Untitled Document
November 26, 2026 [GMT]
வெற்றியாளர்களால் எழுதப்பட்ட வரலாற்றை திருத்தி எழுத வேண்டும்!
[Thursday 2026-11-26 06:00]


கறுப்பு ஜூலை கலவரத்தை ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமே திட்டமிட்டு உருவாக்கிவிட்டு, அந்தப் பழியை மக்கள் விடுதலை முன்னணி உள்ளடங்கலான இடதுசாரி அரசியல் கட்சிகள் மீது சுமத்தி கட்சிகளை தடை செய்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குற்றம் சாட்டினார்.

கறுப்பு ஜூலை கலவரத்தை ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமே திட்டமிட்டு உருவாக்கிவிட்டு, அந்தப் பழியை மக்கள் விடுதலை முன்னணி உள்ளடங்கலான இடதுசாரி அரசியல் கட்சிகள் மீது சுமத்தி கட்சிகளை தடை செய்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குற்றம் சாட்டினார்.

  

மக்கள் விடுதலை முன்னணியின் லெப்ட்லைன் நிகழ்ச்சியில் 'திரிக்கப்பட்ட வரலாற்றில் கார்த்திகை மாதத்தின் நினைவுகள்' எனும் தொனிப்பொருளில் செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

1977 ஆம் ஆண்டு ஆறில் ஐந்து பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சிக்கு வந்த ஜே.ஆர். ஜயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், இலங்கையில் நிலவிய அரச நலன்புரிவாத ஆட்சி முறையை மாற்றித் திறந்த பொருளாதாரக் கொள்கையைக் கொண்டு வருவதற்காகவே ஜனநாயக விரோத அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டது. புதிய பொருளாதார மாற்றங்களுக்கு மக்களிடமிருந்து எதிர்ப்பு எழும் என்பதை அறிந்திருந்த ஜே.ஆர். ஜயவர்தன, எதிர்ப்பாளர்களை நசுக்கிக் கொண்டே தனது அரசியல் பயணத்தை முன்னெடுத்தார். ஆட்சிக்கு வந்த ஆரம்பத்திலிருந்தே எதிரிவீர சரச்சந்திர போன்ற அறிஞர்கள் வீதியில் தாக்கப்பட்டதோடு, நீதிபதிகளின் வீடுகளுக்குக் கற்கள் வீசப்பட்டு நீதித்துறையின் சுதந்திரமும் சிதைக்கப்பட்டது.

1977 பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எட்டு ஆசனங்களுக்குச் சரிந்து பலவீனமடைந்திருந்த நிலையில், ஜே.ஆர். ஜயவர்தன ஆணைக்குழுவொன்றை அமைத்து சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் பீலிக்ஸ் பண்டாரநாயக்க ஆகியோரின் குடியுரிமையை ரத்துச் செய்தார். இதனால் அக்கட்சி உடைந்து போனதுடன், பாராளுமன்ற எதிர்க்கட்சியாக இருந்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர்களான அமிர்தலிங்கம் போன்றோரையும் அரசாங்கம் அடக்க முற்பட்டது. இத்தகைய சூழலில் 1977 இற்குப் பின்னர் பகிரங்க அரசியலை மீண்டும் ஆரம்பித்த மக்கள் விடுதலை முன்னணி, 1980 ஆம் ஆண்டளவில் பிரதான இடதுசாரி மற்றும் புரட்சிகர இயக்கமாகப் பலமடைந்தது. 1982 ஜனாதிபதித் தேர்தலில் 273,428 வாக்குகளை எமது கட்சி பெற்ற போது, தனது உண்மையான அரசியல் சவால் மக்கள் விடுதலை முன்னணியே என்பதை ஜே.ஆர். ஜயவர்தன உணர்ந்தார்.

இதன் காரணமாகவே 1983 பொதுத் தேர்தலை நடத்தினால் ஆட்சி பறிபோகும் என அஞ்சிய அவர், 1982 டிசம்பரில் மோசடியான சர்வஜன வாக்கெடுப்பை நடத்திப் பாராளுமன்ற ஆயுட்காலத்தை மேலும் ஆறு வருடங்களுக்கு நீடித்தார். இதற்கெதிராக ரோஹண விஜேவீர நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ததுடன், தேர்தல்கள் ஆணையாளர் சந்திரானந்த டி சில்வாவிடமும் தேர்தல் முறைகேடுகள் குறித்த அறிக்கை இருந்தது. 1983 மே தினப் பேரணியை நாம் பலமாக நடத்தியதைத் தொடர்ந்து, மக்கள் விடுதலை முன்னணியை வேட்டையாடாமல் பயணிக்க முடியாது என்ற முடிவுக்கு ஜே.ஆர். ஜயவர்தன வந்தார்.

அதன்படி 1983 ஜூலை மாதம் வடக்கில் இராணுவத்தினர் கொல்லப்பட்ட சம்பவத்தைக் காரணமாகக் கொண்டு, கிராம மட்டங்களிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் குண்டர் குழுக்கள் ஊடாகக் கறுப்பு ஜூலை கலவரத்தை அரசாங்கம் ஆரம்பித்தது. தமிழ் மக்கள் கொல்லப்பட்டு சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டதோடு, தமிழ் வைத்தியர்கள் மற்றும் பொறியியலாளர்கள் வெளியேறியதால் நாடு இரண்டாகப் பிரிந்தது. திரைப்படக் கலையகங்கள் எரிக்கப்பட்டு கலை வரலாறு அழிக்கப்பட்டது. பின்னர் இதனைப் பயன்படுத்தி 1983 ஜூலை 29 ஆம் திகதி மக்கள் விடுதலை முன்னணி, நவசமசமாஜக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றை அரசாங்கம் தடை செய்தது.

தடைக்குப் பின்னரும் மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதிச் செயலாளர் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபைக்குக் கடிதங்கள் எழுதித் தடையை நீக்கவே 1987 வரை முயற்சித்தோம். தொழிற்சங்கங்கள் ஊடாக மாலிமாவ பத்திரிகையை வெளியிட்டும், ரோஹண விஜேவீர எழுதிய தமிழ் ஈழப் போராட்டம் குறித்த ஆய்வு நூலை 1985 மே தினத்தன்று சோமவங்ச மல்லிகாராச்சி ஊடாக வெளியிட்டும் செயற்பட்டோம். நந்தா மாலினியின் பாடல்கள், நாடகங்கள் மற்றும் திவயின பத்திரிகை ஊடாக அடக்குமுறைக்கு எதிரான கருத்துக்கள் வலுப்பெற்றன.

கடுவலை போல் பெரேரா போன்ற குண்டர் குழுக்களால் கூட்டங்கள் தாக்கப்பட்டு, 1987 இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்கு எதிராக ஊர்வலம் சென்ற நூற்று நாற்பதுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ராஜீவ் காந்தியைக் கடற்படை வீரர் தாக்கிய சம்பவம் இராணுவத்திற்குள்ளிருந்த அதிருப்தியைக் காட்டியது. சகல ஜனநாயக வழிகளும் அடைக்கப்பட்ட நிலையிலேயே 1987 இல் ஆயுதம் ஏந்த நேரிட்டது. வெற்றியாளர்களால் எழுதப்பட்டு பாதிக்கப்பட்டவர்களான எம்மைக் குற்றவாளிகளாக்கிய இந்த வரலாறு, எதிர்காலச் சந்ததியினருக்காக நடுநிலையான புத்திஜீவிகளால் மீண்டும் சரியாக எழுதப்பட வேண்டும் என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



வல்வெட்டித்துறையில் தலைவர் பிரபாகரனின் 72ஆவது பிறந்தநாள்! Top News
[Thursday 2026-11-26 17:00]

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 72ஆவது பிறந்தநாள் நிகழ்வுகள் இன்று வல்வெட்டித்துறை ஆலடிப் பகுதியில் இடம்பெற்றன. இதனை முன்னிட்டு, அவரது பூர்வீக வீடு அமைந்திருந்த காணி சிவப்பு, மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.



இலங்கை அரசாங்கம் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்!
[Thursday 2026-11-26 17:00]

ஆயுத மோதலின் போது மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு முழுமையான இழப்பீடுகளை வழங்க வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது.



ரஷ்யா- இலங்கை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்!
[Thursday 2026-11-26 17:00]

இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு ரஷ்யாவிற்குத் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ள நபர்களையும், அங்கு மறைத்து வைக்கப்பட்டுள்ள சட்டவிரோத சொத்துக்களையும் மீளப் பெற்றுக்கொள்வதற்கான முழுமையான ஒத்துழைப்பை வழங்க ரஷ்ய கூட்டமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளது.



பூஸா துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் இராணுவ மேஜர் பலி!
[Thursday 2026-11-26 17:00]

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முன்னாள் இராணுவ மேஜர் ஒருவரே பூஸா பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.



இந்தியா பயணமானார் விஜித ஹேரத்!
[Thursday 2026-11-26 17:00]

இந்து சமுத்திர கரையோர நாடுகள் சங்கத்தின் 25 ஆவது அமைச்சர்கள் பேரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் இலங்கைத் தூதுக்குழுவிற்குத் தலைமை தாங்கி, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் வியாழக்கிழமை இந்தியா சென்றுள்ளார்.



நெடுந்தீவில் புதிதாக அமைக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள்!
[Thursday 2026-11-26 17:00]

யாழ்ப்பாணம், நெடுந்தீவில் புதிதாக அமைக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருளைக் கொண்டு செல்லும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.



திருகுவலையால் கணவனை தாக்கி கொலை செய்த மனைவிக்கு மரணதண்டனை!
[Thursday 2026-11-26 17:00]

யாழ்ப்பாணம் - அரியாலை, பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், உயிரிழந்தவரின் மனைவிக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நேற்று மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.



குற்றத்தை ஒப்புக் கொண்ட டயானா- ஜனவரி 14இல் தண்டனை!
[Thursday 2026-11-26 17:00]

செல்லுபடியாகும் விசா அனுமதிப்பத்திரம் இன்றி இலங்கையில் தங்கியிருந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவுக்குத் தண்டனை விதிப்பதற்காக, குறித்த வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 14ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



ரோஹித ராஜபக்சவிடம் 4 மணிநேரம் விசாரணை!
[Thursday 2026-11-26 17:00]

சுப்ரீம்சாட் (SupremeSAT) செயற்கைக்கோள் ஒப்பந்தம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைக்கு வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இளைய மகனான ரோஹித ராஜபக்சவை, நிதி மோசடி விசாரணைப் பிரிவு அழைத்திருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர். நிதி மோசடி விசாரணைப் பிரிவின் வளாகத்தில் சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர், ரோஹித ராஜபக்ச அங்கிருந்து வெளியேறினார்



திருகோணமலையை ஊடறுக்கப் போகும் கானி புயல்!
[Thursday 2026-11-26 06:00]

மலேசியாவின் பிந்துலு(Bintulu) பகுதிக்கு வடக்காக ஒரு காற்றுச் சுழற்சி புதன்கிழமை (25.11.2026) உருவாகியுள்ளது. இது வெள்ளிக்கிழமை (27.11.2026) மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து அந்தமான் தீவுகளுக்கு தெற்காக நகரும். அதன்பின் மத்திய வங்காள விரிகுடாவிற்கு வரும்போது அது புயலாக வலுப்பெறும். இந்த புயலுக்கு மாலைதீவு இட்ட 'கானி( Kaani)' என்ற பெயர் வழங்கப்படும்.



மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மீளப்பெற அனுமதியோம்!
[Thursday 2026-11-26 06:00]

13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் ஊடாக மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மீளப்பெறும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் ஒருபோதும் ஒத்துப்போக மாட்டோம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ப. சத்தியலிங்கம் தெரிவித்தார்.



கைதடி வைத்தியசாலைக்கான புலம்பெயர் நிதியை தடுக்கிறது அரசாங்கம்!
[Thursday 2026-11-26 06:00]

“எம்மிடம் பிரதேச வேறுபாடு இல்லை, இனவாதமில்லை என்று குறிப்பிட்டுக்கொண்டு, இந்த அரசாங்கமும் தமிழ் மக்களையும் தமிழ் பிரதேசங்களையும் புறக்கணிக்கிறது எனத தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.



ஊடக அடக்குமுறை வேண்டாம்!
[Thursday 2026-11-26 06:00]

ஊடகங்களுக்கு அரச ஒழுங்குமுறைப்படுத்தல் பொருத்தமானதல்ல; சுய ஒழுங்குமுறைப்படுத்தல் மட்டுமே முக்கியமானது. எனவே, ஊடக அடக்குமுறை பொருத்தமற்றது என்பதால் அவ்வாறான செயல்களைச் செய்ய வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.



புதிய சட்டங்களால் இளைஞர்களுக்கு தடை போட முயற்சி!
[Thursday 2026-11-26 06:00]

அரசாங்கம் பழைய பயங்கரவாதச் சட்டத்திற்குக் கதவடைத்து, புதிய மூன்று சட்டங்களின் ஊடாக அந்தக் கதவுகளைத் திறக்கப்போகிறதா என்ற அச்சம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது; அரசாங்கம் கொண்டுவரவுள்ள புதிய சட்டங்களால் இளைஞர்களின் செயற்பாடுகளுக்குத் தடை ஏற்படவுள்ளது என எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவும் பாராளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.



மாகாண அதிகாரங்களை மீளப்பெறும் முயற்சியை அரசாங்கம் தவிர்க்க வேண்டும்!
[Thursday 2026-11-26 06:00]

மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மீளப்பெறும் முயற்சியை அரசாங்கம் தவிர்க்க வேண்டும்.வடக்கு மாகாணங்களில் உள்ள அரச வைத்தியசாலைகளை மத்திய அரசுக்கு பொறுப்பாக்குவதை விடுத்து அந்த வைத்தியசாலைகளில் நிலவும் ஆளனி மற்றும் பௌதீகவளப் பற்றாக்குறைக்கு தீர்வளிக்க வேண்டும். அரசாங்கத்தின் அதிகார பகிர்வு கொள்கை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.



வாள்வெட்டுத் தாக்குதலுக்கு எதிராக பொலிஸ் நிலையம் முன் ஆர்ப்பாட்டம்!
[Thursday 2026-11-26 06:00]

வவுணதீவு வாழைக்காலை பிரதேசத்தில் கோபு வாள்வெட்டு குழுவின் தாக்குதலை கண்டித்தும் வாள்வெட்டு தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இளைஞனுக்கு நீதி கோரியும் இந்த காடையர் குழுவிற்கு எதிராக புதன்கிழமை (25) பொதுமக்கள் பொலிஸ் நிலையத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இளையோர் மத்தியில் எச்ஐவி தொற்றாளர்கள் அதிகரிப்பு!
[Thursday 2026-11-26 06:00]

20 முதல் 24 வயதுக்குட்பட்ட இளையோர் மத்தியில் எச்ஐவி தொற்றாளர்கள் பதிவாவது அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.



இன்றும் தொடரும் மழை!
[Thursday 2026-11-26 06:00]

வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.



சுரேஷ் சலேயும், அசாத் மௌலானாவும் ஒரே ஹோட்டலில் தங்கிய ஆதாரம் சிக்கியது!
[Wednesday 2026-11-25 17:00]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் முக்கிய சந்தேகநபரான சுரேஷ் சலேயும், பிள்ளையானின் முன்னாள் செயலாளரான அசாத் மௌலானாவும்,உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்ததாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



வன்னியில் வனவளத் திணைக்களத்தினால் மக்களின் காணிகள் அபகரிப்பு!
[Wednesday 2026-11-25 17:00]

வனவளப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களங்கள் உள்ளிட்ட அரச திணைக்களங்களால் வன்னியில் மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.


Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா