Untitled Document
November 27, 2026 [GMT]
பெருமளவு போதைப்பொருளுடன் சிக்கியது மற்றொரு படகு!
[Friday 2026-11-27 06:00]


தேவேந்திரமுனைக்கு தெற்கே உள்ள சர்வதேச கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, ஹெரோயின் மற்றும் ஐஸ் என சந்தேகிக்கப்படும் பொருட்களை கடத்திச் சென்ற படகொன்றுடன் 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேவேந்திரமுனைக்கு தெற்கே உள்ள சர்வதேச கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, ஹெரோயின் மற்றும் ஐஸ் என சந்தேகிக்கப்படும் பொருட்களை கடத்திச் சென்ற படகொன்றுடன் 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவினர் மற்றும் கடல்சார் பங்காளர்களுடன் இணைந்து, இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்துக்கு அப்பால் கடற்படையினர் முன்னெடுத்த போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் பலனாகவே இந்த வெற்றி கிடைத்துள்ளது.

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கொடியற்ற குறித்த படகு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுடன் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைப்பதற்காக தற்போது கரைக்குக் கொண்டுவரப்படுகின்றது.

இந்து சமுத்திரத்தின் கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் சுதந்திரமான கடல்சார் பயணத்தை உறுதிப்படுத்தும் வகையில், பிராந்திய மற்றும் சர்வதேச பங்காளர்களுடன் இலங்கை கடற்படை பேணிவரும் வலுவான ஒருங்கிணைப்பே இந்த நடவடிக்கை வெற்றியடையக் காரணமாக அமைந்துள்ளது.

மேலும், உலகின் மிகப்பெரிய பன்னாட்டு கடற்படைக் கூட்டணியான 'கூட்டு கடல்சார் படையில்' (Combined Maritime Forces) இலங்கை கடற்படை அங்கம் வகிப்பதும், கொழும்பு தகவல் இணைப்பு மத்திய நிலையத்தின் ஊடாக நிகழ்நேரத் துல்லியமான தரவுகளுடன் அனைத்துக் கடல்சார் தரப்பினருக்கும் வழங்கப்படும் விழிப்புணர்வும் இதற்குப் பெரிதும் துணைபுரிந்துள்ளன.

கொழும்பு தகவல் இணைப்பு மத்திய நிலையம் ஊடாகப் புலனாய்வுத் தகவல்கள் மற்றும் கடல்சார் அச்சுறுத்தல்களை மதிப்பிடுவதற்கு செயற்கைக்கோள் தொழில்நுட்பம் உள்ளடங்கலான நவீன தொழில்நுட்பத் தரவுகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. அத்துடன், இலங்கை விமானப்படையுடன் இணைந்து முன்னெடுக்கப்படும் கூட்டு வான்வழி கண்காணிப்பு நடவடிக்கைகளின் மூலம் கடல்சார் கண்காணிப்புப் பரப்பு மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கில் கடந்த 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட "முழு நாடுமே ஒன்றாக" (ரடம எகட) தேசிய செயற்திட்டத்தின் தொடர்ச்சியாகவே சர்வதேச கடற்பரப்பில் இந்த போதைப்பொருள் முறியடிப்பு நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த தேசிய செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இதுவரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின் ஊடாக, 116 பில்லியன் ரூபாவுக்கும் (11,600 கோடி ரூபா) அதிகமான பெறுமதியுடைய போதைப்பொருட்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில், 4 வெளிநாட்டுப் படகுகள் உட்பட மொத்தம் 66 படகுகளும், 18 வெளிநாட்டவர்கள் உட்பட 379 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



மாவீரர் நாள் இன்று - நினைவேந்தலுக்கு தயாராகியுள்ள தமிழ் மக்கள்!
[Friday 2026-11-27 06:00]

தமிழ் இனத்தின் விடிவுக்காகவும், தமிழர்களின் உரிமைக்காகவும் போராடி சாவினைத் தழுவிய வீரமறவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் இன்றாகும். தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்கள் எங்கிலும் இன்று மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்படவுள்ளன.



பிரபாகரன் என்ற பெயரை உச்சரிப்பதையே எதிர்க்கும் உங்களால் இனப்பிரச்சினையை எப்படி தீர்க்க முடியும்?
[Friday 2026-11-27 06:00]

பாராளுமன்றத்தில் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெயரை உச்சரிப்பதற்கே எதிர்ப்பு தெரிவிக்கும் உங்களால், இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்க முடியும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.



தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளை ட்ரோனில் படம் பிடித்த இளைஞன் கைது!
[Friday 2026-11-27 06:00]

வல்வெட்டித்துறையில் வியாழக்கிழமை நடைபெற்ற தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 72 ஆவது பிறந்தநாள் நிகழ்வின்போது, அனுமதியின்றி ட்ரோன் கமராவைப் பயன்படுத்திப் படம்பிடித்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுப் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.



புதிய சட்டத்தால் ஜனநாயகம் மரணிக்கும்- சாணக்கியன் எச்சரிக்கை!
[Friday 2026-11-27 06:00]

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்வதாக குறிப்பிட்டுக் கொண்ட அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் சட்டமானால் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் மரணிக்கும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் எச்சரிக்கை விடுத்தார்.



29ஆம் திகதி வளிமண்டலத் தளம்பல் நிலை உருவாகக்கூடும்!
[Friday 2026-11-27 06:00]

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நவம்பர் 29 ஆம் திகதியளவில் கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை ஒன்று உருவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.



வடக்கு, கிழக்கில் புதிதாக காணிகளை ஆக்கிரமிக்கவில்லை!
[Friday 2026-11-27 06:00]

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வனஜீவராசிகள் திணைக்களம் புதிதாக காணிகளை ஆக்கிரமிக்கவில்லை. என சுற்றாடல் துறை பிரதி அமைச்சர் அன்டன் ஜயக்கொடி தெரிவித்தார்.



இன்றும் மழைக்கு வாய்ப்பு!
[Friday 2026-11-27 06:00]

நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (27) இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.



ஜனநாயக உரிமைகளை பாதிக்கும் சட்டங்களை இயற்றமாட்டோம்!
[Friday 2026-11-27 06:00]

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை தடுப்பதற்கு பலமாக சட்டங்களை உருவாக்க வேண்டும். நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதிக்கும் வகையில் எச்சந்தர்ப்பத்திலும் சட்டமியற்ற போவதில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.



ஒல்லாந்தர் எடுத்துச் சென்ற துப்பாக்கிகளை ஒப்படைக்கிறது நெதர்லாந்து!
[Friday 2026-11-27 06:00]

ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் கண்டி இராஜ்ஜியத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட இலங்கைக்கு உரித்தான இரண்டு துப்பாக்கிகளை மீண்டும் நாட்டிற்கே கையளிப்பதற்கு நெதர்லாந்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது.



வல்வெட்டித்துறையில் தலைவர் பிரபாகரனின் 72ஆவது பிறந்தநாள்! Top News
[Thursday 2026-11-26 17:00]

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 72ஆவது பிறந்தநாள் நிகழ்வுகள் இன்று வல்வெட்டித்துறை ஆலடிப் பகுதியில் இடம்பெற்றன. இதனை முன்னிட்டு, அவரது பூர்வீக வீடு அமைந்திருந்த காணி சிவப்பு, மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.



இலங்கை அரசாங்கம் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்!
[Thursday 2026-11-26 17:00]

ஆயுத மோதலின் போது மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு முழுமையான இழப்பீடுகளை வழங்க வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது.



ரஷ்யா- இலங்கை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்!
[Thursday 2026-11-26 17:00]

இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு ரஷ்யாவிற்குத் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ள நபர்களையும், அங்கு மறைத்து வைக்கப்பட்டுள்ள சட்டவிரோத சொத்துக்களையும் மீளப் பெற்றுக்கொள்வதற்கான முழுமையான ஒத்துழைப்பை வழங்க ரஷ்ய கூட்டமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளது.



பூஸா துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் இராணுவ மேஜர் பலி!
[Thursday 2026-11-26 17:00]

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முன்னாள் இராணுவ மேஜர் ஒருவரே பூஸா பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.



இந்தியா பயணமானார் விஜித ஹேரத்!
[Thursday 2026-11-26 17:00]

இந்து சமுத்திர கரையோர நாடுகள் சங்கத்தின் 25 ஆவது அமைச்சர்கள் பேரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் இலங்கைத் தூதுக்குழுவிற்குத் தலைமை தாங்கி, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் வியாழக்கிழமை இந்தியா சென்றுள்ளார்.



நெடுந்தீவில் புதிதாக அமைக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள்!
[Thursday 2026-11-26 17:00]

யாழ்ப்பாணம், நெடுந்தீவில் புதிதாக அமைக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருளைக் கொண்டு செல்லும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.



திருகுவலையால் கணவனை தாக்கி கொலை செய்த மனைவிக்கு மரணதண்டனை!
[Thursday 2026-11-26 17:00]

யாழ்ப்பாணம் - அரியாலை, பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், உயிரிழந்தவரின் மனைவிக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நேற்று மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.



குற்றத்தை ஒப்புக் கொண்ட டயானா- ஜனவரி 14இல் தண்டனை!
[Thursday 2026-11-26 17:00]

செல்லுபடியாகும் விசா அனுமதிப்பத்திரம் இன்றி இலங்கையில் தங்கியிருந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவுக்குத் தண்டனை விதிப்பதற்காக, குறித்த வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 14ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



ரோஹித ராஜபக்சவிடம் 4 மணிநேரம் விசாரணை!
[Thursday 2026-11-26 17:00]

சுப்ரீம்சாட் (SupremeSAT) செயற்கைக்கோள் ஒப்பந்தம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைக்கு வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இளைய மகனான ரோஹித ராஜபக்சவை, நிதி மோசடி விசாரணைப் பிரிவு அழைத்திருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர். நிதி மோசடி விசாரணைப் பிரிவின் வளாகத்தில் சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர், ரோஹித ராஜபக்ச அங்கிருந்து வெளியேறினார்



திருகோணமலையை ஊடறுக்கப் போகும் கானி புயல்!
[Thursday 2026-11-26 06:00]

மலேசியாவின் பிந்துலு(Bintulu) பகுதிக்கு வடக்காக ஒரு காற்றுச் சுழற்சி புதன்கிழமை (25.11.2026) உருவாகியுள்ளது. இது வெள்ளிக்கிழமை (27.11.2026) மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து அந்தமான் தீவுகளுக்கு தெற்காக நகரும். அதன்பின் மத்திய வங்காள விரிகுடாவிற்கு வரும்போது அது புயலாக வலுப்பெறும். இந்த புயலுக்கு மாலைதீவு இட்ட 'கானி( Kaani)' என்ற பெயர் வழங்கப்படும்.



மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மீளப்பெற அனுமதியோம்!
[Thursday 2026-11-26 06:00]

13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் ஊடாக மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மீளப்பெறும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் ஒருபோதும் ஒத்துப்போக மாட்டோம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ப. சத்தியலிங்கம் தெரிவித்தார்.


 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா