Untitled Document
November 17, 2026 [GMT]
ராஜ் சோமதேவவின் உருவபொம்மையை எரித்து செம்மணியில் போராட்டம்! Top News
[Tuesday 2026-11-17 17:00]

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியும், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ நீதிமன்றில் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியும், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ நீதிமன்றில் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

  

யாழ்ப்பாணம், அரியாலை தபால்கட்டைச் சந்திக்கு அருகில் இன்று காலை ஆரம்பமான போராட்டம், அங்கிருந்து பேரணியாகச் செம்மணி மனிதப் புதைகுழி அமைந்துள்ள சிந்துபாத்தி மயானம் வரை சென்றடைந்தது. அங்கு போராட்டக்காரர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எமக்குத் தேவையானது எலும்புக்கூடுகளின் எண்ணிக்கையை அறிவிக்கும் அறிக்கை மட்டுமல்ல. அந்த எலும்புக்கூடுகளுக்குப் பின்னால் புதைக்கப்பட்டிருக்கும் மனிதர்களின் அடையாளங்களையும், அவர்களின் மரணத்திற்கான காரணங்களையும், அவர்களுக்கு என்ன நடந்தது என்பதையும் வெளிப்படுத்தும் நேர்மையான விசாரணையாகும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரியுள்ளனர்.

போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினரால் வாசிக்கப்பட்ட அறிக்கையிலையே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது,

மனிதப் புதைகுழி தொடர்பில் பேராசிரியர் ராஜ் சோமதேவ, அனுஷா வன்னிநாயக்கே ஆகியோரால் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இந்த அறிக்கையை இறுதியானதும் முழுமையானதுமான தடயவியல் முடிவாக ஏற்றுக்கொள்ள முடியாது என்பதைத் தெளிவுபடுத்துகின்றோம்.

செம்மணி என்பது வெறுமனே சில மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்ட ஓர் இடமல்ல. அது ஈழத்தமிழர்களின் வரலாற்றில் நீண்டகாலமாகத் தொடரும் வலிந்து காணாமல் ஆக்கப்படுதல், படுகொலைகள், அரச வன்முறைகள், நீதிமறுப்பு ஆகியவற்றுடன் தொடர்புபட்ட மிக முக்கியமான நீதிக்கான களமாகும்.

இங்கே நடந்தது தமிழினவழிப்புத்தான் என்பதை நிரூபிக்கும் சாட்சியமாகும். தமது உறவுகள் உயிருடன் இருக்கின்றார்களா, கொல்லப்பட்டார்களா, எங்கே புதைக்கப்பட்டார்கள் என்ற கேள்விகளுடன் பல தசாப்தங்களாகப் போராடிக்கொண்டிருக்கும் தாய்மார்களினதும் குடும்பங்களினதும் உணர்வுகளையும் நீதிக்கான எதிர்பார்ப்புகளையும் கருத்திற்கொள்ளாமல் இவ்வாறான ஒரு முக்கியமான விசாரணையை வெறுமனே தொல்லியல் அகழ்வாய்வு - எலும்புக்கூடுகளின் ஆரம்பநிலை அவதானிப்புகளுக்குள் மட்டுப்படுத்திவிட முடியாது.

அறிக்கையில் பல எலும்புக்கூடுகள் தொடர்பில் மரணத்திற்கு முன்பான அல்லது மரணத்தின் போது ஏற்பட்ட காயங்களுக்கான தெளிவான தடயங்கள் கண்டறியப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது

ஆனால், அதே அறிக்கை இந்த மதிப்பீடுகள் களத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பநிலை அவதானிப்புகள் மட்டுமே என ஒப்புக்கொள்கின்றது.

விரிவான ஆய்வகப் பரிசோதனைகள், எலும்புகளைச் சுத்தப்படுத்துதல், மறுசீரமைத்தல், கதிரியக்கப் பரிசோதனைகள் மற்றும் நுண்ணோக்கிப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் குறிப்பிடுகின்றது.

இத்தகைய வரையறைகளைக் கொண்ட ஆய்வின் அடிப்படையில் காயங்களுக்கான தடயங்கள் இல்லை எனக் கூறுவதை இறுதியான அறிவியல் முடிவாக ஏற்றுக்கொள்ள முடியாது.

அத்துடன் ஒருவரின் எலும்புக்கூட்டில் வெளிப்படையான காயங்கள் காணப்படவில்லை என்பதனால் அவர் இயற்கையாக இறந்தார் என்று முடிவெடுக்க முடியாது. மென்மையான திசுக்களில் ஏற்பட்ட காயங்கள், மூச்சுத்திணறல், விஷமூட்டல், சில வகையான தாக்குதல்கள், எலும்புகளில் தடயங்களை விட்டுச் செல்லாத பல மரணக் காரணங்களை எலும்புக்கூடுகளை மட்டும் கொண்டு நிராகரிக்க முடியாது.

எனவே, மரணத்திற்கான காரணம், மரணத்தின் தன்மை, மரணத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகள் ஆகியவை தொடர்பில் விரிவான மருத்துவ மற்றும் தடயவியல் விசாரணைகள் அவசியமாகின்றன.

இந்த இடைக்கால அறிக்கையில் 574 தனிநபர்களுக்குரிய என்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 51 இடங்களில் சிதறிய மனித எலும்புகளின் குவியல்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இவ்வளவு பெருந்தொகையான மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் யார்? எந்தக் காலப்பகுதியைச் சேர்ந்தவர்கள்? எந்தச் சூழ்நிலையில் உயிரிழந்தார்கள்? அவர்களின் குடும்பத்தினரை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் என்ன? என்ற அடிப்படையான கேள்விகளுக்கு முழுமையான பதில்கள் வழங்கப்படவில்லை.

குறிப்பாக, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களிடமிருந்து DNA மாதிரிகளைப் பெற்று ஒப்பிட்டுப் பார்க்கும் விரிவான மரபணு அடையாளப்படுத்தல் அகழ்வாய்வுப் பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டமை, விலங்குகளின் உடல்கள் புதைக்கப்பட்டமை, குழிகள் தோண்டப்பட்டமை போன்ற பல்வேறு மனிதச் செயற்பாடுகளால் நிலத்தின் அடுக்குகளும் எலும்புக்கூடுகளின் அமைவிடங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை குறிப்பிடுகின்றது.

இத்தகைய இடையூறுகள் எப்போது, யாரால், எதற்காக மேற்கொள்ளப்பட்டன? அவை மனித எச்சங்களின் ஆதாரங்களை அழித்துள்ளனவா? தடயங்களை மறைக்கும் நோக்கத்துடன் ஏதேனும் செயற்பாடுகள் இடம்பெற்றனவா? என்ற கேள்விகளுக்கும் சுயாதீனமான விசாரணை அவசியமாகின்றது.

கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் எந்தக் காலப்பகுதியைச் சேர்ந்தவை என்பதைத் துல்லியமாக நிர்ணயிப்பதற்கான அறிவியல் பரிசோதனைகள் முக்கியமானவை.

இப்பேராசிரியரால் ஏற்கனவே முடித்துவைக்கப்பட்ட மன்னார் சதொச மனிதப்புதைகுழி, கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி போல முறையான அதேவேளை வெளிப்படைத்தன்மையற்ற ஆய்வு முடிவுகளை செம்மணி - சித்துப்பாத்தி விடயத்தில் ஒருபோதும் ஏற்கமுடியாது.

அத்துடன், செம்மணி பகுதியில் முன்னர் வெளிப்படுத்தப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான சாட்சியங்கள், நீதிமன்ற ஆவணங்கள், மனித உரிமை அமைப்புகளின் பதிவுகள், வரலாற்று ஆதாரங்கள் ஆகியவற்றுடன் இங்கு கண்டெடுக்கப்பட்ட எச்சங்களை ஒப்பிட்டு ஆராய வேண்டும்.

ஒரு மனிதப் புதைகுழியின் உண்மையான பின்னணியை அறிய எலும்புக்கூடுகளின் அமைவிடத்தை மட்டும் ஆராய்வது போதுமானதல்ல. செம்மணி மனிதப்புதைகுழியோடு தொடர்புபட்ட இராணுவத்தினர் இன்றும் உயிரோடுள்ளனர். கட்டாயமாக அவர்கள் விசாரணைக்குட்படுத்தப்படல் வேண்டும்.

அறிக்கையின் தலைப்பிலேயே இது இடைக்கால அறிக்கை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அறிக்கையின் பல இடங்களில் ஆய்வுகள் ஆரம்பநிலையிலேயே இருப்பதாகவும் மேலதிக ஆய்வுகள் அவசியம் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

அவ்வாறிருக்கையில், இவ்வறிக்கையில் காணப்படும் ஆரம்பநிலை அவதானிப்புகளை வைத்து செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் முழுமையான உண்மையைத் தீர்மானிக்க முடியாது. எனவே, இந்த அறிக்கையை இறுதியான அறிவியல் முடிவாக ஏற்றுக்கொள்வதை நாம் நிராகரிக்கின்றோம்.

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பில் உண்மையைக் கண்டறிந்து நீதியை நிலைநாட்டுவதற்காகப் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்,

பேராசிரியர் ராஜ் சோமதேவ, அனுஷா வன்னிநாயக்கே ஆகியோரால் சமர்ப்பித்துள்ள இடைக்கால அறிக்கையை இறுதியான தடயவியல் முடிவாக ஏற்றுக்கொள்ளக் கூடாது. அதன் குறைபாடுகள் சுயாதீனமாக மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.

சர்வதேச அங்கீகாரம் பெற்ற தடயவியல் தொல்லியல் நிபுணர்கள், தடயவியல் வைத்தியர்கள், மனித எலும்பியல் நிபுணர்கள், மரபணு ஆய்வாளர் கள் மற்றும் மனித உரிமைகள் சார்ந்த நிபுணர்கள் அடங்கிய சுயாதீன சர்வதேச நிபுணர் குழு நியமிக்கப்பட வேண்டும்.

அத்தரப்பினர் செம்மணி - சித்துப்பாத்தி தொடர்பான ஆய்விலும், அகழ்விலும் பார்வையாளர்களாக அல்லாமல் நேரடிப்பங்கேற்பாளர்களாக ஈடுபடல் வேண்டும்.

அகழ்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மனித எச்சங்களும் சர்வதேச தரத்திலான தடயவியல் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக மரணத்திற்கான காரணம், காயங்களின் தன்மை, மரணத்தின் காலப்பகுதி மற்றும் புதைக்கப்பட்ட சூழ்நிலைகள் தொடர்பில் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களை அடையாளம் காண்பதற்காக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களிடமிருந்து DNA மாதிரிகள் பெறப்பட்டு, சர்வதேச தரத்திலான மரபணு ஒப்பீட்டு ஆய்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

செம்மணி - சித்துப்பாத்தி அகழ்வாய்வின் அனைத்து கட்டங்களும் முழுமையான காணொளி, புகைப்படம், வரைபடம், ஆவணப்படுத்தல் மூலம் வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும். அனைத்து ஆதாரங்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.

அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள், அவற்றுடன் தொடர்புடைய பொருட்கள், ஏனைய ஆதாரங்கள் அனைத்தும் உரிய சட்டப் பாதுகாப்புடன் பேணப்பட வேண்டும். அவை அழிக்கப்படுவதையோ, மாற்றப்படுவதையோ, ஆதாரங்கள் பாதிக்கப்படுவதையோ தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் முன்னர் வெளிப்படுத்தப்பட்ட சாட்சியங்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பதிவுகள், நீதிமன்ற ஆவணங்கள், வரலாற்று ஆதாரங்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு சர்வதேச விசாரணைக்கு கொண்டுசெல்லப்படல் வேண்டும். இதுபோன்று அறிக்கைகளில் விளையாடும் உள்ளக நீதிவிசாரணையை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம்.

அகழ்வாய்வுப் பகுதியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மேலதிக மனிதப் புதைகுழிகள் உள்ளனவா என்பதைக் கண்டறிய விரிவான அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். உதாரணமாக மாணவி கிருஷாந்தி உள்ளிட்டவர்களை படுகொலை செய்த குற்றவாளி சோமரத்ன ராஜபக்ச 1998 ஆம் ஆண்டில் செம்மணி வெளியில் தாம் கொன்று புதைத்ததாக அடையாளம் காட்டிய 21 இடங்களும் அகழ்வு செய்யப்படல் வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், குறிப்பாகப் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பங்கேற்பும் அவர்களது கருத்துகளும் விசாரணையின் அனைத்து கட்டங்களிலும் மதிக்கப்பட வேண்டும். உள்வாங்கப்படல் வேண்டும்.

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகள் அரசியல் தலையீடுகள் - அரச நிறுவன அழுத்தங்களிலிருந்து விடுபட்டு சுயாதீனமாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

கண்டறியப்படும் உண்மைகள் அனைத்தும் பொதுமக்களுக்கும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் புரியும் வகையில் தமிழில் வெளியிடப்பட வேண்டும். விசாரணையின் முன்னேற்றம் தொடர்பான காலமுறை அறிக்கைகளும் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.

இவ்விடயத்தில் நீதியை நிலைநாட்டுவதற்கு சர்வதேச பங்கேற்பு - சர்வதேச நீதிப் பொறிமுறைகளின் பங்களிப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

வடக்கு - கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானோரின் உறவினர்கள் எமது அன்புக்குரியவர்கள் தொடர்பில் உண்மையை அறிந்துகொள்வதற்காகப் பல தசாப்தங்களாகப் போராடி வருகின்றோம்.

எமது பிள்ளைகள் எங்கே? எமது கணவன்மார் எங்கே? எமது உறவினர்களுக்கு என்ன நடந்தது? என்ற கேள்விகளுக்குப் பதில் கிடைக்காமல் எமது வாழ்நாளையே நீதிக்கான போராட்டத்தில் கழித்துக்கொண்டிருக்கும் எம்போன்ற தாய்மார்களுக்கு செம்மணி - சித்துப்பாத்தி ஒரு மிக முக்கியமான நீதிக்கான களமாகும்.

எங்களின் வலியையும் எதிர்பார்ப்புகளையும் புறக்கணித்து, மனித எச்சங்கள் தொடர்பான முழுமையற்ற ஆரம்பநிலை அவதானிப்புகளைக் கொண்டு உண்மையைத் தீர்மானிக்க முடியாது. நாம் அறிவியல் ஆய்வுகளுக்கு எதிரானவர்கள் அல்லர். மாறாக, அறிவியலின் பெயரால் முழுமையற்ற ஆய்வுகள் இறுதி உண்மையாக முன்வைக்கப்படுவதையே எதிர்க்கின்றோம்.

எமக்குத் தேவையானது எலும்புக்கூடுகளின் எண்ணிக்கையை அறிவிக்கும் அறிக்கை மட்டுமல்ல. அந்த எலும்புக்கூடுகளுக்குப் பின்னால் புதைக்கப்பட்டிருக்கும் மனிதர்களின் அடையாளங்களையும், அவர்களின் மரணத்திற்கான காரணங்களையும், அவர்களுக்கு என்ன நடந்தது என்பதையும் வெளிப்படுத்தும் நேர்மையான விசாரணையாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது, செம்மணி சிந்துபாத்தி மயானத்திற்கு முன்னால் ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவவின் உருவப்பொம்மையை எரித்ததுடன், அவர் நீதிமன்றில் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையையும் தீயிட்டுக் கொளுத்தினர் மேலும், அங்கு ஒப்பாரி வைத்து தமது எதிர்ப்பையும் வேதனையையும் வெளிப்படுத்தினர்.

  
   Bookmark and Share Seithy.com



இரண்டு சட்டமூலங்களுக்கும் தமிழரசுக் கட்சி கடும் எதிர்ப்பு!
[Tuesday 2026-11-17 17:00]

பயங்கரவாதத்திடமிருந்து நாட்டைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் ஆகியவற்றை நிறைவேற்றுவதைத் தடுத்து நிறுத்தக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது.



கஸ்ஸப தேரர் பிணையில் விடுவிப்பு!
[Tuesday 2026-11-17 17:00]

திருகோணமலை, கடற்கரை பகுதியில் புத்தர் சிலை ஒன்றை ஸ்தாபித்த சம்பவம் தொடர்பில், நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலாங்கொடை கஸ்ஸப தேரர் இன்று (17) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.



2026 ஆம் ஆண்டுக்கான வருமான இலக்கைத் தாண்டியது இறைவரித் திணைக்களம்!
[Tuesday 2026-11-17 17:00]

2026 ஆம் ஆண்டுக்காக வழங்கப்பட்டிருந்த வருடாந்த வருமான இலக்கை விட அதிக வருமானத்தை உள்நாட்டு இறைவற திணைக்களம் ஈட்டியுள்ளது.



சிவாஜிலிங்கத்திற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வீரவணக்கம்!
[Tuesday 2026-11-17 17:00]

ஒரு மனிதனின் வாழ்வு என்பது அவரது பிறப்பிற்கும், இறப்பிற்கும் இடைப்பட்ட காலம் மட்டுமல்ல அவர் தன் இனத்திற்காக எவ்வளவு தூரம் தன்னை முழுமையாக அர்ப்பணித்து பயணித்தார் என்பதில்தான் ஒருவருடைய வரலாறு எழுதப்படுகின்றது.



இலங்கையில் காற்றின் தரம் மோசம்!
[Tuesday 2026-11-17 17:00]

நாட்டின் பல பகுதிகளில் வளி மாசுபாட்டுச் சுட்டெண் சுவாசிப்பதற்கு ஆரோக்கியமற்ற மட்டங்களுக்கு உயர்ந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.



நாமல் நிரந்தரமாகச் சிறையில் அடைக்கப்படுவார்; இலங்கைக்குப் புதிய ஜனாதிபதி வருவார்!
[Tuesday 2026-11-17 17:00]

நாமல் ராஜபக்ஷ இப்படியே நிரந்தரமாகச் சிறையில் அடைக்கப்படுவார்; இலங்கைக்குப் புதிய ஜனாதிபதி ஒருவர் வருவார் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. அர்ச்சுனா தெரிவித்தார்.



தேசிய அணுசக்தி பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் குழு அமைக்க அமைச்சரவை அனுமதி!
[Tuesday 2026-11-17 17:00]

இலங்கையின் தேசிய அணுசக்தி பாதுகாப்பு கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், 'தேசிய அணுசக்தி பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் குழு' ஒன்றை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.



தரம் 6க்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் அறிவிப்பு!
[Tuesday 2026-11-17 17:00]

2026ஆம் ஆண்டில் நடைபெற்ற 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், 2027ஆம் ஆண்டில் பாடசாலைகளில் தரம் 6க்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.



முட்டை விலை 50 ரூபா வரை உயர்வு!
[Tuesday 2026-11-17 17:00]

தற்போது சந்தையில் முட்டைகள் ரூ. 45 முதல் 50 வரையிலான விலையில் விற்கப்படுவதாக அகில இலங்கை முட்டை வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் அனுரசிறி மாரிசிங்க த் தெரிவித்தார். முட்டை உற்பத்திச் செலவுகள் அதிகரித்ததும், தேவை அதிகரித்ததுமே இந்த நிலைக்குக் காரணம் என அனுரசிறி மாரிசிங்க குறிப்பிட்டார்.



இந்து சமுத்திரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்-இலங்கைக்கு சுனாமி ஆபத்து இல்லை!
[Tuesday 2026-11-17 06:00]

இந்து சமுத்திரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது இன்று (17) அதிகாலை 2.41 மணியளவில் ரிக்டர் அளவில் 6.6 என பதிவாகியுள்ளது. இந்தோனேசியாவின் பண்டா கடற்பரப்பில் 20 கிலோமீற்றர் கடல் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வௌியாகவில்லை.



செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி இன்று போராட்டம்- யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆதரவு!
[Tuesday 2026-11-17 06:00]

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதியானதும் சுயாதீனமானதுமான சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தனது முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளது.



பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்பட்டால் போராட்டம் வெடிக்கும்!
[Tuesday 2026-11-17 06:00]

திறைசேரியை நிரப்பிக் கொண்டிருந்தால் மாத்திரம் பொருளாதாரம் முன்னேற்றமடையாது. மக்கள் மத்தியில் பணம் செல்ல வேண்டும். புதிய தொழில்வாய்ப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும். அப்போது தான் பொருளாதார நடவடிக்கைகள் சிறந்த முறையில் இயங்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.



தமிழ்த் தேசியத்தை நேசித்த எம்.கே. சிவாஜிலிங்கம்! - பிரித்தானியத் தமிழர் பேரவை அஞ்சலி.
[Tuesday 2026-11-17 06:00]

இலங்கைப் பாராளுமன்றம் மற்றும் வடக்கு மாகாண சபை ஆகியவற்றின் முன்னாள் உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் நகரபிதாவுமாகிய திரு. எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த மனவேதனையளிக்கிறது.



வெடுக்குநாறிமலை ஆலய பூசாரி மற்றும் முன்னாள் தலைவர் பிணையில் விடுதலை!
[Tuesday 2026-11-17 06:00]

நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதி இலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரி மற்றும் முன்னாள் தலைவர் ஆகியோர் வவுனியா நீதவான் நீதிமன்றினால் திங்கட்கிழமை (16) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.



அக்வான் புயல் இன்று மேலும் வலுவடையும்!
[Tuesday 2026-11-17 06:00]

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை அண்மித்துள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள அக்வான் புயல் இன்று மேலும் வலுவடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.



சிவாஜிலிங்கம் மறைவு - ஈழத் தமிழர் சமூகத்திற்குப் பேரிழப்பு!
[Tuesday 2026-11-17 06:00]

ஈழத் தமிழர் உரிமைக் கோரிக்கைகளுக்கு வலுச் சேர்த்த குரலாகத் திகழ்ந்தவரும், தாம் கொண்ட கொள்கைக்காகத் துணிவுடன் குரல் கொடுத்தவருமான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ம.க. சிவாஜிலிங்கம் அவர்களின் மறைவுச் செய்தி ஆழ்ந்த துயரத்தை அளிக்கிறது.



புதிய வரவு - செலவுத் திட்டம் ஒரு அழகான கதைப் புத்தகம்!
[Tuesday 2026-11-17 06:00]

ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட புதிய வரவு - செலவுத் திட்டம் மழைக் காலத்தில் கோப்பி குடித்துக் கொண்டு வாசிப்பதற்கான ஒரு அழகான கதைப் புத்தகம் போலவே அமைந்துள்ளது. மக்களை வாழ வைப்பதற்கான எவ்வித நிவாரணங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் சாடினார்.



நண்பர்களுக்கிடையில் மோதல்- ஒருவர் கத்திரிக்கோலால் குத்திக்கொலை!
[Tuesday 2026-11-17 06:00]

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அச்செழு பூலசிட்டி பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு 10 மணியளவில் இரு இளைஞர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.



ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றவாளிக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை!
[Tuesday 2026-11-17 06:00]

மன்னாரில் 3.38 கிராம் தூய ஐஸ் போதைப்பொருளை விற்பனை நோக்கில் வைத்திருந்த குற்றவாளிக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும், 10 இலட்சம் ரூபாய் அபராதமும் விதித்து மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா திங்கட்கிழமை (16) தீர்ப்பளித்தார்.



சிவாஜிலிங்கம் உடல் தகனம் - திருமாவளவன் நேரில் அஞ்சலி! Top News
[Monday 2026-11-16 17:00]

மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவருமான எம்.கே. சிவாஜிலிங்கத்தின் உடலுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய பாராளுமன்ற உறுப்பினருமான தொல்காப்பியன் திருமாவளவன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.


Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா