Untitled Document
November 25, 2026 [GMT]
தெற்காசியாவின் முதலாவது 'எயார் டோம்' கட்டமைப்பு கொழும்பு துறைமுக நகரில்!
[Wednesday 2026-11-25 08:00]


தெற்காசியாவின் முதலாவது 'எயார் டோம்' (Air Dome) கட்டமைப்பு கொழும்பு துறைமுக நகரில் நிறுவப்பட்டுள்ளது. 4,000 பேர் வரை பங்கேற்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விசேட உள்ளக நிகழ்வு வளாகம், டிசம்பர் மாத இறுதிக்குள் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெற்காசியாவின் முதலாவது 'எயார் டோம்' (Air Dome) கட்டமைப்பு கொழும்பு துறைமுக நகரில் நிறுவப்பட்டுள்ளது. 4,000 பேர் வரை பங்கேற்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விசேட உள்ளக நிகழ்வு வளாகம், டிசம்பர் மாத இறுதிக்குள் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  

எவ்வாறாயினும், இது முழுமையாகச் செயற்பாட்டிற்கு வருவதற்கு முன்னர் மேலும் சில சிவில் கட்டுமானப் பணிகள் நிறைவடையவுள்ளன.

மாநாடுகள், கண்காட்சிகள், வர்த்தக சந்திப்புகள் மற்றும் பாரியளவிலான நிகழ்வுகளை நடத்துவதற்கு இந்த வளாகம் பயன்படுத்தப்படவுள்ளதாக 'சீ.எச்.ஈ.சி. போர்ட் சிட்டி கொழும்பு' (CHEC Port City Colombo) நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், காணி அபிவிருத்தி மற்றும் விற்பனைப் பிரிவின் பிரதிப் பொது முகாமையாளருமான சலக்க விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

துபாய் உள்ளிட்ட சர்வதேச நகரங்களிலுள்ள இவ்வாறான வசதிகளை முன்மாதிரியாகக் கொண்டு இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக நகரில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள நிரந்தர மாநாட்டு மற்றும் கண்காட்சி மையம் உருவாக்கப்படும் வரை, இந்த 'எயார் டோம்' வளாகம் இடைக்கால வசதியாகப் பயன்படுத்தப்படவுள்ளது.

திட்டமிடப்பட்டுள்ள நிரந்தர மையத்தில் 4,000 பேர் பங்கேற்கக்கூடிய உள்ளகப் பலநோக்கு மண்டபம் ஒன்றும், வெளிப்புறத்தில் 5,000 பேருக்கு வசதிகள் செய்துகொடுக்கக்கூடிய வளாகமும் உள்ளடக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த மையத்துக்கு அண்மையில் 400 முதல் 450 வரையிலான அறைகளைக் கொண்ட நட்சத்திர ஹோட்டல் ஒன்றை நிர்மாணிப்பதற்கும் கொழும்பு துறைமுக நகரின் பிரதான திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

எயார் டோம் (Air Dome) என்பது தூண்கள் அல்லது சுவர்கள் இன்றி, தொடர்ச்சியாகச் செலுத்தப்படும் காற்றின் அழுத்தத்தால் தாங்கிப் பிடிக்கப்படும் ஒரு பிரம்மாண்டமான, பலமான துணியாலான கட்டமைப்பாகும். இதை மிக விரைவாகவும் குறைந்த செலவிலும் அமைக்க முடியும் என்பதால், நிரந்தரக் கட்டடங்கள் உருவாகும் வரை மாநாடுகள், கண்காட்சிகள் மற்றும் பெரிய நிகழ்வுகளை நடத்த இடைக்கால வசதியாகப் பயன்படுத்துகின்றனர்.

  
   Bookmark and Share Seithy.com



மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதை தடுக்க பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுகிறது!
[Wednesday 2026-11-25 08:00]

பேரினவாத அரசு எம்மை அடிமைகளாகவே வைத்திருக்கிறது என்றும் பயங்கரவாத தடைச் சட்டம் என கொண்டு வந்து எங்கள் மாவீரர்களின் அஞ்சலிகளை செலுத்த விடாமல் தடுத்து கொண்டே வருகின்றனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் செயலாளருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.



காலத்தை வீணடிக்கும் செயற்பாடுகளில் பங்காளியாக முடியாது!
[Wednesday 2026-11-25 08:00]

மாகாணசபைத் தேர்தல் முறைமை குறித்து ஆராயும் பாராளுமன்ற விசேட செயற்குழுவின் மீது நம்பிக்கையில்லை. முன்வைக்கப்படும் சிறந்த யோசனைகள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பில் குழு இதுவரையில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. காலத்தை வீணடிக்கும் செயற்பாடுகளில் பங்காளியாக முடியாது என்பதால் குழு கூட்டத்தில் கலந்துக் கொள்ளவில்லை என மாகாணசபைத் தேர்தல் முறைமை தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற விசேட செயற்குழுவின் உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.



இன்று 100 மி்.மீற்றருக்கும் அதிக மழை!
[Wednesday 2026-11-25 08:00]

நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.



இலங்கை பொலிசை மேம்படுத்த சீனா உதவி!
[Wednesday 2026-11-25 08:00]

இலங்கை பொலிஸ் அதிகாரிகளின் திறன்களை மேம்படுத்துவதற்கும், பொலிஸ் உட்கட்டமைப்பு வசதிகளை நவீனமயப்படுத்துவதற்கும் சீனா ஆதரவளிக்கவுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையில் நேற்று கைச்சாத்திடப்பட்டது.



பணம் அச்சிடப்படாவிட்டால் பணவீக்கம் அதிகரிப்பது எப்படி?
[Wednesday 2026-11-25 08:00]

பணம் அச்சிடப்படவில்லை எனக் கூறப்படும் நிலையில், நாட்டில் பணவீக்க வீதம் தொடர்ந்து அதிகரிப்பது எவ்வாறு என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.



முன்கூட்டியே ETA அனுமதி பெறாமல் இலங்கைக்கு விமானப் பயணம் மேற்கொள்ள அனுமதி!
[Wednesday 2026-11-25 08:00]

இலங்கையின் மின்னணு பயண அங்கீகார (ETA) விண்ணப்பக் கட்டமைப்பு தற்காலிகமாகச் செயலிழந்துள்ளதால், பெரும்பாலான நாடுகளைச் சேர்ந்த பயணிகள் முன்கூட்டியே ETA அனுமதியைப் பெறாமல் இலங்கைக்கு விமானப் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



தையிட்டி சட்டவிரோத விகாரை காணிகளை மீளக் கையளிக்க கோரி போராட்டம்!
[Tuesday 2026-11-24 20:00]

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (24) இரண்டாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்து சமுத்திரத்தில் நிலநடுக்கம்- இலங்கைக்கு சுனாமி ஆபத்து இல்லை!
[Tuesday 2026-11-24 20:00]

இந்து சமுத்திரத்தில் மொறிசியஸ் - ரியூனியன் தீவுக்கு அண்மையில் உள்ள கடலில் ஏற்பட்ட 6.5 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை நிலையம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.



வட்டுவாகல் விபத்தில் முதியவர் பலி!
[Tuesday 2026-11-24 20:00]

முல்லைத்தீவு – வட்டுவாகல் வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில், துவிச்சக்கர வண்டியில் பயணித்த வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.



உரிய தீர்வை வழங்காவிட்டால் அடுத்த வாரம் கடும் தொழிற்சங்க நடவடிக்கை! - மருத்துவர்கள் எச்சரிக்கை.
[Tuesday 2026-11-24 20:00]

நாட்டின் இலவச சுகாதாரச் சேவையைப் பாதுகாக்கவும், மருத்துவர்களை நாட்டில் தக்கவைக்கவும் தமது ஐந்து பிரதான கோரிக்கைகளுக்கு இம்மாத இறுதிக்குள் அரசாங்கம் உரிய தீர்வை வழங்காவிட்டால், அடுத்த வாரத்தில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியேற்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளரும் ஊடகப் பேச்சாளருமான வைத்தியர் லசித்த தம்மிக எச்சரித்துள்ளார்.



காற்று மாசு நீங்கியது!
[Tuesday 2026-11-24 17:00]

நாட்டின் வளிமண்டலத் தரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த இந்தியாவின் நச்சுப் புகை, வடகிழக்குப் பருவக்காற்றுடன் இணைந்து விலகிச் சென்றுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை (CEA) தெரிவித்துள்ளது.



நவம்பர் 26, 27இல் மூடப்படும் அமெரிக்க தூதரகம்!
[Tuesday 2026-11-24 17:00]

எதிர்வரும் நவம்பர் 26 மற்றும் 27 ஆகிய இரு தினங்களிலும் இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மூடப்பட்டிருக்கும் என அத்தூதரகம் தனது 'எக்ஸ்' (X) தளத்தில் அறிவித்துள்ளது.



எல்லை நிர்ணயம் நிறைவடைந்த பின்னரே கல்முனை, சாய்ந்தமருது தேர்தல்!
[Tuesday 2026-11-24 17:00]

கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர சபை ஆகியவற்றின் எல்லை நிர்ணயப் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர், தேர்தலுக்கான நடவடிக்கைகள் அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



மாணவியைக் கடத்தி பாலியல் வன்புணர்வு- சப் இன்ஸ்பெக்டருக்கு 50 ஆண்டு சிறைத்தண்டனை!
[Tuesday 2026-11-24 16:00]

பாடசாலை மாணவியொருவரைக் கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில், குருநாகல் மேல் நீதிமன்றத்தில் தனித்தனியாக நான்கு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு 50 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.



உள்ளகப் பொறிமுறையில் இதுவரை தீர்வு இல்லை!
[Tuesday 2026-11-24 07:00]

சர்வதேச அரங்கில் தொடர்ச்சியாக கேள்விக்குள்ளாக்கப்படும் இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு விசேட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். வெளிவிவகாரத்துறை அமைச்சர் சர்வதேச அரங்குக்கு சென்று 'உள்ளக பொறிமுறை ஊடாக தீர்வு' என்று குறிப்பிடுகிறார். ஆனால் இலங்கையில் உள்ளக பொறிமுறைக்கான முன்னேற்றகரமான எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட தரப்பும் உள்ளக பொறிமுறையை ஏற்கவில்லை.இதன் தாக்கத்தை அரசாங்கம் எதிர்கொள்ள நேரிடும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.



ஜி.எஸ்.பி வரிச்சலுகை 2028 ஆம் ஆண்டுவரை கிடைக்கும்!
[Tuesday 2026-11-24 07:00]

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி வரிச்சலுகை இலங்கைக்கு 2028 ஆம் ஆண்டுவரை கிடைக்கப்பெறும். நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டத்தைக் காட்டிலும் பலவீனமான அம்சங்களை உள்ளடக்கிய வகையில் தான் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தால் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. என வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.



மாவீரர்களுக்கு சபையில் அஞ்சலி!
[Tuesday 2026-11-24 07:00]

மாவீரர் வாரத்தில் எமது இனத்துக்காக குரல் கொடுத்து உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். எமது மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கமாவது தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்தார்.



ஜிஎஸ்பி வரிச் சலுகை இழக்கப்படும் ஆபத்து!
[Tuesday 2026-11-24 07:00]

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக அதைவிட ஆபத்தான புதிய சட்டத்தைக் கொண்டு வராமல், அதனை முழுமையாக நீக்க அல்லது செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். ஜி.எஸ்.பி வரிச்சலுகை இழக்கப்பட்டால், இலங்கையின் 14 பில்லியன் டொலர் ஏற்றுமதியில் 35 சதவீத பங்கைக் கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதி வரி 10 சதவீதத்தில் இருந்து 24 சதவீத வரி உயர்வடையக் கூடும் அபாயம் ஏற்படும் என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.



வடக்கு, கிழக்கு, ஊவா மாகாணங்களில் மழை பெய்யும்!
[Tuesday 2026-11-24 07:00]

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.



அனைத்து பல்கலைக்கழகங்களிலும் 25 ஆம் திகதி அடையாள வேலைநிறுத்தம்!
[Tuesday 2026-11-24 07:00]

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் எதிர்வரும் 25 ஆம் திகதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழகத் தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு அறிவித்துள்ளது.


Karan Remax-2010
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா