Untitled Document
October 5, 2024 [GMT]
புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள கனேடிய மாகாணம்!
[Thursday 2024-10-03 18:00]

கனடா அரசு, புகலிடக்கோரிக்கையாளர்களில் பாதி பேரை வலுக்கட்டாயமாக வெளியேற்றவேண்டும் என கியூபெக் மாகாண பிரீமியர் வலியுறுத்தியுள்ளார். கியூபெக் மாகாண பிரீமியரான François Legault, கியூபெக் மாகாணத்தில் குடியமர்ந்துள்ளவர்கள் உட்பட, புகலிடக்கோரிக்கையாளர்களில் பாதி பேரை பெடரல் அரசு வலுக்கட்டாயமாக வெளியேற்றவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கனடா அரசு, புகலிடக்கோரிக்கையாளர்களில் பாதி பேரை வலுக்கட்டாயமாக வெளியேற்றவேண்டும் என கியூபெக் மாகாண பிரீமியர் வலியுறுத்தியுள்ளார். கியூபெக் மாகாண பிரீமியரான François Legault, கியூபெக் மாகாணத்தில் குடியமர்ந்துள்ளவர்கள் உட்பட, புகலிடக்கோரிக்கையாளர்களில் பாதி பேரை பெடரல் அரசு வலுக்கட்டாயமாக வெளியேற்றவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

  

தற்போது கியூபெக்கில் வாழ்ந்துவரும், அகதி நிலை பெறக் காத்திருப்பவர்களில் பாதி பேரை, பிற மாகாணங்களுக்கு இடமாற்றம் செய்யவேண்டும் என அவர் கூறியுள்ளார்.

ஒரு ஆச்சரியமளிக்கும் விடயம் என்னவென்றால், வழக்கமாக புலம்பெயர்தலுக்கு எதிராக கருத்துக்கூறும் புலம்பெயர்தல் துறை அமைச்சரான மார்க் மில்லரே, கியூபெக் மாகாண பிரீமியரான Legaultஇன் கருத்தை விமர்சித்துள்ளார்.

கியூபெக் மாகாண பிரீமியரான Legaultஇன் கருத்துக்கள், மனிதத்தன்மையற்றவை, அர்த்தமற்றவை என்று கூறியுள்ள மார்க் மில்லர், அரசு மக்களை கட்டாயப்படுத்தி இடமாற்றம் செய்யாது என்றும், Legault, புலம்பெயர்தலை அரசியலாக்குவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



கழிவறையில் உளவு வேலை பார்த்த பெஞ்சமின் நெதன்யாகு: அம்பலப்படுத்திய போரிஸ் ஜோன்சன்!
[Saturday 2024-10-05 06:00]

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது கழிவறையைப் பயன்படுத்திய பிறகு, ஒட்டுக் கேட்கும் கருவி ஒன்றை கண்டுபிடித்தாக முன்னால் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் அம்பலப்படுத்தியுள்ளார். கடந்த 2017ல் இரு தலைவர்களின் சந்திப்பு நடந்த நிலையிலேயே கழிவறையில் இருந்து ஒட்டுக் கேட்கும் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 10ம் திகதி வெளியாகவிருக்கும் தமது நினைவுக் குறிப்புகள் நூலில், போரிஸ் ஜோன்சன் இந்த விவகாரம் குறித்து முதல் முறையாக அம்பலப்படுத்தியுள்ளார்.



புற்றுநோய் உறுதி: மருத்துவர்கள் மீண்டும் எச்சரிக்கும் பிரபலமான ஒரு உணவு!
[Saturday 2024-10-05 06:00]

உலகின் மிக ஆபத்தான உணவு என அடையாளப்பட்டுத்தப்பட்டுள்ள அந்த உணவை எந்த காரணம் கொண்டும் சுற்றுலாப் பயணிகள் சாப்பிட வேண்டாம் என மருத்துவர்கள் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தாய்லாந்துக்கு ஆண்டுக்கு 1 மில்லியன் அமெரிக்க மக்கள் சுற்றுலா செல்கின்றனர். ஆனால் ஒருவர் கூட Koi pla என்ற அந்த உள்ளூர் உணவை சாப்பிட முயல வேண்டாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.



அக்டோபர் நினைவேந்தல் பேரழிவில் முடியலாம்: ஜேர்மனி உளவுத்துறை தலைவர் எச்சரிக்கை!
[Saturday 2024-10-05 06:00]

இஸ்ரேல் எல்லையில் ஹமாஸ் படைகள் முன்னெடுத்த தாக்குதலின் ஓராண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நாட்டில் அமைதியின்மையை தூண்டலாம் என ஜேர்மனியின் உளவுத்துறை தலைவர் எச்சரித்துள்ளார். இஸ்ரேல் எல்லையில் ஹமாஸ் படைகள் திடீர் தாக்குதலை முன்னெடுத்ததன் நினைவு நாள் எதிர்வரும் திங்கட்கிழமை கொண்டாடப்பட இருக்கிறது. குறித்த தாக்குதல் சம்பவமானது காஸா மீதான போர் பிரகடனத்திற்கு இஸ்ரேலை தூண்டியது.



அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோம்: கிம் எச்சரிக்கை!
[Friday 2024-10-04 20:00]

வடகொரியாவின் இறையாண்மைக்கு எதிரி நாடுகளால் பாதிப்பு ஏற்பட்டால் அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோம் என அந்நாட்டின் அதிபர் கிம் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களையும், உலக நாடுகளின் எதிர்ப்பையும் கண்டுகொள்ளாமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.



கருக்கலைப்புக்கு மெலனியா டிரம்ப் ஆதரவு!
[Friday 2024-10-04 20:00]

ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பின் மனைவி மெலனியா டிரம்ப், கருக்கலைப்பு செய்யும் பெண்ணின் உரிமையை வலுவாக பாதுகாக்க முன்வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மெலனியா டிரம்ப் இன் புத்தகத்தை விளம்பரப்படுத்தும் ஒரு சிறிய வீடியோவில், அவர் பெண்களின் “தனிமனித சுதந்திரத்திற்கு” தனது ஆதரவைக் கூறினார், இது “பிறப்பிலிருந்தே அனைத்து பெண்களுக்கும் உரிமையுள்ள ஒரு அத்தியாவசிய உரிமை”.



கனடாவில் 13 வயது சிறுமி மீது தாக்குதல் நடத்திய சிறார்கள்: வேடிக்கை பார்த்த 30 சிறார்கள்!
[Friday 2024-10-04 20:00]

கனடாவில் மீண்டும் ஒரு சிறுமி மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், 30 பேர் தாக்குதலை வேடிக்கை பார்க்க, இரண்டு சிறுவர்கள் மட்டும் துணிச்சலாக தாக்குதலைத் தடுத்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள Kelowna நகரில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில், 13 வயது சிறுமி ஒருத்தி மீது ஐந்து பதின்ம வயதினர் தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.



பிரிட்டன் எண்ணெய் கப்பலை அதிரடியாக தாக்கிய ஹவுதிக்கள்!
[Friday 2024-10-04 20:00]

மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் பிரிட்டன் எண்ணெய் கப்பமீது ஹவுதிக்கள் தாக்குதல் நடத்தியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலஸ்தீனத்தை தொடர்ந்து லெபனானிலும் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலை எதிர்த்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.



சூடுபிடிக்கும் அரிசிச் சண்டை: போட்டியில் இரண்டு ஆசிய நாடுகள்!
[Friday 2024-10-04 06:00]

இந்தியாவும் பாகிஸ்தானும் விலை வரம்புகளை நீக்கி அரிசி ஏற்றுமதியை போட்டி போட்டுக்கொண்டு மீண்டும் தொடங்கிய நிலையில் சர்வதேச அளவில் பல்வேறு அரிசி வகைகளின் விலை சரிவடைந்துள்ளது. வெளிநாடுகளுக்கான விற்பனையைத் தடுக்கும் நோக்கில் ஓராண்டுக்கும் மேலாக அமுலில் இருந்த பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கான தடையை இந்திய அரசாங்கம் சனிக்கிழமையன்று நீக்கியது.



தாக்குதலுக்கு தயாராகுங்கள்: செங்கடல் கப்பல்களுக்கு ஹவுதிகள் மின்னஞ்சல் எச்சரிக்கை!
[Friday 2024-10-04 06:00]

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக செங்கடல் பாதையில் பயணிக்கும் கப்பல்களுக்கு ஈரான் ஆதரவு ஹவுதிகள் மின்னஞ்சல் எச்சரிக்கை விடுத்துள்ளனர். காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்து வரும் நிலையில், கடந்த நவம்பர் மாதத்தில் இருந்தே செங்கடல் பாதையில் பயணிக்கும் சுமார் 100 கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.



பயணிகள் படகு கவிழ்ந்து விபத்து: 78 பேர் பலி!
[Friday 2024-10-04 06:00]

காங்கோ குடியரசின் கிழக்குப் பகுதியில் உள்ள கிவு ஏரியில் பயணிகள் படகு கவிழ்ந்ததில் 78 பேர் மரணமடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறித்த படகானது சென்று சேர வேண்டிய பகுதியில் இருந்து சில நூறு மீற்றர்கள் தொலைவில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியுள்ளது. தெற்கு கிவுவில் உள்ள மினோவா நகரில் இருந்து புறப்பட்ட படகானது வியாழன் காலை கோமா கரைக்கு வந்து கொண்டிருந்தபோது மூழ்கியது.



சிங்கப்பூரில் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரனுக்கு சிறைத்தண்டனை!
[Thursday 2024-10-03 18:00]

அதிகாரத்தில் இருக்கும் போது பரிசுப்பொட்களை கையூட்டலாக பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில், சிங்கப்பூரின் முன்னாள் அமைச்சர் சுப்ரமணியம் ஈஸ்வரனுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 62 வயதான ஈஸ்வரன் சுமார் நான்கு லட்சம் சிங்கப்பூர் டாலர்கள் பெறுமதியான பரிசுப் பொருட்களை பெற்றுக்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.



அமெரிக்காவில் 6 மாத குழந்தையை கடித்துக் குதறிய எலிகள்!
[Thursday 2024-10-03 18:00]

அமெரிக்காவில் இந்தியாவை சேர்ந்த டேவிட் ஸ்கோனாபாம் என்பவரின் 6 மாத குழந்தையை எலிகள் கொடூரமாக கடித்துக் குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எலிகள் குழந்தையின் உடலில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் கடித்ததால் முகம் உட்படப் பல உடல் பாகங்கள் சிதைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



கடலில் மூழ்கும் அபாயத்தில் பிரான்ஸ் அணுமின் நிலையம்!
[Thursday 2024-10-03 18:00]

பிரான்சின் வடக்கு பிராந்தியமான Gravelines (Nord) இல் உள்ள அணுமின் நிலையம் ஒன்று கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக 2100 ஆம் ஆண்டில் வடக்கு கடலில் இராட்சத அலைகள் தோன்றும் எனவும், அங்கு அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையம் நீரில் அடித்துச் செல்லப்படவோ, அல்லது மின்சார உற்பத்தி பாதிப்படையவோ செய்யும் என Greenpeace எனும் தன்னார்வ சமூக தொண்டு நிறுவனம் எச்சரித்துள்ளது.



பெய்ரூட்டில் பிரித்தானிய தூதரகத்திற்கு அருகில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்!
[Thursday 2024-10-03 06:00]

லெபனானில் பிரித்தானிய தூதரகம் அருகே அமைந்துள்ள சுகாதார மையம் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை முன்னெடுத்துள்ளது. பெய்ரூட்டில் பச்சூரா பகுதியில் நடந்த தாக்குதலை அடுத்து ஏராளமான கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்தன. இந்த வாரத்தில் மட்டும் இரண்டாவது முறையாக மத்திய பெய்ரூட்டை இஸ்ரேல் தாக்கியது.



லெபனானுக்கு ஆதரவாக வளைகுடா நாடுகள்!
[Thursday 2024-10-03 06:00]

மிக நெருக்கடியான கட்டத்தில் லெபனானுக்கு ஆதரவளிப்பதாக வளைகுடா நாடுகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அத்துடன் காஸாவில் உடனடி போர் நிறுத்தத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளது. கத்தாரின் தோஹா நகரில் முன்னெடுக்கப்பட்ட அசாதாரண அமைச்சர் கூட்டம் ஒன்றில் இந்த முடிவுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.



தடை விதித்த இஸ்ரேல்: உடனடியாக ஈரானுக்கு கண்டனம் தெரிவித்த ஐ.நா. தலைவர்!
[Thursday 2024-10-03 06:00]

இஸ்ரேலுக்குள் நுழைய ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளருக்கு அந்த நாடு தடை விதித்த நிலையில், உடனடியாக ஈரான் முன்னெடுத்த தாக்குதலுக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய António Guterres, மத்திய கிழக்கில் உருவாகியுள்ள பதிலுக்கு பதில் என்ற ஆபத்தான வன்முறை சம்பவங்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்றார்.



பிரித்தானியாவில் விந்தணு, கருமுட்டை பற்றாக்குறை!
[Wednesday 2024-10-02 17:00]

இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் விந்தணு மற்றும் கருமுட்டை தானம் செய்பவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. தானம் செய்பவர்கள் தங்கள் பயணம் மற்றும் தங்குமிடம் போன்ற செலவுகளை சமாளிப்பதற்காக இந்த நிவாரண தொகை வழங்கப்படுகிறது. விந்தணு தானம் செய்பவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண தொகை £35 இலிருந்து £45 ஆக உயர்ந்துள்ளது.



கனடிய அரசாங்கத்தை கவிழ்க்கும் இரண்டாவது முயற்சியும் தோல்வி!
[Wednesday 2024-10-02 17:00]

கனடிய அரசாங்கத்தை கவிழ்க்கும் இரண்டாவது முயற்சியும் தோல்வி அடைந்துள்ளது. கனடாவில் தற்பொழுது பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கம் ஆட்சி நடத்தி வருகின்றது. இந்த அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியில் பிரதான எதிர்க்கட்சியான கான்சர்வேட்டிவ் கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது.



அமெரிக்க நிரந்தர குடியிருப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
[Wednesday 2024-10-02 17:00]

அமெரிக்க பயணம் என்பது பலருக்குக் கனவாகும். வேலைக்காக, சிலர் பேரன் பேத்தியை பல வருடங்களுக்குப் பின்பு பார்ப்பதற்கு, இன்னும் சிலருக்கு சுற்றுலா மற்றும் கல்வி கற்பதற்கு செல்வது என பல காரணங்கள் வைத்துள்ளனர். இப்படி அமெரிக்கா செல்ல திட்டமிடும் அனைவருக்கும் அடிப்படைத் தேவையாக இருப்பது விசா. அவ்வளவு எளிதாக விசா கிடைப்பதில்லை என்பது தான் உண்மை.



இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு கனடா கண்டனம்!
[Wednesday 2024-10-02 17:00]

இஸ்ரேல் மீது ஈரானிய படையினர் மேற்கொண்ட தாக்குதல்களை கனடிய அரசாங்கம் கண்டித்துள்ளது. ஈரான் படையினர் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தி இருந்தனர். சுமார் 200 ஏவுகணைகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தை கனடிய வெளி விவகார அமைச்சர் மெலனி ஜோலி வன்மையாக கண்டித்துள்ளார்.


Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா