Untitled Document
June 28, 2024 [GMT]
ஈபிள் டவர் டிக்கெட் விலை 20% உயர்வு!
[Monday 2024-06-24 06:00]

ஈபிள் டவர் கோபுரத்தின் டிக்கெட் விலை 20% உயர்ந்துள்ளது. பாரிஸின் ஈபிள் டவர் செலவு பராமரிப்புகளை சமாளிக்கும் நோக்கில் ஈபிள் டவரின் சுற்றுலா டிக்கெட் விலைகள் 20% உயர்த்தப்பட்டுள்ளன. 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு சற்று முன்னதாக இந்த உயர்வு செய்யப்பட்டுள்ளது.

ஈபிள் டவர் கோபுரத்தின் டிக்கெட் விலை 20% உயர்ந்துள்ளது. பாரிஸின் ஈபிள் டவர் செலவு பராமரிப்புகளை சமாளிக்கும் நோக்கில் ஈபிள் டவரின் சுற்றுலா டிக்கெட் விலைகள் 20% உயர்த்தப்பட்டுள்ளன. 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு சற்று முன்னதாக இந்த உயர்வு செய்யப்பட்டுள்ளது.

  

இதன்மூலம் ஈபிள் டவரின் உச்சிக்கு செல்லும் வயது வந்தோருக்கான டிக்கெட் விலை இப்போது €35 ஆக உள்ளது, முந்தைய €29.10 என்ற விலையிலிருந்து இது குறிப்பிடத்தக்க உயர்வாகும்.

இது டிக்கெட் பிரிவுகள் அனைத்திற்கும் பொருந்தும், படிக்கட்டுகள் அல்லது லிப்ட் மூலம் வெவ்வேறு நிலைகளுக்கு சென்றாலும் சரி.

யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமும் உலகின் அதிகம் பார்வையிடப்படும் இடங்களில் ஒன்றான ஈபிள் டவருக்கு தொடர்ந்து பராமரிப்பு தேவைப்படுகிறது.

அதே சமயம் இந்த பிரமாண்டமான கட்டமைப்பை பராமரிப்பதற்கான செலவு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

எனவே ஈபிள் டவரின் நீடித்த நிலைப்பாட்டையும் நினைவுச்சின்னத்தை நிர்வகிக்கும் நிறுவனமான SETE இன் நிதி நிலைத்தன்மையையும் உறுதி செய்ய இந்த விலை உயர்வு செயல்படுத்தப்பட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



பிரித்தானியாவில் பெண்ணுடன் இறந்து கிடந்த மருத்துவ பணியாளர்!
[Friday 2024-06-28 06:00]

பிரித்தானியாவில் "999: On The Front Line” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த பாராமெடிக்கல் பணியாளர் ஒருவர், பெண் ஒருவருடன் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை பிரித்தானியாவில் Hednesford பகுதியில் உள்ள வீட்டில் சேனல் 4 தொலைக்காட்சியின் "999: ஆன் தி ஃப்ரண்ட் லைன்" என்ற ஆவணப்படத் தொடரில் பங்கேற்ற பாராமெடிக்கல் பணியாளர், பெண் ஒருவருடன் இறந்து நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.



வெளிநாடொன்றில் ரயிலும்-பஸ்ஸும் மோதி விபத்து: 5 பேர் உயிரிழப்பு!
[Friday 2024-06-28 06:00]

ஸ்லோவாக்கியாவின் தென்பகுதியில் நேற்று நடந்த பயங்கர விபத்தில், ரயிலும் பஸ்ஸும் மோதிக்கொண்டதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்லோவாக்கியாவின் தென்பகுதியில் Nove Zamky என்ற நகரத்திற்கு அருகில் நேற்று மாலை 5 மணிக்கு சற்று பிறகு ரயிலும் பஸ்ஸும் மோதி கொண்டு பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.



இன்யூட் அடையாள மோசடி வழக்கு: கனேடிய பெண்ணுக்கு வழங்கப்பட்ட தண்டனை!
[Friday 2024-06-28 06:00]

கனடாவில் Inuit அடையாள மோசடி வழக்கில் டொரண்டோ பெண்ணுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கனடாவின் நுனாவுட்(Nunavut) நீதிபதி இன்யூட்(Inuit) பூர்வீக குடிமக்கள் அல்லாத டொரண்டோ பெண்ணுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளார்.



பிரித்தானியாவில் பள்ளி சிறுமிகள் மரணம்: குற்றச்சாட்டு இன்றி தப்பித்த ஓட்டுநர்!
[Thursday 2024-06-27 06:00]

விம்பிள்டன் பள்ளி விபத்தில் குற்றச்சாட்டு இன்றி தப்பித்த ஓட்டுநர் மீது உயிரிழந்த பள்ளி சிறுமிகளின் குடும்பத்தினர் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளனர். பிரித்தானியாவின் விம்பிள்டனில் ஸ்டடி ப்ரெப் பள்ளி வளாகத்துக்கு வெளியே கேம்ப் ரோட்டில் உள்ள கடந்த ஆண்டு ஜூலை 6ம் திகதி நடந்த விபத்தில் நூரியா சஜ்ஜாத்(Nuria Sajjad) மற்றும் செலினா லாவ்(Selena Lau) என்ற 8 வயது பள்ளி சிறுமிகள் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.



பாகிஸ்தானில் மர்மமான முறையில் 22 பேர் மரணம்!
[Thursday 2024-06-27 06:00]

பாகிஸ்தானின் கராச்சியில் மர்மமான முறையில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். அடையாளம் தெரியாத நபர்களின் உடல்களை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கராச்சி நகரில் தற்போது குழப்பம் நிலவுகிறது. இதனால், கராச்சியில் உச்சக்கட்ட உஷார்நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.



மூன்றாம் உலகப்போரின் ஐந்தாவது கட்டம் துவங்கிவிட்டது: வருவதை யாராலும் தடுக்கமுடியாது!
[Thursday 2024-06-27 06:00]

மூன்றாம் உலகப்போரின் ஐந்தாவது கட்டம் துவங்கிவிட்டது, வருவதை யாராலும் தடுக்கமுடியாது என்று கூறியுள்ளார் புடின் ஆதரவாளர் ஒருவர். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் ஆதரவாளரான Anatoly Wasserman என்பவர், உக்ரைனுடனான ரஷ்யாவின் மோதலைத் தொடர்ந்து மூன்றாம் உலகப்போரின் ஐந்தாவது கட்டம் துவங்கிவிட்டது என்று கூறியுள்ளார்.



அமெரிக்காவில் கடும் வெப்பத்தால் உருகிய ஆபிரகாம் லிங்கனின் நினைவு சிலை!
[Wednesday 2024-06-26 16:00]

அமெரிக்காவில் நிலவி வரும் கடும் வெயிலுக்கு மத்தியில், வாஷிங்டனில் உள்ள அமெரிக்க தலைவர் ஆபிரகாம் லிங்கனின் 6 அடி உயர மெழுகு சிலை உருகியுள்ளது. கடந்த சனிக்கிழமையன்று வடமேற்கு வாஷிங்டனில் வெப்பநிலை 37.7 டிகிரி செல்சியஸாக உயர்ந்ததால் லிங்கன் நினைவகத்தைப் பிரதிபலிக்கும் மெழுகு சிலை உருகியுள்ளது.



கனடாவில் கைதான 124 பேர்: ஏன் தெரியுமா?
[Wednesday 2024-06-26 16:00]

கனடாவில் வாகன திருட்டுச் சம்பவங்களை மேற்கொண்ட 124 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒன்றாரியோ மாகாணத்தில் இவ்வாறு வாகன கொள்ளைகளில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளையிடப்பட்ட சுமார் 177 வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.



பறந்து வந்த குப்பை பலூனால் விமான நிலையத்தை மூடிய தென் கொரியா!
[Wednesday 2024-06-26 16:00]

பறந்து வந்த வடகொரியாவின் குப்பை பலூன்கள் தென் கொரியா விமான நிலையத்தில் விழுந்ததனால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரிய தீபகற்பத்தில் வடகொரியா - தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது.



கனடா இடைத்தேர்தல்: ட்ரூடோ கட்சிக்கு தோல்வி!
[Wednesday 2024-06-26 16:00]

கனடாவில் செவ்வாயன்று நடந்து முடிந்த இடைத்தேர்தலில், ஆளும் ட்ரூடோவின் கட்சி முக்கிய இருக்கையை இழந்துள்ளது. இந்த இழப்பு ட்ரூடோவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. சமீபத்தில் ஐரோப்பாவில் நடந்து முடிந்த பல தேர்தல்கள், மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதை தெளிவாகக் காட்டியுள்ளன. அது பிரித்தானியாவானாலும் சரி, ஜேர்மனியானாலும் சரி, ஆளும் கட்சியினர் பின்னடைவையே சந்தித்துள்ளார்கள்.



இந்தோனேசியாவில் உடற்பயிற்சி கூடத்தில் நேர்ந்த பரிதாபம்!
[Wednesday 2024-06-26 06:00]

இந்தோனேசியாவில் உடற்பயிற்சி கூடத்தில் டிரெட்மில்லில் ஓடிக்கொண்டிருந்த 22 வயது பெண் மூன்றாவது தள ஜன்னலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தான், பொன்டியானக்கில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தில் டிரெட்மில்லில்(treadmill) ஓடி பயிற்சி செய்து கொண்டு இருந்த 22 வயது பெண் மூன்றாவது தள ஜன்னலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.



கனடாவில் விளையாட்டு திடல் அருகில் நடந்த அசம்பாவிதம்!
[Wednesday 2024-06-26 06:00]

கனடாவின் டொரண்டோவில் உள்ள விளையாட்டு திடல் அருகே நடந்த துப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கனடாவின் டொரண்டோவில் உள்ள ஜேன் வீதி மற்றும் பால்ஸ்டாஃப் அவென்யூ பகுதியில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்திற்கு அருகில் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



பிரித்தானியாவுக்குள் நூதன முறையில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள்!
[Wednesday 2024-06-26 06:00]

பிரித்தானியாவுக்குள் சுமார் 28.9 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருட்கள், 18.7 மில்லியன் சிகரெட்களை கடத்திய இரண்டு இந்திய வம்சாவளியினருக்கு அளிக்கப்பட்டிருந்த தண்டனையை அதிகரிக்கவேண்டும் என குற்றப்பிரிவு பொலிசாரும், அரசு சட்டத்தரணிகளும் கோரிக்கை விடுத்ததை ஏற்று, நீதிமன்றம் குற்றவாளிகளுடைய தண்டனையை அதிகரித்து உத்தரவிட்டுள்ளது.



கனடாவின் பண வீக்கம் குறித்து வெளியான தகவல்!
[Tuesday 2024-06-25 18:00]

கனடாவின் பணவீக்க நிலைமைகள் சாதகமான நகர்வினை நோக்கி பயணிப்பதாக மத்திய வங்கியின் ஆணையாளர் ரிப் மெக்கலம் தெரிவித்துள்ளார். கனடிய மத்திய வங்கி நாட்டின் பணவீக்க வீதத்தை இரண்டு விதத்திற்கும் குறைந்த அளவில் பேணும் இலக்கினை அடிப்படையாகக் கொண்டு தீர்மானங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.



பல ஆண்டுகளுக்கு பிறகு வெளியுலகை பார்க்கும் ஜூலியன் அசாஞ்சே!
[Tuesday 2024-06-25 18:00]

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே பல ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் ஜூலியன் அசாஞ்சே மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவருக்கு இந்த சுதந்திரம் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.



கனடிய இடைத்தேர்தலில் லிபரல் கட்சி தோல்வி!
[Tuesday 2024-06-25 18:00]

டொரன்டோவின் சென் போல்ஸ் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றியீட்டியுள்ளது. லிபரல் கட்சியின் வலுவான தொகுதியாக கருதப்பட்டு வந்த இந்த தொகுதியில் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றியை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட டொன் ஸ்டுவர்ட் இந்த தேர்தலில் வெற்றி ஈட்டியுள்ளார்.



பிரித்தானியாவில் ஆண்களை தாக்கும் வைரஸ்!
[Tuesday 2024-06-25 18:00]

பிரித்தானியாவில், மீண்டும் ஒரு புதிய கொரோனாவைரஸ் மாறுபாடு வேகமாகப் பரவ ஆரம்பமாகியுள்ளது. இந்த வைரஸானது பெண்களை விட ஆண்களை அதிகம் பாதிக்கக்கூடியது என கண்டறியப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம், FLiRT என அழைக்கப்படும் கொரோனாவைரஸ்களின் மாறுபாடுகளில் ஒன்றான KP. 3 என்னும் கொரோனாவைரஸ் மாறுபாடு கண்டுபிடிக்கப்பட்டது.



ரஷ்யாவில் வழிபாட்டுத் தலங்களில் பயங்கரவாத தாக்குதல்!
[Tuesday 2024-06-25 06:00]

ரஷ்யாவில் பயங்கரவாதிகள் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். வழிபாட்டுத் தலங்கள், தேவாலயங்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை தாகெஸ்தானில் (Dagestan) ஆயுதமேந்திய தாக்குதல் நடத்தியவர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 15 பொலிஸ் அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் ஒரு தேவாலயத் தந்தை கொல்லப்பட்டதாக மாநில ஆளுநர் செர்ஜி மிலிகோவ் (Sergei Melikov) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.



விமான நிலையத்தில் PG Work Permit விண்ணப்பத்தை நிறுத்திய கனடா!
[Tuesday 2024-06-25 06:00]

Flagpoling-ஐ தவிர்ப்பதற்காக விமான நிலையத்தில் வெளிநாட்டவர்களுக்கு PG work permit விண்ணப்பம் வசங்குவதை கனடா நிறுத்தியுள்ளது. இந்த மாற்றங்கள் ஜூன் 21 முதல் அமலுக்கு வந்தன. வேலை மற்றும் நிரந்தர வதிவிடத்தை நாடும் சர்வதேச மாணவர்களுக்கு முதுநிலைப் பட்டதாரி பணிக்கான அனுமதி (PGWP) முக்கியமானது.



ஹஜ் யாத்திரையில் 1301 பேர் மரணம்: சவுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
[Tuesday 2024-06-25 06:00]

இஸ்லாமியர்களின் புனித ஹஜ் யாத்திரையில் வெயிலின் தாக்கத்தால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். இதுவரை 1,301 யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளதாக சவுதி அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவர்களில் 83 சதவீதம் பேர் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஹஜ் செய்ய வந்தவர்கள் என்றும், போதுமான தங்குமிடம் அல்லது வசதியின்றி நேரடி சூரிய ஒளியில் நீண்ட தூரம் நடந்துள்ளனர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா