வரி வரம்பை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தனியார் துறையினரின் அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதற்கு தனியார் துறை தொழில் வழங்குநர்களுடன் கலந்துரையாடி சாதகமான தீர்மானத்தை எட்டியுள்ளோம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.



220 இலட்சம் மக்களும் ஏமாற்றப்பட்டுள்ளனர்!
[Sunday 2026-11-08 06:00]

“ஈராண்டு ஆட்சி நாட்டுக்கு மாட்சி” எனக் கூறிக்கொள்ளும் அரசாங்கத்தின் ஆட்சியில்தான் இன்று முழு கொழும்பும் வெள்ளத்தில் மிதப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.



இரு சட்டமூலங்கள் தொடர்பான ஆளும்கட்சியின் கோரிக்கையை நிராகரித்த எதிர்க்கட்சி!
[Saturday 2026-11-07 21:00]

தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பிரதான பேசுபொருளாக உள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் சட்டமூலம் ஆகிய இரண்டு சட்டமூலங்களையும் வரவு –செலவுத் திட்ட மீதான விவாதம் இடம்பெறும் நாட்களில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்வது தொடர்பில் ஆளும் தரப்பு முன்வைத்த யோசனையை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்துள்ளது.



14 மாவட்டங்களில் அடுத்த சில மணித்தியாலங்களில் கடும் மழை!
[Saturday 2026-11-07 21:00]

அடுத்த சில மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.



வடக்கு, கிழக்கில் திங்கட்கிழமை பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!
[Saturday 2026-11-07 21:00]

வரும் திங்கட்கிழமை (9) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாகாண ஆளுநர்கள் அறிவித்துள்ளனர்.



வரக்காப்பொல விபத்தில் மூவர் பலி- நால்வர் படுகாயம்!
[Saturday 2026-11-07 21:00]

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வரக்காப்பொல, மாஹேன பகுதியில் இன்று (7) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.



கொழும்பு வெள்ளம் - தேரர்களை அவமதித்ததற்கான இயற்கையின் தண்டனை!
[Saturday 2026-11-07 21:00]

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு கோரி கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் மகா சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தையும் உண்ணாவிரதப் போராட்டத்தையும் முன்னெடுத்தபோது அவர்களை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்ட கொழும்பு மாநகர சபையின் மேயருக்கு தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் இயற்கையின் தண்டனையாகும் என பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.



நீராடச் சென்ற 4 பேர் மாயம்!
[Saturday 2026-11-07 21:00]

தெனியாய, பெவரலிய பகுதியில் நீராடச் சென்ற நால்வர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.நுகேகொட பகுதியிலிருந்து சென்ற 7 பேர் கொண்ட குழுவினர், பெவரலிய பகுதியிலுள்ள நீரோடையில் நீராடிக் கொண்டிருந்த போதே இல்லனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்



கொழும்பில் கொட்டித் தீர்த்த மழை!
[Saturday 2026-11-07 07:00]

இடைக்கால பருவக்காற்று (Inter-monsoon) தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து நேற்று பிற்பகல் வேளையில் நாட்டில் பலத்த மழை பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் நிலைய தரவுகள் தெரிவிக்கின்றன.



நெரிசலால் திணறிய கொழும்பு!
[Saturday 2026-11-07 07:00]

கொழும்பில் நேற்றுமாலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.​கொழும்பில் உள்ள பல வீதிகள் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டதால், குறிப்பிடத்தக்க அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ​



பெருமளவு போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது!
[Saturday 2026-11-07 07:00]

ஹெரோயின், ஐஸ் மற்றும் குஷ் ஆகிய போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று (6) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.



வேலணையில் உருக்குலைந்த நிலையில் இரண்டு சடலங்கள் மீட்பு!
[Friday 2026-11-06 16:00]

யாழ்ப்பாணம்- வேலணை- செட்டிபுலம் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து இரண்டு சடலங்கள் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



அங்கீகாரத்தை இழந்த ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி!
[Friday 2026-11-06 16:00]

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை தற்போது உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியாகக் கருதப்பட முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு அக்கட்சியின் தரப்பினருக்கு அறிவித்துள்ளது.



நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை!
[Friday 2026-11-06 16:00]

நாட்டில் தற்போது எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. சில நிறுவனங்களால் எரிபொருள் விநியோகத்தில் குறைபாடு காணப்படுவதாக அந்த கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ராஜகருணா தெரிவித்தார்.



சாமர சம்பத்தின் விளக்கமறியல் நீடிப்பு!
[Friday 2026-11-06 16:00]

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் ஆகியோரை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (6) உத்தரவிட்டுள்ளது.


Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா