Untitled Document
December 5, 2024 [GMT]
ஒரே மாதத்தில் 2 மில்லியன் முறை உணவு வங்கியை நாடிய கனேடியர்கள்!
[Wednesday 2024-12-04 17:00]

கனடாவில், கனடாவில் உணவு வங்கிகளை நாடுவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், ஒரே மாதத்தில் 2 மில்லியன் முறை உணவு வங்கிகளை மக்கள் நாடியுள்ளது தெரியவந்துள்ளது. கனடாவில் உணவு வங்கிகளை நாடுவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 2024ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் மட்டும், 2 மில்லியன் மக்கள் உணவு வங்கிகளை நாடியுள்ளதாக Food Banks Canada அமைப்பு தெரிவித்துள்ளது.

கனடாவில், கனடாவில் உணவு வங்கிகளை நாடுவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், ஒரே மாதத்தில் 2 மில்லியன் முறை உணவு வங்கிகளை மக்கள் நாடியுள்ளது தெரியவந்துள்ளது. கனடாவில் உணவு வங்கிகளை நாடுவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 2024ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் மட்டும், 2 மில்லியன் மக்கள் உணவு வங்கிகளை நாடியுள்ளதாக Food Banks Canada அமைப்பு தெரிவித்துள்ளது.

  

இந்த எண்ணிக்கை, முந்தைய ஆண்டைவிட ஆறு சதவிகிதமும், 2019ஐ விட 90 சதவிகிதமும் அதிகமாகும்.

மாதம்தோறும் உணவு வங்கிகளை பயன்படுத்தும் 12,000 பேரில் 50 சதவிகிதம் பேர் முழு நேர வேலை செய்பவர்கள் ஆவர். அத்துடன், 60 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் நன்கு கற்றவர்கள், வேலையிலிருப்பவர்கள்.

அதாவது, வேலைக்குச் சென்றும் அவர்களால் குடும்பத்தின் செலவுகளை சமாளிக்க முடியாத நிலை நாட்டில் காணப்படுகிறது.

ஆக, வேலையிலிருப்பவர்கள் கூட மீண்டும் மீண்டும் மாதம்தோறும் உணவு வங்கிகளை நாடிவருவதால், அவர்கள் அனைவருக்கும் உணவளிக்க இயலாத நிலை தொண்டு நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

30 சதவிகிதத்துக்கும் அதிகமான உணவு வங்கிகளில் உணவுப்பொருட்கள் இல்லாத நிலை உருவாகிவிடுகிறது.

இப்படி கஷ்டப்படும் மக்களின் தேவைகளை சந்திக்கவேண்டியது அரசாங்கம், ஆனால், அந்த சுமை முழுவதும் உணவு வங்கிகளில் தோள்களில் விழுந்துள்ளது.

ஆக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகளை நேருக்கு நேர் பார்க்கும்போது எனக்குக் கோபம் வருகிறது என்கிறார் உணவு வங்கி ஒன்றை நடத்தும் Matt Noble.

நாட்டில் என்ன நடக்கிறது, மக்களுக்கு எவ்வளவு தேவைகள் உள்ளன என்பதை இந்த அரசியல்வாதிகளிடம் சொன்னால், பதிலுக்கு முதுகை தட்டிக்கொடுத்து, நீங்கள் செய்யும் சேவைக்காக நன்றி என்று மட்டும் கூறிச்சென்றுவிடுகிறார்கள் என்கிறார் Matt Noble.

உணவு வங்கிகள் அமைக்கப்பட்டதற்கான நோக்கமே மாறி, மக்களுக்கு மாதா மாதம், ஆண்டு முழுவதும் உணவளிக்கும் அமைப்புகளாக அவை மாறிவிட்டன.

இதற்காக உணவு வங்கிகள் உருவாக்கப்படவில்லை, மக்களுடைய தேவைகளை அரசு சந்தித்து, உணவு வங்கிகளே இல்லாத ஒரு நிலை உருவாகவேண்டும் என்கிறார் மற்றொரு உணவு வங்கியின் தலைவரான Josh Smee.

  
   Bookmark and Share Seithy.com



பிரித்தானிய ஊடகங்களில் பகல்நேரம் இனி இந்த விளம்பரங்கள் இடம்பெறாது!
[Thursday 2024-12-05 06:00]

கிரானோலா மற்றும் மஃபின்கள் போன்ற சர்க்கரை உணவுகளுக்கான பகல்நேர ஊடக விளம்பரங்களை பிரித்தானிய அரசாங்கம் தடை செய்கிறது. சிறார்களின் உடல் பருமனுக்கு எதிரான நடவடிக்கைகளின் ஒருபகுதியாக, இனிப்பும் கொழுப்பும் சேர்ந்த பிரபலமான உணவு வகைகளை அடையாளப்படுத்தியுள்ளது.



குடிமக்களை போருக்கு தயார்படுத்தும் ஸ்வீடன் மற்றும் பின்லாந்து: கனடா மக்களும் தயாராக வேண்டுமா?
[Thursday 2024-12-05 06:00]

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் படையெடுப்பு மூன்றாவது ஆண்டை நெருங்கும் நிலையில், ஸ்வீடனும் பின்லாந்தும் தங்கள் குடிமக்களை போருக்கு தயார் படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இந்த நிலையில், கனடாவும் குடிமக்களை போருக்கு தயார் படுத்த வேண்டுமா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. ஸ்வீடன் தாக்கப்பட்டால், ஸ்வீடனின் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க அனைவரும் தங்கள் பங்களிப்பை முன்னெடுக்க வேண்டும் என்று ஸ்வீடன் அரசாங்கத்தின் புதிய துண்டுப்பிரசுரம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.



பிரதமர் மிஷெல் பார்னியேர் தலைமையிலான பிரெஞ்சு அரசாங்கம் கவிழ்ந்தது!
[Thursday 2024-12-05 06:00]

பிரான்ஸ் பிரதமர் மிஷெல் பார்னியேருக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட்டதையடுத்து, பிரெஞ்சு அரசாங்கம் கவிழ்ந்தது. கடந்த 60 ஆண்டுகளில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் பிரான்ஸ் அரசாங்கம் கவிழ்க்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இடது மற்றும் தீவிர வலதுசாரிகள் உட்பட பிரெஞ்சு பாராளுமன்ற உறுப்பினர்கள் 574 பேர்களில் 331 பேர் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.



இஸ்ரேல் இனப்படுகொலையிலும் இனச்சுத்திகரிப்பிலும் ஈடுபடுகின்றது!
[Wednesday 2024-12-04 17:00]

இஸ்ரேல் இனப்படுகொலையிலும் இனச்சுத்திகரிப்பிலும் ஈடுபடுவதாக இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மோசே யலூன் (Moshe Ya’alon)குற்றம் சுமத்தியுள்ளார். பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அவர் (Moshe Ya’alon) மேலும் கூறுகையில், இஸ்ரேலிய அரசாங்கம் தனது படையினரிற்கு உயிராபத்தை ஏற்படுத்துகின்றது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குகளை அவர்கள் எதிர்கொள்ளும் நிலையை ஏற்படுத்துகின்றது.



கனடாவில் பனிப்பொழிவு குறித்த பயண எச்சரிக்கை!
[Wednesday 2024-12-04 17:00]

கனடாவில் பனிப்பொழிவு தொடர்பில் பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் இவ்வாறு பனிப்பொழிவு தொடர்பில் பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலை வேதளையிலும் மாலை வேளையிலும் போக்குவரத்து செய்ய முடியாத அளவிற்கு பனிப்பொழிவு ஏற்படும் என ஆரம்பிக்கப்பட்டுள்ளது.



50 ஆண்டுகளின் பின் தென்கொரியாவில் அவசரநிலை பிரகடனம்!
[Wednesday 2024-12-04 17:00]

50 ஆண்டுகளின் பின்னர் தென்கொரியாவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு சில மணி நேரங்களில் அது ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைகாட்சி வாயிலாக நேற்று (டிச.03) பொதுமக்களிடம் உரையாற்றிய தென்கொரிய அதிபர் யூன் சாக் யோல் , நாட்டில் வடகொரிய ஆதரவாளர்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்காகவும் அரசுக்கு எதிரான சக்திகளை ஒடுக்குவதற்காகவும் நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படுவதாக அறிவித்தார்.



உக்ரைன் விவகாரம்: ட்ரம்ப் ஆட்சிக்கு வரும் வரை காத்திருக்கும் நேட்டோ நாடுகள்!
[Wednesday 2024-12-04 08:00]

உக்ரைன் விவகாரத்தில் முடிவெடுக்க புதிய அமெரிக்க நிர்வாகம் பதவியேற்கும் வரையில் பல நேட்டோ உறுப்பினர்கள் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லாத்வியாவின் வெளிவிவகார அமைச்சர் செவ்வாயன்று தெரிவிக்கையில், அமெரிக்கா தலைமையிலான அட்லாண்டிக் கூட்டமைப்பில் சேருவதற்கான அழைப்பிற்கான உக்ரைனின் கோரிக்கையை பரிசீலிக்க முடிவெடுத்துள்ளதாகவும், ஆனால் புதிய அமெரிக்க நிர்வாகம் பதவியேற்கும் வரையில் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.



ரஷ்ய ஜனாதிபதிக்கான விமானத்தில் கடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான உக்ரைன் சிறார்கள்!
[Wednesday 2024-12-04 08:00]
ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரேனிய பிரதேசங்களில் இருந்து சிறார்கள் கடத்தப்பட்டு, அவர்களின் உக்ரேனிய அடையாளங்கள் களையப்பட்டு ரஷ்ய குடும்பங்களுடன் வாழ அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியின் விமானங்கள் மற்றும் நிதியுதவியால் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.



ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள்: அடிபணிந்த தென் கொரிய ஜனாதிபதி!
[Wednesday 2024-12-04 08:00]

தென் கொரியாவின் வலதுசாரி ஜனாதிபதி எதிர்பாராத விதமாக இராணுவச் சட்டத்தை அறிவித்த நிலையில், தற்போது எதிர்க்கட்சிகளின் கடும் அழுத்தம் காரணமாக பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 1980 களில் இருந்து நாடு சந்தித்த மிகவும் கடுமையான சவால் இதுவென்றே கூறப்படுகிறது. எதிர்க்கட்சிகளுடனான கடும் மோதலுக்கு மத்தியில் செவ்வாய்க்கிழமை இரவு ஜனாதிபதி யூன் சுக் யோல் இராணுவச் சட்டத்தை அறிவித்தார்.



ஹமாஸுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்!
[Tuesday 2024-12-03 17:00]

தான் அமெரிக்க அதிபராக பதவியேற்பதற்கு முன்பாகவே காசாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளார். இது குறித்து டொனால்ட் ட்ரம்ப் தனது சொந்த சமூக வலைதளமான ட்ரூத் சோஷியல் தளத்தில் கூறியிருப்பதாவது: மத்திய கிழக்கில் மிகவும் வன்முறையான, மனிதாபிமானமற்ற முறையிலும், ஒட்டுமொத்த உலக நாடுகளின் விருப்பத்திற்கு எதிராகவும் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளைப் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள்.



கனடாவில் பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் மோசமான செயல்!
[Tuesday 2024-12-03 17:00]

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பாலியல் குற்றச்செயலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது இரண்டு பாலியல் குற்றச்செயல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மூன்றாம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.



இஸ்ரேல் பள்ளிவாயல்களில் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை!
[Tuesday 2024-12-03 17:00]

இஸ்ரேல் பள்ளிவாயல்களில் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை விதிக்குமாறு அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென் க்விர், அந்நாட்டு பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. பள்ளிவாயல்களில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் தடையை மீறி ஒலிபெருக்கிகள் பயன்படுத்தும் பள்ளிவாயல்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.



காசநோய் பாதித்தவர்களை சிறையில் அடைக்க தடை: கனேடிய மாகாணமொன்று நடவடிக்கை!
[Tuesday 2024-12-03 17:00]

கனேடிய மாகாணமொன்றில், காசநோய் பாதித்த பெண்ணொருவரை அதிகாரிகள் சிறையில் அடைத்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் மனித்தோபா மாகாணத்தில் வாழும் ஜெரால்டைன் மேசன் (Geraldine Mason, 36), அக்டோபர் மாதம் 27ஆம் திகதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.



உலக அளவில் உணவை அதிகம் வீணாக்கும் நாடுகள்!
[Tuesday 2024-12-03 08:00]

உணவு வீணாவது என்பது இன்று நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றாகும். இது சுற்றுச்சூழல் மற்றும் உலகளாவிய உணவு பாதுகாப்பு இரண்டையும் கடுமையாக பாதிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான டன் உணவுகள் வீணாகின்றன. இது பசுமை இல்ல வாயு வெளியேற்றம், வளங்களை வீணடித்தல் மற்றும் நிதி இழப்பு ஆகியவற்றிற்கு வழிவகுக்கிறது.



போர் நிறுத்தத்திற்கு மத்தியில் பதற்றம்: இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல்!
[Tuesday 2024-12-03 08:00]

இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே ஏற்பட்ட போர் நிறுத்தம் மீண்டும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. கடந்த வாரம் இரண்டு படையினருக்கும் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையில், ஹிஸ்புல்லா போராளிகள், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பகுதியான ஷெபா ஃபார்ம்ஸில் உள்ள மவுண்ட் டோவ் மீது இரண்டு ஏவுகணைகளை வீசியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.



பிரான்சில் நிர்வாண கண்காட்சிக்கு அழைப்பு விடுத்த அருங்காட்சியகம்!
[Tuesday 2024-12-03 08:00]

பிரான்சில் உள்ள மார்சேய் ஐரோப்பிய மற்றும் மத்தியதரைக் கடல் நாகரிகங்களின் அருங்காட்சியகம் (Marseille Museum of European and Mediterranean Civilisations) ஆடை இல்லாமல் கண்காட்சியை பார்வையிட பார்வையாளர்களை அழைத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நிர்வாணங்களுக்கு பிரபலமான இடமான பிரான்சில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம், இந்த அணுகுமுறை கலைப்படைப்புகளை இன்னும் ஆழமாகவும் தனிப்பட்ட முறையிலும் அனுபவிக்க வழிவகுக்கும் என்று நம்புகிறது.



கனடாவில் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு!
[Monday 2024-12-02 16:00]

கனடாவில் காணாமல் போன இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தின் சர்ரே பகுதியில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. 18 வயதான ஜோசப் மாகு என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்னர் இந்த இளைஞர் காணாமல் போயிருந்தார்.



கால்பந்து போட்டியில் 100 இற்கும் மேற்பட்டோர் பலி!
[Monday 2024-12-02 16:00]

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் கால்பந்து போட்டியில் 100 இற்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகின்றது. நேற்றையதினம் (01) இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விடுமுறை தினமான நேற்று (01) கினியாவில் கால்பந்து போட்டி நடைபெற்றது.



கனடாவில் அரசியல் தலையீடு செய்ததாக இந்தியா மீது மீண்டும் குற்றச்சாட்டு!
[Monday 2024-12-02 16:00]

கனடாவில் அரசியல் தலையீடுகளில் ஈடுபட்டதாக இந்தியா மீது மீண்டும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. கனடிய கான்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைத்துவ போட்டியின் போது இவ்வாறு அரசியல் தலையீடு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய முகவர்கள் இந்த விவகாரத்தில் தலையீடு செய்தனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன.



பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர் கொழும்பில் அதிரடியாக கைது!
[Monday 2024-12-02 16:00]

பிரித்தானியாவிலிருந்து தீவிரவாத அமைப்புக்கு பணம் வசூலித்ததாக பிரிட்டன் வாழ் புலம்பெயர் தமிழர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபரால் சேகரிக்கப்பட்ட பணம் கொழும்பு மற்றும் வன்னி பிரதேசத்தில் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா