Untitled Document
September 4, 2024 [GMT]
தொலைக்காட்சி நிலையத்திற்கு தீ வைப்பு: போர்க்களமான ஆசிய நாடு - 30 பேர் பலி!
[Friday 2024-07-19 06:00]

வங்காளதேசத்தில் படைவீரர் இடஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருப்பதாக குறிப்பிட்டு போராட்டத்தில் குதித்துள்ள மாணவர்கள் தொலைக்காட்சி நிலையத்திற்கு தீ வைத்துள்ளனர். போராட்டங்களை கைவிட்டு அமைதி திரும்ப வேண்டும் என்று நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா கோரிக்கை விடுத்த அடுத்த நாளில், அரசு தொலைக்காட்சி நிலையத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

வங்காளதேசத்தில் படைவீரர் இடஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருப்பதாக குறிப்பிட்டு போராட்டத்தில் குதித்துள்ள மாணவர்கள் தொலைக்காட்சி நிலையத்திற்கு தீ வைத்துள்ளனர். போராட்டங்களை கைவிட்டு அமைதி திரும்ப வேண்டும் என்று நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா கோரிக்கை விடுத்த அடுத்த நாளில், அரசு தொலைக்காட்சி நிலையத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

  

மேலும், நாடு முழுவதும் நடந்த வன்முறை சம்பவத்திற்கு இதுவரை 32 பேர்கள் பலியானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. படைவீரர் இடஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருப்பதாகவும் அதை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்றும் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்த நிலையில் கலவரத் தடுப்பு பொலிசார் ரப்பர் தோட்டாக்களால் துப்பாகிச் சூடும் நடத்தியுள்ளனர். அரசு தொலைக்காட்சி நிலையத்திற்கு தீ வைத்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள், டசின் கணக்கான வகனங்களையும் தீக்கிரையாக்கியுள்ளனர்.

பலர் தொலைக்காட்சி நிலையத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அவர்கள் பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நாட்டில் சீர்குலைந்து வரும் சட்டம் ஒழுங்கு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர காவல்துறை முயற்சிகளை முடுக்கி விட்டதை அடுத்து, பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை காலவரையின்றி மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் கண்டனம் தெரிவிப்பதாக பிரதமர் ஷேக் ஹசீனா குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கட்சி பாகுபாடின்றி, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

ஆனால் அமைதி திரும்ப வேண்டும் என்று அவர் முறையிட்ட போதிலும் தெருக்களில் வன்முறை சம்பவங்கள் மோசமடைந்து வருவதாகவே கூறப்படுகிறது. பிரதமர் தங்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என்றே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள 18 வயது Bidisha Rimjhim தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் தங்கள் சகோதரர்களை படுகொலை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றார். வியாழக்கிழமை மட்டும் குறைந்தது 25 பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர். முன்னதாக அதே வாரத்தில் 7 பேர்கள் கொல்லப்பட்டனர்.

மட்டுமின்றி, காயமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தலைநகர் டாக்காவில் உள்ள ஜஹாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்திற்கு ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. தகவல் அறிந்து சம்பவயிடத்தில் குவிக்கப்பட்ட பொலிசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி மாணவர்களை கலைத்தனர்.

இந்த வன்முறையில் 6 மாணவர்கள் மரணமடைந்தனர். பொலிசார் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் காயங்களுடன் தப்பினர். நாட்டின் பல பகுதிகளில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com



இயற்கை அனர்த்தத்தை தடுக்க தவறிய 30 பேர் சுட்டுக்கொலை: கிம் உத்தரவால் அதிர்ச்சி!
[Wednesday 2024-09-04 19:00]

இயற்கை அனர்த்தத்தை தடுக்க தவறிய 30 அதிகாரிகளை சுட்டுக்கொல்லுமாறு வடகொரிய ஜனாதிபதி கிம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியாவில் மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு ஆகியவற்றை தடுக்க தவறிய 30 அதிகாரிகளை சுட்டுக்கொல்லுமாறு வடகொரிய ஜனாதிபதி கிம்ஜொங்அன் உத்தரவிட்டுள்ளார் என நியுயோர்க் போஸ்ட்செய்தி வெளியிட்டுள்ளது.



அமெரிக்காவில் பயங்கர விபத்தில் தமிழ் பெண் உட்பட நால்வர் பலி!
[Wednesday 2024-09-04 19:00]

அமெரிக்காவில் 5 வாகனங்கள் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் ஒரு பெண் உட்பட 4 இளம் இந்தியர்கள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த விபத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த தர்ஷினி வாசுதேவன், ஐதராபாத்தைச் சேர்ந்த ஆர்யன் ரகுநாத் ஒராம்பட்டி, பரூக் ஷேக், லோகேஷ் பலசார்லா ஆகியோர் டெக்சாஸ் மாகாணத்திலிருந்து அர்கான்சாசில் உள்ள பெண்டான்வில்லி நோக்கி SUV காரில் பயணித்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.



பிரான்ஸில் கணவனால் மனைவிக்கு அரங்கேறிய கொடூரம்!
[Wednesday 2024-09-04 19:00]

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 71 வயதான நபர் ஒருவர், தன் மனைவிக்கு போதை மருந்து கொடுத்து மயக்கநிலை அடைய செய்ததுடன், அவரை கற்பழிக்க ஆன்லைனில் ஆள் எடுத்து பலாத்காரமும் செய்ய வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 26 முதல் 74 வயதுள்ள சுமார் 72 பேர் அவரை கற்பழித்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ஷாப்பிங் சென்டர் ஒன்றில் குட்டை பாவாடை அணிந்து வந்த பெண் ஒருவருக்கு தெரியாமல் கேமராவில் படம்பிடித்த வழக்கில் டொமினிகியூவை பொலிசார் கைது செய்தனர்.



பிரித்தானியாவில் 1000 ஆண்டுகள் பழமையான மோதிரம் கண்டுபிடிப்பு!
[Wednesday 2024-09-04 19:00]

பிரித்தானியாவில் 1,000 ஆண்டுகளுக்கும் மேலானதாகக் கருதப்படும் பிக்டிஷ் வளையம் ஒரு அமெச்சூர் தொல்பொருள் ஆய்வாளரால் மோரேயில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த மோதிரம் பர்க்ஹெட் கோட்டையில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.



வெளிநாட்டவர்களை புறக்கணிக்கத் தொடங்கியுள்ள கனடா!
[Wednesday 2024-09-04 06:00]

கனடாவில் வருகை தருவோரின் எண்ணிக்கையை ஜஸ்டின் ட்ரூடோ அரசாங்கம் கணிசமாக குறைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் உரிய ஆவணங்களுடன் அதிகாரிகளை நாடினாலும் அதிக எண்ணிக்கையிலான மக்களை அங்குள்ள நிர்வாகம் திருப்பி அனுப்புவதாக கூறப்படுகிறது. அத்துடன் பயணிகள் மற்றும் தற்காலிக குடியிருப்பாளர்களுக்கான விசா அனுமதிப்பதும் குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



பிரித்தானியாவில் மிதித்தே கொல்லப்பட்ட முதியவர்: கைதான சிறுவர்கள்!
[Wednesday 2024-09-04 06:00]

பிரித்தானியாவில் நாயுடன் நடக்க சென்ற முதியவர் ஒருவர் மிதித்தே கொல்லப்பட்ட விவகாரத்தில் 5 சிறுவர்கள் கைதாகியுள்ளனர். பிரித்தானியாவில் லீசெஸ்டர்ஷைர் பகுதியில் அமைந்துள்ள பூங்கா ஒன்றில் 80 வயது முதியவர் ஒருவர் மிதித்தே கொல்லப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் 12 முதல் 14 வயதுடைய ஐந்து சிறுவர்கள் கைதாகியுள்ளனர்.



பிரித்தானியாவின் முடிவு குறித்து கொந்தளித்த இஸ்ரேல் பிரதமர்!
[Wednesday 2024-09-04 06:00]

இஸ்ரேலுக்கு சில ஆயுத ஏற்றுமதி உரிமங்களை இடைநிறுத்திய பிரித்தானிய அரசாங்கத்தின் செயல் வெட்கக்கேடானது என அந்த நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொந்தளித்துள்ளார். இஸ்ரேலுடனான 350 ஆயுத ஏற்றுமதி உரிமங்களில் 30ஐ அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் லாம்மி திங்களன்று தெரிவித்தார்.



ஸ்வீடன் நாட்டிலுள்ள குழந்தைகளுக்கு டிஜிட்டல் திரைகளை பார்க்க தடை!
[Tuesday 2024-09-03 18:00]

ஐரோப்பாவின் ஸ்வீடன் நாட்டு பெற்றோருக்கு தொலைக்காட்சியோ அல்லது செல்போன் டிஜிட்டல் திரையோ 2 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் பார்க்க அனுமதிக்க வேண்டாம் என்று பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரண்டு வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை, தொலைக்காட்சி மற்றும் செல்போன் திரைகளிலிருந்து தள்ளிவைக்க வேண்டும் என்று ஸ்வீடன் நாட்டு பொது சுகாதாரத் துறை பெற்றோருக்கு தெரிவித்துள்ளது.



கனடாவில் இந்த வகை அடுப்புக்கள் குறித்து எச்சரிக்கை!
[Tuesday 2024-09-03 18:00]

கனடாவில் சம்சுங் ரக இலத்திரனியல் அடுப்புக்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அடுப்பு வகையை பயன்படுத்தும் மக்கள் தீ விபத்துக்கு உள்ளாவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கனடாவில் சில அடுப்பு தீ பற்றி கொண்டதில் காயமடைந்துள்ளனர்.



அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழையும் இந்தியர்கள்!
[Tuesday 2024-09-03 18:00]

கனடா எல்லை வழியே அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு உயர்ந்துள்ளதாக அமெரிக்க எல்லை பாதுகாப்புத் துறை புள்ளிவிவர தகவல் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு ஜனவரி – ஜூன் காலகட்டத்தை ஒப்பிடுகையில், நடப்பாண்டு இதே காலகட்டத்தில் எண்ணிக்கை 47% அதிகரித்துள்ளது. அதன்படி கடந்த ஜூனில் மட்டும் 5,152 இந்தியர்கள் சட்ட விரோதமாக உள்நுழைந்ததாகத் தெரிவித்துள்ளனர்.



"மேலும் பிணைக்கைதிகளை கொல்வோம்" - இஸ்ரேலுக்கு ஹமாஸ் மிரட்டல்!
[Tuesday 2024-09-03 18:00]

பிணைக்கைதிகள் ஆறுபேர் ஹமாஸ் குழுவால் கொல்லப்பட்ட சம்பவம் இஸ்ரேலில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மேலும் தம்மிமிடமுள்ள பிணைக்கைதிகளை கொல்வோம் என இஸ்ரேலுக்கு ஹமாஸ் அமைப்பினர் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதில் ஆயிரக்கணக்கானோர் பலியானதுடன் , 250-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்து சென்றனர்.



14 வயது சிறுமிக்கு கத்திக்குத்து: நாடு கடத்தப்பட்ட புலம்பெயர் இளைஞர் கைது!
[Tuesday 2024-09-03 06:00]

அமெரிக்காவில் புலம்பெயர் இளைஞர் ஒருவர், 14 வயது சிறுமியை கத்தியால் குத்தியதால் கைது செய்யப்பட்டார். இல்லினாய்ஸ் நகரில் உள்ள ஒரு மைதானத்தில் பேஸ் விளையாட்டு போட்டி நடந்து கொண்டிருந்தது. அதில் விளையாடிக் கொண்டிருந்த தனது சகோதரருக்காக 14 வயது சிறுமி போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.



உடலில் வெடிகுண்டுகளை வெடிக்க செய்த நபர்: 6 பேர் பலி, 13 பேர் காயம்!
[Tuesday 2024-09-03 06:00]

ஆப்கானிஸ்தானில் மர்ம நபர் தனது உடலில் வெடிகுண்டுகளை வெடிக்க செய்ததில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 2021யில் தலிபான் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து வன்முறை குறைந்துள்ளது. இருப்பினும், இஸ்லாமிய அரசின் பிராந்திய அத்தியாயம் உட்பட பல போராளிக் குழுக்கள் செயலில் உள்ளன.



இஸ்ரேலின் ஆயுத உரிமங்களை இடைநிறுத்திய பிரித்தானியா!
[Tuesday 2024-09-03 06:00]

காஸாவில் சர்வதேச சட்டத்தை இஸ்ரேல் மீறலாம் என்ற அச்சத்தில், அந்நாட்டிற்கு விதிக்கப்பட்ட ராணுவ உபகரணங்களுக்கான உரிமங்களை பிரித்தானியா இடைநிறுத்தியுள்ளது. இஸ்ரேல் சர்வதேச சட்டங்களை மீறும் வகையில், ஆபத்தான ஆயுதங்களை காஸாவில் பயன்படுத்தலாம் என்பதால் பிரித்தானியா புதிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.



சர்வதேச மாணவர்களுக்கு 24 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய அனுமதி: கனடா முடிவு!
[Monday 2024-09-02 19:00]

தொடர்ந்து புலம்பெயர்ந்தோருக்கு கட்டுப்பாடுகள் விதித்து வரும் கனடா அரசு, சர்வதேச மாணவர்களுக்கு மீண்டும் ஒரு கட்டுப்பாட்டை விதித்துள்ளது. அதாவது, கனடாவில் கல்வி கற்க வந்துள்ள சர்வதேச மாணவர்கள், வாரம் ஒன்றிற்கு 24 மணி நேரம் மட்டுமே பணி செய்ய அனுமதி என கனடா அரசு முடிவு செய்துள்ளது.



பிணைக்கைதிகள் உயிரிழப்பு: இஸ்ரேலில் வெடித்த வன்முறை!
[Monday 2024-09-02 19:00]

ஹமாஸ் அமைப்பினர் சிறைபிடித்து சென்ற பிணைக் கைதிகள் கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலில் நடைபெற்ற போராட்டத்தில் வெடித்த வன்முறையால் அங்கு பதற்றம் நிலவுகிறதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வருடம் அக்டோபர் மாதம் 7ஆம் திகதி ஹமாஸ் படையினரால் கடத்தப்பட்ட பிணை கைதிகளில் 6 பேரின் உடல்களை தெற்கு காசா பகுதியின் சுரங்கம் ஒன்றில் இருந்து மீட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்தது.



டிரம்ப் டீ - சர்ட் ஆல் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட இளைஞர்!
[Monday 2024-09-02 19:00]

அமெரிக்காவில் சர்ச்சையை ஏற்படுத்திய டிரம்ப் டீ - சர்ட் ஆல் இளஞர் ஒருவர் விமாத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இணையத்தில் பரவிய வைரல் வீடியோ ஒன்றில் பெண் ஒருவரிடம் பாலியல் உறவு தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலே ஹா தூ [Hawk . இதுதொடர்பான மீம்கள் இணையத்தில் உலா வரும் நிலையில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பையும் Hawk Tuah வார்த்தையையும் இணைத்து டீ - சர்ட் அணிந்த நபர் விமானத்தில் இருந்து இறங்கிவிடப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.



பட்டினியால் வாடும் 14 லட்சம் மக்கள்: காட்டு விலங்குகளை கொல்ல திட்டம்!
[Monday 2024-09-02 19:00]

நமீபியா நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், காட்டில் வாழும் வனவிலங்குகளை வேட்டையாடி அவற்றின் இறைச்சியை மக்கள் உணவாகப் பயன்படுத்த அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தென்னாப்பிரிக்க நாடுகளில் ஒன்று, நமீபியா. இங்கு, கடுமையான வறட்சி நிலவுவதால், கடந்த அரை நூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான பசி, பட்டினி அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.



15 நகரங்கள், 158 ட்ரோன்கள்: ரஷ்யாவை சுற்றி வளைத்து தாக்கிய உக்ரைன்!
[Sunday 2024-09-01 18:00]

உக்ரைனால் நடத்தப்பட்ட மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல் தடுத்து நிறுத்தப்பட்டு இருப்பதாக ஞாயிற்றுக்கிழமை ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையின் சமீபத்திய நிகழ்வாக, ரஷ்ய தலைநகர் மாஸ்கோ உள்பட 15 பிராந்தியங்களை குறிவைத்து நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மூலம் மிகப்பெரிய தாக்குதலை உக்ரைன் நடத்தி இருப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.



சரியும் கெய்ர் ஸ்டார்மரின் புகழ்: புறக்கணிக்குமாறு வலியுறுத்தும் முன்னாள் பிரதமர்!
[Sunday 2024-09-01 18:00]

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் புகழ் சரிவதால், சமூக ஊடக பின்னடைவை புறக்கணிக்குமாறு முன்னாள் பிரதமர் டோனி பிளேர் வலியுறுத்தியுள்ளார். கடந்த 15 நாட்களில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் நிகர ஒப்புதல் மதிப்பீடு 6 புள்ளிகள் குறைந்து, மைனஸ் 13 ஆக உள்ளதாக Opinium கருத்துக்கணிப்பு கூறுகிறது.


Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா