Untitled Document
December 4, 2024 [GMT]
ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள்: அடிபணிந்த தென் கொரிய ஜனாதிபதி!
[Wednesday 2024-12-04 08:00]

தென் கொரியாவின் வலதுசாரி ஜனாதிபதி எதிர்பாராத விதமாக இராணுவச் சட்டத்தை அறிவித்த நிலையில், தற்போது எதிர்க்கட்சிகளின் கடும் அழுத்தம் காரணமாக பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 1980 களில் இருந்து நாடு சந்தித்த மிகவும் கடுமையான சவால் இதுவென்றே கூறப்படுகிறது. எதிர்க்கட்சிகளுடனான கடும் மோதலுக்கு மத்தியில் செவ்வாய்க்கிழமை இரவு ஜனாதிபதி யூன் சுக் யோல் இராணுவச் சட்டத்தை அறிவித்தார்.

தென் கொரியாவின் வலதுசாரி ஜனாதிபதி எதிர்பாராத விதமாக இராணுவச் சட்டத்தை அறிவித்த நிலையில், தற்போது எதிர்க்கட்சிகளின் கடும் அழுத்தம் காரணமாக பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 1980 களில் இருந்து நாடு சந்தித்த மிகவும் கடுமையான சவால் இதுவென்றே கூறப்படுகிறது. எதிர்க்கட்சிகளுடனான கடும் மோதலுக்கு மத்தியில் செவ்வாய்க்கிழமை இரவு ஜனாதிபதி யூன் சுக் யோல் இராணுவச் சட்டத்தை அறிவித்தார்.

  

மட்டுமின்றி, வட கொரிய சார்பு ஆதரவாளர்கள் மற்றும் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பவர்களால் ஏற்பட்ட நெருக்கடி இதுவென்றும் அவர் குற்றம் சாட்டினார்.

ஆனால் நாட்டின் சமீபத்திய வரலாற்றில் சில பதட்டமான மணிநேரங்களுக்குப் பிறகு, துருப்புக்கள் தங்கள் முகாம்களுக்குத் திரும்புவார்கள் என்றும் அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து உத்தரவு நீக்கப்படும் என்றும் யூன் தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை அதிகாலை தொலைக்காட்சி உரையில் ஜனாதிபதி யூன் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தின் கோரிக்கையை ஏற்று அமைச்சரவைக் கூட்டத்தின் மூலம் இராணுவச் சட்டத்தை நீக்குவோம் என அவர் உறுதி அளித்துள்ளார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு இந்த உத்தரவை நீக்குவதற்கான பிரேரணைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. வடகொரியாவுக்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கைகளில் 28,500 அமெரிக்க ராணுவ வீரர்கள் தென் கொரியாவில் முகாமிட்டுள்ள நிலையிலேயே நாட்டின் நெருக்கடி குறித்து கூர்ந்து கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

தென் கொரியாவில் உள்ள இராணுவச் சட்டமானது கைதாணை இல்லாமல் எவரையும் கைது செய்ய அனுமதிக்கிறது. மட்டுமின்றி அனைத்து ஊடகங்களும் இராணுவ அதிகாரிகளால் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று கூறுகிறது.

ஆனால் பல தசாப்தங்களாக ஜனநாயகத்தை அனுபவித்த தென் கொரிய மக்கள், இராணுவச் சட்டத்திற்கு இணங்குவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்றே கூறப்படுகிறது.

ஜனாதிபதி யூனின் அறிவிப்பைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான மக்கள் நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், நாடாளுமன்ற இராணுவச் சட்டத்தை நிராகரித்துள்ளதாக வெளியான தகவல் கூடியிருந்த மக்களிடையே மகிழ்ச்சி ஆரவாரத்தை ஏற்படுத்தியது.

பொதுவாக ஜனாதிபதி யூன் தனது அரசியல் எதிரிகளை அரசுக்கு எதிரான சக்திகள் மற்றும் போலி செய்திகள் என்று முத்திரை குத்துவதில் பெயர் பெற்றவர்.

மே 2022ல் பொறுப்பேற்ற அவரது நிர்வாகம், பத்திரிகைகளுக்கு எதிராக அவதூறு வழக்குகளைப் பயன்படுத்துவதை பெருமளவில் முடுக்கிவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com



இஸ்ரேல் இனப்படுகொலையிலும் இனச்சுத்திகரிப்பிலும் ஈடுபடுகின்றது!
[Wednesday 2024-12-04 17:00]

இஸ்ரேல் இனப்படுகொலையிலும் இனச்சுத்திகரிப்பிலும் ஈடுபடுவதாக இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மோசே யலூன் (Moshe Ya’alon)குற்றம் சுமத்தியுள்ளார். பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அவர் (Moshe Ya’alon) மேலும் கூறுகையில், இஸ்ரேலிய அரசாங்கம் தனது படையினரிற்கு உயிராபத்தை ஏற்படுத்துகின்றது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குகளை அவர்கள் எதிர்கொள்ளும் நிலையை ஏற்படுத்துகின்றது.



கனடாவில் பனிப்பொழிவு குறித்த பயண எச்சரிக்கை!
[Wednesday 2024-12-04 17:00]

கனடாவில் பனிப்பொழிவு தொடர்பில் பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் இவ்வாறு பனிப்பொழிவு தொடர்பில் பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலை வேதளையிலும் மாலை வேளையிலும் போக்குவரத்து செய்ய முடியாத அளவிற்கு பனிப்பொழிவு ஏற்படும் என ஆரம்பிக்கப்பட்டுள்ளது.



50 ஆண்டுகளின் பின் தென்கொரியாவில் அவசரநிலை பிரகடனம்!
[Wednesday 2024-12-04 17:00]

50 ஆண்டுகளின் பின்னர் தென்கொரியாவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு சில மணி நேரங்களில் அது ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைகாட்சி வாயிலாக நேற்று (டிச.03) பொதுமக்களிடம் உரையாற்றிய தென்கொரிய அதிபர் யூன் சாக் யோல் , நாட்டில் வடகொரிய ஆதரவாளர்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்காகவும் அரசுக்கு எதிரான சக்திகளை ஒடுக்குவதற்காகவும் நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படுவதாக அறிவித்தார்.



ஒரே மாதத்தில் 2 மில்லியன் முறை உணவு வங்கியை நாடிய கனேடியர்கள்!
[Wednesday 2024-12-04 17:00]

கனடாவில், கனடாவில் உணவு வங்கிகளை நாடுவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், ஒரே மாதத்தில் 2 மில்லியன் முறை உணவு வங்கிகளை மக்கள் நாடியுள்ளது தெரியவந்துள்ளது. கனடாவில் உணவு வங்கிகளை நாடுவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 2024ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் மட்டும், 2 மில்லியன் மக்கள் உணவு வங்கிகளை நாடியுள்ளதாக Food Banks Canada அமைப்பு தெரிவித்துள்ளது.



உக்ரைன் விவகாரம்: ட்ரம்ப் ஆட்சிக்கு வரும் வரை காத்திருக்கும் நேட்டோ நாடுகள்!
[Wednesday 2024-12-04 08:00]

உக்ரைன் விவகாரத்தில் முடிவெடுக்க புதிய அமெரிக்க நிர்வாகம் பதவியேற்கும் வரையில் பல நேட்டோ உறுப்பினர்கள் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லாத்வியாவின் வெளிவிவகார அமைச்சர் செவ்வாயன்று தெரிவிக்கையில், அமெரிக்கா தலைமையிலான அட்லாண்டிக் கூட்டமைப்பில் சேருவதற்கான அழைப்பிற்கான உக்ரைனின் கோரிக்கையை பரிசீலிக்க முடிவெடுத்துள்ளதாகவும், ஆனால் புதிய அமெரிக்க நிர்வாகம் பதவியேற்கும் வரையில் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.



ரஷ்ய ஜனாதிபதிக்கான விமானத்தில் கடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான உக்ரைன் சிறார்கள்!
[Wednesday 2024-12-04 08:00]
ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரேனிய பிரதேசங்களில் இருந்து சிறார்கள் கடத்தப்பட்டு, அவர்களின் உக்ரேனிய அடையாளங்கள் களையப்பட்டு ரஷ்ய குடும்பங்களுடன் வாழ அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியின் விமானங்கள் மற்றும் நிதியுதவியால் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.



ஹமாஸுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்!
[Tuesday 2024-12-03 17:00]

தான் அமெரிக்க அதிபராக பதவியேற்பதற்கு முன்பாகவே காசாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளார். இது குறித்து டொனால்ட் ட்ரம்ப் தனது சொந்த சமூக வலைதளமான ட்ரூத் சோஷியல் தளத்தில் கூறியிருப்பதாவது: மத்திய கிழக்கில் மிகவும் வன்முறையான, மனிதாபிமானமற்ற முறையிலும், ஒட்டுமொத்த உலக நாடுகளின் விருப்பத்திற்கு எதிராகவும் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளைப் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள்.



கனடாவில் பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் மோசமான செயல்!
[Tuesday 2024-12-03 17:00]

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பாலியல் குற்றச்செயலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது இரண்டு பாலியல் குற்றச்செயல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மூன்றாம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.



இஸ்ரேல் பள்ளிவாயல்களில் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை!
[Tuesday 2024-12-03 17:00]

இஸ்ரேல் பள்ளிவாயல்களில் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை விதிக்குமாறு அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென் க்விர், அந்நாட்டு பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. பள்ளிவாயல்களில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் தடையை மீறி ஒலிபெருக்கிகள் பயன்படுத்தும் பள்ளிவாயல்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.



காசநோய் பாதித்தவர்களை சிறையில் அடைக்க தடை: கனேடிய மாகாணமொன்று நடவடிக்கை!
[Tuesday 2024-12-03 17:00]

கனேடிய மாகாணமொன்றில், காசநோய் பாதித்த பெண்ணொருவரை அதிகாரிகள் சிறையில் அடைத்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் மனித்தோபா மாகாணத்தில் வாழும் ஜெரால்டைன் மேசன் (Geraldine Mason, 36), அக்டோபர் மாதம் 27ஆம் திகதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.



உலக அளவில் உணவை அதிகம் வீணாக்கும் நாடுகள்!
[Tuesday 2024-12-03 08:00]

உணவு வீணாவது என்பது இன்று நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றாகும். இது சுற்றுச்சூழல் மற்றும் உலகளாவிய உணவு பாதுகாப்பு இரண்டையும் கடுமையாக பாதிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான டன் உணவுகள் வீணாகின்றன. இது பசுமை இல்ல வாயு வெளியேற்றம், வளங்களை வீணடித்தல் மற்றும் நிதி இழப்பு ஆகியவற்றிற்கு வழிவகுக்கிறது.



போர் நிறுத்தத்திற்கு மத்தியில் பதற்றம்: இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல்!
[Tuesday 2024-12-03 08:00]

இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே ஏற்பட்ட போர் நிறுத்தம் மீண்டும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. கடந்த வாரம் இரண்டு படையினருக்கும் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையில், ஹிஸ்புல்லா போராளிகள், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பகுதியான ஷெபா ஃபார்ம்ஸில் உள்ள மவுண்ட் டோவ் மீது இரண்டு ஏவுகணைகளை வீசியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.



பிரான்சில் நிர்வாண கண்காட்சிக்கு அழைப்பு விடுத்த அருங்காட்சியகம்!
[Tuesday 2024-12-03 08:00]

பிரான்சில் உள்ள மார்சேய் ஐரோப்பிய மற்றும் மத்தியதரைக் கடல் நாகரிகங்களின் அருங்காட்சியகம் (Marseille Museum of European and Mediterranean Civilisations) ஆடை இல்லாமல் கண்காட்சியை பார்வையிட பார்வையாளர்களை அழைத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நிர்வாணங்களுக்கு பிரபலமான இடமான பிரான்சில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம், இந்த அணுகுமுறை கலைப்படைப்புகளை இன்னும் ஆழமாகவும் தனிப்பட்ட முறையிலும் அனுபவிக்க வழிவகுக்கும் என்று நம்புகிறது.



கனடாவில் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு!
[Monday 2024-12-02 16:00]

கனடாவில் காணாமல் போன இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தின் சர்ரே பகுதியில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. 18 வயதான ஜோசப் மாகு என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்னர் இந்த இளைஞர் காணாமல் போயிருந்தார்.



கால்பந்து போட்டியில் 100 இற்கும் மேற்பட்டோர் பலி!
[Monday 2024-12-02 16:00]

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் கால்பந்து போட்டியில் 100 இற்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகின்றது. நேற்றையதினம் (01) இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விடுமுறை தினமான நேற்று (01) கினியாவில் கால்பந்து போட்டி நடைபெற்றது.



கனடாவில் அரசியல் தலையீடு செய்ததாக இந்தியா மீது மீண்டும் குற்றச்சாட்டு!
[Monday 2024-12-02 16:00]

கனடாவில் அரசியல் தலையீடுகளில் ஈடுபட்டதாக இந்தியா மீது மீண்டும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. கனடிய கான்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைத்துவ போட்டியின் போது இவ்வாறு அரசியல் தலையீடு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய முகவர்கள் இந்த விவகாரத்தில் தலையீடு செய்தனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன.



பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர் கொழும்பில் அதிரடியாக கைது!
[Monday 2024-12-02 16:00]

பிரித்தானியாவிலிருந்து தீவிரவாத அமைப்புக்கு பணம் வசூலித்ததாக பிரிட்டன் வாழ் புலம்பெயர் தமிழர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபரால் சேகரிக்கப்பட்ட பணம் கொழும்பு மற்றும் வன்னி பிரதேசத்தில் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



பாலியல் தொழிலாளர்களுக்கு ஊதிய விடுப்பு, மகப்பேறு நலன்கள் வழங்கும் புதிய சட்டம்!
[Monday 2024-12-02 07:00]

பெல்ஜியத்தில் பாலியல் தொழிலாளர்களுக்கான உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. பெல்ஜியம், பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளது. பெல்ஜியம் 2022 இல் பாலியல் தொழிலை குற்றமற்றதாக்கியது. இதன் தொடர்ச்சியாக, பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.



பிரித்தானியாவில் -7 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறையும்: வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை!
[Monday 2024-12-02 07:00]

பிரித்தானியாவில் அடுத்த வாரம் கடும் குளிர் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரித்தானியாவில் அடுத்த வாரம் வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கு கீழே வெப்பநிலை செல்லும் என்றும், பரவலாக பனிப்பொழிவு ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் இனிமையான வார இறுதியை தொடர்ந்து, அடுத்த வாரம் வானிலை கடுமையாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



லண்டனில் பொலிஸ் அதிகாரிகள் மீது அமிலத் தாக்குதல்: 2 சிறுவர்கள் கைது!
[Monday 2024-12-02 07:00]

பிரித்தானியாவில் நடந்த அமிலத் தாக்குதலில் இரண்டு பதின்ம வயது சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்மேற்கு லண்டனில் உள்ள சர்பிடன் ரயில் நிலையத்தில்(Surbiton train station) வெள்ளிக்கிழமை சந்தேகத்திற்கிடமான அமிலத் தாக்குதல் தொடர்பாக 14 மற்றும் 16 வயதுடைய இரண்டு பதின்ம வயது சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை மாலை 4:20 மணியளவில் அரங்கேறியுள்ளது.


Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா