Untitled Document
November 19, 2026 [GMT]
13,000 குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
[Thursday 2026-11-19 05:00]


வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த 13,000 குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட எம் பி சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த 13,000 குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட எம் பி சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.

  

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (18) இடம்பெற்ற 2027ஆம் ஆண்டுக்காக ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்ட உரை மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

2027ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் வருமானம் 6,180 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், பொது முதலீட்டுக்கான ஒதுக்கீடும் சுமார் 2,000 பில்லியன் ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. எனினும், நிதி ஒதுக்கீடுகளை அதிகரிப்பது மட்டுமே அபிவிருத்திக்கு போதுமானதல்ல.

அமைச்சுகளின் மூலதனச் செலவினங்களை மாதாந்தம் வெளியிடுதல், அரச கொள்வனவு நடைமுறைகளைச் சீரமைத்தல், திட்ட முகாமைத்துவத்தை வலுப்படுத்துதல் மற்றும் நிதியை உரிய காலத்தில் பயன்படுத்தத் தவறும் அமைச்சுகளின் செயற்பாடுகளை மீளாய்வு செய்தல் உள்ளிட்ட பரிந்துரைகளையும் முன்வைக்க விரும்புகின்றேன்.

அத்துடன் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்க வேண்டும்.விவசாயம், சுகாதாரம், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் மின்சார உட்கட்டமைப்பு ஆகிய துறைகளுக்கு உரிய நிதி மற்றும் கண்காணிப்பு வழங்கப்பட வேண்டும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த 13,000 குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டில் அதற்காக 6 பில்லியன் ரூபாவும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் அதற்காக 4 பில்லியன் ரூபா நிதியும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் இன்னும் மீள்குடியேற்றப்படாமல் உள்ளனர். அது தொடர்பில் அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.

அத்துடன் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், ஒதுக்கப்பட்ட நிதியை உரிய நோக்கங்களுக்காக முழுமையாகச் செலவிடுவதில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்

குறிப்பாக சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சுக்கு 2025 ஆம் ஆண்டில் 95.5 பில்லியன் ரூபா மூலதன ஒதுக்கீடு வழங்கப்பட்டது. எனினும் 52.3 பில்லியன் ரூபா மட்டுமே செலவிடப்பட்டது. 43.2 பில்லியன் ரூபா செலவிடப்படவில்லை. அதாவது ஏறத்தாழ அரைப்பங்கு பயன்படுத்தப்படவில்லை.

இந்த அமைச்சுக்குரிய 2026 ஆம் ஆண்டுக்கான திருத்திய மூலதன ஒதுக்கீடு 107.1 பில்லியன் உருபா ஆகும். இதில் 2026 ஆகஸ்ட் வரை செலவிடப்பட்டது 24.4 பில்லியன் உருபா மட்டுமே ஆகும். இது ஏறத்தாழ 22.8 சதவீதம் ஆகும். செலவிடப்படாத தொகை 77.2 சதவீதம் ஆகும். எட்டு மாதங்கள் கடந்த பின்னரும் சுகாதார மூலதனத்தில் நான்கில் மூன்று பங்கு பயன்படுத்தப் படவில்லை.

எனவே ஒதுக்கப்படும் ஒவ்வொரு ரூபாவும் மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பயன்படுத்தப்படுவதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



ஜனாதிபதி அனுரவைச் சந்தித்த அமெரிக்க தூதுவர்!
[Thursday 2026-11-19 05:00]

அமெரிக்கா – இலங்கை இடையிலான எதிர்கால ஒத்துழைப்பு மற்றும் இரு நாடுகளுக்கும் பொதுவான முன்னுரிமைகள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் புதன்கிழமை (18) சந்தித்து, கலந்துரையாடியதாக அமெரிக்கத் தூதுவர தெரிவித்துள்ளார்.



எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி வேகத்தில் வீழ்ச்சி ஏற்படும்!
[Thursday 2026-11-19 05:00]

பொருளாதார வளர்ச்சி வேகத்தில் எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் வீழ்ச்சி ஏற்படும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.



தொல்லியல் பட்டதாரிகளை வரலாறு பாட ஆசிரியர்களாக நியமிக்க பிரதமர் மறுப்பு!
[Thursday 2026-11-19 05:00]

பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவை பாராளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர் நேற்று பாராளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.



பட்டாசு கொளுத்த காத்திருக்கும் மக்கள்!
[Thursday 2026-11-19 05:00]

அரசாங்கம் வீட்டுக்கு செல்லும் போது பட்டாசு கொளுத்துவதற்கு மக்கள் காத்திருப்பதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் பாராளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.



வடக்கில் ஆங்கிலம் கற்பிக்க வந்துள்ள அமெரிக்காவின் அமைதிப்படை!
[Thursday 2026-11-19 05:00]

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் ஆங்கில மொழிக் கல்வியை வலுப்படுத்தும் நோக்கில், அமெரிக்க அமைதிப் படையின் (Peace Corps) 34 தன்னார்வத் தொண்டர்களைக் கொண்ட குழுவினர் இலங்கையில் தமது இரண்டு வருடகால சேவையை ஆரம்பித்துள்ளனர்.



ஊழல்வாதிகளுக்காக குரல் கொடுக்க வேண்டாம்!
[Thursday 2026-11-19 05:00]

ஐக்கிய மக்கள் சக்தியின் தொழிற்சங்கவாதியான ஆனந்த பாலித அரச நிதியை மோசடி செய்துள்ளார் என அக்கட்சியின் உறுப்பினரான தயாசிறி ஜயசேகர ஏற்றுக்கொண்டுள்ளார். ஊழல்வாதிகளை கைது செய்வதும், சட்ட நடவடிக்கை எடுப்பதும் அரசியல் பழிவாங்கல் அல்ல, ஊழல்வாதிகளுக்காக குரல் கொடுக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவரிடம் கேட்டுக்கொள்கிறோம் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.



ஜனாதிபதி அனுரவுக்கு பங்களாதேஷ் அழைப்பு!
[Thursday 2026-11-19 05:00]

இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், பங்களாதேஷிற்கு அரச விஜயத்தை மேற்கொள்ளுமாறு அந்நாட்டுப் பிரதமர் தாரிக் ரஹ்மானினால் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ அழைப்பிதழ், பங்களாதேஷ் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹுமையூன் கபீரினால் நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.



இந்த ஆண்டு டெங்கு மரணங்கள் மூன்று மடங்கு!
[Thursday 2026-11-19 05:00]

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக அந்தப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.



ஞானசார தேரருக்கு 4 வருட சிறைத்தண்டனை உறுதி!
[Wednesday 2026-11-18 18:00]

இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்த குற்றச்சாட்டில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.



சசி வீரவன்சவுக்கு விதிக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனை- உறுதிப்படுத்திய உயர்நீதிமன்றம்!
[Wednesday 2026-11-18 18:00]

இராஜதந்திர கடவுச்சீட்டை சட்டவிரோதமான முறையில் வைத்திருந்த குற்றத்திற்காக, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவுக்கு விதிக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனையை உயர்நீதிமன்றம் இன்று உறுதி செய்தது.



வேலணை பிரதேச சபை காணியில் நினைவேந்தலுக்கு அனுமதி!
[Wednesday 2026-11-18 18:00]

வேலணை சாட்டி மாவீரர் மயானத்தில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்குக் காணி உரிமையாளர்கள் அனுமதி மறுத்துள்ள நிலையில், மாற்று இடமாக வேலணை பிரதேச சபைக்குச் சொந்தமான காணியில் நிகழ்வுகளை நடத்துவதற்குச் சபை அனுமதி வழங்கியுள்ளது.



நாமலுக்கு வழங்கப்பட்ட பிணை- மேல்நீதிமன்றம் இடைநிறுத்தியது!
[Wednesday 2026-11-18 18:00]

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான இலஞ்சக் குற்றச்சாட்டு வழக்கில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட பிணை உத்தரவை இடைநிறுத்தி கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (18) இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.



சறுக்குப்பாதை எதிர்பாராமல் திறக்கப்பட்டதால் பிரிட்டிஷ் எயார்வேஸ் விமானத்தின் பயணம் ரத்து!
[Wednesday 2026-11-18 18:00]

அவசரகால வெளியேற்றும் சறுக்குப்பாதை எதிர்பாராதவிதமாகத் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777-200 ரக விமானம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொழும்பிலிருந்து லண்டன் நோக்கிப் புறப்படவிருந்த விமானப் பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளது.



பாதுகாப்புச் செயலாளர் வடக்கு நிலைமைகள் குறித்து ஆய்வு!
[Wednesday 2026-11-18 18:00]

பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொந்த நேற்று (17) பலாலியில் அமைந்துள்ள யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்துக்கு விஜயம் செய்தார். இதன்போது, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன மற்றும் வடக்கு பிராந்தியத்திலுள்ள சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடினார்.



5 மாதங்களின் பின் பிணையில் விடுவிக்கப்பட்டார் கோட்டாவின் செயலாளர்!
[Wednesday 2026-11-18 18:00]

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளராகப் பணியாற்றிய சுகீஷ்வர பண்டார, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஜனாதிபதி செலவினத் தலைப்பின் கீழ் இரண்டு சம்பளங்களைப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில் சுகீஷ்வர பண்டார கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார்.



ராஜாங்கனை சத்தாரதனவுக்கு விளக்கமறியல்!
[Wednesday 2026-11-18 18:00]

அநுராதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ராஜாங்கனை சத்தாரதன எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் இன்று (18) மாலை அவரை முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



அனுராதபுர பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம்- முன்னாள் சிப்பாயின் பிணை ரத்து!
[Wednesday 2026-11-18 18:00]

அனுராதபுர போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியர் ஒருவர், தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்துப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டு, மேல் நீதிமன்றத்தினால் கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்கப்பட்டிருந்த சந்தேகநபரான முன்னாள் இராணுவச் சிப்பாயின் பிணை உத்தரவை இரத்து செய்யுமாறு, வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி இந்திக அத்தநாயக்க உத்தரவிட்டுள்ளார்.



81வது பிறந்த நாள்- மஹிந்தவை வாழ்த்தினார் ரணில்!
[Wednesday 2026-11-18 18:00]

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 81ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று தொலைபேசி ஊடாகத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.



தமிழர்களுக்குப் பாதகமான விடயங்களே வடகிழக்கில் முன்னெடுப்பு!
[Wednesday 2026-11-18 06:00]

தமிழர்களுக்கு பாதகமாக அமையும் திட்டங்களே வடக்கு மற்றும் கிழக்கில் முன்னெடுக்கப்படுகிறது. கிவுல் ஓயா திட்டத்தை அரசாங்கம் உடன் கைவிட வேண்டும்.இல்லையேல் மக்கள் வீதிக்கு இறங்கி போராட நேரிடும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார்.



பிரபாகரன் இல்லச் சுவரில் கட்டப்பட்டிருந்த பதாதையைக் கிழித்த இனந்தெரியாத நபர்கள்!
[Wednesday 2026-11-18 06:00]

வல்வெட்டித்துறையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இல்லம் அமைந்திருந்த காணி சுவரில் கட்டப்பட்டிருந்த பதாதை செவ்வாய்க்கிழமை காலை இனந்தெரியாத நபர்களால் கிழித்துச் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய பாராளுமன்ற உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன், தலைவரின் இல்லத்திற்குச் சென்று பார்வையிட்டதைத் தொடர்ந்து இந்தப் பதாகை கிழிக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.


Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா