Untitled Document
September 28, 2024 [GMT]
பிரித்தானியாவை அச்சுறுத்தும் புடினின் பயங்கர ஏவுகணை!
[Wednesday 2024-05-22 06:00]

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தற்போது உக்ரைன் மீது பயன்படுத்தும் ஏவுகணைகளை பிரிட்டிஷ் தீவுகளை நோக்கி திருப்பிவிட முடியும் என்றும், அவைகளை தடுக்க வாய்ப்பிலலை எனவும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரஷ்யாவில் இருந்து இதுபோன்ற ஏவுகணைகளை ஏவினால் பிரித்தானியாவை அடைய சுமார் 90 நிமிடங்கள் ஆகும் என குறிப்பிடும் நிபுணர்கள் அவை எல்லா திசைகளிலிருந்தும் தாக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளனர்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தற்போது உக்ரைன் மீது பயன்படுத்தும் ஏவுகணைகளை பிரிட்டிஷ் தீவுகளை நோக்கி திருப்பிவிட முடியும் என்றும், அவைகளை தடுக்க வாய்ப்பிலலை எனவும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரஷ்யாவில் இருந்து இதுபோன்ற ஏவுகணைகளை ஏவினால் பிரித்தானியாவை அடைய சுமார் 90 நிமிடங்கள் ஆகும் என குறிப்பிடும் நிபுணர்கள் அவை எல்லா திசைகளிலிருந்தும் தாக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளனர்.

  

மேலும், உக்ரைனிடம் இருக்கும் வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு அளவு இல்லாததால், அத்தகைய தாக்குதலுக்கு எதிராக பிரித்தானியாவால் எதிர்வினையாற்ற முடியாத நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் அளவுக்கு வான் பாதுகாப்பில் பிரித்தானியா இல்லை என்றே நிபுணர்களின் கருத்தாக உள்ளது. மேலும், மேற்கு ரஷ்யாவில் இருந்து விமானமூடாக 500 கிலோ வெடிபொருளுடன் விடுவிக்கப்படும் ஏவுகணையானது, 90 நிமிடங்களில் லண்டனை வந்தடைய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கின்றனர்.

ரஷ்யாவின் Kh-101 ஏவுகணையானது ஐரோப்பாவின் எந்த பகுதியையும் தாக்கும் திறன் கொண்டது என்றும், மணிக்கு 600 மைல்கள் வேகத்திலும் பயணிக்கக்கூடியது என்றும் குறிப்பிடுகின்றனர்.

  
   Bookmark and Share Seithy.com



விடுமுறை கிடைக்காமல் மேலாளர் முன் உயிரிழந்த பெண்!
[Saturday 2024-09-28 18:00]

தாய்லாந்தைச் சேர்ந்த 30 வயது பெண் Sick லீவு கிடைக்காமல் மேனேஜர் முன்னையே நிலைகுலைந்து விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தில் சமுத் பிராகன் (Samut Prakan) மாகாணத்தில் இயங்கி வரும் எலக்ட்ரானிக் பொருட்கள் தொடர்புடைய பிளான்டில் வேலை செய்தி வந்த மே (May) என்ற 30 வயது பெண் ஊழியர் உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டுள்ளார்.



ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டதாக அறிவித்த இஸ்ரேல்!
[Saturday 2024-09-28 18:00]

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்தும், லெபனானில் ஹெஸ்பொலா இலக்குகளை குறிவைத்து தாக்கி வருவதாக இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது.



பெய்ரூட்டில் இஸ்ரேல் கடும் தாக்குதல்!
[Saturday 2024-09-28 18:00]

ஹெஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசான் நஸ்ரல்லாவை இலக்குவைத்தே லெபனான் - பெய்ருட்டில் இஸ்ரேல் வான்வெளி தாக்குதல்களை மேற்கொண்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை ஹெஸ்புல்லா அமைப்பின் தலைமையகத்தினை இலக்குவைத்ததாக தெரிவித்துள்ள இஸ்ரேல், நஸ்ரல்லா கொல்லப்பட்டாரா என்பதை உடனடியாக தெரிவிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளது.



புதிதாக அமுலுக்கு வந்த புலம்பெயர்தல் விதிகள்: அவதிக்குள்ளாகியுள்ள நிறுவனங்கள்!
[Saturday 2024-09-28 18:00]

கனடா பிரதமர், கனடாவுக்கு வரும் குறைந்த ஊதிய தற்காலிக பணியாளர்கள் மற்றும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெறுவோரின் எண்ணிக்கையைக் குறைக்க திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் புதிய புலம்பெயர்தல் விதிகள் சில அமுலுக்கு வந்துள்ளன. ஆனால், இந்த புதிய விதிகளால் பல நடைமுறைப் பிரச்சினைகள் உருவாகியுள்ளன.



அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை இணைந்து தயாரிக்க அவுஸ்திரேலியா-பிரித்தானியா ஒப்பந்தம்!
[Saturday 2024-09-28 07:00]

அவுஸ்திரேலியா மற்றும் பிரித்தானியா, AUKUS கூட்டமைப்பின் கீழ், புதிய அணுசக்தி கொண்டு இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை தயாரிக்க இரண்டு நாடுகளுக்கிடையில் ஒப்பந்தத்தை கையெழுத்திட இருக்கின்றன. இந்த கூட்டமைப்பில் அமெரிக்காவும் அடங்கும். AUKUS ஒப்பந்தத்தின் படி, அவுஸ்திரேலியா, எதிர்வரும் ஒரு தசாப்தத்தில் அமெரிக்காவில் இருந்து வெர்ஜீனியா வகை அணுசக்தி கொண்டு இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குகிறது.



லெபனானில் இருந்து கனடா குடிமக்களை மீட்க தீவிர நடவடிக்கை!
[Saturday 2024-09-28 07:00]

லெபனானின் தலைநகரமான பெய்ரூட்டில் இஸ்ரேல் குண்டுவீசக்கூடும் என்கிற ஏற்பட்ட அச்சத்தில் இருந்து கனடா அதன் குடிமக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கனடாவின் வெளிநாட்டு விவகார அமைச்சர் மெலனி ஜோலி, வெள்ளிக்கிழமை இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டார்.



ஜப்பானின் புதிய பிரதமர்: யார் இந்த ஷிகெரு இஷிபா?
[Saturday 2024-09-28 07:00]

ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக ஷிகெரு இஷிபா (Shigeru Ishiba) நியமிக்கப்பட்டுள்ளார். நியூயோர்க் டைம்ஸ் கருத்துப்படி, அவர் வெள்ளிக்கிழமை நடந்த தாராளவாத ஜனநாயகக் கட்சி (LDP) தேர்தலில் வெற்றி பெற்றார். அக்டோபர் முதலாம் திகதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி அவர் பதவியேற்க உள்ளார். ஜப்பானில், ஆளும் கட்சியின் தலைவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். தாராளவாத ஜனநாயகக் கட்சிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மை உள்ளது.



இஸ்ரேல் தொடர்பில் முக்கிய முடிவெடுக்க இருக்கிறோம்: களத்தில் குதிக்கும் ஏமனின் ஹவுதிகள்!
[Friday 2024-09-27 18:00]

சர்வதேச அழுத்தங்கள் இருந்த போதும் லெபனான் மீது தொடர் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது இஸ்ரேல். மூன்று வாரம் போர் நிறுத்த நடவடிக்கைகளை முன்னெடுக்க அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.



கனடாவில் 15 வயது சிறுமி மீது தீவைத்த 14 வயது சிறுமி!
[Friday 2024-09-27 18:00]

கனடாவிலுள்ள பள்ளி ஒன்றில் பயிலும் 14 வயது சிறுமி ஒருத்தி, தன்னுடன் பயிலும் சக மாணவி மீது தீவைத்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். இம்மாதம், அதாவது, செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி, கனடாவின் Saskatoon மாகாணத்தில் அமைந்துள்ள Evan Hardy Collegiateஇல் படிக்கும் 14 வயது சிறுமி, தன் சக மாணவியான 15 வயது சிறுமி மீது தீவைத்தாள்.



50 நாடுகள் இணைந்து ஜேர்மனியில் சந்திப்பு: அமெரிக்க ஜனாதிபதி அழைப்பு!
[Friday 2024-09-27 18:00]

உக்ரைன் ஆதரவு நாடுகளான 50 நாடுகள் இணைந்து பங்கேற்கும் சந்திப்பு ஒன்றிற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார். ரஷ்ய ஊடுருவலைத் தொடர்ந்து, உக்ரைனுக்கு உதவும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்.



அவசரமாக திசை திருப்பப்பட்ட கனடிய விமானம்!
[Friday 2024-09-27 18:00]

எயார் கனடா விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று அவசரமாக எடின்பரோவில் தரையிறக்கப்பட்டுள்ளது. அவசர நிலைமையினால் இவ்வாறு தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ரொறன்ரோவில் இருந்து பிராங்புரூட் நோக்கி பயணம் செய்த விமானமே இவ்வாறு அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.



விமான புகை காரணமாக பூமியில் வெப்பநிலை அதிகரிப்பு: விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
[Friday 2024-09-27 06:00]

விமானத்திலிருந்து வெளிவரும் புகை காரணமாக பூமியில் வெப்பநிலை அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது. விமானங்களில் இருந்து வெளியேறும் புகை மேகங்கள் வானத்தில் ஒரு போர்வை போல செயல்படக்கூடும், இதன் விளைவாக பூமியில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.



பிரித்தானியாவில் சூறாவளி எச்சரிக்கை: கனமழை, வெள்ளம் ஏற்பட வாய்ப்பு!
[Friday 2024-09-27 06:00]

பிரித்தானியாவில் சில பகுதிகளுக்கு சூறாவளி (Tornado) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, அதேசமயம் நாட்டின் பல இடங்களில் கனமழையும் வெள்ளத்தும் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூறாவளி மற்றும் புயல் ஆராய்ச்சி நிறுவனம் (Tornado and Storm Research Organisation) இங்கிலாந்தின் தென் கிழக்கு பகுதிகளில் இடி, 50 மைல் வேகத்தில் காற்று மற்றும் "குறுகிய கால சுழற்காற்று" ஏற்படும் வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது.



ஆசிய நாடொன்றை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக்க பிரான்ஸ் ஒப்புதல்!
[Friday 2024-09-27 06:00]

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஆசிய இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்க பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் ஒப்புதல் அளித்துள்ளார். செப்டம்பர் 25, வியாழக்கிழமை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் (UNGA) உரையாற்றிய மக்ரோன், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதை பிரான்ஸ் ஆதரிக்கிறது என்று கூறினார். சீனாவில் ரகசியமாக போர் ட்ரோன்களை உருவாக்கிவரும் ரஷ்யா சீனாவில் ரகசியமாக போர் ட்ரோன்களை உருவாக்கிவரும் ரஷ்யா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுடன் கூடுதலாக ஜேர்மனி, ஜப்பான், பிரேசில் மற்றும் 2 ஆப்பிரிக்க நாடுகளுக்கு நிறைந்த உறுப்பினர் அந்தஸ்தை வழங்க மேக்ரான் கேட்டுள்ளார்.



கனடிய அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி!
[Thursday 2024-09-26 18:00]

கனடாவின் லிபரல் அரசாங்கத்திற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியடைந்துள்ளது. சிறுபான்மை அரசாங்கமான லிபரல் அரசாங்கத்திற்கு எதிராக பியே பொலியேவின் தலைமையிலான கான்சர்வேட்டிவ் கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் ஒன்றை நாடாளுமன்றில் சமர்ப்பித்தது. எனினும் இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.



இடையூறு செய்தால் ஈரானை அடித்து நொறுக்குவேன்: டிரம்ப் எச்சரிக்கை!
[Thursday 2024-09-26 18:00]

“அமெரிக்கா நலனுக்கு இடையூறு செய்தால், ஈரானை அடித்து நொறுக்குவேன்” என ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப்பை கொலை செய்ய இரண்டு முறை முயற்சி நடந்தது. அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.



ஏவுகணை சோதனை வெற்றி: சீனா அறிவிப்பு!
[Thursday 2024-09-26 18:00]

பசுபிக்சமுத்திரத்தில் கண்டங்களிற்கு இடையிலான ஏவுகணையை சீனா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக தெரிவித்துள்ளது. சீன நேரப்படி காலை 8.44 மணியளவில் போலி ஏவுகணை முகப்பை ஏந்தி ஐசிபிம் ஏவப்பட்டது,அது பசுபிக் கடலின் உயரமான பகுதியில் விழுந்தது என சீனா தெரிவித்துள்ளது. அதேவேளை ஏவுகணையின் பயணப்பாதை அது தரையிறங்கிய இடத்தை சீனாவின் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிடவில்லை.



மேற்குலக நாடுகளை எச்சரிக்கும் விளாடிமிர் புடின்!
[Thursday 2024-09-26 18:00]

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், உக்ரேன் போரில் மேற்கத்திய ஆதரவு தாக்குதல்களைத் தடுக்க தனது அணு ஆயுதக் கோட்பாட்டை விரிவுபடுத்தியுள்ளார். ரஷ்யாவை ஏவுகணைகள் மூலம் எந்த நாடாவது தாக்கினால், அந்த நாட்டின் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்படுமென ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார்.



நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை எதிர்கொள்ளவிருக்கும் கனேடிய பிரதமர் ட்ரூடோ!
[Thursday 2024-09-26 06:00]

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் அரசு நம்பிக்கையில்லா தீர்மானத்தால் கவிழ்க்கப்படும் அபாயத்தில் உள்ளது. இதனால் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தி புதிய தேர்தல் ஏற்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது. எனினும், இந்த தீர்மானம் நிறைவேற்றப்படும் வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கிறது. பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெறும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சியான கனசர்வேட்டிவ் கட்சி முன்னிறுத்தியுள்ளது.



லெபனான்-இஸ்ரேல் எல்லையில் 600 இந்திய ராணுவ வீரர்கள் குவிப்பு!
[Thursday 2024-09-26 06:00]

மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கும் லெபனானின் ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையிலான போர் அங்கு மோசமான நிலைமைக்கு வழிவகுத்துள்ளது. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற சூழ்நிலை உள்ளது. அங்கு இந்திய ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ஐ.நா. அமைதி காக்கும் படையில் பணியாற்றும் 600-க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் இஸ்ரேல்-லெபனான் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.


Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா