Untitled Document
November 17, 2026 [GMT]
இலங்கை பொலிஸாருக்கு கனடிய காவல்துறை சீருடையை ஒத்த சீருடை!
[Monday 2026-11-16 17:00]


இலங்கை பொலிஸாருக்காக முன்மொழியப்பட்டுள்ள புதிய சீருடையில், கனேடிய பொலிஸாரின் சீருடையைப் போன்ற சாம்பல் நிறச் சட்டையும் நீல நிறக் கால்சட்டையும் இடம்பெறக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பொலிஸாருக்காக முன்மொழியப்பட்டுள்ள புதிய சீருடையில், கனேடிய பொலிஸாரின் சீருடையைப் போன்ற சாம்பல் நிறச் சட்டையும் நீல நிறக் கால்சட்டையும் இடம்பெறக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  

பொலிஸ்பிரிவு வட்டாரங்களை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள இந்தச் செய்தியின்படி, 2027 ஜூன் மாதம் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள புதிய சீருடைக்கான பல்வேறு வடிவமைப்புகளில் இதுவும் ஒன்றாகப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்தபோது, நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட புதிய பொலிஸ் சீருடையை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அறிவித்திருந்தார்.

இலங்கையின் காலநிலைக்கு ஏற்ற வகையில் இந்தச் சீருடை வடிவமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, தற்போதைய காக்கி நிறச் சீருடை காலனித்துவ காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், அதன் தடிமனான துணி இலங்கையின் வெப்பமான காலநிலைக்கு ஏற்றதாக இல்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



சிவாஜிலிங்கம் உடல் தகனம் - திருமாவளவன் நேரில் அஞ்சலி! Top News
[Monday 2026-11-16 17:00]

மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவருமான எம்.கே. சிவாஜிலிங்கத்தின் உடலுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய பாராளுமன்ற உறுப்பினருமான தொல்காப்பியன் திருமாவளவன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.



3 அரசியல் கட்சிகள் புதிதாக பதிவு!
[Monday 2026-11-16 17:00]

1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 7 (5) ஆம் உப பிரிவின் கீழ், தேர்தல் ஆணைக்குழுவினால் மூன்று புதிய அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாகப் பெயரிடப்பட்டுள்ளன.



இலங்கை வந்தது எப்.பி.ஐ. குழு!
[Monday 2026-11-16 17:00]

இணையம் சார்ந்த மோசடிகளை முறியடிப்பதற்காகவும், நாடுகடந்த குற்ற வலையமைப்புகளைச் சீர்குலைப்பதற்காகவும் இலங்கைச் சட்ட அமுலாக்க அமைப்புகளுடனான தனது ஒத்துழைப்பினை அமெரிக்கா பலப்படுத்துகிறது.



சிவாஜிலிங்கத்துக்கு பாராளுமன்றில் அஞ்சலி செலுத்தினார் கோடீஸ்வரன்!
[Monday 2026-11-16 17:00]

மூத்த தமிழ் தேசிய அரசியல்வாதியும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கத்தின் மறைவுக்கு இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் நாடாளுமன்றத்தில் இன்று அஞ்சலி செலுத்தினார்.



அர்ச்சுனா உள்ளிட்ட 6 பேருக்கு எதிரான வழக்கில் டிசம்பர் 14ஆம் திகதி தீர்ப்பு!
[Monday 2026-11-16 17:00]

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணனுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் அவதூறான பதிவுகளை வெளியிட்டதாகக் கூறப்படும் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். ஹரீஸ் உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிரான வழக்கின் இறுதித் தீர்ப்பு எதிர்வரும் டிசம்பர் 14ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.



சஜித்தை சந்தித்தார் சீனத் தூதுவர்!
[Monday 2026-11-16 17:00]

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் புதிய ஒத்துழைப்பு வாய்ப்புகளை ஆராய்வது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (16) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.



சிவாஜிலிங்கம் மறைவுக்கு கே.வி.தவராசா இரங்கல்!
[Monday 2026-11-16 17:00]

தமிழ் தேசியத்தின் உறுதியான கொள்கையை எப்போதுமே விடாப்பிடியாக தன் இதயத்தில் சுமந்து பல அச்சுறுத்தல்கள், கொலை மிரட்டல்கள், படையினரின் விசாரணைகள் என பலவிதமான ஆபத்துக்களை எல்லாம் எதிர்கொண்டு ஈழமண் விடுதலைக்காக அற்பணிப்புடன் உழைத்த ஒரு பெருமகனை நாம் இழந்துள்ளோம் என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா அமரர் எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களின் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.



நாமலுக்கு எதிரான வழக்கு- சிஐடிக்கு நீதிமன்றம் பணிப்புரை!
[Monday 2026-11-16 17:00]

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிரான கிரிஷ் பரிவர்த்தனை வழக்குத் தொடர்பாக இந்தியாவில் வசிக்கும் சாட்சிகளுக்கு வெளிவிவகார அமைச்சு ஊடாக அனுப்பப்பட்ட அழைப்பாணைகள், இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் மூலமாக அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துமாறு வழக்குத் தொடுநருக்கு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி நதி அப்வர்ண சுவண்டுருக்கொட, உத்தரவிட்டுள்ளது.



ஆனந்த பாலித்த கைது!
[Monday 2026-11-16 17:00]

தொழிற்சங்க செயற்பாட்டாளரான ஆனந்த பாலித்த மத்திய குற்றப் புலனாய்வு பணியகத்தினால் இன்று (16)கைது செய்யப்பட்டுள்ளார். 2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் மேலதிக நேரக் கொடுப்பனவுகள் தொடர்பில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



இன விடுதலைக்காகத் தான் வாழும் காலம் அத்தனையையும் அர்ப்பணித்த ஒரு பெருமனிதன்!
[Monday 2026-11-16 08:00]

ஈழத் தமிழர்களின் இன விடுதலைக்காகத் தான் வாழும் காலம் அத்தனையையும் அர்ப்பணித்த ஒரு பெருமனிதனின் மறைவு, ஈழத் தமிழர்களின் தேசிய இன விடுதலை வரலாற்றில் ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாக மாறியுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.



அரை நூற்றாண்டு காலமாக தமிழ் தேசிய கோட்பாட்டோடு நெருங்கிப் பயணித்தவர் சிவாஜிலிங்கம்!
[Monday 2026-11-16 08:00]

அரை நூற்றாண்டு காலமாக தமிழ் தேசிய கோட்பாட்டோடு நெருங்கிப் பயணித்தவர் சிவாஜிலிங்கம். அவரது மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதாக இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.



அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 7,000 புதிய மருத்துவர்கள் ஆட்சேர்ப்பு!
[Monday 2026-11-16 08:00]

அடுத்த 3 ஆண்டுகளுக்குள் சுமார் 7,000 மருத்துவர்களை சுகாதார சேவைக்கு புதிதாக இணைத்துக்கொள்ள எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.



2027 நடுப்பகுதியில் நாடு வங்குரோத்து நிலையடையும் சாத்தியம்!
[Monday 2026-11-16 08:00]

நிதி நெருக்கடி மற்றும் திறைசேரியின் கையிருப்பை கருத்திற் கொண்டு 2027 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் நாடு வங்குரோத்து நிலையடையும் சாத்தியம் காணப்படுகிறது. ஏனெனில் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டாண்டுகள் நிறைவடைந்துள்ள பின்னணியில் நாட்டுக்கு பாரிய வெளிநாட்டு முதலீடுகள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை. தேசிய மட்டத்திலும் மெகா அபிவிருத்தி திட்டங்கள் ஏதும் ஆரம்பிக்கப்படவில்லை என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும்,முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.



ஒரே விமானத்தில் வந்த மூவரிடம் பெருமளவு குஷ் போதைப்பொருள் மீட்பு!
[Monday 2026-11-16 08:00]

எட்டு கோடி 66 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 'குஷ்' ரக போதைப்பொருள் தொகையுடன் மேலும் இருவரை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.



தமிழ்த்தேசிய கொள்கையில் சமரசம் இல்லாமல் இறுதி மூச்சுவரை பயணித்தவர் சிவாஜிலிங்கம்!
[Monday 2026-11-16 08:00]

தமிழ்த்தேசிய அரசியலில் கொண்ட கொள்கையில் எந்தவிதமான சமரசமும் இல்லாமல் தனது இறுதி மூச்சுவரை தடம்மாறாது பயணித்த தமிழ்த்தேசிய பற்றாளன் அமரர் எம் கே சிவாஜிலிங்கம் அவர்கள் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்கள் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.



சிவாஜிலிங்கம் மறைவுக்கு கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் இரங்கல்!
[Sunday 2026-11-15 16:00]

தமிழ்த் தேசிய விடுதலைக்காக வாழ்நாள் முழுவதும் அச்சமின்றிக் குரல்கொடுத்த அரசியல் ஆளுமை அமரர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் மறைவுக்கு கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.



நாளை சிவாஜிலிங்கத்தின் இறுதிச்சடங்கு!
[Sunday 2026-11-15 16:00]

மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவருமான எம்.கே சிவாஜிலிங்கத்தின் இறுதிக் கிரியைகள் நாளை (16) நடைபெறவுள்ளது.



சமரசமுமின்றி தனது அரசியல் பயணத்தில் உறுதியுடன் செயற்பட்ட தலைவர் சிவாஜிலிங்கம்!
[Sunday 2026-11-15 16:00]

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜி லிங்கம் அவர்கள் காலமான செய்தி மிகுந்த வேதனையையும் கவலையையும் அளிப்பதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.



இராணுவ ட்ரக் மோதி மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலி!
[Sunday 2026-11-15 16:00]

மட்டக்களப்பு, கிரான் - தொப்பிகல வீதியில் இராணுவ ரக் வண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் உயிரிழந்துள்ளார்.



வவுனியாவில் கறுப்புக்கொடிகள் கட்டப்பட்டு துக்கம்!
[Sunday 2026-11-15 16:00]

தமிழ்த் தேசிய அரசியல் செயற்பாட்டாளரான சிவாஜிலிங்கம் மறைவைத் தொடர்ந்து வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் கறுப்புக்கொடிகள் பறக்கவிடப்பட்டு துக்கம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.


Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா