Untitled Document
November 21, 2026 [GMT]
பிள்ளையானுக்கு பிணை கோரும் மனு- ஜனவரி மாதம் 18 ஆம் திகதி விசாரணை!
[Saturday 2026-11-21 08:00]


பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் என அழைக்கப்படும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை பிணையில் விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் என அழைக்கப்படும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை பிணையில் விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  

அன்றைய தினம் இந்தப் பிணைக் கோரிக்கை தொடர்பில் விடயங்களை முன்வைக்குமாறு அறிவித்து, சட்டமா அதிபருக்கு அழைப்பாணை விடுக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான பி. குமாரன் ரத்னம் மற்றும் பிரதீப் ஹெட்டியாராச்சி ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, மனுதாரரான பிள்ளையான் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மனோஹர த சில்வா நீதிமன்றில் விடயங்களை முன்வைத்துத் தெரிவிக்கையில், தமது சேவை பெறுநர் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார் எனக் குறிப்பிட்டார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர், ஓராண்டு தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி கூறினார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய, ஒரு நபர் கைது செய்யப்பட்டு ஓராண்டு காலம் கடந்துவிட்ட நிலையில், அச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களின் பிணைக் கோரிக்கைகளைப் பரிசீலிப்பதற்கான அதிகாரம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கமைய, தமது சேவை பெறுநரைப் பிணையில் விடுவிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி, நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.

எவ்வாறாயினும், மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்கள் திருத்தப்பட வேண்டும் எனச் சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

இதற்கமைய, உரிய திருத்தங்களை மேற்கொண்டு திருத்தப்பட்ட மனுவொன்றைச் சமர்ப்பிப்பதற்கு மனுதாரர் தரப்பு இணக்கம் தெரிவித்தது.

அதனைத் தொடர்ந்து, இந்த மனு தொடர்பில் ஆட்சேபனைகள் ஏதேனும் இருப்பின் அவற்றை எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் ,சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டது.

  
   Bookmark and Share Seithy.com



செம்மணிப் புதைகுழி குறித்து மருத்துவ அறிக்கையின் பிரகாரமே இறுதி தீர்மானம்!
[Saturday 2026-11-21 16:00]

செம்மணி மனிதப் புதைக்குழி அகழ்வு தொடர்பில் ராஜ் சோமதேவ சமர்ப்பித்த அறிக்கை ஒரு தடயவியல் தொல்லியல் அறிக்கை ஆகும். இது ஒரு சட்ட வைத்திய-அறிக்கை அல்ல. ஆகவே இந்த அறிக்கை இறுதியானது என்று கருத முடியாது. மருத்துவ அறிக்கையின் பிரகாரமே இறுதி தீர்மானம் எடுக்கப்படும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.



இந்தோனேசியா அருகே பாரிய நிலநடுக்கம்- இலங்கைக்கு சுனாமி ஆபத்து இல்லை!
[Saturday 2026-11-21 16:00]

இந்தோனேசியாவுக்கு அருகில் உள்ள பண்டா தீவில் இன்று பிற்பகல் 3.12 மணியளவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.இது ரிக்டர் அளவில் 6.8 மெக்னிடுயிட்டாக பதிவாகியுள்ளதாக சர்வதேச புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 156 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு சுனாமி ஆபத்து எதுவும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை கடற்பரப்புகள் பாதுகாப்பானதாக உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.



ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புச் சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற அனுமதி!
[Saturday 2026-11-21 16:00]

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புச் சட்டமூலமானது அரசியலமைப்பிற்கு முரணானதாகத் தெரியவில்லை எனவும், சில திருத்தங்களுக்கு உட்பட்டு அதனைப் பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் எனவும் உயர் நீதிமன்றம் வியாக்கியானம் செய்துள்ளதாக சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (11) பாராளுமன்றில் அறிவித்துள்ளார்.



உவர்மலை இராணுவக் களஞ்சியசாலை தீக்கிரை!
[Saturday 2026-11-21 16:00]

திருகோணமலை, உவர்மலை பகுதியில் அமைந்துள்ள இராணுவத்தின் 22ஆவது படைப்பிரிவு முகாமின் களஞ்சியசாலையொன்றில் இன்று (21) அதிகாலை ஏற்பட்ட திடீர் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.



யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்குள் மோதல்- 5 பேர் காயம், 21 பேருக்கு விளக்கமறியல்!
[Saturday 2026-11-21 16:00]

சக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், வெட்டுக் காயங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 21 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.



அரசாங்கம் தனது அரசியல் எதிரிகளை ஒடுக்க முயற்சி!
[Saturday 2026-11-21 16:00]

அரசாங்கம் தனது அரசியல் எதிரிகளை ஒடுக்க முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.



கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் ரவிகரன்!
[Saturday 2026-11-21 16:00]

மாவீரர் வாரம் இன்று(21) ஆரம்பித்துள்ள நிலையில் தாயகப் பரப்பிலும், புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.



மல்வத்தை விபத்தில் இளைஞன் பலி!
[Saturday 2026-11-21 16:00]

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவருடன் பயணித்த 21 வயதுடைய மற்றொரு இளைஞர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



மானிப்பாயில் ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது!
[Saturday 2026-11-21 16:00]

மானிப்பாய் பகுதியில் நேற்று நள்ளிரவு விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், ஐஸ் போதைப்பொருளுடன் 26 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் தெல்லிப்பழையைச் சேர்ந்த இளைஞரிடமிருந்து 69 கிராம் ஐஸ் போதைப்பொருளும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞரிடமிருந்து 01 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.



தங்கத்தின் விலை இன்றும் 3000 ரூபா குறைந்தது!
[Saturday 2026-11-21 16:00]

நேற்று 7,000 ரூபாயால் குறைவடைந்திருந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் 3,000 ரூபாய் குறைவடைந்துள்ளது. இன்று இலங்கையில் 22 கரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை 314,400 ரூபாயாக விற்கப்படுகின்றது. 24 கரட் ஒரு பவுன் தங்கம் 342,000 ரூபாயாகவும் பதிவாகி உள்ளது.



சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தலுக்கு தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு!
[Saturday 2026-11-21 08:00]

தடை செய்யப்பட்ட அமைப்புகளின் அடையாளங்களையோ அல்லது சின்னங்களையோ காட்சிப்படுத்தாது, உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் உரிமை மக்களுக்கு உண்டு எனச் சுட்டிக்காட்டியுள்ள ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம், பொலிஸாரினால் 'A' அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளமையால் சாட்டி மாவீரர் துயிலும் இல்ல காணி உரிமை தொடர்பில் எவ்வித கட்டளைகளையும் பிறப்பிக்க முடியாது என அறிவித்துள்ளது.



வடக்கு, கிழக்கில் நடக்கும் குற்றங்களுக்குப் பின்னால் இருப்பவர்கள் தமிழ் அரசியல்வாதிகளாம்!
[Saturday 2026-11-21 08:00]

வடக்கு மற்றும் கிழக்கில் ஏதேனும் சம்பவம் இடம்பெற்றால் அதற்கு பாதுகாப்பு தரப்பு பொறுப்புக்கூற வேண்டும் என்ற குற்றச்சாட்டுக்களையே சாணக்கியன், சிறிதரன் ஆகியோர் முன்வைக்கிறார்கள். வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களை சீரழிப்பவர்களின் பின்னால் இருப்பவர்கள் தமிழர்களே. அதேபோன்று இங்கு நடக்கும் குற்றங்களின் பின்னால் இருப்பவர்கள் தமிழ் அரசியல்வாதிகளே என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குற்றம்சாட்டினார்.



30ஆம் திகதி சுகயீன விடுமுறைப் போராட்டம்- ஆசிரியர், அதிபர் கூட்டணி அறிவிப்பு!
[Saturday 2026-11-21 08:00]

2027 வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளப் பிரச்சினை புறக்கணிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்வரும் 30 ஆம் திகதி ஒருநாள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கக் கூட்டணி தெரிவித்துள்ளது.



குப்பைகளை எரிப்பது குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்க யாழ் மாநகரசபை இணக்கம்!
[Saturday 2026-11-21 08:00]

யாழ்ப்பாணம் மாநகர சபை அதிகார எல்லைக்குள் திறந்தவெளியில் குப்பைகள் எரிக்கப்படுவது தொடர்பிலான விரிவான அறிக்கையொன்றை எதிர்வரும் காலத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக, மாநகர சபையின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.



கடலில் நீராடிய மாணவனும் காப்பாற்றச் சென்றவரும் மாயம்!
[Saturday 2026-11-21 08:00]

அம்பாறை நிந்தவூர் கடற்கரையில் நேற்று மதியம் கடலில் நீராடச் சென்ற இருவர் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு அம்பாறை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காணாமல் போயுள்ள மற்றைய இருவரைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.



விபத்துக்குள்ளான வானுக்கு தீவைத்த 4 பேருக்கு சிறைத்தண்டனை!
[Saturday 2026-11-21 08:00]

மட்டக்களப்பு, வந்தாறுமூலை மாவடிவேம்பு பகுதியில் 2015ஆம் ஆண்டு விபத்துக்குள்ளான வான் ஒன்றை தீ வைத்து எரித்த நான்கு பேருக்கு, 3 வருட கடூழிய சிறைத்தண்டனையும் தலா 25,000 ரூபா அபராதமும் விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.



நினைவுகூரலை தடுப்பதற்கு விசாரணைகளை மேற்கொள்கிறது அரசாங்கம்!
[Saturday 2026-11-21 08:00]

சர்வதேசத்திற்கு நல்ல பெயரை காட்டுவதற்கு ஒர் அறிக்கையையும் மற்றோரு புறத்தில் நினைவுகூரலை தடுப்பதற்கு விசாரணைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.



டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை சவாலுக்குட்படுத்தி ரிட் மனு!
[Saturday 2026-11-21 08:00]

நாட்டின் வயது வந்த மக்களின் உயிரியல் தரவுகளை இந்திய நிறுவனமொன்றிற்கு வழங்கி டிஜிட்டல் அடையாள அட்டைகளை விநியோகிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரீட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



97 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது வரவுசெலவுத் திட்டம்!
[Friday 2026-11-20 19:00]

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு, பாராளுமன்றத்தில் 97 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.​



சாந்தபுரம் கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு நீதி கோரிய போராட்டத்தை பொலிஸ் தடுத்தது ஏன்?
[Friday 2026-11-20 19:00]

கிளிநொச்சி – சாந்தபுரம் பகுதியில் 7 பேரால் கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கோரியும், சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய வலியுறுத்தியும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது பொலிஸார் அதற்கு இடையூறு ஏற்படுத்தி, நியாயம் கோரிய மக்களின் போராட்டத்தைத் தடுத்ததன் நோக்கம் என்னவென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேள்வி எழுப்பினார்.


Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா