Untitled Document
November 13, 2026 [GMT]
கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் துப்புரவுப் பணி ஆரம்பம்!
[Friday 2026-11-13 08:00]


அம்பாறை கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி ஆதரவாளர்கள் துப்பரவு செய்யும் பணியை வியாழக்கிழமை (12) கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் துசாங்கள் உட்பட மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர்.

அம்பாறை கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி ஆதரவாளர்கள் துப்பரவு செய்யும் பணியை வியாழக்கிழமை (12) கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் துசாங்கள் உட்பட மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர்.

  

எதிர்வரும் 27 ம் திகதி மாவீரர் நினைவேந்தல் இடம்பெற உள்ள நிலையில் மாவீர்களின் குடும்பத்தினர் துயிலும் இல்லங்களுக்கு சென்று நினைவேந்தலில் ஈடுபட்டுள்ள நிலையில் அந்த துயிலும் இல்லங்கள் துப்புரவு செய்து அலங்கரிக்கும் ஏற்பாடுகளை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி முன்னெடுத்து வருகின்றனர். இதற்கமைய நவம்பர் மாதம் மாவீரர் மாதமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி அறிவித்து நவம்பர் முதலாம் திகதி மட்டக்களப்பு தரவை, மாவீரர் துயிலும் இல்லத்தை துப்புரவு செய்யும் பணி ஆரம்பித்து மாவீரர் நினைவு தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செய்தி ஆரம்பித்து வைத்தனர்.

இதனை தொடர்ந்து மட்டக்களப்பிலுள்ள மாவடி முன்மாரி, வாகரை கண்டலடி, மாவீரர் துயிலும் இல்லங்களையும் துப்பரவு செய்யும் பணியை முன்னெடுத்து வருவதுடன் அம்பாறை மாவட்டத்தில் கஞ்சிகுடியாறு மாவீரர் துயிலும் இல்லத்தை துப்பரவு செய்யும் பணியை நேற்று ஆரம்பித்து வைத்தனர்.

இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், அம்பாறை மாவட்ட அமைப்பாளர் துஷாங்கன் தலைமையில் மாவீரர்களின் உறவினர்கள் ஒன்றிணைந்து இந்து மாவீரர் துயிலும் இல்லத்தை துப்புரவு பணியை முன்னெடுத்தனர்.

  
   Bookmark and Share Seithy.com



மார்ச் மாதத்துக்கு பின்னர் முரண்பாடுகள் வன்முறையாக மாறும் ஆபத்து!
[Friday 2026-11-13 16:00]

2027 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு பின்னர் அரசாங்கத்துக்கும் அரசாங்க ஆதரவாளர்களுக்கும் இடையில் ஏற்டபோகும் முரண்பாடுகள் வன்முறையாக மாறும் ஆபத்துள்ளதாக மாற்று கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து எச்சரித்துள்ளார்.



கைப்பற்றிய படகில் 110 கிலோ ஹெரோய்ன், ஐஸ் போதைப்பொருள்கள்!
[Friday 2026-11-13 16:00]

தெற்குப் பகுதியிலுள்ள ஆழ்கடலில் கடற்படையினர் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் ஊடாக சுற்றிவளைக்கப்பட்ட மீன்பிடிப் படகில், ஒன்றரை பில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளதாகப் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.



நாமலின் பிணைக்கு எதிரான மனுவின் தீர்ப்பு ஒத்திவைப்பு!
[Friday 2026-11-13 16:00]

சர்ச்சைக்குரிய ‘க்ரிஷ்’ மோசடி தொடர்பான வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட பிணையை இடைநிறுத்தக் கோரிய மனு மீதான தீர்ப்பை எதிர்வரும் நவம்பர் 18ஆம் திகதி வழங்குவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.



மெல்பேர்னுக்கான விமான சேவைகளை அதிகரிக்கிறது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்!
[Friday 2026-11-13 16:00]

இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான பயணிகளின் அதிகரித்து வரும் கேள்வியைக் கருத்திற்கொண்டு, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் எதிர்வரும் நவம்பர் 15ஆம் திகதி முதல் மெல்பேர்னுக்கான தனது வாராந்த விமான சேவைகளை மேலும் மூன்றால் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளது.



கோர விபத்தில் உயிரிழந்த பேருந்து சாரதி போதையில் இருந்தமை அம்பலம்!
[Friday 2026-11-13 16:00]

5 பேரை பலிகொண்டதுடன் மேலும் 76 பேரைப் படுகாயப்படுத்திய அனுராதபுரம் - ரம்பேவ, வெலிஓயா சந்தியில் கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த கெப்பத்திகொல்லாவ டிப்போவைச் சேர்ந்த பேருந்துச் சாரதி, விபத்து நிகழ்ந்த வேளையில் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை மருத்துவ அறிக்கைகள் மூலம் அம்பலமாகியுள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



வரிச் சலுகைகளால் அரசுக்கு ரூ. 461.49 பில்லியன் வருமான இழப்பு!
[Friday 2026-11-13 16:00]

2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வழங்கப்பட்ட பல்வேறு வரிச் சலுகைகள் மற்றும் வரி விலக்குகள் காரணமாக, நான்கு வகையான மறைமுக வரிகளின் ஊடாக அரசுக்கு ரூ. 461.49 பில்லியன் வரி வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது.



தங்கத்தின் விலை வீழ்ச்சி!
[Friday 2026-11-13 16:00]

சர்வதேச சந்தையில் மீண்டும் தங்கத்தின் விலை சரிவடைந்துள்ள நிலையில், உள்நாட்டுச் சந்தையிலும் இன்றைய தினம் (13) ஒரு பவுண் தங்கத்தின் விலை 3,000 ரூபாவால் குறைவடைந்துள்ளது.



வரவு செலவுத் திட்டத்தில் எந்தவொரு தீர்வும் முன்வைக்கப்படவில்லை!
[Friday 2026-11-13 08:00]

நாட்டில் 22 மில்லியன் மக்கள் முகங்கொடுத்துவரும் பாரிய பிரச்சினைகளுக்கு குறித்த வரவு செலவுத் திட்டத்தில் எந்தவொரு தீர்வும் முன்வைக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.



வரவு செலவுத் திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பம்.
[Friday 2026-11-13 08:00]

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2027 நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் நேற்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அது தொடர்பான இரண்டாம் வாசிப்பு விவாதம் இன்று முதல் ஆரம்பமாகிறது.



கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல்!
[Friday 2026-11-13 08:00]

அநுராதபுரம் ருவான்வெலிசாய அருகே நீதிமன்ற உத்தரவுகளைப் புறக்கணித்து சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கஸ்ஸப தேரர் உள்ளிட்ட எழுவரை நவம்பர் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



மழையுடனான வானிலை இன்று தற்காலிகமாக குறையும்!
[Friday 2026-11-13 08:00]

மழையுடனான வானிலை இன்றைய தினம் தற்காலிகமாக குறையும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.



விக்டோரியா நீர்த்தேக்கத்தின் 7 வான்கதவுகள் தானாகத் திறப்பு!
[Friday 2026-11-13 08:00]

மத்திய மலைநாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன், அதன் 7 வான் கதவுகள் தானாகவே திறக்கப்பட்டுள்ளன என விக்டோரியா அணைக்குப் பொறுப்பான பொறியியலாளர் வசந்த அஹலபிட்டிய தெரிவித்துள்ளார்.



மாதம் 162,500 வரையான சம்பளத்திற்கு வரி விலக்கு!
[Friday 2026-11-13 08:00]

உழைக்கும் போது செலுத்தும் வரி வரம்பை 162,500 ரூபாவாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.



பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டம் மூலம் எதேச்சாதிகார ஆட்சியை உருவாக்க முயற்சி!
[Friday 2026-11-13 08:00]

பெலவத்தையில் தயாரிக்கப்பட்டு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம் நாட்டில் எதேச்சாதிகார ஆட்சியொன்றை உருவாக்குவதற்கான முயற்சியாகவே காணப்படுகின்றது. இந்தச் சட்டமூலம் நடைமுறைக்கு வந்தால் மக்களின் எதிர்ப்புப் போராட்டங்கள், பேரணிகள், சத்தியாக்கிரகங்களில் ஈடுபடும் உரிமைகள் பாதிக்கப்படுவதுடன், இலங்கைக்கு கிடைக்கும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையும் இழக்கப்படும் அபாயம் உள்ளதாக பிரீ லேயர்ஸ் அமைப்பின் தலைவரும் சட்டத்தரணியுமான மைத்ரி குணரத்ன குற்றம்சாட்டினார்.



சீனி மீதான வரி 10 ரூபாவினால் அதிகரிப்பு!
[Friday 2026-11-13 08:00]

இறக்குமதி செய்யப்படும் சீனி மீது விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தகப் பண்ட வரியை கிலோகிராம் ஒன்றுக்கு 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது



வவுனியாவில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!
[Friday 2026-11-13 08:00]

வவுனியா வெளிவட்ட வீதியில் ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த இளைஞர் ஒருவர் வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.



பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல் சட்டமூலத்தை திருத்தங்களுடன் நிறைவேற்றலாம்!
[Thursday 2026-11-12 15:00]

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல் சட்டமூலத்தை திருத்தங்களுடன் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என உயர்நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன சபைக்கு அறிவித்தார்.



வரவுசெலவுத் திட்டத்தை முன்வைத்து ஜனாதிபதி உரை!
[Thursday 2026-11-12 15:00]

2027 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தற்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றி வருகிறார்.



எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்- 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
[Thursday 2026-11-12 15:00]

இலங்கையின் இரத்தினபுரி, காலி, கேகாலை, குருநாகல் மற்றும் மாத்தறை ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் எலிக்காய்ச்சல் (Leptospirosis) பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.



அனோஜன் குடும்பத்தினர் ஜனாதிபதியைச் சந்தித்து நன்றி தெரிவிப்பு!
[Thursday 2026-11-12 15:00]

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த அனோஜன் சிவராசாவை சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிப்பதற்குத் தலையிட்டமைக்காக, அவரது குடும்பத்தினர் இன்று (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்துத் தமது நன்றிகளைத் தெரிவித்தனர்.


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா