Untitled Document
November 10, 2024 [GMT]
புலம்பெயர் பணியாளர்களை அதிகம் கவர்ந்திழுக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடு!
[Friday 2024-09-20 18:00]

வெளிநாட்டு திறன்மிகுப் பணியாளர்களைக் கவர்ந்திழுக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் முக்கிய இடம் வகிக்கிறது பிரான்ஸ். திறன்மிகுப் பணியாளர்கள் பணி தேடும்போது, அதிக அளவில் பிரான்சில் பணி தேட ஆர்வம் காட்டுவது சமீபத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. 2024ஆம் ஆண்டு, ஜூலை மாத நிலவரப்படி, அதிக ஊதியம் வழங்கும் பணிகள் என்றாலே, வெளிநாட்டவர்கள் பலரும் விரும்புவது பிரான்சைத்தான் என அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

வெளிநாட்டு திறன்மிகுப் பணியாளர்களைக் கவர்ந்திழுக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் முக்கிய இடம் வகிக்கிறது பிரான்ஸ். திறன்மிகுப் பணியாளர்கள் பணி தேடும்போது, அதிக அளவில் பிரான்சில் பணி தேட ஆர்வம் காட்டுவது சமீபத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. 2024ஆம் ஆண்டு, ஜூலை மாத நிலவரப்படி, அதிக ஊதியம் வழங்கும் பணிகள் என்றாலே, வெளிநாட்டவர்கள் பலரும் விரும்புவது பிரான்சைத்தான் என அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

  

அந்த காலகட்டத்தில், 36 சதவிகிதம் வெளிநாட்டவர்கள், பிரான்சில் அதிக ஊதியம் வழங்கும் பணிகளைத் தேடியுள்ளார்கள்.

அதைத்தொடர்ந்து, நெதர்லாந்தில் பணி கிடைப்பது தொடர்பில் 35 சதவிகிதம் பணியாளர்களும், அமெரிக்காவில் 30 சதவிகிதம் பணியாளர்களும், ஜேர்மனியில் 28 சதவிகிதம் பணியாளர்களும், இத்தாலியில் 23 சதவிகிதம் பணியாளர்களும், ஸ்பெயின் நாட்டில் 21சதவிகிதம் பணியாளர்களும் இணையம் வாயிலாக பணி தொடர்பில் தேடியுள்ளார்கள்.

அதே நேரத்தில், குறைந்த ஊதிய பணிகளை வெளிநாட்டவர்கள் அதிகம் தேடியது அவுஸ்திரேலியாவிலும் ஸ்பெயினிலும்தான்.

47 சதவிகிதம் பேர் அவுஸ்திரேலியாவில் பணி கிடைக்குமா என்றும், 52 சதவிகிதம் பேர் ஸ்பெயினில் பணி கிடைக்குமா என்றும் தேடியுள்ளார்கள்.

பிரான்சைப் பொருத்தவரை, குறைந்த ஊதிய பணிகளை தேடியவர்கள் 33 சதவிகிதம் பேர்தான்.

இப்படி அதிக அளவில் வெளிநாட்டவர்களை பிரான்ஸ் கவர்ந்திருப்பதன் காரணம், அங்கு காணப்படும் எளிய பணி விசா விண்ணப்ப நடைமுறைகள்தான் என்கிறது Indeed நிறுவனம்.

விடயம் என்னவென்றால், 2050ஆம் ஆண்டுவாக்கில் பிரான்சுக்கு 3.9 மில்லியன் பணியாளர்கள் தேவைப்படுவார்கள் என்பதுதான். தகுதியுடையோருக்கு அது நல்ல செய்தியும் கூட!

  
   Bookmark and Share Seithy.com



எலான் மஸ்க்கிற்காக கட்சியின் முக்கிய பெண் உறுப்பினர் தூக்கியெறிந்த அதிபர் டிரம்ப்!
[Sunday 2024-11-10 17:00]

அமெரிக்காவில் நடந்து முடிந்த 47-வது அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப வெற்றிபெற்ற நிலையில் எதிர்வரும் ஜனவரி 20-ம் திகதி பதவியேற்கவுள்ளார். இவ்வாறான நிலையில், தற்போது தனது அரசாங்கத்தில் இடம்பெறவுள்ள மந்திரிகள், ஆலோசகர்களை தேர்ந்தெடுக்கும் பணியில் டிரம்ப் ஈடுபட்டு வருகிறார்.



கனடாவில் நபர் ஒருவருக்கு பறவை காய்ச்சல்!
[Sunday 2024-11-10 17:00]

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் நபர் ஒருவருக்கு பறவை காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் ப்ரேசர்வெளி பகுதியில் இளைஞர் ஒருவருக்கு இவ்வாறு பறவை காய்ச்சல் நோய் ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த நபருக்கு பறவை காய்ச்சல் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டது.



எதிர்வரும் 13-ம் திகதி ஜோ பைடனை சந்திக்கும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்!
[Sunday 2024-11-10 17:00]

நடந்து முடிந்த அமெரிக்காவின் 47வது ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பெரும் வெற்றியை பெற்றார். இந்நிலையில் டொனால்ட் டிரம்ப் எதிர்வரும் 13-ம் திகதி வெள்ளை மாளிகை செல்கிறார்.



தேனிலவு செலவுகளுக்கு நிதி வழங்க உள்ள ரஷ்ய அரசு!
[Sunday 2024-11-10 17:00]

உக்கரைன் மற்றும் ரஷ்யா போரில் ரஷ்யாவின் மக்கள் தொகை பெருமளவில் குறைவடைந்துள்ளதால் ரஷ்யாவிலுள்ள புதிதாக திருமணமான தம்பதி ஹனிமூன் செல்வதற்கான நிதி வழங்க உள்ளதாக ரஷ்ய அரசு தீர்மானித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இந்த பேரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ரஷ்யா மற்றும் உக்ரைன் விரும்புவதாக கூறினாலும், தொடா்ந்து போரில் ஈடுபடுகின்றன.



மொத்தமாக மூழ்கடித்த பெருவெள்ளம்: வலென்சியாவில் வெடித்த போராட்டம்!
[Sunday 2024-11-10 08:00]

ஸ்பெயினின் வலென்சியாவில் மழை மற்றும் பெருவெள்ளத்தை முறையாக எதிர்கொள்ள தவறிய அதிகாரிகளுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் குதித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பிராந்திய தலைவர் Carlos Mazón ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். சனிக்கிழமை மதியத்திற்கு மேல் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், நாங்கள் சேற்றில் படிந்துள்ளோம், நீங்கள் இரத்தத்தால் கறைபட்டுள்ளீர்கள் என மக்கள் முழக்கமிட்டுள்ளனர்.



ட்ரம்பிடம் கெஞ்சத் தொடங்கிய மத்திய கிழக்கு நாடு!
[Sunday 2024-11-10 08:00]

கடந்த ஆட்சி போன்று கடும் போக்கு வேண்டாம் என அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்டு ட்ரம்புக்கு ஈரான் கோரிக்கை வைத்துள்ளது. கடந்த ஆட்சியின் போது தவறான கொள்கைகளை பின்பற்றுவதை டொனால்டு ட்ரம்ப் கைவிட வேண்டும் என ஈரான் தரப்பில் இருந்து Mohammad Javad Zarif என்பவர் கோரிக்கை வைத்துள்ளார்.



ட்ரம்பின் அமைச்சரவையில் இவர்களுக்கு வாய்ப்பு!
[Sunday 2024-11-10 08:00]

தடுப்பூசி கொள்கைகளுக்கு கடும் எதிர்ப்பாளரான ஒருவர் அமெரிக்க சுகாதாரத்துறையின் தலைமை பொறுப்புக்கு டொனால்டு ட்ரம்பால் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் தமக்கு மிகவும் நெருக்கமான, தம்முடன் கோல்ஃப் விளையாடுபவர்கள் சிலருக்கும் முதன்மையான பொறுப்புகள் அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது.



பாகிஸ்தானில் ரெயில் நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு: பலர் உடல் சிதறி பலி!
[Saturday 2024-11-09 18:00]

பாகிஸ்தானில் புகையிரத நிலையமொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 25 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பலோச்சிஸ்தான் மாகாணத்தில் இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. குவாட்டா நகரிலிருந்து பாக்கிஸ்தானின் பெசாவர் நகருக்கு செல்லவிருந்தவேளையிலேயே புகையிரதநிலையத்தில் குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.



பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்தால் இந்தியா சினம்!
[Saturday 2024-11-09 18:00]

அனைத்து கனடா இந்துக்களும் மோடியை ஆதரிக்கவில்லை என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளமை மோடி அரசுக்கு சினத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்தியா-கனடா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கனடாவில் வசித்த காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்ததையடுத்து மோதல் போக்கு ஏற்பட்டது.



ஐந்து ஆண்டுகளின் பின் தேவாலயத்தில் ஒலித்த காண்டாமணிகள்!
[Saturday 2024-11-09 18:00]

பிரான்ஸ் - நோர்து-டேம் தேவாலயத்தில் உள்ள காண்டாமணிகள் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளின் பின்னர் இன்று நவம்பர் 8, வெள்ளிக்கிழமை ஒலிக்கவிடப்பட்டது. 2019 ஆம் ஆண்டு தீ விபத்துக்குள்ளான தேவாலயம் திருத்தப்பணிகளின் பின்னர், அடுத்த மாதம் 7 ஆம் திகதி (டிசம்பர், 2024) திறக்கப்பட உள்ளது. அதற்காக ஆயத்தப்பணிகள் தற்போது இடம்பெற்று வருகிறது.



கனடாவின் இந்தப் பகுதியில் நிலநடுக்கம்!
[Saturday 2024-11-09 18:00]

கனடாவின் யுகுன் பகுதியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஐந்து தசம் மூன்று ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதராகியுள்ளதாக கனடிய இயற்கை வள நிறுவனம் அறிவித்துள்ளது. எனினும் இந்த நில நடுக்கம் காரணமாக எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. யுகுனின் கெனோன் பகுதியில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.



டிரம்பின் வெற்றியால் அச்சமடையும் கறுப்பினத்தவர்கள்!
[Friday 2024-11-08 18:00]

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்பின் வெற்றி அமெரிக்காவின் கறுப்பின மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டொனால்ட் டிரம்ப் கமலா ஹரிசினை கருப்பின பெண்ணாக சித்தரித்து பிரச்சாரம் செய்த நிலையில் கறுப்பின மக்கள் கமலா ஹரிசிற்கு ஆதரவாக பெருமளவிற்கு வாக்களித்திருந்தனர்.



கனடாவில் பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி!
[Friday 2024-11-08 18:00]

கனடாவின் ஒரிலியா பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி நபர் ஒருவர் சொல்லப்பட்டுள்ளார். ஒன்றாறியோ மாகாணத்தில் ஒரிலியா பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 26 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் இந்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.



சுவிட்சர்லாந்தில் முகத்தை முழுமையாக மூட தடை!
[Friday 2024-11-08 18:00]

சுவிட்சர்லாந்தில் அடுத்தாண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் முகத்தை முழுமையாக மூடியவாறு பொது வெளிகளில் நடமாடுவது தடைசெய்யப்படவுள்ளது. இந்த சட்டத்தை மீறினால், அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு எதிர்ப்புகளையும் தாண்டி, சுவிட்சர்லாந்து நாட்டில் முகத்தை மூடியபடி பொது வெளிகளில் நடமாட அடுத்தாண்டு ஜனவரி முதலாம் திகதிமுதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.



நெதர்லாந்தில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல்!
[Friday 2024-11-08 18:00]

ஆம்ஸ்டர்டாமில் ஏற்பட்ட வன்முறை மோதல்களைத் தொடர்ந்து கால்பந்து ரசிகர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக இரண்டு விமானங்களை நெதர்லாந்துக்கு அனுப்ப இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெள்ளிக்கிழமை (08) உத்தரவிட்டார். இது குறித்து நெதன்யாகுவின் அலுவலகம் எக்ஸ் கணக்கில் கூறியுள்ளதாவது, எங்கள் குடிமக்களுக்கு உடனடியாக உதவ இரண்டு மீட்பு விமானங்கள் அனுப்பப்படுகின்றன.



ட்ரம்பின் இரண்டாம் வருகை: கொத்தாக வெளியேற்றப்படவிருக்கும் புலம்பெயர் மக்கள்!
[Friday 2024-11-08 06:00]

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் பொறுப்பேற்கவிருக்கும் நிலையில், ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் அச்சத்திலும் விரக்தியிலும் உள்ளனர். ஏற்கனவே உறுதி அளித்துள்ளது போன்று நடவடிக்கை முன்னெடுக்க இருப்பதாகவே ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால் பெருந்திரளான நாடுகடத்தலை எவ்வாறு திட்டமிடப்போகிறார் என்பது பற்றி அவர் இதுவரை குறிப்பிடவில்லை.



மர்ம நோயால் இறக்கின்ற டசின் கணக்கானவர்கள்: சிக்கலில் ஒரு நாடு!
[Friday 2024-11-08 06:00]

சூடான் நாட்டில் உள்ள அல்-ஹிலாலியா நகரில் 73 பேர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பகுதியானது துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகளால் முற்றுகையிடப்பட்டதாக சூடான் மருத்துவர்கள் சங்கம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. RSF உயர்மட்ட தளபதி ஒருவர் இராணுவத்திற்கு மாறியதிலிருந்து கிழக்கு எல் கெசிரா மாகாணத்தில் தாக்குதலுக்கு உள்ளான டசின் கணக்கான கிராமங்களில் இதுவும் ஒன்று.



ஜனாதிபதியாக ட்ரம்ப்: நாட்டைவிட்டு வெளியேறுவதாக அறிவித்த எலோன் மஸ்க் மகள்!
[Friday 2024-11-08 06:00]

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில், நாட்டைவிட்டு வெளியேறுவதாக எலோன் மஸ்கின் திருநங்கை மகள் விவியன் அறிவித்துள்ளார். தற்போது 20 வயதாகும் விவியன் கடந்த 2022ல் தமது தந்தையின் பெயரை தனது பெயருடன் இணைத்து பயன்படுத்துவதை கைவிட்டார். சேவியர் அலெக்சாண்டர் மஸ்க் என ஆணாக பிறந்த விவியன் வில்சன், இனி அமெரிக்காவில் வாழ்வது எளிதல்ல என்று ஒப்புக்கொண்டதுடன்,



டிக்டோக் குறித்து கனேடிய அரசின் அதிரடி தீர்மானம்!
[Thursday 2024-11-07 18:00]

தேசிய-பாதுகாப்பு அபாயங்களை மேற்கோள் காட்டி, சீனாவுக்குச் சொந்தமான டிக்டோக் (TikTok) இன் அலுவலகங்களை நாட்டில் மூடுவதற்கு கனடா உத்தரவிட்டது. எனினும், கனேடியர்கள் குறுகிய வீடியோ செயலிக்கான அணுகல் அல்லது பதிவேற்றம் மேற்கொள்வதற்கான செயல்களுக்கு அரசாங்கம் தடை விதிக்கவில்லை.



ட்ரம்பை வெள்ளை மாளிகைக்கு அழைத்த ஜோ பைடன்!
[Thursday 2024-11-07 18:00]

அமெரிக்காவின் 47 வது ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்பிற்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக ஜனாதிபதி ஜோ பைடன் வெள்ளை மாளிகைக்கு அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த கலந்துரையாடலில் நிர்வாகத்தை மாற்றுவது குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா