Untitled Document
June 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
யாழில் பிரபலமான றியோ கனடாவில் விமரிசையாக திறந்து வைக்கப்பட்டுள்ளதை பெருமையுடன் அறியத்தருகின்றனர்! Top News
[Thursday 2026-04-09 07:00]

இன்று மார்க்கம் நகரின் (மாரக்கம் - எல்சன் ) சந்திப்பில் மிக விமரிசையாக திறந்து வைக்கப் பட்டுள்ளதை பெருமையுடன் அறியத் தருகின்றனர். திரு . செந்தில் குமரனின் நிவாரண உயிர்காப்பு அமைப்பின் மனித நேயப் பணிகளுக்கு எப்பொழுதும் தாராள பொருள் உதவி வழங்கி வரும் இந்நிறுவன உரிமையாளர் என்பது இங்கு கவனத்திற்குரியது.

இன்று மார்க்கம் நகரின் (மாரக்கம் - எல்சன் ) சந்திப்பில் மிக விமரிசையாக திறந்து வைக்கப் பட்டுள்ளதை பெருமையுடன் அறியத் தருகின்றனர். திரு . செந்தில் குமரனின் நிவாரண உயிர்காப்பு அமைப்பின் மனித நேயப் பணிகளுக்கு எப்பொழுதும் தாராள பொருள் உதவி வழங்கி வரும் இந்நிறுவன உரிமையாளர் என்பது இங்கு கவனத்திற்குரியது.

  

இந்நிகழ்வினை இந்நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான நேசனின் தாயாரும், திரு. செந்தில் குமரன் அவர்களும் இணைந்து நாடாவை வெட்டி திறந்து வைக்க, திரு.செந்தில் குமரன் நிவாரண தொண்டர்களுடன் பொது மக்களும் இணைந்து திறப்பு விழாவை சிறப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

தாயகத்தில் அல்லலுறும் ஆதரவற்ற எம்மக்களின் உயிர் காப்பிற்கும் வாழ்வாதார பணிகளுக்கும் என்றும் அனுசரணை வழங்கும் இந்த Rio Cream House போன்ற தாராள மனம் படைத்தோருக்கு வணிக ரீதியாக தமழர்களாகிய நாம் முழு ஆதரவையும் வழங்குவதற்கு கடமைப்பட்டுள்ளோம் என்பது சிந்தனைக்குரிய ஒன்றாகும். இனிய நல் வாழ்த்துகள். வாழ்க மனித நேயம்!

  
   Bookmark and Share Seithy.com



பெளத்த மதகுருமார்களுக்கு எதிரான தொடர்ச்சியான குற்றச்சாட்டு விவகாரங்கள் இலங்கையின் தமிழ் பிராந்தியங்களில் அதிகரித்து வரும் அச்சங்களை ஏற்படுத்துகின்றன!
[Sunday 2026-06-21 07:00]

யாழ்ப்பாணம், தமிழ் தாயகம் — இலங்கைப் பெளத்த பிக்குகளைச் சுற்றியுள்ள பல உயர்மட்ட குற்றவியல் வழக்குகளைத் தொடர்ந்து, தமிழ் புலம்பெயர் செய்திகள் (Tamil Diaspora News) அவசர பொறுப்புக்கூறலைக் கோரியுள்ளது. பெளத்த மதகுருமார்களுக்கு வழங்கப்படும் பரந்த சமூக செல்வாக்கும், நிறுவன ரீதியான பாதுகாப்பும் தண்டனையிலிருந்து தப்பிக்கும் கலாச்சாரத்தை உருவாக்கக்கூடும் என அந்த அமைப்பு எச்சரிக்கிறது. குறிப்பாக, உள்ளூர் மக்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அரச ஆதரவுடன் பெளத்த நிறுவனங்கள் விரிவுபடுத்தப்பட்டுவரும் வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் பெரும்பான்மை பகுதிகளில் இந்த அச்சங்கள் தீவிரமடைந்துள்ளன.



“செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்” உலகத்தமிழறிஞர்களின் கவனத்தை ஈர்த்த அனைத்துலகத் தமிழர் மாநாடு – 2026!
[Monday 2026-06-15 07:00]

அனைத்துலகத் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் “செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்” என்ற தலைப்பின் கீழ் அனைத்துலகத்தமிழர் மாநாடு எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை கனடா வன் ெடாரன்ேடா மாநகரில் நைடெபறவுள்ளது. இந்தமாநாட்டை முன்னிட்டு 5 தலைப்புகளின் கீழ் உலகம் முழுவதுமுள்ள தமிழறிஞர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆய்வாளர்களிடமிருந்து ஆய்வுக் கட்டுரைகள் கோரப்பட்டிருந்தன. அதற்கான ஆய்வுச் சுருக்கங்களை கடந்த யூன் மாதம் 10 ஆம் தி கதி க்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், உலகிலுள்ள பல நாடுகளிலிருந்தும் மொத்தமாக 497 ஆய்வுச்சுருக்கங்கள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. அதிலும் , இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து அதிகளவிலான ஆய்வுச்சுருக்கங்கள் எமக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கதாகும்.



தமிழீழ தேசியக்கொடி தொடர்பான இணையவழி கையெழுத்துப் போராட்டச் செய்தியை பிரசுரிக்க அனுமதி கோரல்! Top News
[Monday 2026-06-15 07:00]

ஜெர்மனியில் தமிழர் சமூகத்தின் வரலாற்று மற்றும் தேசிய அடையாளமாக விளங்கும் தமிழீழ தேசியக் கொடியை பாதுகாக்கும் நோக்கில், ஈழத்தமிழர் மக்களவை – ஜெர்மனி (VETD e.V.) சார்பில் ஜனநாயக மற்றும் சட்டப்பூர்வ அடிப்படையில் ஒரு இணையவழி கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தமிழர்களின் வரலாறு, அடையாளம், ஜனநாயக உரிமைகள் மற்றும் தன்னாட்சி உணர்வை பிரதிபலிக்கும் இந்த முயற்சிக்கு உலகத் தமிழர்களின் பரந்த ஆதரவைப் பெற்றுக்கொள்வது மிகவும் அவசியமாக உள்ளது. அதற்காக தங்களது மதிப்புமிக்க இணையத்தளத்தின் ஒத்துழைப்பை அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.



தமிழர் தெருவிழா 2026 மார்க்கம் நகரத்திற்கு நகர்கிறது! Top News
[Monday 2026-06-15 07:00]

மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் தமிழர் தெருவிழா (Tamil Fest) 2026, இவ்வாண்டு முதல் மார்க்கம் நகரத்தில் நடைபெறும் என்பதை கனடியத் தமிழர் பேரவை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது. கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழர் தெருவிழா தமிழ்ப் பண்பாடு மற்றும் சாதனைகளின் பெருமைமிக்க அடையாளமாகத் திகழ்ந்து, கனடா மற்றும் உலகெங்கிலும் உள்ள சமூகங்களை ஒன்றிணைத்து வருகிறது. தெற்காசியாவிற்கு வெளியே நடைபெறும் மிகப்பெரிய தமிழ்ப் பண்பாட்டு தெருத்திருவிழாவாக அங்கீகரிக்கப்பட்டுள்ள தமிழர் தெருவிழா ஒவ்வொரு ஆண்டும் கனடா, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பிற நாடுகளிலிருந்து இலட்சக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கிறது. தமிழ் சமூகத்தின் செழுமையான வரலாறு, அழியாத பாரம்பரியம், பன்முகத்தன்மை கொண்ட கலை மரபுகள் மற்றும் உலகத்தரம் வாய்ந்த உணவு வகைகளைக் காட்சிப்படுத்தவும் கொண்டாடவும் இந்தத் திருவிழா ஒரு துடிப்பான தளத்தை வழங்குகிறது. அதே நேரத்தில், இது எதிர்கால சந்ததியினரிடையே பண்பாடு பற்றிய புரிதல், பெருமை மற்றும் பிணைப்பை வளர்க்கிறது.



இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழ் ஹிப் ஹாப் கலைஞரை உடனடியாக விடுதலை செய்யுமாறு அமைச்சர் விஜய் தணிகாசலம் வலியுறுத்தல்! Top News
[Thursday 2026-06-11 07:00]

ஒன்ராறியோவின் சுகாதார இணை அமைச்சரும், ஸ்காபரோ—ரூஜ் பார்க் சட்டமன்ற உறுப்பினருமான அமைச்சர் விஜய் தணிகாசலம், இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள 24 வயதான தமிழ் ஹிப் ஹாப் கலைஞர் சங்கீத்சன் கணேஸ்குமார், ஹிப் ஹாப் சங்கீ, அவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார். சங்கீத்சனின் கைது நடவடிக்கை கலைச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் மற்றும் தமிழ் அடையாளத்தின் மீதான நேரடி தாக்குதலாகும் என அமைச்சர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.



அறிவகம் நடத்திய அனைத்துலகத் தமிழ்மொழி இறுதித் தேர்வு 2026! Top News
[Tuesday 2026-06-09 08:00]

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பாடத்திட்டங்களுக்கு அமைய, June 06, 2026 அன்று அறிவகத்தால் நடத்தப்பட்ட அனைத்துலகத் தமிழ்மொழித்தேர்வு வடஅமெரிக்கா எங்கும் சிறப்பாக நடைபெற்றது. அமெரிக்கா உள்ளிட்ட கனடிய மாகாணங்கள் பலவற்றிலும் இயங்கிவரும் அறிவகத் தமிழ்ப் பள்ளிகள் அனைத்திலும் பயிலும் மாணவர், நகரங்கள் தோறும் ஒழுங்குசெய்யப்பட்ட தேர்வுமையங்களில் தேர்வுகளை எழுதினர்.



தியாகி பொன் சிவகுமாரனின் 52 ஆவது நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு! Top News
[Saturday 2026-06-06 07:00]

தியாகி பொன் சிவகுமாரனின் உயிர்த் தியாகத்தின் 52 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் உத்தியோகபூர்வ உணர்வெழுச்சி நிகழ்வாக உரும்பிராயில் உள்ள திருவுருவச்சிலையில் நடைபெற்றது. வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் இன்று காலை 8 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகி இடம்பெற்றன. நிகழ்வில் பொது ஈகைச் சுடரினை பொன் சிவகுமாரனின் சகோதரி சிவகுமாரி அவர்கள் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து முக்கியஸ்தர்கள் சுடர் விளக்குகளை ஏற்றி வைத்தனர். தியாகி பொன் சிவகுமாரன் உள்ளிட்ட இன விடுதலைக்காக தம் இன்னுயினைத் தியாகம் செய்த போராளிகள் பொதுமக்களை நினைவு கூர்ந்து அகவணக்கம் அகவணக்கம் செலுத்தப்பட்டது.



பொன் சிவகுமாரனின் 52 ஆவது நினைவேந்தலுக்கு வலி. கிழக்கு பிரதேச சபை உத்தியோகபூர்வமாக அழைப்பு! Top News
[Tuesday 2026-06-02 15:00]

விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்து பொன் சிவகுமாரன் அவர்களின் 52 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 5 ஆம் திகதி வெள்ளிக்கிழழை காலை 8 மணிக்கு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் உத்தியோகபூர்வமாக அனுஸ்டிக்கப்படவுள்ளதாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபை அறிவித்துள்ளது. உரும்பிராய் சந்தியில் உள்ள சிவகுமாரனின் நினைவிடத்திலேயே ஈகைச்சுடரேற்றி அனுஸ்டிக்கப்படவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை ஏற்கனவே வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.



இலங்கையை அழித்த சிங்கள இனவாதம்! Top News
[Tuesday 2026-05-26 16:00]

இன்று இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, அதன் வெற்றிக் கொண்டாட்டங்கள் ஒருபுறம் நடந்தாலும், அந்த யுத்தம் ஏன் தொடங்கியது என்ற கசப்பான உண்மையை யுத்தவெற்றியை கொண்டாடும் சிங்கள இனவெறியர்கள் சிந்திக்க வேண்டிய தருணம் இது. இலங்கை இன்று பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் வீழ்ச்சியடைந்திருப்பதற்குக் காரணம் பயங்கரவாதம் அல்ல. மாறாக, அதிகார வெறி பிடித்த பெரும்பான்மை அரசியல்வாதிகளால் திட்டமிட்டு மக்களின் மனதில் விதைக்கப்பட்டு, இன்று அவர்களின் DNA-விலேயே ஊடுருவிவிட்ட ‘இனவாத சிந்தனை’ தான் இந்த ஒட்டுமொத்த நாசத்திற்கும் மூலக்காரணம்.



"இனியும் மக்களின் காணிகளை இராணுவம் வைத்திருப்பதற்கு எந்த நியாயமும் கிடையாது" - மயிலிட்டியில் போராட்டத்தில் தவிசாளர் நிரோஷ்! Top News
[Friday 2026-05-22 17:00]

மக்களின் நிலங்கள் மக்களுக்கே செந்தமானது என்பதை ஏற்றுக்கொண்டு உடனடியாக மக்களின் நிலங்களை விடுவிக்க அரசாங்கம் முன்வரவேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். வலி வடக்கு மீள்குடியேற்ற அபிவிருத்திக்குழுவின் காணி விடுவிப்பிற்கான போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்குக் கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும், முப்பத்தி ஏழு ஆண்டுகளாக துப்பாக்கி முனையில் அரசு மக்களின் நிலங்களை அபகரித்து வைத்துள்ளது. இவ் அபகரிப்பிற்கு எதிராக யுத்தத்தின் பின்னரான 17 ஆண்டுகளாக தொடர்ச்சியாக எமது மக்கள் போராடி வருகின்றனர். பதவியில் உள்ள அரசாங்கம் மக்களின் நிலங்கள் மக்களுக்கே சொந்தமானது எனக் கூறியே ஆட்சிக்கு வந்தது.



"மாற்றுத்திறனாளிகள் விடயத்தில் அரச செயற்பாடுகள், அமுல்படுத்தல்கள் திருப்தியாக இல்லை" - தவிசாளர் தியாகராஜா நிரோஷ்! Top News
[Wednesday 2026-05-20 19:00]

ஏனையவர்களை மாற்றுத் திறனாளிகளை பாதுகாப்பதற்கான சட்டங்கள், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சமவாயங்களில் அரசு கையெழுத்திட்டுள்ள போதும் நடைமுறைப்படுத்தல்கள் திருப்தி தருவதாக இல்லை என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். கருவி நிறுவனத்தின் மாற்றுத்திறனாளிகள் வள நிலையத் திறப்பு இன்று புதன்கிழமை(20) கோப்பாயில் நடைபெற்றது. அதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். போரின் காரணமாக தமிழ் மக்களில் ஆயிரக்கணக்கானவர்கள் மாற்றுத்திறனாளிகள் ஆக்கப்பட்டுள்ளனர். போர் காரணமாக மாற்றுத்திறனாளி ஆக்கப்பட்டவர்களை போசிப்பதற்கு மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் எந்த சிறப்புத் திட்டங்களையும் மேற்கொள்ளவில்லை.



உலகத் தமிழ் ஆய்வு மாநாடு 2026 தொடர்பாக டொரொண்டோவில் ஊடக சந்திப்பு நடைபெற்றது! Top News
[Friday 2026-05-08 10:00]

டொரொண்டோ — 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் டொரொண்டோவில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் ஆய்வு மாநாடு 2026 தொடர்பான ஊடக சந்திப்பு நேற்று CTCC Business Centre இல் நடைபெற்றது. இந்நிகழ்வில் பல்வேறு அறிஞர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், ஊடகத்துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மாநாட்டின் நோக்கங்கள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.



பொன்விழா ஆண்டில் கால்பதிக்கும் தமிழர் உயிர்ப்பின் கோட்பாடுகள்! Top News
[Tuesday 2026-05-05 07:00]

பூமிப்பந்தின் விரிப்பில் தெற்காசியப் பிராந்தியத்தில் அமைந்துள்ள இலங்கைத் தீவிலே, தமிழர் வாழ்வியலின் அடையாளப் பூர்வீக நிலமாக 'ஈழம்' என்று மரபுவழித் தொடரால் அழைக்கப்பெற்ற தமிழீழ தேசத்தினதும், இலக்கிய மரபுகளின் தனிச்சிறப்பியல்பினால்த் துலங்கும் தமிழ் மொழியினதும் மீட்சிக்கும், விடுதலைக்குமாகத் தமிழினமானது தமது ஆத்ம பலத்தின் அத்திவாரத்திலிருந்து ஆன்ம விழிப்போடு, அற்புதமான தியாகங்களால் நிறைந்து, வலிகளையும், வேதனைகளையும் சுமந்து, குருதி பாய்ச்சி, உயிர்க்கொடைகளால் உரமேற்றி, நம்பிக்கை நாணை இறுகப்பற்றிக் கட்டி வளர்க்கப்பட்ட "தமிழீழ விடுதலைப் புலிகள் " என்ற சுயத்தை இழக்காத வரலாற்று இயக்கத்தின் கோட்பாட்டு உயிர்ப்பானது, ஐம்பதாவது அகவையேற்றம் பெற்று பொன்விழாப் பூண்டுள்ளது.



தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் யேர்மனி நடாத்திய “விடுதலை கானம்பாடி - 2026! Top News
[Tuesday 2026-05-05 07:00]

03.05.2026 ஞாயிற்றுக்கிழமை வூப்பெற்றால் ஶ்ரீநவதுர்க்காதேவி ஆலய மண்டபத்தில் தமிழர் கலைபண்பாட்டுக்கழக யேர்மனிக்கிளையின் ஏற்பாட்டில் விடுதலை கானம்பாடி பாடற்போட்டி நிகழ்வானது, பாசறைப்பாணர் மாமனிதர் தேனிசை செல்லப்பா அவர்களுக்கான வணக்கத்துடன் தொடங்கப்பட்டது. யேர்மனியில் வளர்ந்து வரும் இளம் பாடகர்களை ஊக்குவிக்கும் வகையில் பலவருடங்களிற்கு மேலாக தொடர்ச்சியாக இப்பாடற்போட்டியானது நடாத்தப்பட்டு வருகிறது. கடந்த சில வருடங்கள் ஒலிவடிவிலான பின்னனி இசையுடன் பாடப்பட்டு வந்த கானம்பாடி நிகழ்வானது, இந்த ஆண்டு மீண்டும் புத்துயிர் பெற்று, புதுப்பொலிவுடன் நேரடியான பக்கவாத்திய இசைக்கருவிகளோடு போட்டியாளர்கள் பாடக்கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த வகையில் “தமிழீழம்” இசைக்குழுவின் இசைகலைஞர்கள் இசைவழங்க போட்டியாளர்கள் தங்கள் போட்டிகளுக்கான பாடல்களை சிறப்பாக பாடினார்கள்.



36ஆவது அகவை நிறைவோடு தென்மேற்கு மாநிலத் தமிழாலயங்கள் – லண்டவ்! Top News
[Thursday 2026-04-30 18:00]

தமிழ்க் கல்விக் கழகத்தின் நிருவாகப் பொறிமுறைக்கமைய 36ஆவது அகவை நிறைவு விழா ஐந்து மாநிலங்களில் அணியமாகித் திட்டமிட்டவாறு நடைபெற்று, நிறைவரங்காகத் தென்மேற்கு மாநிலத் தமிழாலயங்களுக்கான அரங்கம் லண்டவ் நகரிலே அணிசெய்ய 26.04.2026 ஞாயிற்றுக்கிழமை அகவை நிறைவு விழா நடைபெற்றது. குறிஞ்சி நிலக் கரையமைந்த மண்டப வாசலில் கதிரோனின் ஒளிபரவிய காலைப்பொழுதில் பசுமைக்கட்சியின் (Büdnis90/Die Grünen) லண்டவ் நகரசபை உறுப்பினரான சோபியா பேர்லின் அவர்கள் பொதுச்சுடர் ஏற்றிட விழாத் தொடங்கியது. சிறப்பு விருந்தினர், வெற்றியாளர் மற்றும் மதிப்பளிப்பைப் பெறவந்த அறப்பணியாளர் ஆகியோரைத் தமிழினத்தின் பண்பாடு தழுவிப் பன்னீர் தெளித்துச் சந்தனப் பொட்டிட்டு வாழ்த்திசைப்பாவுடன் அரங்கினுள் அழைத்துவரப்பட்டனர்.



கிளிநொச்சி: ஜெயபுரம் மகாவித்தியாலய மாணவி மரணம் – சமூகத்தை உலுக்கும் துயரம்! Top News
[Saturday 2026-04-25 19:00]

கிளிநொச்சி மாவட்டத்தின் ஜெயபுரம் பகுதியில் அமைந்துள்ள ஜெயபுரம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றுவரும் தரம் 11 மாணவி அக்சயா உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இளம் வயதில் கல்வியில் முன்னேற்றம் கண்டுவரும் மாணவியின் திடீர் மரணம், குடும்பத்தினரும், நண்பர்களும், ஆசிரியர்களும் உட்பட அனைவரையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அக்சயாவின் இன்முகம், எப்போதும் சிரிப்புடன் பழகும் தன்மை மற்றும் நண்பர்களுடன் இணைந்து கலந்துரையாடும் இயல்பு ஆகியவை அனைவரின் நினைவிலும் நிலைத்து நிற்கின்றன.



ஜெர்மனியின் Herne நகரில் 13.03.2026 - 15.03.2026 வரை நடைபெற்ற பரதநாட்டிய போட்டி மிகச் சிறப்பாக நடைபெற்றது! Top News
[Thursday 2026-04-23 07:00]

இந்த நிகழ்ச்சியை அழகாக ஏற்பாடு செய்த *தமிழ் பெண்கள்* அமைப்பிற்கு எங்களது இதயப்பூர்வமான பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.



வாசிங்டன், டி.சி. - யில் நடைபெற்ற 'நேட்னா' முதல் மாநாடு - மாபெரும் வெற்றி! Top News
[Thursday 2026-04-09 07:00]

வட அமெரிக்கத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் (North American Thamizh National Association, Inc. -- NATNA) முதல் மாநாடு, அமெரிக்காவின் தலைநகர் வாசிங்டன், டி. சி.- யில் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றது. தமிழ் இன உணர்வாளர்களும், பொதுமக்களும் மிகப்பெரிய அளவில் கலந்துகொண்டு மாநாட்டைச் சிறப்பித்தனர். கனடாவின் பல பகுதிகளில் இருந்தும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பல பகுதிகளில் இருந்தும் குடும்பம் குடும்பமாகப் பயணித்து வந்து தமிழ்த்தேசியத்திற்கான தேவையையும், வலிமையையும் பறைசாற்றினார்கள்! தமிழ் நாட்டுத் தமிழர், ஈழத்தமிழர், மலேசியத் தமிழர் என உலகளாவிய தமிழ் உறவுகள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.



சிவ்சங்கர் மேனனுக்குப் பதில்: புலம்பெயர் தமிழர்கள் காலனித்துவ நீக்கக் கோட்பாட்டை முன்வைத்து, இலங்கைக் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டிற்குச் சவால் விடுக்கின்றனர்! Top News
[Monday 2026-03-30 20:00]

டெய்லி மிரர் ஸ்ரீலங்காவுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் சிவசங்கர் மேனன் தெரிவித்த கருத்துக்களுக்கு, அமெரிக்க புலம்பெயர்ந்த தமிழர்கள் இன்று ஒரு வலுவான பதிலடியை வெளியிட்டுள்ளனர். அதில், தமிழ் பிரச்சினையை ஒரு உள்நாட்டு விவகாரமாக வகைப்படுத்த முடியாது என்றும், அது சர்வதேச சட்டத்தின் கட்டமைப்பிற்குள் கையாளப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறியிருந்தார்கள் .



தமிழ்நாடு முழுவதிலும் டி-சேவா மையங்கள் தொடங்குவதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் அழைக்கப்படுகின்றன! Top News
[Friday 2026-03-20 20:00]

டி-சேவா சென்டர் தமிழ்நாட்டின் அனைத்து நகரங்கள், மாவட்டங்கள், மண்டல்கள் மற்றும் ஊராட்சிகளில் டி-சேவா ஆன்லைன் மற்றும் திறன் மேம்பாட்டு மையங்களை திறக்க उद्यमிகள் மற்றும் வேலைவாய்ப்பின்மையினோரிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. புதிய PAN அட்டைகள் தொடர்பான விண்ணபங்கள் மற்றும் திருத்தங்கள், பேருந்து, ரயில் மற்றும் விமான டிக்கெட்டுகள், வங்கிப் பண பரிவர்த்தனைகள், ஆதார்ப் பாவனையால் பண பரிமாற்றம், மைக்ரோ ATM சேவைகள், பண வைப்பு, சுகாதாரம், பைக் & கார் காப்பீடுகள், நிலுவை கட்டணங்கள், 1000 க்கும் மேற்பட்ட திறன் மேம்பாட்டு பாடநெறிகளில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளுக்கான பதிவு, 500 க்கும் மேற்பட்ட திறன்களுக்கு திறன் சான்றிதழ் தேர்வுக்கான பதிவு, 100 க்கும் மேற்பட்ட அரசுத் தேர்வுகளுக்கான மாக் தேர்வு பதிவு மற்றும் பிற ஆன்லைன் சேவைகளை பயனாளர்களுக்கு வழங்கலாம்.


Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா