Untitled Document
January 22, 2025 [GMT]
புற்று நோயால் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் சிறுவன்: - தாயின் உருக்கமான கோரிக்கை
[Monday 2017-07-17 17:00]

புற்றுநோய் பாதிப்பால் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் சிறுவனின் வாழ்நாட்களை நீடிக்க வைக்க அவன் தாய் நிதி உதவி கோரியுள்ளார்.பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் Albino. தொழிற்சாலையில் தொழிலாளியாக பணி புரிந்து வருகிறார். இவர் மனைவி Marissa. இவர்களின் மகன் John Marvin (8).

புற்றுநோய் பாதிப்பால் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் சிறுவனின் வாழ்நாட்களை நீடிக்க வைக்க அவன் தாய் நிதி உதவி கோரியுள்ளார்.பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் Albino. தொழிற்சாலையில் தொழிலாளியாக பணி புரிந்து வருகிறார். இவர் மனைவி Marissa. இவர்களின் மகன் John Marvin (8).

  

மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இந்த குடும்பத்தினரின் வாழ்க்கையில் கடந்த வருடம் யூலை மாதம் புயல் வீச தொடங்கியது.பள்ளிக்கூடத்தில் இருந்த போது John வகுப்பறையில் வாந்தி எடுத்துள்ளான். இதையடுத்து மருத்துவமனைக்கு பெற்றோர் அவனை அழைத்து சென்றனர்.John-ஐ பரிசோதித்த மருத்துவர்கள் அவனுக்கு சிறுநீர் தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.அதன் பிறகு மீண்டும் அவன் உடல் நிலையில் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து Cavite மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் John உடல் பரிசோதனை செய்யப்பட அவன் உடலில் Lymphocytic Leukemia ரக புற்றுநோய் உருவாகியுள்ளது தெரியவந்தது.அதன் பிறகு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை Johnக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிறுவனுக்கு Chemotherapy சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறினார்கள்.

இதையடுத்து அந்த சிகிச்சையும் John-க்கு தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.Chemotherapy சிகிச்சையின் அடுத்த பகுதி வரும் 27ஆம் திகதி மேற்கொள்ளபடவுள்ளது. இதை ஒரு முறை செய்ய ஒரு லட்சத்துக்கு மேல் செலவாகும் என தெரிகிறது.இது குறித்து Johnன் தாய் Marissa கூறுகையில், என் மகன் இன்னும் சில வாரங்களோ அல்லது மாதங்களோ தான் உயிருடன் இருப்பான் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.John அதிக நாட்கள் வாழ அவன் சிகிச்சைக்கு உதவ மக்கள் முன் வரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



உலகின் மிகவும் சக்திவாய்ந்த சூப்பர் கம்ப்யூட்டரை அறிமுகம் செய்த அமெரிக்கா!
[Wednesday 2018-06-20 07:00]

உலகின் மிகவும் சக்திவாய்ந்த சூப்பர் கம்ப்யூட்டரை அமெரிக்கா அறிமுகம் செய்துள்ளது.உலகிலேயே அதிக சக்திவாய்ந்த, மிகவும் சாதுர்யத்துடன் செயல்படக்கூடிய சூப்பர் கம்ப்யூட்டரை அமெரிக்கா கண்டுபிடித்துள்ளது. அமெரிக்காவின் எரிசக்தி துறையை சேர்ந்த ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்வகம் சார்பில் இந்த கம்ப்யூட்டர் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு விநாடியில் 2 லட்சம் டிரில்லியன் (ஒரு டிரில்லியன் என்பது லட்சம் கோடி) கணக்குகளை கூட எளிதாக மேற்கொள்ளும். இந்த கம்ப்யூட்டரில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இயங்கும் திறன், மேம்பட்ட திறன் மற்றும் நுண்ணறிவு ஆகியவை இடம் பெற்றுள்ளன.



அமெரிக்காவில் பெண்ணை கொலை செய்து சடலத்துடன் உறவு கொண்ட கொடூரன்!
[Sunday 2018-05-13 08:00]

அமெரிக்காவில் பெண்ணை கொலை செய்து சடலத்தை தீயிட்டு எரித்த நபருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. அட்லாண்டாவை சேர்ந்தவர் வாலிஸ் முகமது (48) இவர் அங்குள்ள ஒரு விடுதிக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு சென்ற நிலையில் லிண்டா ஜரார்ட் (60) என்ற பெண்ணை சந்தித்துள்ளார்.



பல்கலைக்கழகத்தில் அனைவர் முன்னிலையிலும் ஆடையை கழற்றிய மாணவி!
[Sunday 2018-05-13 08:00]

நியூயோர்க்கில் உள்ள Cornell பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவி தனது ஆய்வறிக்கையை வழங்கிகொண்டிருக்கையில் அனைவர் முன்னிலையிலும் ஆடையை கழற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். Letitia Chai என்ற அந்த மாணவி 4 நாட்களுக்கு முன்னர் அணிந்து சென்ற ஷார்ட்ஸ் மிகவும் சின்னதாக இருப்பதாக பேராசிரியர் கேள்வி எழுப்பியுள்ளார்.



சாம்சங் - தலைமை நிர்வாக அதிகாரி ராஜினாமா செய்துள்ளார்.
[Friday 2017-10-13 19:00]

நெருக்கடி ஏற்பட்டுள்ளதை காரணங்காட்டி சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆகஸ்ட் மாதம் முழு சாம்சங் குழுமத்திற்குமான வாரிசு சிறையில் அடைக்கப்பட்ட பின்னர், அந்த நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள சமீபத்திய திடீர் நிர்வாக மாற்றம் இதுவாகும். சாம்சங் எலக்ட்ரானிக்ஸின் மூன்று இணை தலைமை நிர்வாக அதிகாரிகளில் க்வான் ஓ ஹ்யூன் ஒருவர்.



ஜனநாயக பிரதிநிதித்துவம் வாய்ந்ததாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை மாற்ற சரியான நேரம்: - பான்-கி-மூன்
[Friday 2016-09-16 10:00]

ஐ.நா. பொது சபையின் 71-வது கூட்டத் தொடர் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான்-கி-மூன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:- ஐ.நா. சபையில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று பலமுறை நான் வலியுறுத்தி வந்துள்ளேன். குறிப்பாக பாதுகாப்பு கவுன்சிலை பொறுத்த வரை எத்தனை முறை என்று சொல்ல முடியாத அளவிற்கு சீர்திருத்தத்தை வலியுறுத்தி வருகிறேன். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டிப்பாக அதிக அளவில் ஜனநாயக, பிரதிநிதித்துவம் வாய்ந்ததாக சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும். அதற்கான கவுன்சிலில் மாறுதல்கள் கொண்டு வரப்பட வேண்டும்.



முன்னாள் எகிப்து அதிபர் மோர்ஸிக்கு ஆயுள் தண்டனை!
[Saturday 2016-06-18 20:00]

உளவு பார்த்த குற்றத்திற்காக எகிப்தின் முன்னாள் இஸ்லாமியவாத அதிபரான முகமது மோர்ஸிக்கு ஆயுள் தண்டனை விதித்து எகிப்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ரகசிய ஆவணங்களை வளைகுடா நாடான கத்தாருக்கு அனுப்பிய விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் மோர்ஸியும் ஒருவர். தற்போது, அவர் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.



தினமும் சொக்லேட் சாப்பிட்டால் நீரிழிவில் இருந்து தப்பிக்கலாம்: -ஆய்வில் தகவல்
[Saturday 2016-04-30 15:00]

அதிக அளவில் சாக்லேட் சாப்பிட்டால் உடல் பருமன் அதிகரிக்கும் என்ற தகவல் நிலவி வருகிறது. இந்த நிலையில் தினமும் சாக்லேட் சாப்பிடுபவர்களை நீரிழிவு நோய் அண்டாது. அவர்களை விட்டு விலகி ஓடிவிடும் என்ற நல்ல தகவலும் வெளியாகி உள்ளது. இங்கிலாந்தில் உள்ள வார்விக் பல்கலைக் கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். 18 முதல் 69 வயது வரையிலான 1,153 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதன்படி தினமும் 100 கிராம் அளவுக்கு அதாவது ஒரு பார் அளவுக்கு சாக்லேட் சாப்பிடுபவர்களை நீரிழிவு நோய் மற்றும் இதய ரத்த நாள நோய்கள் தாக்காது என கண்டறியப்பட்டது.



வங்க தேசத்தில் ரசாயன ஆலையில் தீ விபத்து: - பள்ளி ஆசிரியை உட்பட 5 பேர் பலி!
[Sunday 2016-01-24 16:00]

வங்காள தேச தலைநகர் டாக்கா அருகில் உள்ள ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தால் பள்ளி ஆசிரியை உட்பட 5 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர்.காசிபூர் நகரில் உள்ள புபெய்ல் என்ற இடத்தில் டயர்களை உருக்கி எண்ணெய் தயாரிக்கும் ரசாயன ஆலை ஒன்று அமைந்துள்ளது. நேற்று அந்த ரசாயன ஆலையில் உள்ள பாய்லர் வெடித்ததால் அப்பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தின் போது அங்கு 30 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.விபத்து குறித்து தகவலறிந்ததும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.


NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா