Untitled Document
November 15, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
"கம்பனோடு நிறுத்திக் கொள்ளுங்கள்! தமிழர்களின் வரலாற்றை மறக்கச் சொல்லாதீர்கள்! வெளிநாட்டு உதவிகளை நிறுத்தச் சொல்லாதீர்கள்" - நக்கீரன்
[Saturday 2026-11-14 13:00]

கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களே! இந்த விவாதத்தைத் தொடக்கி வைத்தவர்கள் நீங்கள்தான். நீங்கள் உதிர்த்த இரண்டு முத்துக்கள் இவை. ஒன்று: போராட்டத்தை மறந்துவிடுங்கள்! இரண்டு: வெளிநாட்டு உதவிகளை நிறுத்திவிடுங்கள்! சொல்வதற்கு எளிதாக இருக்கலாம். ஆனால் இந்த இரண்டு கருத்துகளின் பின்னால் இருக்கும் அரசியல், சமூக விளைவுகளை நீங்கள் சிந்தித்துப் பார்த்தீர்களா? போராட்டத்தை மறந்துவிடுங்கள் என்றால் எதை மறக்கச் சொல்கிறீர்கள்? இலங்கை சுதந்திரம் பெற்ற காலந்தொட்டு சிங்கள–பௌத்த மேலாதிக்கத்துக்கு எதிராகத் தமிழர்கள் நடத்திய அகிம்சைப் போராட்டங்களையா? தங்கள் அரசியல் உரிமைகளுக்காக முன்னெடுத்த ஆயுதப் போராட்டத்தையா? அல்லது அந்தப் போராட்டங்களில் தமிழர்கள் சந்தித்த இழப்புகளையும் துயரங்களையுமா? 1956, 1958, 1977, 1983 ஆகிய ஆண்டுகளில் தமிழர்கள் எதிர்கொண்ட இனவன்முறைகளையும் முள்ளிவாய்க்கால் பேரவலத்தையும் மறந்துவிட்டு என்ன செய்ய வேண்டும்?
சிங்கள மேலாதிக்கத்துக்கு அடிபணிந்து தமிழர்கள் காலாகாலத்துக்கும் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழ வேண்டும் என்பதுதான் உங்கள் எதிர்பார்ப்பா? வரலாற்றை மறப்பது நல்லிணக்கம் அல்ல.

கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களே! இந்த விவாதத்தைத் தொடக்கி வைத்தவர்கள் நீங்கள்தான். நீங்கள் உதிர்த்த இரண்டு முத்துக்கள் இவை. ஒன்று: போராட்டத்தை மறந்துவிடுங்கள்! இரண்டு: வெளிநாட்டு உதவிகளை நிறுத்திவிடுங்கள்! சொல்வதற்கு எளிதாக இருக்கலாம். ஆனால் இந்த இரண்டு கருத்துகளின் பின்னால் இருக்கும் அரசியல், சமூக விளைவுகளை நீங்கள் சிந்தித்துப் பார்த்தீர்களா? போராட்டத்தை மறந்துவிடுங்கள் என்றால் எதை மறக்கச் சொல்கிறீர்கள்? இலங்கை சுதந்திரம் பெற்ற காலந்தொட்டு சிங்கள–பௌத்த மேலாதிக்கத்துக்கு எதிராகத் தமிழர்கள் நடத்திய அகிம்சைப் போராட்டங்களையா? தங்கள் அரசியல் உரிமைகளுக்காக முன்னெடுத்த ஆயுதப் போராட்டத்தையா? அல்லது அந்தப் போராட்டங்களில் தமிழர்கள் சந்தித்த இழப்புகளையும் துயரங்களையுமா? 1956, 1958, 1977, 1983 ஆகிய ஆண்டுகளில் தமிழர்கள் எதிர்கொண்ட இனவன்முறைகளையும் முள்ளிவாய்க்கால் பேரவலத்தையும் மறந்துவிட்டு என்ன செய்ய வேண்டும்? சிங்கள மேலாதிக்கத்துக்கு அடிபணிந்து தமிழர்கள் காலாகாலத்துக்கும் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழ வேண்டும் என்பதுதான் உங்கள் எதிர்பார்ப்பா? வரலாற்றை மறப்பது நல்லிணக்கம் அல்ல.

  

அநீதியை மறைப்பதற்கான வழியாக அது மாறிவிடும். யூதர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தங்கள் வரலாற்றையும் பண்பாட்டு அடையாளத்தையும் பாதுகாத்து வந்தார்கள். அந்த வரலாற்று நினைவும் தேசிய வேட்கைகளும் இஸ்ரேல் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தன. இன்று இஸ்ரேல் மத்திய கிழக்கில் இராணுவ, பொருளாதார வலிமை கொண்ட நாடாக விளங்குகிறது. யூதர்கள் தங்கள் வரலாற்றை நினைவுகூரலாம். தமிழர்கள் மட்டும் தங்கள் வரலாற்றை மறந்துவிட வேண்டுமா? இது என்ன நியாயம்? அடுத்து, புலம்பெயர் தமிழர்களின் உதவிகள் பற்றிய உங்கள் கருத்துக்கு வருவோம். வெளிநாட்டு உதவிகள் எமது மக்களைச் சோம்பேறிகளாக்கிவிட்டதாகக் கூறுகிறீர்கள்.

அவற்றை நிறுத்திவிட வேண்டும் என அறிவுரை வழங்குகிறீர்கள். அதே நேரத்தில், தாயக மக்களுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்று புலம்பெயர் தமிழர்களிடம் கேள்விகளையும் அடுக்குகிறீர்கள். உதவி செய்ய வேண்டாம் என்கிறீர்கள். பின்னர் என்ன உதவி செய்தீர்கள் என்று கேட்கிறீர்கள். இது என்ன முரண்பாடு? என்னை எடுத்துக்கொள்ளுங்கள். இயக்கச்சியில் வாழும் முன்னாள் போராளி ஒருவருக்குத் தோட்டம் அமைத்துத் தொழில் செய்வதற்காக ஏறத்தாழ ஐந்து இலட்சம் ரூபாய் வழங்கியுள்ளேன். இன்று அவர் தனது சொந்தக் காலில் நிற்கிறார். அவரது வேண்டுகோளுக்கு இணங்க மேலும் சிலருக்குக் கோழி வளர்ப்புத் தொழில் தொடங்க இலட்சக்கணக்கில் உதவியுள்ளேன். அவர்களில் சிலர் உதவியைப் பெற்ற பின்னர் தொடர்புகளைத் துண்டித்துக்கொண்டார்கள். அமைப்பு ரீதியாகவும் ஆடு, மாடு வளர்ப்புத் திட்டங்களுக்கு உதவியுள்ளோம். ஆனால் அவை அனைத்தும் முற்றிலும் வெற்றிபெறவில்லை.

கறவை மாடு வாங்கிக் கொடுத்தால் அது பால் கொடுக்கும் காலம்வரை பராமரிக்கிறார்கள். பால் கொடுப்பது நின்றுவிட்டால் மாட்டை விற்றுவிடுகிறார்கள். இதற்காக அவர்களைக் குற்றம் சொல்ல முடியாது. அன்றாட வாழ்க்கையை நடத்தவே போராடும் மக்களின் பொருளாதாரச் சிக்கல்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும். வறுமையில் வாழும் மக்களுக்கு அறிவுரை வழங்குவது எளிது. அவர்களை வறுமையிலிருந்து மீட்பதுதான் கடினம். எனது பெற்றோரின் நினைவாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 68 இலட்சம் ரூபாய் பெறுமதியான புலமைப்பரிசில் நிதியத்தை நிறுவியுள்ளேன். அதன் மூலம் முன்னாள் போராளிகள் மற்றும் மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்த பத்து மாணவர்களுக்கு மாதந்தோறும் தலா 3,000 ரூபாய் வழங்கப்படுகிறது. திருகோணமலை, யாழ்ப்பாண மாவட்டங்களில் எனது சொந்த நிதியில் கிணறுகள் வெட்டிக் கொடுத்துள்ளேன்.

திருகோணமலையில் மட்டும் 16 இலட்சம் ரூபாய் செலவில் ஒரு வெட்டுக்கிணற்றை அமைத்துக் கொடுத்துள்ளேன். இவற்றை எனது பெருமைக்காகச் சொல்லவில்லை. புலம்பெயர் தமிழர்கள் தாயக மக்களுக்கு என்ன செய்தார்கள் என்று நீங்கள் கேட்பதால்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. புலம்பெயர்ந்த தமிழர்களில் பலர் தங்களால் இயன்ற உதவிகளைத் தனிப்பட்ட முறையிலும் அமைப்புகள் மூலமாகவும் தொடர்ந்து செய்து வருகிறார்கள். கனடா தமிழர் பேரவை மட்டக்களப்பில் சுமார் மூன்று கோடி ரூபாய் முதலீட்டில் பெரிய இலைமுருங்கைப் பண்ணையை நடத்தி வருகிறது.

கனடா, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் வாழும் சில தமிழ் முதலீட்டாளர்கள் வன்னியில் ஆடு, மாடு, கோழி, பன்றி வளர்ப்பு; மா, மாதுளை மற்றும் மரக்கறிச் செய்கை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பண்ணைகளை உருவாக்கி, பலருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவிலிருந்து தாயகம் சென்ற முதலீட்டாளர் ஒருவர் கிளிநொச்சியில் நூறு ஏக்கர் காணியில் ஆயிரம் மாதுளைக் கன்றுகளை நட்டு வளர்த்து வருகிறார். அவை அறுவடைக்குத் தயாராகி வருகின்றன. இவை போதுமானவையா? நிச்சயமாக இல்லை! பல தசாப்தகாலப் போரினால் அழிந்துபோன ஒரு பிரதேசத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்குப் பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடும் நீண்டகாலத் திட்டமிடலும் தேவை. வீடுகள், விவசாயம், தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள், கல்வி, மருத்துவம் எனப் பல துறைகள் மீட்டெடுக்கப்பட வேண்டும். இந்தப் பொறுப்பின் பெரும்பகுதி இலங்கை அரசுக்குரியது. ஆனால் தேவையான அளவில் உதவிகளை வழங்க உலக நாடுகளும் முன்வரவில்லை.

இத்தகைய சூழலில் புலம்பெயர் தமிழர்களின் உதவிகளையும் நிறுத்திவிடச் சொல்வது எந்த வகையில் நியாயம்? வெளிநாட்டு உதவிகளில் குறைபாடுகள் இருக்கலாம். சில திட்டங்கள் தோல்வியடைந்திருக்கலாம். அவற்றைச் சீர்செய்ய வேண்டுமே தவிர, உதவிகளையே நிறுத்திவிட வேண்டும் என்பது அறிவார்ந்த தீர்வல்ல. மீன் கொடுப்பதைவிட மீன்பிடிக்கக் கற்றுக்கொடுப்பது சிறந்தது என்பார்கள்.

ஆனால் பசியால் வாடுபவனுக்கு மீன்பிடிக்கக் கற்றுக்கொடுக்கும் வரை உணவும் தேவை என்பதை மறந்துவிடக் கூடாது. கம்பவாரிதி அவர்களே! கம்பனின் பாடல்களை மேடையில் பாடிப் பொருள் சொல்லிப் பிழைப்பு நடத்துவதற்கும், வெயிலில் வியர்வை சிந்தி வயலில் உழைப்பதற்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. நீங்கள் கம்பனை வைத்துப் பிழைப்பு நடத்துகிறீர்கள். அதில் தவறில்லை. ஆனால் வயலில் இறங்கி உழைக்கும் மக்களின் வாழ்க்கையை அனுபவித்தறியாமல், அவர்களைச் சோம்பேறிகள் என்று முத்திரை குத்துவதற்கு என்ன நியாயம் இருக்கிறது? குளிரூட்டப்பட்ட அரங்குகளில் அமர்ந்து கம்பராமாயணத்துக்கு விளக்கவுரை வழங்குவது வேறு. கொளுத்தும் வெயிலில் நிலத்தைப் பண்படுத்தி, விதை விதைத்து, மழைக்காக வானத்தைப் பார்த்துக் காத்திருப்பது வேறு. கம்பனின் கவிதைகளில் உழைப்பின் பெருமையைப் பேசலாம்.

ஆனால் வயலில் இறங்கினால்தான் உழைப்பின் வலியும் வியர்வையின் விலையும் தெரியும். சரி, இப்போது உங்களிடமே சில கேள்விகள். புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து இத்தனை கேள்விகளைச் சரமாரியாகக் கேட்கும் நீங்கள், தாயக மக்களின் துயரங்களைப் போக்க என்ன செய்திருக்கிறீர்கள்? உங்கள் கம்பன் கழகம் என்ன செய்திருக்கிறது? சனாதிபதிகளை அழைக்கிறீர்கள். அமைச்சர்களை அழைக்கிறீர்கள். அரசியல் பிரமுகர்களை அழைத்து விழாக்களை நடத்துகிறீர்கள். அந்தத் தொடர்புகளையும் செல்வாக்கையும் பயன்படுத்திப் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன உதவிகளைப் பெற்றுக்கொடுத்திருக்கிறீர்கள்? அந்த விழாக்களுக்குக் கிடைக்கும் நிதியுதவிகளில் ஏதேனும் ஒரு பகுதி ஏழை மாணவர்களின் கல்விக்கோ, கைம்பெண்களின் வாழ்வாதாரத்துக்கோ, முன்னாள் போராளிகளின் மறுவாழ்வுக்கோ செலவிடப்பட்டிருக்கிறதா? அப்படிச் செய்திருந்தால் அதன் விவரங்களைப் பகிரங்கமாக வெளியிடுங்கள்.பாராட்டுவதற்கு நாங்கள் தயங்கமாட்டோம்.

அடுத்து உங்கள் ஆன்மீகப் பார்வைக்கு வருவோம். நீங்கள் கம்பராமாயணத்தின் மீது அளவற்ற பற்றுக்கொண்டவர். கம்பனின் கவித்திறனையும் சொல்லழகையும் பொருளழகையும் மேடைகள்தோறும் எடுத்துரைக்கிறீர்கள். கம்பன் ஒரு சிறந்த கவிஞன் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் சிறந்த கவிதையில் இடம்பெறுவதால் மட்டும் ஒரு கதாபாத்திரத்தின் செயல்கள் அனைத்தும் அறமாகிவிடுமா? இங்கே தந்தை பெரியாரையும் அறிஞர் அண்ணாவையும் நினைவுகூர வேண்டியிருக்கிறது. பெரியார் இராமாயணத்தை வெறும் சமய இலக்கியமாகப் பார்க்கவில்லை. அதில் இடம்பெறும் வருணாசிரமக் கருத்துகளையும் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் பகுத்தறிவுக் கண்ணோட்டத்தில் கடுமையாக விமர்சித்தார். மலத்தைத் தங்கத் தட்டில் வைத்துக் கொடுத்தால் அதை ஏற்றுக்கொள்வீர்களா எனக் காட்டமாகக் கேட்டார்? பெரியாரின் விமர்சனப் பார்வையை விளக்கும் இந்த உவமையின் பொருள் தெளிவானது. தங்கத் தட்டு அழகாக இருக்கலாம்.

விலை உயர்ந்ததாக இருக்கலாம். ஆனால் அதில் வைக்கப்பட்டிருக்கும் பொருளின் தன்மை அதனால் மாறிவிடாது. அதுபோலவே கம்பனின் கவிதை அழகாக இருக்கலாம். அதன் சொற்சுவையும் பொருள்சுவையும் உயர்ந்ததாக இருக்கலாம். ஆனால் அந்த இலக்கிய அழகு, அதில் இடம்பெறும் அறநெறி முரண்பாடுகளையும் சமூக அநீதிகளையும் நியாயப்படுத்திவிட முடியாது.

பெரியாரும் அறிஞர் அண்ணாவும் இராமாயணத்தின் சமூக, அரசியல் கருத்துகளை எதிர்த்து இயக்கம் நடத்தினார்கள். இராமாயண எரிப்புப் போராட்டங்களும் அந்த எதிர்ப்பின் ஒரு பகுதியாக அமைந்தன. அண்ணா தனது தீ பரவட்டும் போன்ற எழுத்துகளின் வழியாக இராமாயணத்தின் கருத்தியல் ஆதிக்கத்தைச் சவாலுக்கு உட்படுத்தினார். அவர்கள் எழுப்பிய அடிப்படைக் கேள்வி இதுதான்: ஒரு இலக்கியத்தின் கவித்துவச் சிறப்புக்காக அதில் இடம்பெறும் சமூக அநீதிகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமா? இப்போது நீங்கள் உச்சிமீது வைத்துப் போற்றும் இராமனின் செயல்களைச் சற்று ஆராய்வோம். இராமாயண மரபில் இடம்பெறும் சம்பூகன் வதக் கதையில் வெளிப்படும் வருணப் பாகுபாட்டை எவ்வாறு நியாயப்படுத்துவது? வாலியை மறைந்திருந்து அம்பெய்திக் கொன்ற இராமனின் செயல் எந்த வகையில் அறம்?இவற்றைவிடச் சீதைக்கு இழைக்கப்பட்ட அநீதிதான் மிகப்பெரியது. தனது கணவனுடன் காட்டுக்குச் சென்று துன்பங்களை அனுபவித்தவள் சீதை.

இராவணனால் சிறைபிடிக்கப்பட்ட பின்னரும் தனது உறுதிப்பாட்டைக் கைவிடாதவள். அவளை மீட்ட இராமன், அவளது தூய்மையை எண்பிக்கத் தீப்பரிசோதனைக்கு உட்படுத்துகிறான். அத்துடன் சீதையின் துயரம் முடிந்துவிடவில்லை. அயோத்திக்குத் திரும்பிய பின்னர், ஊரார் பேசிய பழிச்சொற்களுக்காகத் தனது கருவுற்ற மனைவியையே காட்டுக்கு அனுப்புகிறான் இராமன். ஊரார் பேச்சைக் கேட்டு மனைவியைக் கைவிடுபவன் எப்படி அவதார புருசனாக ஆக முடியும்?

மனைவிக்கு நீதி வழங்கத் தவறியவன் எப்படிச் சிறந்த அரசனாக முடியும்? காட்டில் வால்மீகி முனிவரின் ஆதரவில் சீதை வாழ்கிறாள். அங்கேயே இலவனையும் குசனையும் பெற்றெடுத்து வளர்க்கிறாள். பின்னர் இராமனின் அவையில் மீண்டும் அவளது தூய்மை கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. ஏற்கெனவே தீப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஒரு பெண் மீண்டும் தனது கற்பை தீக்குளித்து எண்பிக்க வேண்டுமா?

வால்மீகி இராமாயணத்தின் உத்தரகாண்டத்தில், மீண்டும் தனது தூய்மையை உறுதிப்படுத்த வேண்டிய சூழலில் சீதை பூமித்தாயை அழைக்கிறாள். பூமி பிளந்து அவளைத் தன்னுள் ஏற்றுக்கொள்கிறது. ஒரு பெண்ணின் கண்ணியத்தைப் பாதுகாக்க முடியாத சமூகத்தின் அறநெறி எத்தகைய அறநெறி? அந்த அநீதியைத் தடுக்க முடியாத இராமனின் அறம் எத்தகைய அறம்? இராமனின் இறுதி நிகழ்வும் கேள்விகளை எழுப்புகிறது.

உத்தரகாண்டத்தில் பைத்தியம் பிடித்த இராமன் சரயு நதியில் இறங்கி தனது மண்ணுலக வாழ்வை முடித்துக்கொள்வதாகக் கூறப்படுகிறது. சமய மரபு இதனைத் தெய்வீகப் பிரவேசமாக விளக்குகிறது. ஆனால் இந்நிகழ்வை இலக்கிய, பகுத்தறிவுக் கண்ணோட்டத்தில் விமர்சிப்பதற்கு ஏன் இடமிருக்கக் கூடாது? ஒரு கதாபாத்திரத்தின் ஒவ்வொரு செயலுக்கும் தெய்வீக விளக்கம் கொடுத்துவிட்டால், அதன் அறநெறிப் பொறுப்பைப் பற்றி எப்போது கேள்வி எழுப்புவது?

கம்பவாரிதி அவர்களே! இராமனின் செயல்களை விமர்சிப்பது கம்பனின் கவித்திறனை மறுப்பதாகாது. கம்பனை இலக்கிய மேதையாகப் போற்றுவதற்கும், இராமனை அறத்தின் முழுமையான வடிவமாக ஏற்றுக்கொள்வதற்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. கம்பனின் சொற்சுவையில் மயங்கிய நீங்கள், அந்தக் கதையில் சீதைக்கு இழைக்கப்பட்ட அநீதியையும் பார்க்க வேண்டாமா? கம்பனின் பாடல்களை மேடைகளில் விளக்கிப் பிழைப்பு நடத்துவதில் தவறில்லை. ஆனால் இலக்கிய மேடையில் கிடைக்கும் புகழ், தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றைப் பற்றித் தீர்ப்பளிக்கும் அதிகாரத்தை வழங்கிவிடாது. கம்பனின் கவிதைகளுக்கு விளக்கம் சொல்லும் உங்கள் ஆற்றலை மதிக்கிறோம். ஆனால் மக்களின் பசியையும் வறுமையையும் போராட்ட வரலாற்றையும் கம்பராமாயணத்தின் பாடல்களால் அளவிட முயலாதீர்கள். தமிழர்களின் போராட்ட வரலாறு என்பது வெறும் துப்பாக்கிகளின் வரலாறு அல்ல.

அது மொழியுரிமை, சமத்துவம், அரசியல் அதிகாரப் பகிர்வு, ஓர் இனத்தின் தேசிய அடையாளம், கண்ணியம் ஆகியவற்றுக்கான போராட்ட வரலாறு. அந்தப் போராட்டத்தின் வெற்றிகள், தோல்விகள், தவறுகள் அனைத்தையும் விமர்சனபூர்வமாக ஆராயலாம். ஆனால் வரலாற்றையே மறந்துவிடுங்கள் என்று கூறுவது தீர்வல்ல.

கம்பவாரிதி அவர்களே! கம்பனைப் போற்றுங்கள். இராமாயணத்தின் இலக்கியச் சிறப்புகளை எடுத்துரையுங்கள். அது உங்கள் விருப்பம். அரசியல் பேசுவதற்கும் உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் அரசியல் கருத்துகளை முன்வைப்பவர்கள் அவற்றுக்கான வரலாற்று அறிவையும் சமூகப் பொறுப்பையும் கொண்டிருக்க வேண்டும். புலம்பெயர் தமிழர்களின் உதவிகளில் குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். அவற்றைச் சீர்செய்வதற்கான வழிகளைக் கூறுங்கள். தாயக மக்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கு ஆக்கபூர்வமான திட்டங்களை முன்வையுங்கள்.

ஆனால் உதவி செய்பவர்களையே ஏளனம் செய்துகொண்டு, உதவிகளை நிறுத்துமாறு அறிவுரை வழங்குவது பொறுப்புள்ள அணுகுமுறையல்ல. இறுதியாக ஒன்றை மட்டும் நினைவூட்ட விரும்புகிறேன். தமிழர்களின் வரலாறு கம்பராமாயணத்துடன் தொடங்கவில்லை. கம்பராமாயணத்துடன் முடிந்துவிடவும் போவதில்லை. அது ஓர் இனத்தின் மொழி, பண்பாடு, உரிமைகள், போராட்டங்கள், வெற்றிகள், தோல்விகள், இழப்புகள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய நீண்ட வரலாறு. அந்த வரலாற்றை மறக்கச் சொல்லும் உரிமை யாருக்கும் இல்லை. கம்பனின் கவிதைகளை நீங்கள் மறக்காமல் இருப்பது உங்கள் விருப்பம். தமிழர்களின் போராட்ட வரலாற்றை நாங்கள் மறக்காமல் இருப்பது எங்கள் உரிமை. கம்பனை வைத்துப் பிழைப்பு நடத்துங்கள். ஆனால் கம்பனின் பெயரால் தமிழர்களின் வரலாற்றை மறக்கச் சொல்லாதீர்கள்! வெளிநாட்டு உதவிகளை நிறுத்தச் சொல்லாதீர்கள்!

  
   Bookmark and Share Seithy.com



அன்புள்ள தமிழ் பட்டிமன்ற பேச்சாளர் கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களுக்கு..! Top News
[Thursday 2026-11-12 18:00]

நீங்கள் உடல் - உள நலத்தோடு உரையாற்றிக்கொண்டிருக்கும் காணொளி ஒன்றினை சற்றுமுன் பார்க்க கிடைத்தது. அதில் நீங்கள், எதிர்ப்பு வந்தாலும் பறவாயில்லை எனத் தெரிவித்துவிட்டு இரண்டு விடயங்களை மிக “அழுத்தமாக” பதிவு செய்கிறீர்கள். உங்களுக்கு அதை நினைவுபடுத்த நீங்கள் சொன்னதை அப்படியே எழுத்தில் தருகின்றேன். “ரெண்டு விடயங்களை இந்த தமிழினம் என்றைக்கு மறக்கிறோதோ அன்றைக்குத்தான் இந்த இனம் உருப்படும். “ அதில் முதலாவது, “நடந்த போராட்டத்தை இந்த மக்கள் மறக்கவேண்டும். ஏன் மறக்க வேண்டும் என்றால், அதை சொல்லிச்சொல்லியே உங்களை கொதிநிலையில் வைத்து தங்கள் வாழ்வை வாழப் பார்க்கிறார்கள் சிலர். அதனால் அதை மறவுங்கள்.”



“எல்லாளன்” நாட்டிய நாடகம்! Top News
[Tuesday 2026-11-10 16:00]

தமிழனின் வீரத்தையும், கலைச் செழுமையையும் மேடையில் உயிரோவியமாகத் தீட்டிய அற்புதமான படைப்பு “எல்லாளன்” நாட்டிய நாடகம்! தமிழ் மன்னன் எல்லாளனின் கதையை, நாட்டியமும் இசையும் நடிப்பும் ஒன்றிணைந்த அழகிய கலைமொழியில் எடுத்துரைத்த இந்நிகழ்வு, மனதில் நீங்காத இடம்பிடித்தது. கம்பீரமான பாத்திரங்கள், உணர்வுகளைப் பேசிய விழிகள், துடிப்பான நடன அசைவுகள், வண்ணமிகு ஆடை அலங்காரங்கள் என ஒவ்வொரு அம்சமும் படைப்பிற்கு மெருகூட்டின.



இலங்கை ஜெயராஜ்!
[Friday 2026-11-06 16:00]

இலங்கை ஜெயராஜ் என்று அழைக்கப்படும் இவர் அந்தக் கால இலங்கைத் திண்ணைக் கல்வி முறையின்படி சமயக் கல்வியைக் கற்றுக்கொண்டவர். இருப்பினும், இவர் பெண்கள் அடிமைத்தனக் கருத்துகளையே அதிகம் பேசிவந்தார். அத்துடன் வர்க்க வேறுபாடு ஆதரவுக் கருத்துகளையும் பேசிவந்தார்.



இளம் குரலில் ஒலித்த ஆன்மீகத் தேன்! – செல்வி தியா இளங்கீரனுக்குப் பாராட்டுகள்! Top News
[Thursday 2026-11-05 07:00]

கனடாவில் பிறந்து வளர்ந்த இளம் ஈழத்தமிழ்ச் சிறுமியான செல்வி தியா இளங்கீரன் அவர்கள், கனடாவில் முதன்முறையாகக் கந்த சஷ்டி கவசத்தைத் தனது இனிய குரலில் பாடி இசை வடிவில் வெளியிட்டிருப்பது பெருமகிழ்ச்சியும் பாராட்டுக்குரியதுமான ஒரு சிறப்பான நிகழ்வாகும். முருகப்பெருமானின் அருளையும், பக்தியின் மகத்துவத்தையும் எடுத்துரைக்கும் கந்த சஷ்டி கவசம், தமிழர்களின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் நீங்காத இடம்பிடித்துள்ள ஓர் அருள்மிகு பக்திப் பாடலாகும். அத்தகைய புனிதமான பாடலை, இளமையின் இனிமையும் பக்தியின் ஆழமும் கலந்த தனது மழலைக் குரலில் தியா அவர்கள் பாடியிருப்பது கேட்போர் மனங்களில் பக்திப் பரவசத்தை ஏற்படுத்துகின்றது.



கனடாவில் இலங்கைத் தமிழ் பாடகி லக்ஷ்மிக்கு புதிய அங்கீகாரம்! Top News
[Tuesday 2026-11-03 07:00]

இலங்கைத் தமிழ் பின்னணியைக் கொண்ட கனடா வாழ் பாடகி லக்ஷ்மி சிவநேஸ்வரலிங்கம் (Luksimi Sivaneswaralingam), 2026ஆம் ஆண்டுக்கான South Asian Music Accelerator (SAMA) இசை மேம்பாட்டுத் திட்டத்திற்குத் தெரிவாகியுள்ளார். கனடா முழுவதிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட பத்து இசைக் கலைஞர்களில் ஒருவராக லக்ஷ்மி இடம்பெற்றுள்ளார்.



உலகளாவிய தமிழர் பொருளாதார மற்றும் சமூக வலையமைப்பு அறிமுகம்! Top News
[Sunday 2026-10-25 17:00]

அனைத்துலகத் தமிழர் பேரவை (FGT), உலகத் தமிழர்களின் அறிவு, ஆற்றல், தொழில்சார் அனுபவம் மற்றும் பொருளாதார வளங்களை ஒருங்கிணைக்கும் நோக்கில், உலகளாவிய தமிழர் பொருளாதார மற்றும் சமூக வலையமைப்பையும் (Global Tamil Economic and Social Network), அதன் ஒருங்கிணைப்புக் குழுவையும் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறது. உலகெங்கிலும் வாழும் தமிழ்ப் பேராசிரியர்கள், பொருளாதார நிபுணர்கள், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், தொழில்சார் வல்லுநர்கள் மற்றும் நிறுவனங்களை ஒன்றிணைத்து, பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், தொழில்முனைவையும் வேலைவாய்ப்புகளையும் உருவாக்குதல், சமூக மேம்பாட்டை முன்னெடுத்தல் ஆகியவை இவ்வலையமைப்பின் முக்கிய நோக்கங்களாகும்.



டொரோண்டோ தமிழ் புத்தக அரங்கம் 2026! Top News
[Sunday 2026-10-25 06:00]

அக்டோபர் மாதம் 24 மற்றும் 25ஆம் திகதிகளில், 90 Littles Road, Scarborough-வில் அமைந்துள்ள Malvern Family Resource Centreஇல், நண்பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. புத்தகங்களின் காட்சிப்படுத்தல் மற்றும் விற்பனையுடன் இந்த ஆண்டு 10 நூல் அறிமுகங்கள், கலை இலக்கிய அமர்வுகள் என புத்தகங்களுடன் தொடர்புடைய பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன.



திரு. வைரமுத்து சொர்ணலிங்கத்திற்கு ரொறன்ரோ சர்வதேச தமிழ்த் திரைப்பட விழாவின் வாழ்நாள் சாதனையாளர் விருது! Top News
[Monday 2026-10-05 09:00]

தமிழ்க் கனடிய கலை மற்றும் இசைத்துறையில் கடந்த 35 ஆண்டுகளாக தொடர்ச்சியான பங்களிப்பை வழங்கி வரும் திரு. வைரமுத்து சொர்ணலிங்கம் அவர்களுக்கு, 7வது ரொறன்ரோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா – 2026 இன் வாழ்நாள் சாதனையாளர் விருது (Lifetime Achievement Award) வழங்கி கௌரவிக்கப்பட்டது. ரொறன்ரோ தமிழ் சர்வதேச திரைப்பட விழாவின் 7வது ஆண்டு நிகழ்வுகள் கடந்த செப்டம்பர் 25 முதல் 27ஆம் திகதி வரை நடைபெற்றன. செப்டம்பர் 25ஆம் திகதி யோர்க் சினிமாவில் ஆரம்ப விழா இடம்பெற்றதுடன், தொடர்ந்து இரண்டு நாட்கள் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த திரைப்படங்கள் மற்றும் குறும்படங்கள் திரையிடப்பட்டன.



துணுக்காயில் கோலாகலமாக நடைபெற்ற "பண்பாட்டுப் பெருவிழா – 2026"! Top News
[Friday 2026-09-25 16:00]

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகும் துணுக்காய் பண்பாட்டுப் பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த “துணுக்காய் பிரதேச பண்பாட்டுப் பெருவிழா – 2026” நிகழ்வு 2026 செப்டெம்பர் 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு, துணுக்காய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் அமைந்துள்ள “கலைத் திலகம் அமரர் புவனேஸ்வரி நடராசா அரங்கில்” கோலாகலமாக நடைபெற்றது. துணுக்காய் பிரதேச செயலாளர் இராமதாஸ் ரமேஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக சிவராஜசிங்கம் ஜெயகாந்த், மேலதிக மாவட்டச் செயலாளர் – காணி, முல்லைத்தீவு மாவட்ட செயலகம் கலந்து சிறப்பித்தார்.



மெத்ரேயி ராமகிருஷ்ணன் – வாழ்க்கைக் கதை! Top News
[Friday 2026-09-25 10:00]

மெத்ரேயி ராமகிருஷ்ணன் ஒரு தமிழ் கனடிய நடிகை. அவர் 2001ஆம் ஆண்டு கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள மிசிசாகாவில் பிறந்தார். அவரது பெற்றோர் இலங்கைத் தமிழர்கள். சிறுவயதிலிருந்தே நடிப்பில் ஆர்வம் இருந்தாலும், ஆரம்பத்தில் அவர் தொழில்முறை நடிகையாக இருக்கவில்லை. 2020ஆம் ஆண்டு Netflix-ல் வெளியான Never Have I Ever தொடரில் Devi Vishwakumar என்ற கதாபாத்திரத்தில் நடிக்க ஆயிரக்கணக்கானவர்கள் audition செய்தனர். மெத்ரேயியும் audition கொடுத்தார். இறுதியில், 15,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களில் இருந்து அவர் முக்கிய கதாபாத்திரத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார். இந்தத் தொடர்தான் அவருடைய முதல் பெரிய நடிப்பு வாய்ப்பு. Devi என்ற கதாபாத்திரம் மூலம் உலகம் முழுவதும் அவர் பிரபலமானார்.



தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்! Top News
[Wednesday 2026-09-16 07:00]

12 நாட்கள் பசிமறந்து நல்லூர் வீதியில் உயிர்துறந்த தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் உணர்வுபூர்வமாக ஆரம்பமாகியுள்ளன. தியாக தீபம் திலீபன் அவர்கள், 1987ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை, நல்லூர் ஆலய முன்றலில் நீராகாரம்கூட அருந்தாமல், அகிம்சை வழியில் தனது ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டார்.



துன்னாலை சதாசகாய அன்னை ஆலய வருடாந்த திருவிழா திருப்பலியுடன் நிறைவு! Top News
[Monday 2026-09-14 08:00]

யாழ் துன்னாலை சதாசகாய மாதா ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று நிறைவடைந்தது. திருப்பலிகள் பங்குத்தந்தை விஜின்ரஸ் மற்றும் உதவி பங்குத்தந்தை பஸ்ரியான் அவர்களால் நடாத்தப்பட்டது. ஆலய வாசலிலே ஏற்றப்பட்ட மெழுகுவர்த்திகள் ஆசிர்வதிக்கப்பட்டு பவனியாக ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.



வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி ஆர்ப்பாட்டம்! Top News
[Thursday 2026-09-03 07:00]

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது தமிழ் உறவுகளுக்கு நீதி கோரி, பிரித்தானிய இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் (Sri Lankan High Commission) முன்னால் மாபெரும் கண்டனப் போராட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திலிருந்து பிரித்தானிய பிரதமரின் அலுவலகமான 10 Downing Street நோக்கி மாபெரும் போராட்ட ஊர்வலமாகச் சென்று, உறவுகளுக்கான நீதியையும் இப்படுகொலை நாடக அரங்கமும் இடம்பெற்றது.



சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில், பிரித்தானியாவில் நீதிக்காகத் திரண்ட மக்கள்! Top News
[Wednesday 2026-09-02 07:00]

தாயகத்தில் 1990ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை நினைவுகூர்ந்தும், அவர்களுக்கான உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தியும், பிரித்தானியாவில் நேற்று ஆகஸ்ட் 30ஆம் திகதி நினைவேந்தல் நடைபயணமும் அமைதிவழிப் போராட்டமும் இடம்பெற்றது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், லண்டன் Trafalgar Square மற்றும் லிவர்பூல் ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்வுகளில், பெருமளவான தமிழ் சமூகத்தினர், ஆதரவாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.



யாழில் PickMe நடத்துவது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் MA சுமந்திரனா? Top News
[Thursday 2026-08-20 08:00]

கடந்த காலத்தில் மிகவும் பேசும் பொருளாக இருந்த பிக்மி முச்சக்கர வண்டி சங்கங்களால் அதிகம் பேசப்பட்டது அப்போது இது யாழ்ப்பாணத்தில் முன்னால் கடல்தொழில் அமைச்சர் திரு டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடத்துவதாகவும் கூறப்பட்டது ஆனால் இறுதியில் வந்த தகவலின் அடிப்படையில் இந்த நிறுவனத்தின் ஒரு முக்கிய வழக்கறிஞர்களில் ஒருவரான திரு MA சுமந்திரன் அவர்கள் மறைமுகமாக நடத்துவது தெளிவாக தெரியவந்தது.



தமிழ் ஒலிம்பிக் 2027 திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்தது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்! Top News
[Wednesday 2026-08-19 09:00]

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் நினைவாக 11வது ஆண்டு கோடைகால விளையாட்டு விழா, 02.08.2016 ஞாயிற்றுக்கிழமை Sutton பகுதியில் அமைந்துள்ள St Helier Open Space மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விளையாட்டு விழாவில் கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், மென்பந்து துடுப்பாட்டம், சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள் மற்றும் ஆண், பெண் இருபாலருக்குமான பாரம்பரிய விளையாட்டுக்கள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் இடம்பெற்றன. இதன் மூலம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு வயதுப் பிரிவினரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.



வருங்காலத் தமிழ் ஈழம் சுவிட்சர்லாந்திடமிருந்து என்ன கற்றுக்கொள்ள முடியும்? Top News
[Saturday 2026-08-15 07:00]

தமிழ் தாயகத்தின் எதிர்காலம் குறித்த விவாதம், நிலப்பரப்பின் அளவு என்ற கேள்வியோடு மட்டும் நின்றுவிடக் கூடாது. புவியியல் ரீதியாகச் சிறிய ஒரு நாடு, திறமையான நிறுவனங்கள், சர்வதேச சந்தைகளுக்கான அணுகல், கல்வியறிவு பெற்ற மக்கள் மற்றும் தனது சொந்தப் பொருளாதாரக் கொள்கைகளை வகுக்கும் திறன் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்போது, ​​கணிசமான பொருளாதார செல்வாக்கை உருவாக்க முடியும் என்பதை சர்வதேச அனுபவம் காட்டுகிறது. சுவிஸ் வரலாற்றாசிரியர் ஜேக்கப் டானரின் Krisen und Konjunkturen des Kapitalismus in der Schweiz des 20. Jahrhunderts என்ற ஆய்வு, இந்தக் கேள்வியைக் கருத்தில் கொள்வதற்கான ஒரு சுவாரஸ்யமான உதாரணத்தை வழங்குகிறது.



ஒன்ராறியோ அரசு சென்டினரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு விரிவாக்கத்திற்காக 82 மில்லியன் டொலர் முதலீடு செய்கிறது! Top News
[Friday 2026-08-07 07:00]

கடந்த செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 4 அன்று, ஸ்காபரோ ரூஜ் பார்க் சட்டமன்ற உறுப்பினரும் சுகாதார இணை அமைச்சருமான விஜய் தணிகாசலம் அவர்கள், துணை முதல்வரும் சுகாதார அமைச்சருமான சில்வியா ஜோன்ஸ் மற்றும் ஸ்காபரோ சட்டமன்ற உறுப்பினர்கள் ரேமண்ட் சோ, டேவிட் ஸ்மித் ஆகியோருடன் இணைந்து, ஸ்காபரோ சுகாதார வலையமைப்பின் சென்டினரி மருத்துவமனையில் புதிய மற்றும் விரிவாக்கப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவுக்கான கட்டுமானப் பணிகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.



17ஆவது ஆண்டு தமிழ் கனடிய நடைப்பயணம் உத்தியோகபூர்வமாகத் தொடக்கம்: இந்தியாவில் இருந்து இலங்கை திரும்பும் தமிழ் குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளிக்க நிதியுதவி! Top News
[Sunday 2026-08-02 07:00]

கனடியத் தமிழர் பேரவை (CTC), சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனம் (IMHO) கனடா மற்றும் இலங்கை அகதிகள் மறுவாழ்வுக் கழகம் (OfERR) ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து, 16ஆவது ஆண்டு தமிழ் கனடிய நடைப்பயணத்தை ஜூலை 29, 2026 அன்று உத்தியோகபூர்வமாகத் தொடங்கியுள்ளன. ஒற்றுமை, நம்பிக்கை மற்றும் உயரிய நோக்கத்தை மையமாகக் கொண்டுள்ள இப்பிரச்சாரம், ஒட்டுமொத்த சமூகத்தையும் ஒரு மனிதாபிமான இலக்கின் கீழ் திரட்டியுள்ளது. இந்த ஆண்டுக்கான நடைப்பயணம் வரும் செப்டம்பர் 13, 2026 ஞாயிற்றுக்கிழமையன்று, ஒன்ராறியோவின் பிக்கரிங் நகரில் உள்ள பிரெஞ்சுமேன்ஸ் பே, மில்லினியம் ஸ்கொயர் பூங்காவில் (Millennium Square Park, Frenchman’s Bay in Pickering, Ontario) நடைபெறவுள்ளது. இந்தியாவில் பல வருடங்களாக இடம்பெயர்ந்து வாழ்ந்து, தற்போது தாமாகவே முன்வந்து தங்களின் சொந்த ஊரான திருகோணமலைக்குத் திரும்பும் 30 தமிழ் குடும்பங்கள் மற்றும் தனிநபர்களின் மறுவாழ்வுக்கு ஆதரவளிப்பதே இந்த ஆண்டுக்கான முதன்மை நோக்கமாகும்.



கனடாவை சேர்ந்த 9 வயது ரிஷ்யா சாய்ஸ்ரீ இளங்கீரன் கின்னஸ் உலக சாதனை படைத்து பெருமை சேர்த்துள்ளார்! Top News
[Saturday 2026-08-01 07:00]

Stouffville இல் அமைந்துள்ள Wendat Public School இல் 4ஆம் வகுப்பில் கல்வி பயிலும் 9 வயதான ரிஷ்யா சாய்ஸ்ரீ இளங்கீரன், கண்கட்டு நிலையில் Rubik's Cube ஐ (ரூபிக் கனசதுரம்) சீர்படுத்தும் பன்னாட்டு சாதனை முயற்சியில் பங்கேற்று கின்னஸ் உலகச் சாதனைப் போட்டியில் தனது பெயரைப் பதித்துள்ளார்.


Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா