Untitled Document
June 24, 2024 [GMT]
மேக்ரானை சந்தித்த பிரதமர் ட்ரூடோ!
[Saturday 2024-06-15 17:00]

ஜி7 மாநாட்டில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுடனான சந்திப்பு குறித்து கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதிவிட்டுள்ளார். இத்தாலியில் ஜி7 மாநாடு இன்றுடன் முடிவடைகிறது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

ஜி7 மாநாட்டில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுடனான சந்திப்பு குறித்து கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதிவிட்டுள்ளார். இத்தாலியில் ஜி7 மாநாடு இன்றுடன் முடிவடைகிறது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

  

அப்போது கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானை சந்தித்து பேசினார்.

அதனைத் தொடர்ந்து கனடா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் கூட்டணி குறித்து ட்ரூடோ பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், ''கனடாவும், பிரான்ஸும் இப்போது அட்லாண்டிக் கடல் கடந்த பாதுகாப்பை வலுப்படுத்துவது, தவறான தகவல்களை எதிர்த்துப் போராடுவது, நமது ஜனநாயகத்தைப் பாதுகாப்பது என மிக முக்கியமான வேலைகளில் கூட்டாளிகளாக உள்ளன. இப்போது இதுதான் முக்கியமான வேலை. இந்த வாரம் ஜி7 மாநாட்டில் இமானுவல் மேக்ரானுடன் நான் விவாதிக்க நிறைய இருந்தது'' என தெரிவித்துள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



ஈபிள் டவர் டிக்கெட் விலை 20% உயர்வு!
[Monday 2024-06-24 06:00]

ஈபிள் டவர் கோபுரத்தின் டிக்கெட் விலை 20% உயர்ந்துள்ளது. பாரிஸின் ஈபிள் டவர் செலவு பராமரிப்புகளை சமாளிக்கும் நோக்கில் ஈபிள் டவரின் சுற்றுலா டிக்கெட் விலைகள் 20% உயர்த்தப்பட்டுள்ளன. 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு சற்று முன்னதாக இந்த உயர்வு செய்யப்பட்டுள்ளது.



ரஷ்யாவில் துப்பாக்கிச்சூடு தாக்குதல்: 6 காவல்துறை அதிகாரிகள் உயிரிழப்பு!
[Monday 2024-06-24 06:00]

ரஷ்யாவில் திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதலில் 6 காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவின் தாகெஸ்தான்(Dagestan) பகுதியில் துப்பாக்கி சுடும் தாக்குதல்கள் மூலம் காவல்துறை அதிகாரிகள் 6 பேர் கொல்லப்பட்டதாகவும், 12 பேர் காயமடைந்ததாகவும் அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.



பிரித்தானியாவில் புகைப்படம் எடுக்க போய் 60 அடி பள்ளத்தில் விழுந்த சிறுவன்!
[Monday 2024-06-24 06:00]

பிரித்தானியாவின் டார்செட் பகுதியில் 60 அடி உயர குன்றிலிருந்து விழுந்த பதின்பருவ சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பிரித்தானியாவின் டார்செட்(Dorset) பகுதியில் உள்ள ஓல்ட் ஹாரி ராக்ஸ்(Old Harry Rocks ) என்ற இடத்தில் நண்பருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது பதின்பருவ சிறுவன் ஒருவன் 60 அடி ஆழக் குன்றிலிருந்து கீழே விழுந்தார்.



இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக திரண்ட ஆயிரக்கணக்கானோர்!
[Sunday 2024-06-23 16:00]

இஸ்ரேல் கொடிகளை ஏந்தியபடி டெல் அவிவ் நகரில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக முழக்கமிட்டு, பதவி விலக கோரியுள்ளனர். ஹமாஸ் படைகளிடம் சிக்கியுள்ள பணயக்கைதிகளை மீட்கவும், உடனடியாக தேர்தலை முன்னெடுக்கவும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



கனடாவில் பிரபல உணவகம் முன் வேலை வாய்ப்புக்காக வரிசையில் நின்ற மாணவர்கள்!
[Sunday 2024-06-23 16:00]

கனடாவில் பிரபல உணவகமான டிம் ஹார்டன் முன் வேலை வாய்ப்புக்காக நூற்றுக்கணக்கான மாணவர்கள் வரிசையில் நின்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த உணவகத்திற்கு வேலை வாய்ப்புக்காக சென்ற நபரொருவர் அங்கு சென்ற போது நூற்றுக்கணக்கானவர்கள் நிற்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.



12 வது குழந்தைக்கு தந்தையான எலான் மஸ்க்!
[Sunday 2024-06-23 16:00]

உலகின் பிரபல பணக்காரான எலான் மஸ்க் தனது 12 வது குழந்தைக்கு தந்தையாகியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. காதல் விவகாரங்களில் பலருடன் தொடர்பு வைத்துள்ள எலான் மஸ்க்கிற்கு கடந்த 5 வருடங்களில் மட்டும் 6 குழந்தைகள் பிறந்துள்ளனர்.



ரொறன்ரோவில் வேலை வாய்ப்புக்காக காத்திருப்போருக்கு அதிர்ச்சி செய்தி!
[Sunday 2024-06-23 16:00]

கனடாவின் டொரன்டோ பகுதியில் வேலை வாய்ப்பு பெற்றுக் கொள்வதற்கு காத்திருப்போருக்கு ஓர் அதிர்ச்சி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பு எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புதிய வாழ்க்கையை, புதிய சந்தர்ப்பங்களை, தொழில்சார் வெற்றிகளை ஈட்டிக் கொள்ளும் நோக்கில் கனடாவிற்கு வருகை தரும் பலர் நெருக்கடிகளை எதிர் நோக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



துப்பாக்கி உரிமம் கேட்கும் 42,000 இஸ்ரேலிய பெண்கள்!
[Sunday 2024-06-23 07:00]

இஸ்ரேல் நாட்டு பெண்கள் 42,000 பேர் துப்பாக்கி உரிமம் கேட்டு தங்கள் நாட்டு அரசிடம் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபரில் ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலுக்கு பிறகு, இஸ்ரேலில் துப்பாக்கி உரிமம் கோரும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.



அமெரிக்க பாலத்தின் மீது மோதிய கப்பல்!
[Sunday 2024-06-23 07:00]

அமெரிக்க பாலத்தின் மீது மோதிய கப்பலில் சிக்கியிருந்த 8 இந்தியர்கள் வீடு திரும்பியுள்ளனர். மார்ச் மாதம் பால்டிமோர் நகரில் பாலம் இடிந்த துயர சம்பவத்தில் சிக்கிய கப்பலில் இருந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு, எட்டு இந்திய கப்பல் குழுவினர் இறுதியாக விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஆறு கட்டுமான தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.



இங்கிலாந்து - டென்மார்க் யூரோ 2024 போட்டி: பப்பில் வெடித்த மோதல்: ஒருவர் பலி!
[Sunday 2024-06-23 07:00]

இங்கிலாந்து - டென்மார்க் யூரோ 2024 போட்டிக்கு பிறகு பப்பில் நடைபெற்ற தாக்குதலில் 57 வயதான நபர் ஒருவர் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து - டென்மார்க் யூரோ 2024 போட்டி 1-1 என்ற சமநிலையில் முடிந்த பின்னர், மேற்கு சசெக்ஸில் உள்ள ஒரு பப்பில் நடந்த கொடூரமான தாக்குதலில் 57 வயதான நபர் ஒருவர் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



செஞ்சிலுவை சங்க அலுவலகம் அருகே இஸ்ரேல் ராணுவத்தின் கொடுஞ்செயல்!
[Saturday 2024-06-22 18:00]

காஸாவில் செஞ்சிலுவைச் சங்க அலுவலகம் அருகே இஸ்ரேல் ராணுவம் முன்னெடுத்த கண்மூடித்தனமான தாக்குதலில் கொத்தாக பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தாக்குதலில் செஞ்சிலுவைச் சங்க அலுவலகம் சேதமடைந்துள்ளதுடன், இறப்பு எண்ணிக்கை 22 என கூறப்படுகிறது. தொடர்புடைய அலுவலகத்தைச் சுற்றி நூற்றுக்கணக்கான இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் கூடாரங்களில் வசிக்கின்றனர்.



பெண்கள் ஹிஜாப் அணிய தடை விதித்த நாடு!
[Saturday 2024-06-22 18:00]

96 சதவீதம் இஸ்லாமியர்கள் வசிக்கும் மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தான் நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. தஜிகிஸ்தான் நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிய தடை , முக்கிய பண்டிகைகள் கொண்டாட தடை உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் ஒப்புதல் அளித்தது.



பிரித்தானிய தேர்தலில் முதல் செயற்கை நுண்ணறிவு வேட்பாளர்!
[Saturday 2024-06-22 18:00]

பிரித்தானியாவில் வரும் ஜூலை 4ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிட AI அல்லது செயற்கை நுண்ணறிவு வேட்பாளர் ஒருவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி , 59 வயதான ஸ்டீவ் எண்டகோர்ட் என்ற தொழிலதிபர் AI தொழில்நுட்பத்தின் மூலம் தன்னை வேட்பாளராக அறிமுகப்படுத்தியுள்ளார்.



சுவிஸில் வீட்டு வேலையாட்களை கொடுமைப்படுத்திய இந்திய குடும்பம்!
[Saturday 2024-06-22 18:00]

சுவிட்சர்லாந்தில் வீட்டு பணியாளர்களை துன்புறுத்திய இந்திய குடும்பத்திற்கு சிறை தணடனை விதிக்கபப்ட்டுள்ளது. உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான இந்துஜா குழுமத்தின் தலைவர் பிரகாஷ் இந்துஜா, அவரது மனைவி கமால் இந்துஜா, மகன் அஜய் மற்றும் மருமகள் நம்ரதா ஆகியோர் சுவிட்சர்லாந்தில் வசிக்கின்றனர்.



கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மர்ம மரணம்!
[Saturday 2024-06-22 06:00]

கனடாவின் Harrow நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் Harrow என்ற சிறிய நகரில் (வியாழக்கிழமை மதியம்) ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை 1:30 மணி அளவில் County Road 13 என்ற இடத்தில் உள்ள வீட்டிற்கு அழைக்கப்பட்ட காவல்துறையினர் அங்கு நான்கு உடல்களைக் கண்டறிந்தனர்.



'20 ஆண்டு சம்பளம், வேலையே இல்லை' - பிரான்ஸ் பெண்மணி தொடுத்த வழக்கு!
[Saturday 2024-06-22 06:00]

பணி எதுவும் தராமல் ஊதியம் மட்டும் வழங்கி வந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு எதிராக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் ஊழியர் வழக்கு தொடுத்துள்ளார். பிரான்சைச் சேர்ந்த ஊனமுற்ற பெண் ஒருவர், தனக்கு எந்த வேலையும் வழங்காமல் முழு சம்பளத்தை 20 ஆண்டுகளாக வழங்கி வந்த முன்னாள் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். லாரன்ஸ் வான் வாசென்ஹோவ் என்ற அந்த பெண், தொலைத்தொடர்பு நிறுவனமான ஆரஞ்சு நிறுவனத்தின் மீது பாகுபாடு மற்றும் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.



பிரித்தானியாவில் 7 மாத குழந்தையை கடித்துக்கொன்ற வளர்ப்பு நாய்!
[Saturday 2024-06-22 06:00]

பிரித்தானியாவில் வீட்டு வளர்ப்பு நாய் கடித்ததில் 7 மாத குழந்தை உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் கோவென்ட்ரியில்(Coventry residence) உள்ள தங்கள் வீட்டில் ஏழு மாத குழந்தை எல்லே டோஹெர்டி(Elle Doherty), குடும்பத்தின் செல்ல நாயால் கடிக்கப்பட்டதில் இறந்துள்ளார் என்ற துயரச் செய்தி வெளியாகியுள்ளது.



கனடாவில் கொள்ளையடிக்கப்பட்ட 6,600 தங்கக் கட்டிகள் எங்கே?
[Friday 2024-06-21 18:00]

திரைப்பட பாணியில் கனடா விமான நிலையத்தில் கொள்ளையடிக்கப்பட்ட 6,600 தங்கக் கட்டிகள் எங்கே என்னும் கேள்விக்கு இன்றுவரை பதிலில்லை! 2023ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி, சுவிட்சர்லாந்தின் சூரிச்சிலுள்ள வங்கி ஒன்றிலிருந்து கனடாவின் ரொரன்றோவுக்கு இரண்டு பார்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன. அவற்றின் மீது ’பணம் மற்றும் தங்கக்கட்டிகள்’ என குறிப்பிடப்பட்டிருந்திருக்கிறது. கனடாவின் ரொரன்றோ விமான நிலையத்திலுள்ள சரக்குகள் சேமிப்பகத்தில் அந்த பார்சல்கள் வைக்கப்பட்டிருந்திருக்கின்றன.



பிரான்ஸ் ஜனாதிபதிக்கு சொந்த ஊரிலேயே எதிர்ப்பு!
[Friday 2024-06-21 18:00]

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு, அவர் பிறந்த ஊரிலேயே ஆதரவில்லை என்பது தெரியவந்துள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் பிறந்த ஊர், வட பிரான்சிலுள்ள Amiens என்னும் ஊராகும். அவரது மனைவி பிரிஜிட், உள்ளூரில் பிரபலமான Trogneux என்னும் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய குடும்பத்துக்குச் சொந்தமான இனிப்புகள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று இப்போதும் அங்கு செயல்பட்டுவருகிறது.



பாகிஸ்தானில் குர்ஆனை அவமதித்த நபரை உயிருடன் எரித்த கும்பல்!
[Friday 2024-06-21 18:00]

பாகிஸ்தானில் குர்ஆனை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை கும்பல் ஒன்று உயிருடன் எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கைபர் பக்துன்க்வாவின் ஸ்வாட் மாவட்டத்தில் உள்ள Madyan பகுதியில் நடந்துள்ளது. இந்த வன்முறை சம்பவத்தில் 8 பேர் காயமடைந்ததாக உள்ளூர் காவல்துறை தெரிவித்துள்ளது. கொல்லப்பட்ட நபரின் பெயர் முகமது இஸ்மாயில் என்றும், அவர் Madyanனைப் பார்க்க வந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா