Untitled Document
June 26, 2024 [GMT]
இத்தாலியில் இலங்கையர் ஒருவர் அதிரடியாக கைது!
[Monday 2024-06-17 19:00]

இத்தாலியில் இலங்கையர் ஒருவரைக் கொலை செய்ய முயற்சித்த, இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் இத்தாலியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 41 வயதுடைய இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இத்தாலியில் இலங்கையர் ஒருவரைக் கொலை செய்ய முயற்சித்த, இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் இத்தாலியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 41 வயதுடைய இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  

இதன்போது மற்றுமொரு இலங்கையரை பலமுறை கத்தியால் குத்தி பலத்த காயங்களை ஏற்படுத்தியுள்ளதாக இத்தாலியின் கராபினியேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை (15) மாலை ஒருவர் காயமடைந்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். இதன்போது, 44 வயதுடைய இலங்கை பிரஜை ஒருவர் தாக்கப்பட்டு கழுத்து, மார்பு மற்றும் வலது தொடையில் பலத்த காயங்களுடன் காணப்பட்டுள்ளார்.

காயமடைந்தவரை பொலிஸார் பெல்லெக்ரினி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதோடு கண்காணிப்பில் உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பாக இத்தாலியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 41 வயதான இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



அமெரிக்காவில் கடும் வெப்பத்தால் உருகிய ஆபிரகாம் லிங்கனின் நினைவு சிலை!
[Wednesday 2024-06-26 16:00]

அமெரிக்காவில் நிலவி வரும் கடும் வெயிலுக்கு மத்தியில், வாஷிங்டனில் உள்ள அமெரிக்க தலைவர் ஆபிரகாம் லிங்கனின் 6 அடி உயர மெழுகு சிலை உருகியுள்ளது. கடந்த சனிக்கிழமையன்று வடமேற்கு வாஷிங்டனில் வெப்பநிலை 37.7 டிகிரி செல்சியஸாக உயர்ந்ததால் லிங்கன் நினைவகத்தைப் பிரதிபலிக்கும் மெழுகு சிலை உருகியுள்ளது.



கனடாவில் கைதான 124 பேர்: ஏன் தெரியுமா?
[Wednesday 2024-06-26 16:00]

கனடாவில் வாகன திருட்டுச் சம்பவங்களை மேற்கொண்ட 124 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒன்றாரியோ மாகாணத்தில் இவ்வாறு வாகன கொள்ளைகளில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளையிடப்பட்ட சுமார் 177 வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.



பறந்து வந்த குப்பை பலூனால் விமான நிலையத்தை மூடிய தென் கொரியா!
[Wednesday 2024-06-26 16:00]

பறந்து வந்த வடகொரியாவின் குப்பை பலூன்கள் தென் கொரியா விமான நிலையத்தில் விழுந்ததனால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரிய தீபகற்பத்தில் வடகொரியா - தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது.



கனடா இடைத்தேர்தல்: ட்ரூடோ கட்சிக்கு தோல்வி!
[Wednesday 2024-06-26 16:00]

கனடாவில் செவ்வாயன்று நடந்து முடிந்த இடைத்தேர்தலில், ஆளும் ட்ரூடோவின் கட்சி முக்கிய இருக்கையை இழந்துள்ளது. இந்த இழப்பு ட்ரூடோவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. சமீபத்தில் ஐரோப்பாவில் நடந்து முடிந்த பல தேர்தல்கள், மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதை தெளிவாகக் காட்டியுள்ளன. அது பிரித்தானியாவானாலும் சரி, ஜேர்மனியானாலும் சரி, ஆளும் கட்சியினர் பின்னடைவையே சந்தித்துள்ளார்கள்.



இந்தோனேசியாவில் உடற்பயிற்சி கூடத்தில் நேர்ந்த பரிதாபம்!
[Wednesday 2024-06-26 06:00]

இந்தோனேசியாவில் உடற்பயிற்சி கூடத்தில் டிரெட்மில்லில் ஓடிக்கொண்டிருந்த 22 வயது பெண் மூன்றாவது தள ஜன்னலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தான், பொன்டியானக்கில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தில் டிரெட்மில்லில்(treadmill) ஓடி பயிற்சி செய்து கொண்டு இருந்த 22 வயது பெண் மூன்றாவது தள ஜன்னலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.



கனடாவில் விளையாட்டு திடல் அருகில் நடந்த அசம்பாவிதம்!
[Wednesday 2024-06-26 06:00]

கனடாவின் டொரண்டோவில் உள்ள விளையாட்டு திடல் அருகே நடந்த துப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கனடாவின் டொரண்டோவில் உள்ள ஜேன் வீதி மற்றும் பால்ஸ்டாஃப் அவென்யூ பகுதியில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்திற்கு அருகில் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



பிரித்தானியாவுக்குள் நூதன முறையில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள்!
[Wednesday 2024-06-26 06:00]

பிரித்தானியாவுக்குள் சுமார் 28.9 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருட்கள், 18.7 மில்லியன் சிகரெட்களை கடத்திய இரண்டு இந்திய வம்சாவளியினருக்கு அளிக்கப்பட்டிருந்த தண்டனையை அதிகரிக்கவேண்டும் என குற்றப்பிரிவு பொலிசாரும், அரசு சட்டத்தரணிகளும் கோரிக்கை விடுத்ததை ஏற்று, நீதிமன்றம் குற்றவாளிகளுடைய தண்டனையை அதிகரித்து உத்தரவிட்டுள்ளது.



கனடாவின் பண வீக்கம் குறித்து வெளியான தகவல்!
[Tuesday 2024-06-25 18:00]

கனடாவின் பணவீக்க நிலைமைகள் சாதகமான நகர்வினை நோக்கி பயணிப்பதாக மத்திய வங்கியின் ஆணையாளர் ரிப் மெக்கலம் தெரிவித்துள்ளார். கனடிய மத்திய வங்கி நாட்டின் பணவீக்க வீதத்தை இரண்டு விதத்திற்கும் குறைந்த அளவில் பேணும் இலக்கினை அடிப்படையாகக் கொண்டு தீர்மானங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.



பல ஆண்டுகளுக்கு பிறகு வெளியுலகை பார்க்கும் ஜூலியன் அசாஞ்சே!
[Tuesday 2024-06-25 18:00]

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே பல ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் ஜூலியன் அசாஞ்சே மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவருக்கு இந்த சுதந்திரம் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.



கனடிய இடைத்தேர்தலில் லிபரல் கட்சி தோல்வி!
[Tuesday 2024-06-25 18:00]

டொரன்டோவின் சென் போல்ஸ் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றியீட்டியுள்ளது. லிபரல் கட்சியின் வலுவான தொகுதியாக கருதப்பட்டு வந்த இந்த தொகுதியில் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றியை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட டொன் ஸ்டுவர்ட் இந்த தேர்தலில் வெற்றி ஈட்டியுள்ளார்.



பிரித்தானியாவில் ஆண்களை தாக்கும் வைரஸ்!
[Tuesday 2024-06-25 18:00]

பிரித்தானியாவில், மீண்டும் ஒரு புதிய கொரோனாவைரஸ் மாறுபாடு வேகமாகப் பரவ ஆரம்பமாகியுள்ளது. இந்த வைரஸானது பெண்களை விட ஆண்களை அதிகம் பாதிக்கக்கூடியது என கண்டறியப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம், FLiRT என அழைக்கப்படும் கொரோனாவைரஸ்களின் மாறுபாடுகளில் ஒன்றான KP. 3 என்னும் கொரோனாவைரஸ் மாறுபாடு கண்டுபிடிக்கப்பட்டது.



ரஷ்யாவில் வழிபாட்டுத் தலங்களில் பயங்கரவாத தாக்குதல்!
[Tuesday 2024-06-25 06:00]

ரஷ்யாவில் பயங்கரவாதிகள் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். வழிபாட்டுத் தலங்கள், தேவாலயங்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை தாகெஸ்தானில் (Dagestan) ஆயுதமேந்திய தாக்குதல் நடத்தியவர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 15 பொலிஸ் அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் ஒரு தேவாலயத் தந்தை கொல்லப்பட்டதாக மாநில ஆளுநர் செர்ஜி மிலிகோவ் (Sergei Melikov) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.



விமான நிலையத்தில் PG Work Permit விண்ணப்பத்தை நிறுத்திய கனடா!
[Tuesday 2024-06-25 06:00]

Flagpoling-ஐ தவிர்ப்பதற்காக விமான நிலையத்தில் வெளிநாட்டவர்களுக்கு PG work permit விண்ணப்பம் வசங்குவதை கனடா நிறுத்தியுள்ளது. இந்த மாற்றங்கள் ஜூன் 21 முதல் அமலுக்கு வந்தன. வேலை மற்றும் நிரந்தர வதிவிடத்தை நாடும் சர்வதேச மாணவர்களுக்கு முதுநிலைப் பட்டதாரி பணிக்கான அனுமதி (PGWP) முக்கியமானது.



ஹஜ் யாத்திரையில் 1301 பேர் மரணம்: சவுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
[Tuesday 2024-06-25 06:00]

இஸ்லாமியர்களின் புனித ஹஜ் யாத்திரையில் வெயிலின் தாக்கத்தால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். இதுவரை 1,301 யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளதாக சவுதி அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவர்களில் 83 சதவீதம் பேர் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஹஜ் செய்ய வந்தவர்கள் என்றும், போதுமான தங்குமிடம் அல்லது வசதியின்றி நேரடி சூரிய ஒளியில் நீண்ட தூரம் நடந்துள்ளனர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஈபிள் டவர் டிக்கெட் விலை 20% உயர்வு!
[Monday 2024-06-24 06:00]

ஈபிள் டவர் கோபுரத்தின் டிக்கெட் விலை 20% உயர்ந்துள்ளது. பாரிஸின் ஈபிள் டவர் செலவு பராமரிப்புகளை சமாளிக்கும் நோக்கில் ஈபிள் டவரின் சுற்றுலா டிக்கெட் விலைகள் 20% உயர்த்தப்பட்டுள்ளன. 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு சற்று முன்னதாக இந்த உயர்வு செய்யப்பட்டுள்ளது.



ரஷ்யாவில் துப்பாக்கிச்சூடு தாக்குதல்: 6 காவல்துறை அதிகாரிகள் உயிரிழப்பு!
[Monday 2024-06-24 06:00]

ரஷ்யாவில் திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதலில் 6 காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவின் தாகெஸ்தான்(Dagestan) பகுதியில் துப்பாக்கி சுடும் தாக்குதல்கள் மூலம் காவல்துறை அதிகாரிகள் 6 பேர் கொல்லப்பட்டதாகவும், 12 பேர் காயமடைந்ததாகவும் அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.



பிரித்தானியாவில் புகைப்படம் எடுக்க போய் 60 அடி பள்ளத்தில் விழுந்த சிறுவன்!
[Monday 2024-06-24 06:00]

பிரித்தானியாவின் டார்செட் பகுதியில் 60 அடி உயர குன்றிலிருந்து விழுந்த பதின்பருவ சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பிரித்தானியாவின் டார்செட்(Dorset) பகுதியில் உள்ள ஓல்ட் ஹாரி ராக்ஸ்(Old Harry Rocks ) என்ற இடத்தில் நண்பருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது பதின்பருவ சிறுவன் ஒருவன் 60 அடி ஆழக் குன்றிலிருந்து கீழே விழுந்தார்.



இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக திரண்ட ஆயிரக்கணக்கானோர்!
[Sunday 2024-06-23 16:00]

இஸ்ரேல் கொடிகளை ஏந்தியபடி டெல் அவிவ் நகரில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக முழக்கமிட்டு, பதவி விலக கோரியுள்ளனர். ஹமாஸ் படைகளிடம் சிக்கியுள்ள பணயக்கைதிகளை மீட்கவும், உடனடியாக தேர்தலை முன்னெடுக்கவும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



கனடாவில் பிரபல உணவகம் முன் வேலை வாய்ப்புக்காக வரிசையில் நின்ற மாணவர்கள்!
[Sunday 2024-06-23 16:00]

கனடாவில் பிரபல உணவகமான டிம் ஹார்டன் முன் வேலை வாய்ப்புக்காக நூற்றுக்கணக்கான மாணவர்கள் வரிசையில் நின்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த உணவகத்திற்கு வேலை வாய்ப்புக்காக சென்ற நபரொருவர் அங்கு சென்ற போது நூற்றுக்கணக்கானவர்கள் நிற்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.



12 வது குழந்தைக்கு தந்தையான எலான் மஸ்க்!
[Sunday 2024-06-23 16:00]

உலகின் பிரபல பணக்காரான எலான் மஸ்க் தனது 12 வது குழந்தைக்கு தந்தையாகியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. காதல் விவகாரங்களில் பலருடன் தொடர்பு வைத்துள்ள எலான் மஸ்க்கிற்கு கடந்த 5 வருடங்களில் மட்டும் 6 குழந்தைகள் பிறந்துள்ளனர்.


Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா