Untitled Document
November 24, 2026 [GMT]
உள்ளகப் பொறிமுறையில் இதுவரை தீர்வு இல்லை!
[Tuesday 2026-11-24 07:00]


சர்வதேச அரங்கில் தொடர்ச்சியாக கேள்விக்குள்ளாக்கப்படும் இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு விசேட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். வெளிவிவகாரத்துறை அமைச்சர் சர்வதேச அரங்குக்கு சென்று 'உள்ளக பொறிமுறை ஊடாக தீர்வு' என்று குறிப்பிடுகிறார். ஆனால் இலங்கையில் உள்ளக பொறிமுறைக்கான முன்னேற்றகரமான எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட தரப்பும் உள்ளக பொறிமுறையை ஏற்கவில்லை.இதன் தாக்கத்தை அரசாங்கம் எதிர்கொள்ள நேரிடும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

சர்வதேச அரங்கில் தொடர்ச்சியாக கேள்விக்குள்ளாக்கப்படும் இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு விசேட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். வெளிவிவகாரத்துறை அமைச்சர் சர்வதேச அரங்குக்கு சென்று 'உள்ளக பொறிமுறை ஊடாக தீர்வு' என்று குறிப்பிடுகிறார். ஆனால் இலங்கையில் உள்ளக பொறிமுறைக்கான முன்னேற்றகரமான எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட தரப்பும் உள்ளக பொறிமுறையை ஏற்கவில்லை.இதன் தாக்கத்தை அரசாங்கம் எதிர்கொள்ள நேரிடும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

  

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தொடர்பில் பென்ஸ் சோல் என்பவர் குறிப்பிட்ட கருத்துக்கள் மற்றும் வெளியிட்ட அறிக்கைகள் தொடர்பில் நீதியமைச்சர் பலமுறை குறிப்பிடுகிறார்.

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் குறித்து பென்ஸ் சோல் இம்மாதம் 09 ஆம் திகதி பாரதூரமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.ஆகவே அது குறித்து கவனம் செலுத்துமாறு நீதியமைச்சரிடம் கேட்டுக் கொள்கிறேன்.

ஜி.எஸ்.பி வரிச்சலுகை விவகாரத்தில் பயங்கரவாத தடுப்புச் சட்டம் பிரதானமாக பேசப்படும்.ஆகவே இந்த விடயம் தொடர்பில் வெளிவிவகாரத்துறை அமைச்சு விசேட கவனம் செலுத்த வேண்டும். பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் குறித்து முன்வைக்கப்படும் பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கம் கொள்கை அடிப்படையில் தீர்மானம் எடுக்க வேண்டும்.

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்படுவதாக குறிப்பிடுவது முற்றிலும் தவறானது.சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் அபிவிருத்திக்காக 2026 வரவு செலவுத் திட்டத்தில் 1050 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது, 2027 ஆம் ஆண்டு 818 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.ஆகவே சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலுக்கான நிதி ஒதுக்கீடு பாரியளவு குறைக்கப்பட்டுள்ளது.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை வீழ்ச்சியடைந்துள்ளது.திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஹோட்டல் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.மன்னார் - இராமேஸ்வரன் கப்பல் சேவையை உடன் ஆரம்பித்தால் வடக்கு மாகாணத்துக்கான சுற்றுலாத்துறை சேவையை முன்னேற்ற முடியும். மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறை சேவையை மேம்படுத்த பொதுபோக்குவரத்து சேவையை வினைத்திறனாக்க வேண்டும்.

சவூதியில் மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட அனோஜன் சிவராசா சகல குற்றச்சாட்டுக்களிலும் இருந்து விடுவிக்கப்பட்டமை மகிழ்வுக்குரியது. ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர், இலங்கைக்கான சவூதி தூதுவர், மற்றும் தூதரக அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபாஇ உபுல் குமார பெரும உட்பட சகல தரப்புக்கும் நன்றித் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதேபோல் இந்தியா, அமெரிக்கா அரசுக்கும், தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அனோஜனை போன்று வெளிநாடுகளில் வாழும், தொழில் புரியும் இலங்கையர்கள் பல நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளார்கள். அவர்களுக்கு உரிய சட்ட மற்றும் ஏனைய ஒத்துழைப்புக்களை அரசாங்கம் உடன் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சர்வதேச அரங்கில் தொடர்ச்சியாக கேள்விக்குள்ளாக்கப்படும் இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு விசேட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். வெளிவிவகாரத்துறை அமைச்சர் சர்வதேச அரங்குக்குச் சென்று 'உள்ளக பொறிமுறை ஊடாக தீர்வு' என்று குறிப்பிடுகிறார்.ஆனால் இலங்கையில் உள்ளக பொறிமுறைக்கான முன்னேற்றகரமான எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட தரப்பும் உள்ளக பொறிமுறையை ஏற்கவில்லை.

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தீர்வு வழங்குவதற்கு அரசாங்கம் இதுவரையில் முன்னேற்றகரமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இதன் தாக்கத்தை வெளிவிவகார அமைச்சு எதிர்க்கொள்ள நேரிடும் என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



ஜி.எஸ்.பி வரிச்சலுகை 2028 ஆம் ஆண்டுவரை கிடைக்கும்!
[Tuesday 2026-11-24 07:00]

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி வரிச்சலுகை இலங்கைக்கு 2028 ஆம் ஆண்டுவரை கிடைக்கப்பெறும். நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டத்தைக் காட்டிலும் பலவீனமான அம்சங்களை உள்ளடக்கிய வகையில் தான் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தால் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. என வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.



மாவீரர்களுக்கு சபையில் அஞ்சலி!
[Tuesday 2026-11-24 07:00]

மாவீரர் வாரத்தில் எமது இனத்துக்காக குரல் கொடுத்து உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். எமது மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கமாவது தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்தார்.



ஜிஎஸ்பி வரிச் சலுகை இழக்கப்படும் ஆபத்து!
[Tuesday 2026-11-24 07:00]

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக அதைவிட ஆபத்தான புதிய சட்டத்தைக் கொண்டு வராமல், அதனை முழுமையாக நீக்க அல்லது செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். ஜி.எஸ்.பி வரிச்சலுகை இழக்கப்பட்டால், இலங்கையின் 14 பில்லியன் டொலர் ஏற்றுமதியில் 35 சதவீத பங்கைக் கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதி வரி 10 சதவீதத்தில் இருந்து 24 சதவீத வரி உயர்வடையக் கூடும் அபாயம் ஏற்படும் என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.



வடக்கு, கிழக்கு, ஊவா மாகாணங்களில் மழை பெய்யும்!
[Tuesday 2026-11-24 07:00]

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.



அனைத்து பல்கலைக்கழகங்களிலும் 25 ஆம் திகதி அடையாள வேலைநிறுத்தம்!
[Tuesday 2026-11-24 07:00]

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் எதிர்வரும் 25 ஆம் திகதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழகத் தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு அறிவித்துள்ளது.



முட்டை விலையைக் கட்டுப்படுத்தவும் இறைச்சி விலையை குறைக்கவும் இணக்கம்!
[Tuesday 2026-11-24 07:00]

பண்டிகைக் காலத்தில் முட்டை விலையை அதிகரிக்காமல் பேணுவதற்கு உற்பத்தியாளர் சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதுடன், கோழி இறைச்சியின் விலையைக் குறைக்கவும் உற்பத்தியாளர்கள் உறுதியளித்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.



பலாலி வந்த விமானம் தரையிறங்க முடியாமல் சென்னை திரும்பியது!
[Monday 2026-11-23 18:00]

சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் வந்த விமானம், யாழ்ப்பாணத்தில் நிலவிய மோசமான வானிலை காரணமாக மீண்டும் சென்னைக்கு திரும்பியுள்ளது.



பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தினால் நாடாளுமன்றில் வாக்குவாதம்!
[Monday 2026-11-23 18:00]

முன்மொழியப்பட்டுள்ள 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்' தொடர்பில் பரவலான பொதுமக்கள் கலந்தாலோசனைகள் முன்னெடுக்கப்படும் வரை இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படக் கூடாது என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியதையடுத்து, நாடாளுமன்றத்தில் இன்று பதற்றமான சூழல் ஏற்பட்டது.



பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!
[Monday 2026-11-23 18:00]

மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு ரி-56 ரக துப்பாக்கியால் சுட்டு ஐவரைக் கொலை செய்த சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளர்கள் இருவர் உள்ளடங்கலாக மூவரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 7ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இன்று (23) உத்தரவிட்டுள்ளார்.



முதன்மை பணவீக்கம் 8.5 வீதமாக அதிகரிப்பு!
[Monday 2026-11-23 18:00]

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் கடந்த ஒக்டோபர் மாதத்தில் 8.5 ஆக அதிகரித்துள்ளது. சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் இன்று (23) வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.



அமெரிக்காவுக்கு அருணி ரணராஜா- கனடாவுக்கு ரோஹன அம்பகொல்ல!
[Monday 2026-11-23 18:00]

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.



தாயின் தாலிக்கொடியை திருடி அடகுவைத்து 14இலட்சம் ரூபாவை காதலனுக்கு கொடுத்த யுவதி கைது!
[Monday 2026-11-23 18:00]

மட்டக்களப்பில் காதலனுக்காகத் தனது தாயின் எட்டரைப் பவுன் தாலிக்கொடியைத் திருடி, அடகு வைத்து ரூ. 14 இலட்சம் பணத்தை வழங்கிய பின்னர், உறவுக்காரப் பெண் திருடியதாகக் கைது செய்ய வைத்து நாடகமாடிய தனியார் வங்கி ஊழியரான 22 வயது யுவதி, நான்கு மாதங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



யோசித, கரன்னகொட குற்றச்சாட்டுகளை மறுப்பு!
[Monday 2026-11-23 18:00]

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளுக்குத் தாம் நிரபராதிகள் என யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோர் இன்று (23) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.



96 ஏகே ரவைகள், துப்பாக்கியுடன் இருவர் கைது!
[Monday 2026-11-23 18:00]

ஏகே 47 துப்பாக்கி ரவைகள் மற்றும் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை உடைமையில் வைத்திருந்த இரண்டு பேர் கொடிகாமம் மிருசுவில் பகுதியில் நேற்று (22) கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.



கட்டுப்பாட்டை இழந்த கார் - மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகளை மோதியது!
[Monday 2026-11-23 18:00]

யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது மோதியதில் பல மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் சேதமடைந்துள்ளன.



மல்லாகத்தில் 2.71 ஏக்கர் காணியை விடுவிக்கும் ஆவணம் கையளிப்பு!
[Monday 2026-11-23 18:00]

தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மல்லாகம் கோணப்புலம் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான 2.71 ஏக்கர் காணியை உத்தியோகபூர்வமாக விடுவிப்பதற்கான ஆவணம், பலாலி பாதுகாப்புப் படைகளின் சிவில் விவகாரங்களுக்கான சிரேஷ்ட அதிகாரி கேணல் WMAM நிசங்கவினால் , யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் இன்று யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.



கிளிநொச்சியில் மாவீரர் வளைவு அமைக்கச் சென்றவர்கள் கைது!
[Monday 2026-11-23 06:00]

கிளிநொச்சி - டிப்போ சந்தியில் மாவீரர் நினைவு வளைவு அமைக்கும் பணியில் ஈடுபடுவதற்காகச் சென்ற பலர் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்களும், கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களும் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.



கோப்பாயில் மாவீரர் நினைவாலயம்!
[Monday 2026-11-23 06:00]

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.



திருகோணமலையில் ரயில் மோதி இருவர் பலி!
[Monday 2026-11-23 06:00]

திருகோணமலை, மீன்பிடித் துறைமுகத்திற்கு அருகில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இரண்டு நபர்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.



பிரபாகரன் சரணடைய மறுத்து தன்மானத்துடன் இறுதிவரை போரிட்டு உயிரிழந்தார்!
[Monday 2026-11-23 06:00]

பிரபாகரன் சரணடைவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டபோதும், தன்மானப் பிடிவாதத்துடன் அதனை நிராகரித்து இறுதிவரை போரிட்டு உயிரிழக்கத் தீர்மானித்தார். விடுதலைப் புலிகளின் தலைவர்களை உயிருடன் கைது செய்திருந்தால் வடக்கில் மீண்டும் யுத்தம் ஆரம்பமாகியிருக்கும் என முன்னாள் இராணுவத் தளபதியும் ஃபீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.


Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா