Untitled Document
April 24, 2025 [GMT]
  • Welcome
  • Welcome
தமிழ் திரையுலகை திரும்பி பார்க்கவைத்த டொரோண்டோ தமிழ் திரைப்படவிழா 2020! Top News
[Saturday 2020-10-03 08:00]

ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா இம்மாதம் மிகவும் பிரமாண்டமாக நடைபெற இருந்த நிலையில், COVID-19 காரணமாக மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சிறப்பாக Sep 11 - 13  நடைபெற்று விருதுகளும் அறிவிக்கப்பட்டது. இதற்கான பணிகள் சகல மட்டங்களிலும் கடந்த ஜனவரி மாதம் முதல்  ஆரம்பமாகி திரைப்பட விழாவுக்கான திரைப்படங்களும் பல்வேறு பிரிவுகளில் கோரப்பட்டிருந்தன. உலகில் பல முன்னணி திரைப்பட விழாக்கள் நடைபெற்றாலும், தமிழருக்கான திரைப்பட விழாக்கள் என்பது மிகவும் குறைவானதாகவே காணப்படுகின்றன.

ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா இம்மாதம் மிகவும் பிரமாண்டமாக நடைபெற இருந்த நிலையில், COVID-19 காரணமாக மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சிறப்பாக Sep 11 - 13 நடைபெற்று விருதுகளும் அறிவிக்கப்பட்டது. இதற்கான பணிகள் சகல மட்டங்களிலும் கடந்த ஜனவரி மாதம் முதல் ஆரம்பமாகி திரைப்பட விழாவுக்கான திரைப்படங்களும் பல்வேறு பிரிவுகளில் கோரப்பட்டிருந்தன. உலகில் பல முன்னணி திரைப்பட விழாக்கள் நடைபெற்றாலும், தமிழருக்கான திரைப்பட விழாக்கள் என்பது மிகவும் குறைவானதாகவே காணப்படுகின்றன.

  

இந்திய மற்றும் இலங்கைக்கு அப்பால், தமிழர்கள் அதிகம் வாழும் கனடாவில் இந்நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டு நடத்தப்படுவது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகின்றது. பல்லாயிரம் தமிழ் திரைப்படங்கள், குறும்படங்கள் என்பன வெளிவருகின்ற போதிலும், அத்திரைப்படங்கள் தமிழ் அல்லாத திரைப்பட விழாக்களிலேயே சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரத்தை வேண்டி நிற்கும் நிலையே இதுவரை காலமும் தமிழ் திரை கலைஞர்களுக்கும், திரைப்படங்களுக்கும் உள்ள நிலை.

நிச்சயமாக ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா இக்குறையை எதிர்வரும் காலங்களில் மிகவும் சிறப்பானதாக நிறைவுசெய்யும். உலகெங்கிலும் இருந்து 242 படங்கள் விழாவுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. உலகின் தலைசிறந்த ஜூரி (Jury)குழுமம், சகல திரைப்படங்களையும் பார்த்து வெற்றிபெற்ற திரைப்படங்களை தேர்வுசெய்திருந்தார்கள்.

அதில் இயக்குநர் பார்த்திபனின் “ஒத்த செருப்பு சைஸ் 7 “ விழாவில், மூன்று விருதுகளை வென்றுள்ளது! ஜீரி விருதான சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த தனி சோலோ நடிப்பு என மூன்று விருதுகளை இப்படம் பெற்றுள்ளது. சூர்யாவின் தயாரிப்பில் வெளிவந்த இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கிய சில்லுக்கருப்பட்டி திரைப்படம் 2 விருதுகளை வென்றுள்ளது. இலங்கை, இந்திய, மலேசியா, பிரான்ஸ், கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து வந்த படங்களுக்கு விருதுகள் கிடைத்துள்ளன.

விருதுகள் விபரம்:

JURY AWARD

Jury Award Best Feature Film: OTHTHA SERUPPU size 7 (Director / Producer R. Parthiban)

Jury Award Best Feature Film Director: Radhakrishnan Parthiban (OTHTHA SERUPPU size 7)

Jury Award Best Feature Film Women Director: Halitha Shameem (SILLU KARUPPATTI)

Jury Award Best Experimental Feature Film: SILLU KARUPPATTI (Director: Halitha Shameem)

Jury Award Best Trans-Themed Feature Film: COFFEE CAFE (Arunkumar Senthil)

Jury Award Best Crime Thriller Feature Film: Pulanaivu (Director: Shalini Balasundaram)

Jury Award Best Feature Documentary Film: The Lamp of Truth (Director: Thanesh Gopal)

Jury Award Best Short Film Director: Anand Murthy (S I N A M)

Best Solo Act Award: Radhakrishnan Parthiban (OTHTHA SERUPPU size 7)

AUDIENCE AWARD

Audience Award Best Feature Film: Kanni Maadam (Director: Bose Venkat)

Audience Award Best Short Films: Kaadaaru (Director: Calis Peter Xavier)

Audience Award Best Short Films: Hunter Maniyam (Director: Mathi Sutha)

Audience Award Best Long Short Films: Female (Director: Karthik Siva)

Special Jury Award: Outstanding Performance

Rising Star Emerging Director: Mathi Sutha (Hunter Maniyam)

Rising Star Emerging Actress: Sutharshi Ignatius (Irai)

Best Short Film: Flood (Director: Sivalingam Vimalrajh)

AWARDS FOR ALBUM SONG

Award for Best Album Song: Kaatril (Srivijay Ragavan)

Award for Peace Song: Namakken Aararivu (ShriRam Sachi)

  
   Bookmark and Share Seithy.com



ஈரான் மற்றும் அமெரிக்காவின் புதிய அணு உரையாடல்! Top News
[Sunday 2025-04-13 18:00]

ஒரு குறிப்பிடத்தக்க வெளியுறவு முன்னேற்றத்தில், ஈரான் மற்றும் அமெரிக்கா நாடுகள் தெகுரானின் அணுத் திட்டம் குறித்து நேரடி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கியுள்ளன. முதல் சுற்று பேச்சுவார்த்தைகள் ஓமனின் மஸ்கத் நகரில் நடைபெற்றது. 2025-இல் டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதிபராக பதவியேற்ற பின்னர் இது இரண்டு நாடுகளுக்கும் இடையே முதல் முறையான உறவாகும். இந்தப் பேச்சுவார்த்தைகள் "கட்டமைப்பானது" என இரு தரப்பினராலும் விவரிக்கப்பட்டுள்ளது. இது மத்திய கிழக்கு மற்றும் உலக அரசியல் சூழலில் விரைவாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்தது.



இந்திய அரசியல்வாதிகளின் இலங்கைச் சந்திப்புகள்: தமிழ் தேசியம் மற்றும் வரலாற்றுப் பொறுப்புகள்! Top News
[Sunday 2025-04-06 07:00]

இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளில் தமிழர் மீதான மானுட வன்கொடுமைகள் நிகழ்ந்த பிறகு, பல ஆண்டுகளாகத் தமிழ் மக்கள், சர்வதேச நீதியை நாடி வருகின்றனர். இந்தச் சூழலில் இந்திய அரசியல்வாதிகளின் இலங்கையில் நிகழ்த்தும் பயணங்கள் வெறும் நவீன ராஜதந்திர நடவடிக்கைகளாக மட்டுமல்ல; அவை ஒரு வரலாற்றுப் பொறுப்பையும், தத்தம் செயற்திறன் மூலம் ஒரு இனத்தின் எதிர்காலத்தைக் குறியிடக்கூடிய தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றன.



35ஆவது அகவை நிறைவில் நிமிர்வோடு தமிழாலயங்கள் – கனோவர்! Top News
[Thursday 2025-04-03 06:00]

தமிழ்க் கல்விக் கழகத்தின் நிருவாகச் செயல்நெறியின் ஒழுங்கமைப்பில் வடமாநிலத்துக்கான 35ஆவது அகவை நிறைவு விழா கனோவர் அரங்கில் 30.03.2025 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. அறங்கொண்டு பணி செய்யும் ஆசான்களையும் ஆசான்களின் திறன் கொண்டு வாகைசூடும் மாணவர்களையும் 14 ஆண்டுகள் தமிழ்மொழியைக் கற்றுத் தேர்ச்சி பெற்ற மாணவர்களையும் இவர்களின் கூட்டுழைப்பின் விளைவாகத் தமிழாலயங்கள் பெற்ற வெற்றிகளுக்கான மதிப்பளிப்புகள் எனப் பல்வகை மதிப்பளிப்புகளைத் தன்னகத்தே கொண்டதாகத் தமிழ்க் கல்விக் கழகத்தின் அகவை நிறைவு விழா அமைந்திருந்தது. 09:30 மணிக்கு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனியக் கிளைப் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன் அவர்கள் பொதுச்சுடர் ஏற்றிவைத்தமையைத் தொடர்ந்து, அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் இணைப்பாளர் திரு. கிருஸ்ணகுமார் சிவலிங்கம், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன், யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் பொறுப்பாளர் திருமதி வசந்தி மனோகரன், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் வடமாநிலப் பொறுப்பாளர் திரு. இளையதம்பி துரைஐயா, தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகப்பிரிவுப் பொறுப்பாளர் திரு. ஜெனுசன் சந்திரபாலு, நிதிப்பிரிவுத் துணைப்பொறுப்பாளர் திரு. பிரவீன் செல்வேந்திரன், வடமாநிலச் செயற்பாட்டாளர்களான தமிழ் மாணி திருமதி சுபத்திரா யோகேந்திரன், திருமதி அன்னலட்சுமி இராமலிங்கம், வடமாநிலக் கல்விப்பிரிவுச் செயற்பாட்டாளர் தமிழ் வாரிதி திருமதி யமுனாராணி தியாபரன் மற்றும் பிறேமன் தமிழாலயத்தின் நிர்வாகி தமிழ் மாணி திருமதி கனகேஸ்வரி சந்திரபாலன் ஆகியோர் மங்கலவிளக்கேற்றி வைக்க, அகவை நிறைவு விழாச் சிறப்புடன் தொடங்கியது.



35ஆவது அகவை நிறைவில் மகிழ்ந்து நிமிரும் தமிழாலயங்கள் – யேர்மனி, என்னெப்பெற்றால்! Top News
[Wednesday 2025-03-26 06:00]

தமிழ்க் கல்விக் கழகத்தின் நிருவாகச் செயல்நெறியின் ஒழுங்கமைப்பில் மத்தியமாநிலத்துக்கான 35ஆவது அகவைநிறைவுவிழாஎன்னெப்பெற்றால் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. அறங்கொண்டு பணி செய்யும் ஆசான்களையும் ஆசான்களின் திறன் கொண்டு வாகைசூடும் மாணவர்களையும் 14 ஆண்டுகள் தமிழ்மொழியைக் கற்றுத் தேர்ச்சி பெற்ற மாணவர்களையும் கூட்டுழைப்பின் விளைவாகத் தமிழாலயங்கள் பெற்ற வெற்றிகளுக்கான மதிப்பளிப்புகள் எனப் பல்வகைமதிப்பளிப்புகளைத் தன்னகத்தே கொண்டதாகத் தமிழ்க் கல்விக் கழகத்தின் அகவை நிறைவுவிழா அமைந்திருந்தது.



வாகைமயில் 2025 - யேர்மனி! Top News
[Friday 2025-03-21 18:00]

யேர்மனியில் ஆண்டுதோறும் வாகைமயில் என்னும் நடனப்போட்டியைத் தமிழ்ப் பெண்கள் அமைப்பு நடத்தி வருவது யாவரும் அறிந்ததே. இம்முறை கற்றிங்கன் நகரில் 15.03.25 சனி, 16.03.25 ஞாயிறு ஆகிய இரண்டு நாள்களும் தெரிவுப்போட்டிகளின்றி நிறைவுப்போட்டியாகப் பன்னிரெண்டு ஆண்டுகளை நிறைவு செய்தபடி வாகைமயில் வெகு சிறப்பாகத் தோகை விரித்தாடியது. யேர்மனியில் உள்ள நடன ஆசிரியர்களால் பயிற்றப்பட்ட அவர்களின் மாணவ மாணவிகள் ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் களம் கண்டனர். இவர்கள் அற்புதமான பதங்களுடன் பல வண்ணங்கள் உடுத்தித் தேர்போல (இரதங்கள்) அழகாக அசைந்து, மிதமான அணிகளோடு அவையில் இதமான பரதத்தால் நவரசம் தந்தது மண்டபம் நிறைந்த மக்களின் வரவேற்பைப் பெற்றிருந்தது. டென்மாக், சுவிற்சலாந்து ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்திருந்த திறமையும் பட்டறிவும் வாய்ந்த நடுவர்களால் போட்டிகள் நடுவம் செய்யப்பட்டு, மதிப்பளிப்புகளும் வாகைமயில் விருதுகளும் வழங்கப்பட்டன.



கனடாவில் வீட்டிலிருந்த யுவதிமீது துப்பாக்கி சூடு: சகோதரன் காயம்! Top News
[Monday 2025-03-10 06:00]

யா/கோண்டாவில் மேற்கு கல்வீட்டு துரையப்பாவின் பேர்த்தி யான செல்வி ரகுதாஸ் நிலக்சி 07-03-2025 வெள்ளிக்கிழமை கனடாவில் அகால மரணம் அடைந்து விட்டார். கனடாவின், மார்க்கம் நகரத்தில் வீடொன்றில் இடம்பெற்ற இரட்டை துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண் உயிரிழந்ததுடன், ஒரு ஆண் தீவிரமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



விஜய் தணிகாசலம் மீண்டும் ஒன்றாரியோ மாகாண பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்! Top News
[Friday 2025-03-07 06:00]

மார்ச் 4, 2025 அன்று, அமெரிக்கா, அதிபர் டொனால்ட் டிரம்பின் தலைமையில், கனடியா இறக்குமதிகளுக்கு 25% வரி விதித்தது. இது எல்லை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் கடத்தல் குறித்த கவலையை காரணமாகக் கூறினாலும், ஒன்றாரியோ பொருளாதாரத்தில் 500,000 வேலைகளை ஆபத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இதற்கு பதிலளிக்க கனடா, அமெரிக்க பொருட்களுக்கு பதிலடி கட்டணங்களை அறிவித்து, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பதற்றத்தை அதிகரித்துள்ளது.



தமிழர் கலைகளின் வளம்தேடும் வளரிளம் தமிழர்களின் கலைத்திறனாற்றுகை - ஸ்ருற்காட்! Top News
[Thursday 2025-03-06 06:00]

கலைகளின் ஊடாகத் தன்னையும்தனது சூழலையும்பதிவுசெய்வதிலும் வினவுதலுக்குட்படுத்துவதிலும் உலகம் பின்னிற்பதில்லை. அவை தலைமுறைகள் வழியேகடத்தப்பட்டுவருவதோடு, புதியநுண்ணறிவுசார் புலமைகளை உள்ளீர்ந்தவாறு செழுமைபெற்றுத் திகழ்கின்றன. தமிழர் கலைகள் பல ஆயிரம் ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகப் பயணித்துவருகின்றன. தமிழர்கள் புலம்பெயர்ந்து வேற்றுமொழி, கலைமற்றும் பண்பாட்டுச் சூழலுள் சிக்குண்டபோதும் தம்மைத் தகவமைத்துக் கொள்வதற்கான அத்தனை முயற்சிகளையும் செய்துவருவதற்கு மற்றுமொரு சான்றாக யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தால் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டிதிகழ்கின்றது. தமிழரதுகலைகளைத் தமிழினத்தின் இளையதலைமுறை கற்றும் கண்டுணரவும் அதனூடாகப் படைப்பாக்கத் திறனைப் பெறவும், தமிழர் கலைகள் அழிந்துவிடாதுகாக்கவும், கலை அரங்காற்றுகை செயலாக்கம் பெறுதல் வேண்டும்.



35ஆவது அகைவை நிறைவில் தமிழாலயங்கள்! Top News
[Thursday 2025-03-06 06:00]


நடிகர் கருணாஸ் தனது பிறந்த நாளையொட்டி முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்துப் பெற்றார்! Top News
[Thursday 2025-02-20 19:00]

முக்குலத்தோர் புலிப்புடைக் கட்சியின் தலைவரும், தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் துணைத்தலைவரும், திரைப்பட நடிகருமான திரு. சேது. கருணாஸ் அவர்களின் பிறந்தநாளை (21.02.2025) யொட்டி 20.02.2025 இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்து நடிகர் சேது. கருணாஸ் வாழ்த்துப் பெற்றார்.



அஷ்ரஃப் சிஹாப்தீனின் ‘கழுதை மனிதன்’ மொழி பெயர்ப்பு சிறுகதை தொகுதி வெளியீடு! Top News
[Wednesday 2025-02-19 18:00]

சிரேஷ்ட ஒலி, ஒளிபரப்பாளரும் எழுத்தாளருமான அஷ்ரஃப் சிஹாப்தீன் மொழி பெயர்த்த 'கழுதை மனிதன்' சிறுகதைத் தொகுதி வெளியீடும் இலங்கை நெய்னார் சமூக நலக் காப்பகத்தின் மாணாக்கருக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் ஞாயிற்றுக் கிழமை தெமடகொட வை.எம்.எம்.ஏ. மண்டபத்தில் நடைபெற்றது.



மத்திய மாநிலத்திற்கான கலைத்திறன் போட்டிகள்! Top News
[Wednesday 2025-02-12 06:00]

தமிழ்க்கல்விக் கழகத்தின் நிர்வாகப் பொறிமுறைக்கேற்ப மத்திய மாநிலத்திற்கான கலைத்திறன்போட்டிகள் 08.02.2025 அன்று சிறப்பாக நடைபெற்றது. இக்கலைத்திறன் போட்டியில் மயிலாட்டம், புலியாட்டம், காவடியாட்டம், கரகம், காவடி, பொய்க்காற்குதிரை, வில்லுப்பாட்டு போன்ற கிராமியக் கலைவடிவங்களுடன் பரதநாட்டியம், விடுதலைநடனம், விடுதலைப்பாடல், வாய்ப்பாட்டு ஆகிய கலைகள் போட்டியாகளாக நடைபெற்றன.



கலைத்தமிழோடுகளமாடும் வளரிளம் கலைஞர்களின் கலைத்திறனாற்றுகை – கற்றிங்கன்! Top News
[Saturday 2025-02-08 06:00]

தமிழரதுகலைவடிவங்களைத்தமிழினத்தின் இளையதலைமுறைகற்றும் கண்டும் உணரவும், அதனுடாகப்படைப்பாக்கத் திறனைப் பெறவும்,தமிழர் கலைகள் அழிந்துவிடாதுகாக்கவும் கலைஅரங்காற்றுகை,செயலாக்கம் பெறுதல் வேண்டும். புலம்பெயர் நாடுகளில் மூன்றாந் தலைமுறைத் தமிழர்களும் தமிழர் கலைகளைஅறிந்துகொள்ளவும், பயிலவும் களம் அமைத்துக் கொடுக்கும் நோக்கோடு,தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவுகலைத்திறன் போட்டியைநடாத்திவருகிறது. இக்கலைத்திறன் போட்டியில் மயிலாட்டம், புலியாட்டம், காவடியாட்டம், காவடி, கரகம், பொய்க்காற்குதிரை, வில்லுப்பாட்டு போன்றகிராமியக் கலைவடிவங்களுடன் பரதநாட்டியம் மற்றும் விடுதலைநடனம், விடுதலைப் பாடல், வாய்ப்பாட்டு ஆகிய ஒன்பது கலைகள் போட்டிகளாக நடைபெறுகின்றன. முதலாவது போட்டியரங்கம் வடமத்தியமாநிலத்தின் கற்றிங்கன் நகரிலேபொதுச்சுடர் ஏற்றலோடுதொடங்கியது.



கல்விக்கு கரம் கொடுப்போம்! Top News
[Saturday 2025-02-08 06:00]

கல்விக்குக் கரம் கொடுப்போம் செயற்திட்டத்தின் ஊடாக வாழ் தமிழ்மக்களின் பங்களிப்பில் அருள்மிகு சிறீ சித்திவிநாயகர் கோவில் ஸ்ருட்காட் நிதிப்பங்களிப்பில் 06/02/2025 அன்று யாழ் மாவட்டம் மாதகல், தெல்லிப்பளை ஆகிய கிராமத்தில் வசிக்கும் கற்றல் தேவையுடைய 18 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.



உறை குளிரில் மானிடத்தை உலுக்கிய மின்னல் செந்தில்குமரனின் MGR 108 இசை நிகழ்வு! Top News
[Thursday 2025-02-06 19:00]

சமீபத்தில் ஈழத்தில் உள்ள எங்கள் சொந்தங்களின் மருத்துவ தேவைகளுக்காக நெடுங்காலமாக தன்னை அர்ப்பணித்து சேவையாற்றி வரும் மின்னல் செந்தில்குமரனின் இசை நிகழ்விற்கு சென்றிருந்தேன். நூறு கோவில்களுக்கு சென்ற மகிழ்ச்சி. ஏன் என்பதனை முழுவதும் படித்த பின் நீங்களும் ஆமோதிப்பீர்கள். ஆறு மணியளவில் மெட்ரோபொலிட்டன் மண்டபம் நிரம்பி வழிந்தது. நிகழ்ச்சியை தொய்வில்லாமல் விறுவிறுப்பாக கொண்டு சென்றார்கள். செந்தில் குமரனோடு வித்தியாசங்கர், சிவா, சந்தியா, மகிசா, விஜிதா, அனோஜனா, அபிராமி, சௌமிகா, கனிஷா, மானசி, ஷியானா, சியாரா என்று ஒரு பட்டாளமே தெரிவு செய்யப்பட்ட ஹிட் பாடல்களை பாடி மக்களின் கரவொலிகளைப் பெற்று கொண்டிருந்தார்கள்.



யேர்மனி டுசில்டோர்ப் நகரில் நடைபெற்ற கரிநாள் போராட்டம்! Top News
[Thursday 2025-02-06 06:00]

புலம்பெயர் தமிழர்கள், சிறிலங்காவின் சுதந்திர நாளை கரிநாளாக வெளிப்படுத்துவதோடு தமிழீழ தேசத்தில் தொடரும் சிங்கள தேசத்தின் ஆக்கிரமிப்பைக் கண்டித்தும், தமிழீழ மக்கள் மீது தொடரும் சிங்கள தேசத்தின் இனப்படுகொலையை வெளிக்கொணர்ந்தும் தமிழீழ தேசத்தின் இருப்பையும், இறைமையையும் வலியுறுத்தியும் இலங்கைத்தீவில் சுதந்திரத்துக்காக போராடிவருகின்ற இனமான, ஈழத்தமிழினம் உள்ளதென்பதனையும் சர்வதேசத்தின் செவிகளுக்கு எடுத்துரைத்து தமிழருக்கான ஒரு நிரந்தர நீதி கிடைக்கும் வரை ஓயோமென இக்கரிநாளில் உறுதிகொள்வோம்.



சிங்களப் பேரினவாதாத்தின் 77 வது சுதந்திர தினம் ஈழத்தமிழர்களின் கரிநாள்! Top News
[Wednesday 2025-02-05 06:00]

தமிழீழத் தாய்மணில் ஒன்றரை லட்சம் உறவுகளின் இரத்த ஆறு ஓடி பதினைந்து ஆண்டுகள் ஆகிய நிலையில், இந்தப் பதினைந்து ஆண்டுகளைத் திரும்பிப் பார்க்கிற எவரும் சிறிலங்காவின் சுதந்திர தினத்தில் பங்கேற்க மாட்டார்கள். சிங்களப் பேரினவாதாத்தின் 77 வது சுதந்திர தினம் ஈழத்தமிழர்களைப் பொறுத்த வரை மாறாத்துயரை என்றென்றும் நினைவுபடுத்தும் கரிநாள்.



"இந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் நிதிநிலை அறிக்கை" - திருமா அறிக்கை!
[Monday 2025-02-03 06:00]

நேற்று அறிவிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையைத் தனது கூட்டணிக் கட்சிகளைத் திருப்தி செய்வதற்காகவே பாஜக அரசு பயன்படுத்தியுள்ளது. மற்ற மாநிலங்கள் வஞ்சிக்கப்படுவதால் இந்திய ஒருமைப்பாடே சீர்குலையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மோடி அரசின் ஓர்வஞ்சனைப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் பீகார் மாநிலத்தில் தேசிய உணவுத் தொழில் நுட்ப நிறுவனம் ( என்.ஐ.எஃப்.டி ) அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பீகாரில் விளையும் மக்கானா பயிரை மேம்படுத்துவதற்காக வாரியம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டிருக்கிறது. பீகாரில் கிரீன் ஃபீல்ட் விமான நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.



அனைத்துலக மட்டத்தில் நடாத்தப்பட்ட அரையாண்டுத்தேர்வு! Top News
[Friday 2025-01-31 06:00]

தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழியங்கிவரும் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களில் தமிழ் மொழியைக் கற்றுவரும் தமிழ்ப்பிள்ளைகளின் மொழிக் கற்றலை வளப்படுத்தி, கற்கையின் தரத்தை உயர்த்தும் நோக்கோடு, கல்வியாண்டின் நடுப்பகுதியில் அரையாண்டுத் தேர்வானது நடாத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டுக்கான அரையாண்டுத்தேர்வு 25.01.2025 சனிக்கிழமை சிறப்புடன் நடைபெற்றது.



கல்விக்குக் கரம் கொடுப்போம்! Top News
[Sunday 2025-01-26 16:00]

செயற்திட்டத்தின் ஊடாக ஜேர்மனி அருள்மிகு சிறீ சித்திவினாயகர் கோவில் ஸ்ருட்காட் நிதிப்பங்களிப்பில் 25/01/2025 இன்றைய தினம் வவுனியா மாவட்டம் நெடுங்கேணி, ஒலுமடு, பன்றிக்கெய்தகுளம், நொச்சிமோட்டை ஆகிய கிராமங்களில் வசிக்கும் கற்றல் தேவையுடைய 50 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.


 gloriousprinters.com 2021
Latika-Gold-House-2025
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா